Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Aarulirinthu Arupathuvarai

 

After starting off as a villain and then turning hero, Rajnikanth had an equal mix of movies portraying him as the rough and tough action hero and those that gave him an oppurtunity for histrionics. Movies like Priya and Dharmayudham belonged to the former category while those like Mullum Malarum and Ilamai Oonjalaadugiradhu gave him more mellow roles. But Aarulirundhu Arubathu Varai was probably the first movie to give him a no-frills, completely non-heroic, everyday role. Here he depicts the life of a man who struggles to raise his loved ones but is spurned by them once they grow up and his performance leads us to think that much of his potential as an actor may have been left untapped once he became trapped in his image.

The story itself is not much different from numerous other movies Rajnikanth himself starred in, much later in his career. Movies like Padikkaadhavan and Dharmadurai too had Rajnikanth being cheated by his brothers after he had devoted his entire life towards their success. But its the treatment of the subject that differs here. There are no grandiose, overdone scenes to show his affection for them nor is there any artificiality in his reactions to their behavior. There is no comedy, there is just a single fight sequence and even that is quietly done and there is only one dream sequence(and not with the heroine).

Rajnikanth is Santhanam, who lost his father when he was a boy, and has been supporting his family ever since. He joined a printing press at that time and has grown step-by-step, while accumulating enough debts to put his two brothers and a sister through college. His poverty leads to him being jilted by the woman he loves and he then gets married to Lakshmi('Fatafat' Jayalakshmi), solely on the belief that this would get him the money needed to conduct his sister's marriage. But after sacrificing his whole life for his siblings, Santhanam watches on as they leave him once they find greener pastures, leaving him to fend for himself.

The movie is definitely heavy with no attempt to lighten the atmosphere whatsoever. Not until the very end do we see any kind of happiness in the movie. But inspite of the pessimistic tone and chance for sentiments, most scenes are handled in a mature and realistic way. For instance, though Rajnikanth incurs huge debts to keep the family afloat, we don't see him treat his brothers with softness always. He barks at them at the right time(like his reaction to his brother's criticism to the shirt he buys for him) and points out his own inabilities. Similarly, his silent reactions to the brothers leaving him, speak volumes. His reaction, when the second brother asks him for permission to leave, with his bag already packed, is one such very effective scene.

The effect of many of these scenes is embellished by the sharp script. The feelings are brought out very well in Rajnikanth's lectures to his brothers. His reaction to his brother ill-treating Cho and the way he restores peace and calm after quarrels between 'Fatafat' Jayalakshmi and his sister sound natural, mainly due to what he tells them. Even the lecture of a Jeya's father to her when she expresses her wish to marry Rajnikanth is logical with no unnecessary shouting. There is also a very telling comment on why poor people have more kids that rings true while being funny.

Not that the movie is completely devoid of exaggerations though. The behavior of Rajni's sister, especially when he takes a present for her child, appears cinematic and unnatural. Normally, its the reversal of fortunes in such movies that makes us cheer and lifts our spirits. But here, these portions seem rushed. They give the feeling that S.P.Muthuraman did not have the courage to maintain the sad tone of the movie until the end and slapped together a happy shift in the story. The background voice that narrates the story only gives credence to his line of thought.

Rajnikanth here will be a revelation to those who have been exposed to only his recent movies. He makes a very believable, sympathetic protagonist during all stages of life. His outbursts towards his brothers and sister are as effective as his crying over his wife's death. 'Fatafat' provides good support. Cho plays the kind of friend any of us would be lucky to have. His friendship with Rajnikanth is one of the strongpoints of the movie. Surulirajan is cast against type and portrays a man easy to hate. Ilaiyaraja has a classic in Kanmaniye Kaadhal..., though the picturisation leaves much to be desired.

 

ஆறிலிருந்து அறுபதுவரை - ஆனந்த விகடன்விமர்சனம்

'சம்சார'த்தை லேசில் 'டைவோர்ஸ் ' செய்ய மாட்டோம் - இது இந்தியப் பண்பாடு மட்டுமல்ல ; நமது தயாரிப்பாளர்களின் பாரம்பரியமும்கூட! மருத்துவமனையில் பணம் கட்டி மனைவியை மீட்க முடியாமல் சந்தானம் அவதிப்படுவது முதல், அவன் வேலையை இழப்பது, வீடு வாசலை இழப்பது வரை எல்லாமே 'சம்சாரத்' தின் முத்திரைகள்தான் என்றாலும், அவை சாகா வரம்பெற்ற நிகழ்ச்சிகளாக இருப்பதால் காலத்தை வென்று நம் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விடுகின்றன! 

 போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சந்தானத்தின் வாழ்க்கைத் தத்துவத்தை அவனுடைய குழந்தைப் பருவத்திலேயே காட்டியிருப்பது அழகான அஸ்திவாரம். 

ரஜினியின் நடிப்பு - ஒரே வரியில் சொல்வதென்றால், 'டாப் கிளாஸ்!' பாத்திரத்தின் தன்மையைக் கிரகித்துக் கொண்டு, பொங்கிவரும் உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்டு . . . . இவருடைய மானரிசங்களை மொக்கமாக மறக்கடிக்கச் செய்திருக்கும் டைரக்டர் எஸ் . பி . முத்துராமனுக்குப் பாராட்டில் சமபங்கு தர வேண்டும்.

