Sivaji Statue Inauguration Function (2006)
(21 July 2006)
சிலை திறப்பு விழாவில் பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்று தெரியாத நிலையில் இங்கு வந்தேன். இந்த மேடை வரலாற்று முக்கியத்துவம் உள்ள மேடை. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சில் துணிவு, லட்சியத்துடன், இரண்டு இளைஞர்கள் சென்னைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் சொன்னார். எதிர்காலத்தில் என்னோட சிலை இங்கே இடம் பெறும் என்றார். இதற்கு மற்றொரு நண்பர் உனக்கு சிலை வைப்பது என்றால் அது நானாகத் தான் இருக்கும் என்றார். உடனே அந்த நண்பர் சிலை வைக்க வேண்டுமானால் நீ என்னை விட பெரிய ஆளாக வரவேண்டும் என்றார். அந்த இரு நண்பர்கள் வேறு யாருமல்ல. ஒருவர் கருணாநிதி மற்றொருவர் சிவாஜி கணேசன்.
இவர்கள் இருவரும் வெற்றியை எளிதாக பெற்றுவிடவில்லை. பல சோதனைகளை கடந்துதான் அவர்கள் நினைத்த இலக்கை அடைய முடிந்தது. இவர்கள் சாதிப்பதற்கு நிறைய சோதனைகளை சந்தித்தவர்கள். கவிஞர் வைரமுத்து சொன்ன மாதிரி இவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் கணக்கிட கம்ப்யூட்டர்கள் போதாது.
இங்கு ஒரு நடிகருக்கு வைத்த சிலையா இது, இல்லை ஒரு மாமனிதருக்கு வைக்கப்பட்ட சிலை. இந்த மனிதன் நடிப்புத் துறையில் இருந்து நடிப்பாற்றலை உலகத்துக்கு காட்டிய மா மனிதர். சிவாஜி வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போட்டவர். வயதில் மூத்தவர் என்றாலும் பாசமிக்க குழந்தை அவர். இந்த பாசக் குழந்தைக்கு இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
குதிரை ஓட்ட நல்ல ஜாக்கிகளை தேர்வு செய்தால் தான் லாவகமாக ஓட்டி வெற்றியின் இலக்கை அடைய முடியும். லாவகமாக குதிரைகளை ஓட்ட ஜாக்கிகளை அமர்த்தியதால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் கருணாநிதி. இவரது வெற்றி அரசியல் சாணக்கியத்தனத்துக்கு கிடைத்த வெற்றி.
சிவாஜி இறந்த பிறகு அவரை திறந்த லாரியில் வைத்து எடுத்து சென்ற போது நானும் அதில் சென்றேன். அப்போது சாலையோரத்து மரத்திலிருந்த ஒருவர் சத்தம் போட்டார். அவர் என்ன சொன்னார் என்று எனக்கு கேட்கவில்லை. அந்த ஆள் என்ன சொல்கிறார் என்று அருகிலிருந்த நடிகர் வடிவேலுவிடம் கேட்டேன். அவர் முதலில் தயங்கிவிட்டு பிறகு சொன்னார். இருந்த ஒரே நடிகரும் இறந்து விட்டார். அவரது முகத்தை பார்க்க முடியாமல் செய்து விட்டீர்களே என்று சொல்லி சத்தம் போடுகிறார் என்றார். அந்த நபர் இந்தக் கூட்டத்தில் இருக்கலாம். சிவாஜியின் முழு உருவத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில் இதோ அவரது நண்பர் கருணாநிதி இங்கு சிவாஜிக்கு கம்பீர சிலை வைத்துள்ளார்.
இந்த சிலையை மவுன்ட் ரோட்டிலோ வேறு இடங்களிலோ வைத்திருக்கலாம். வேறு இடங்களில் வைத்திருந்தால் சிக்னல் நெருக்கடியில் நண்பரின் சிலையை மக்கள் கவனிக்காமல் போய்விடலாம் என்று நி�னைத்து, அமைதியாக அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் லட்சோபலட்சம் மக்கள் வந்து செல்லும் கடற்கரை சாலையில் சிலை வைக்க இடம் ஒதுக்கியது நட்புக்கு கிடைத்த மரியாதை. இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் து�ங்கியிருந்தாலும் இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் கொள்கைகளும் வேறு வேறானது. இவைகள் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் நட்பு உயர்ந்தது என்பதை காட்டும் வகையில் கருணாநிதி இங்கு சிவாஜிக்கு சிலை வைத்து நட்பின் பெருமையை காட்டியுள்ளார்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
|