K. Balachander Received Special Award from Notary Club - 2005
(9 Jan 2005)

திரையுலகில் 41 ஆண்டுகள் கலைச் சேவை புரிந்த டைரக்டர் கே.பாலசந்தருக்கு -உழைப்பால் உயர்ந்த மாமேதை என்ற விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ரோட்டரி சங்கம் (மத்திய சென்னை) இந்த விருதினை வழங்கியது. ஏற்கனவே இந்த விருது சிவாஜp, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஆகிய இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் கே.பாலசந்தருக்கு விருது வழங்கும் இந்த விழாவில் நடிகர்கள் ரஜpனிகாந்த், கமல்ஹhசன் ஆகியோர் கலந்துகொண்டு அவருக்கு அந்த விருதினை வழங்கி கவுரவித்தார்கள்.
பின்னர் ரஜpனிகாந்த் பேசியதாவது:-
கொஞ்சம் திறமை இருந்தால்போதும் நீங்கள் கே.பாலசந்தர்சாரை சந்தித்து, அவர் மனசு வைத்தால் நீங்களும் இந்த அரங்கில் முன்வரிசையில் உட்கார முடியும். அதுதான் அவரது மாஜpக் டச். ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.வியை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். எம்.எஸ்.வி.யை சந்தித்தபிறகு சோறு சாப்பிட நேரமில்லை என்று. அதேமாதிரிதான் இந்த நான். வாழ்க்கையை பார்த்து பயந்தவன் இந்த சிவாஜpராவ். பாலசந்தர்சாரை சந்தித்தபிறகு அவர் என் பெயரை ரஜpனின்னு மாத்திவச்ச பிறகு வாழ்க்கை என்னை பார்த்து பயந்தது. அதுதான் பாலசந்தர் டச். அவரிடம் எத்தனையோ கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய மகான் 130 வருடம் வாழ்ந்தார். அவரிடம் நீங்கள் இப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன காரணம் என்றhர்கள். அதற்கு அந்த மகான் சொன்னார். வாழ்க்கையில் 3 ஒழுக்கத்தை கடைபிடித்தால்போதும் நீங்களும் அப்படி வாழ முடியும். அந்த 3 ஓழுக்கம் ஒன்று பிசிக்கல்(உடல்ரீதியான ஒழுக்கம்), மோரல் (உள்ள ரீதியான ஒழுக்கம்), ஸ்பிரிட்சுவல்(மத ரீதியான ஒழுக்கம்).

உடல் ரீதியான ஒழுக்கம் என்பது உன் உடலை பற்றி தெரிந்துக்கொண்டு, அதில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சீர்செய்து கொள்ள வேண்டும், மோரல் என்பது பெத்த அப்பா, அம்மாவை நன்றhக பார்த்துக்கொண்டு, தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ஜhஸ்தியாகவும் இல்லாம, கம்மியாகவும் இல்லாம, கரெக்டா செய்யணும், ஸ்பிருட்சவல் என்பது நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அந்த மதத்தின் கொள்கைகளை சரியாக கடைபிடித்து வாழ்வது. இந்த மூணும் சரியாக இருந்தால் நீயும் அப்படி வாழலாம். இங்கு பேசியவர்கள் பாலசந்தர்சார் பெயரில் நாடக அகாடமி தொடங்கணும், இன்ஸ்டிடியூட் தொடங்கணும் என்றhர்கள். அவர் நாடகம் என்ற தாய்வீட்டிலிருந்து சினிமா என்ற பெண்ணை மணந்துகொண்டு அங்கேயே ரொம்ப நாள் இருந்துவிட்டார். அவர் மறுபடியும் நாடகத்துக்கு வரவேண்டும். அவர் மறுபடியும் தாய் வீடான நாடகத்துக்கு வந்து இயக்கினால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னைப்போல் கமலும் நடிக்க வருவார். மற்ற நடிகர்களும் வருவார்கள். நாடகத்துக்கு புதுவாழ்வு கிடைக்கும். நீங்களும் சந்தோஷமாக இருப்பீங்க, நானும் சந்தோஷமா இருப்பேன்.
இவ்வாறு பேசினார்.
|