Illayaraja's Thiruvaasagam Release Function (2005) 
சென்னை, ஜூலை 1- அமைதியைத் தேடி ஆன்மீக வழியில் இளையராஜா பின்னால் நானும் செல்கிறேன் என்று நடிகர் ரஜpனிகாந்த் பேசினார்.
மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்துக்கு சிம்பொனி இசை அமைத்து இசையமைப்பாளர் இளையராஜா பாடி உள்ளார். இந்த இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமை தாங்கி இசை குறுந்தகடை வெளியிட பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். விழாவில் Nப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நிறைய பேசனும் என்று நினைத்தேன். ஆனால் வைகோ பேச வேண்டியது இருக்கிறது. வைகோவின் கர்ஜனைகளை நான் படித்திருக்கிறேன். பார்க்கவில்லை. இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறேன். அதிலும் ஆன்மீக மேடையை அவருடன் பகிர்ந்து கொள்ள ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 3 நாளைக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து 5 வயது பையனுடன் ஒரு பாட்டி என்னைப் பார்க்க அனுமதி கேட்டாங்க. அந்த பையன் ரஜினியைக் காட்டுவதாக இருந்தால் இந்தியாவுக்கு வருகிறேன், இல்லாட்டி வரமாட்டேன்னு அடம் பிடித்ததாகச் சொன்னாங்க. சரி அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னேன். சொன்னபடி அவங்க வந்தாங்க. நான் வரவேற்று பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அந்த பையன் -வேர் இஸ் ரஜினி, ரஜினி எங்கே? வரச்சொல்லுங்க என்று கேட்டான். நான்தான் ரஜினின்னு சொன்னா நம்பவேமாட்டேன்கிறhன். படா பேஜராப் போச்சு. ரஜினியை வரச்சொல்லுங்க, நீங்க ரஜினியின் அப்பா என்று தொடர்ந்து அடம் பிடிக்கிறhன். சரின்னு பார்பரை வரச்சொல்லி தாடியை எல்லாம் எடுத்து, டை அடிச்சி அவன் முன்னாலே வந்து நின்னேன். அப்பதான் ரஜpனின்னு நம்பினான். போட்டோ எடுத்துக்கிட்டான்.
அப்படி இல்லைன்னா நானும் இங்கே இளையராஜா போல வெள்ளை தாடியிலதான் வந்திருப்பேன். (தாடி இல்லாமல் தலைக்கு டை அடித்து வந்திருந்தார்). அப்ப அந்த பாட்டி என்னிடம் -ஏன் இப்படி இருக்கீங்க, பிளேடுக்கு என்ன செலாவாகப்போகிறது? ஏன் டை அடிச்சிட்டு இருக்கக் கூடாது? எல்லா பணத்தையும் பொண்டாட்டி கிட்டேயே கொடுத்திடுறீங்களா? பெண்டாட்டி கிட்டே கொடுக்கிறதும் திருப்பதி உண்டியலில் போடுறதும் ஒண்ணுதான். திரும்பக்கிடைக்காது என்று சொன்னாங்க. அப்புறம் ஏன் நிம்மதி வேண்டும், அமைதிவேண்டும் என்று எங்கெல்லாமோ போகிறதாவும் செய்தி வருதேன்னு கேட்டாங்க.
இப்போ அவங்களுக்கு பதில் சொல்கிறேன். பத்திரிகையிலே வரும். அதை அவங்க பார்ப்பாங்க. சந்தோஷம் என்பது வந்து போகக் கூடியது. சந்திரமுகி படம் 4 வாரம் ஹவுஸ்புல்லா ஓடிட்டிருக்குன்னு செய்தி வந்தப்போ சந்தோஷமாக இருந்தது. 6 வாரம், 8 வாரம் ஆனப்போ சந்தோஷம் இருந்தது. இப்போ அந்த சந்தோஷம் இல்லை. சந்தோஷம், பணம், புகழ், பெயர், இன்பம் எல்லாம் வந்து போகும். ஆனால் மறைந்துவிடும். அமைதி மட்டும் தான் நிலைத்து இருக்கும். அந்த அமைதியைத் தேடித்தான் இளையராஜா செல்கிறhர். ஆன்மீக வழியில் செல்கிறhர். அவர் பின்னால் நானும் செல்கிறேன்.

இளையராஜhவைப் பற்றி என்ன பேசுவது? அவரை எனக்கு 27 ஆண்டாகத் தெரியும். சில படங்களில் அவரை வைத்து நான் செய்யலை. ஆனால் தொழிலால் எங்களுக்குள் நட்பு பாதிக்கவில்லை. திருவண்ணாமலை ரமண மகரிஷி காட்டிய வழியில் நான் செல்கிறேன். இளையராஜாவும் அப்படித்தான் செல்கிறhர். அவர் வசிஷ்டர், நான் விசுவாமித்திரராக இருக் கிறேன். நான் அவ்வப்போது இளையராஜாவை சந்தித்து பேசுவேன். அப்படித்தான் கடந்த 6 மாதத்துக்கு முன் பிரசாத் ஸ்டூடியோவில் அவரைப் போய் பார்த்தேன். அப்போது திருவாசகத் துக்கு சிம்பொனி இசை அமைத்திருப்பதாகச் சொல்லி போட்டுக்காண்பித்தார். இந்த வெளியீட்டு விழாவுக்கு வரும்படி கேட்டார். அழைப்பிதழில் போடவேண்டாம். நான் மெட்ராசில் இருக்கமாட்டேன், இருந்தால் வருகிறேன் என்றேன். உடனே இளையராஜா சொன்னார் நீ மெட்ராசிலதான் இருப்பே, நிச்சயமாக வருவே என்றhர். அதன்படியே வேறெhரு நிகழ்ச்சி ரத்தாகி இங்கே இருந்ததால் நான் வந்திருக்கேன்.
4 வருடம் கஷ்டப்பட்டு இந்த இசையை அமைத்திருக்கிறhர். சர்வம் பூர்வ ஜென்ம புண்ணியம் என்பார்கள். இறைவன் கொடுத்த வரத்தால் இது அமைகிறது. இறைவனிடம் சரண்டர் ஆகித்தான் தீரவேண்டும். திருவாசகம் என்றhல் ஸ்துதி. புகழ்வது ஆகும். மனிதனை ரொம்ப புகழ்ந்தால் கொஞ்சம் கோபம் வரும். தள்ளிப் போய்விடுவோம். புகழ்ச்சியால் மனிதன் சந்தோஷப் படுகிறhன். ஆண்டவனும் புகழ்ச்சியால் சந்தோஷப்படுகிறhனா என்ற கேள்வி எழுகிறது. மாணிக்கவாசகர் போன்றவர்கள் எல்லாம் ஆண்டவனை அடைவதற்காக பாடவில்லை;. ஆண்டவனை அடைந்த பிறகுதான் பாடினார்கள். ஆண்டவனை அடைந்த பிறகு என்ன தேவை இருக்கிறது? ஒரு குழந்தையை அழகுபடுத்திப் பார்க்கிறேhம் என்றhல் குழந்தையின் மகிழ்ச்சிக்காக அல்ல, அதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். அப்படித்தான் இறைவனை புகழும்போது நமக்கு மகிழ்ச்சி, நமக்கு தெரியாமல் அமைதி கிடைக்கும். அந்த அமைதியைத் தேடித்தான் இளையராஜா செல்கிறhர். இவ்வாறு அவர் கூறினார்.
|