Felicitation of CM J. Jayalaltitha for controling illgal
VCD (2004) 8 Nov 2004
சென்னை: 'வீரப்பனை அழித்ததன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வா ஜெயலலிதா, என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.
சமைக்கத் தெரிந்தவரிடம் பெண்டாட்டியாக போகக் கூடாது. வேலை தெரிந்தவரிடம் வேலை கேட்டு செல்லக் கூடாது. பேசத் தெரிந்தவர்கள் மத்தியில் அதிகமாக பேசக் கூடாது என்று சொல்வார்கள். இருந்தாலும் இந்த மேடையில் நான் கொஞ்சம் பேச வேண்டும். 20, 25 நாட்களுக்கு முன்னால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்னிடம் வந்து முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னை அழைத்தார். ஆனால், அதற்கு நான் வரமுடியாது என்றும், முதல்வரைப் பாராட்டி நான் ஏற்கனவே மீடியா மூலம் நன்றி தெரிவித்து விட்டேன் என்றும், நான் வராவிட்டால் முதல்வர் அதை தவறாக நினைக்க மாட்டார்கள் என்றும் கூறி அவரை அனுப்பி விட்டேன்.
ஆனால், இரவு நான் யோசித்துப் பார்த்தேன். சினிமா உலகிற்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் நம் முதல்வர். அவர் முன்னால் நின்று பாராட்டி பேசவில்லை என்றால் நான் சினிமாக்காரனே அல்ல. என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். சரி என்றால் சரி, தப்புன்னா தப்பு தான். திரைப்பட உலகத்தினர் 'விசிடி' யை எதிர்த்து ஊர்வலம் போக வேண்டும் என்றும், அதில் என்னை கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டனர். ஆனால், அதற்கு நான் ஊர்வலம் நடத்தினால் என்ன பிரயோஜனம் என்று வாய்கூசாமல் கேட்டேன். இதுவரை ஊர்வலம் சென்றவர்களெல்லாம் என்ன சாதித்து விட்டார்கள்? என்றும் கேட்டேன். ஊர்வலம் நடத்த திட்டமிட்ட அன்று நான் வெளி மாநிலத்தில் இருந்தேன். அதனால் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. ஊர்வலம் நடந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து நான் பேப்பரில் பார்த்தேன். திரையுலகத்தினர் என்னென்ன கோரிக்கைகளை வைத்தார்களோ அவற்றையெல்லாம், கேட்டதை எல்லாம் முதல்வர் செய்து கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு (முதல்வரை பார்த்து) 'ஹேட்ஸ் ஆப்' என்றார்.
இது உண்மையான பாராட்டு விழா. எத்தனையோ மேடைக்கு சென்றிருக்கிறேன். இது சும்மா ஷோ' இல்ல. 'எக்ஸலன்ட். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஜெ.க்கு என் மனமார்ந்த நன்றி. இந்த எல்லாத்தையும் விட வீரப்பனை பற்றி எனக்கு நல்லா தெரியும். வீரப்பனை அழித்தது சாதாரண விஷயமல்ல. அது ஒரு சரித்திரம். போகப்போகத்தான் சரித்திரத்தின் அருமை தெரியும். அந்த வன தேவதைக்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளார் நம் முதல்வர். இந்தியாவில் தமிழர் பெருமையை அவர் காப்பாற்றி இருக்கீங்க . உலக அளவிலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். நான் அவரை முதன்முதலாக சந்தித்ததை நினைவு கூற விரும்புகிறேன். 1973ம் ஆண்டு, நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருந்த நேரம், அப்போது, அந்த பில்டிங்கில் மாடியில் ரிக்கார்டிங் தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டருக்கு அவங்க காரில் வந்தாங்க. காரிலிருந்து இறங்கியதும் நேரா மாடிக்கு போயிட்டாங்க. அவங்க அன்னைக்கு ப்ளாக் கலர்ல சாரியும், ப்ளு கலர் பார்டரும், ப்ளூ கலர் ஜாக்கெட்டும் போட்டிருந்தாங்க. அன்னைக்கு பச்சையப் பன் கல்லூரி மாணவர்களை விட பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் நூறு சதவீதம் கெட்ட பசங்க. எப்ப அவங்க கீழே வருவாங்கள்னு நாங்க காத்திட்டிருந்தோம். மாலை நாலரை மணிக்கு அவங்க கீழே வந்தாங்க. அப்ப எங்க கூட இருந்த ரவீந்திரநாத் ரெட்டி என்பவரைப் பார்த்து அவங்க 'ஹலோ' சொல்லிட்டு காரில் ஏறி போயிட்டாங்க. எங்ககிட்ட எல்லாம் பேசவே இல்ல. அதற்கப்புறம் இரண்டு வருசத்துக்கு ரவீந்திரநாத் ரெட்டி அவங்க 'ஹலோ' சொன்னதையே சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டுகிட்டு இருந்தான். அவங்க வந்து நடந்து போனது, 'ஹலோ' சொன்னதையெல்லாம் நான் இமிடேட் பண்ணி காட்டிகிட்டு இருந்தேன். சினிமாவிலே சேர்ந்த பிறகு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தாகிட்ட அதேபோல் இமிடேட் செய்து காண்பித்தேன். அதைப் பார்த்து அவர் மற்றொருவரைப் போல் இமிடேட் செய்வது சரியல்ல என்று கூறினார். அன்றிலிருந்து நான் மற்றொருவளறைப் போல் இமிடேட் செய்வதை நிறுத்தி விட்டேன்.
முதல்வரிடம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அந்த சக்தி அப்படியே அவங்ககிட்ட இருக்கு. கொஞ்சம் கூட மாறல.
அஷ்டலட்சுமி பற்றி ஒரு கதை சொல்றேன்: அஷ்டலட்சுமியை நினைத்து ஒரு பக்தர் தவமிருந்தார். அவரது தவத்தை பார்த்து அஷ்டலட்சுமி அவர் முன் தோன்றி எங்களில் யார் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த பக்தர் குழப்பமடைந்தார். நேராக தனது குருவிடம் சென்று அஷ்டலட்சுமி இவ்வாறு கேட்கிறாரே நான் எந்த லட்சுமியை கேட்க வேண்டும் என்று தன் சூழப்பத்தை தெரிவித்தார். அதற்கு அவரது குரு நீ தைரியலட்சுமியை கேள் என்று கூறினார். இதனால் தெளிவடைந்த அந்த பக்தர் நேராக அஷ்டலட்சுமியிடம் சென்று தைரியலட்சுமி எனக்கு தேவை என்றார். தைரியலட்சுமியை பக்தரிடம் விட்டுவிட்டு மற்ற லட்சுமிகள் அங்கிருந்து சென்றனர். ஆனால், சிநிது நேரத்தில் வீரலட்சுமி திரும்பி வந்து தைரிய லட்சுமி இல்லாமல் நான் எப்படி தனியே இருப்பது என்று கேட்டூ பக்தரிடம் இருந்து விட்டாள். இதையடுூத்து மற்ற லட்சுமிகள் அனைவரும் அங்கு வந்து விட்டனர். அதேபோல் உங்களிடம் அனைத்து லட்சுமிகளும் இப்போது உள்ளனர். நீங்கள் இப்போது தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டாங்க. உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
|