சங்கீதாவை நினைத்து ரஜினி காணும் கனவும், அவரின் கற்பனை டூயட்டும் கிளாமருக்காகச் சேர்க்கப்பட்டிருந்தாலும் அதுவரையில் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்ட சந்தானம் என்ற ஒரு நளினமான பாத்திரப் படைப்பு, காரணமில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விடுகிறதே! அதே மாதிரிதான் அந்த ' சங்கிலித் திருடனுடன் ரஜினி போடும் சினிமா சண்டையும்! அதுவரை காரெக்டராக இருந்த சந்தானம், திடீரென்று ஹீரோ சந்தானமாகி விடுகிறார்! 

தேங்காய் சீனிவாசனின் குடிபோதையை வைத்துக்கொண்டு படம் ஆரம்பத்திலேயே தள்ளாடுகிறது; தடுமாறுகிறது! ' எங்கப்பா குடித்தே செத்தார் ' என்று ஒரு வரி வசனத்திலோ அல்லது ஒரு ' பிளாஷ்பாக் ' கிலோ ' டிஸ்போஸ் ' செய்ய வேண்டியதை அனாவசியமாக முன்பாதியில் இழுஇழுவென்ற இழுக்கிறார்கள். இந்தக் காட்சிகளைத் தமிழக அரசு மதுவிலக்குப் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் ! சரியான ' டாகு மெண்டரி!'

' என்னைத் தலையிலே வெச்சு கொண்டாடவும் வேண்டாம் ; கீழே போட்டு உடைக்கவும் வேண்டாம் . '

கொஞ்ச நாழிக்கு முன்னே ஒருத்தி புள்ளைகுட்டியோட நல்லா இருக்கணும்னு என்னை வாழ்த்தினா . . . பொண்டாட்டி புள்ளைகுட்டியோடன்னு அவ வாழ்த்தலையே . . .

இப்படி வசனங்கள் எல்லாமே அளவோடு அமைந்து பெருமை சேர்க்கின்றன .

சங்கீதாவின் பாத்திரப் படைப்பில் சுருதி சேராத அபஸ்வரம் ஏராளம்! ரஜினி - சங்கீதா காதல் தோல்வி படத்துக்குத் தேவைதானா? காதலன் கடன்காரன் என்று தெரிந்தவுடன் அவனைக் கைகழுவி விடுவதாகக் காட்டுவது ஆழமில்லாத கற்பனை. இது பெண்களின் காதல் உணர்ச்சியை ஏதோ உயிரற்ற சரக்கு என்று கேலி செய்வது போலவும் உள்ளது .

படாபட் - ஜெயா சண்டை போடும் போது , ரஜினி படாபட்டை உள்ளே அழைத்துச் சென்று ' நீ படிச்ச பொண்ணு . . . புத்திசாலியான பொண்ணு . . அழகான பொண்ணு . . . உனக்குச் சொல்லணுமா . . . ' ' ஐஸ் ' வைப்பது நைலான இடம்!

இளையராஜா இசை அமைத்திருக்கிறார்? நம்பமுடியவில்லை ! ஆனால் பின்னணி இசையில் முன்னணியில் இருக்கிறார். சில இடங்களில் ஓரிரு வாத்தியங்களை வைத்துக் கொண்டே பின்னணி இசையமைத்திருக்கும் புதுமையில் நல்ல இனிமை. 

கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு பாபுவிடம் காமிராவைக் கொடுத்திருப்பது போல் தெரிகிறது! நடுத்தரக் குடும்பத்தின் கதை - முக்கால்வாசி செட்டுக் குள்ளேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் பாபு என்ன பாபுபாய் மிஸ்திரியே வந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. 

பகவதியின் பண்பட்ட நல்ல நடிப்பு கண் கலங்க வைக்கிறது. இவர் என்ன, கேட்கும்போதெல்லாம் வாரிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாரே என்ற கேள்வி எழுந்தாலும், பின்னால் பக்கவாதத்தால் நாக்கு குழறும்போது இப்படிப்பட்ட நல்லவருக்கு இப்படியொரு முடிவா என்று வேதனை ஏற்படுகிறது. தயாள குணம் உள்ளவர்களுக்கு இதுதான் கதி என்றால் மற்றவர்களிடம் ஒருபோதும் தர்ம சிந்தனை வளராது . 

ரஜினியின் அக்காவாக . . . ஸாரி . . . தங்கையாகத் தோன்றும் ஜெயா, கட்டிலை விட்டுக் கீழே இறங்க முடியாமல் அவஸ்தைப்படுவதைப் பார்க்கும்போது . . ஒன்று . ஆறு மாதமாவது இவர் டயட்டில் இருக்க வேண்டும் அல்லது நடிகை வேலையை ராஜினாமா செய்துவிட வேண்டும்! அதே போல் தம்பி ரகுவாக வருபவர் ரஜினியின் பெரியப்பா மாதிரி தோற்றமளிக்கிறார்!

கல்யாணராமனைப் படைத்த பேனா தான் இதையும் படைத்திருக்கிறது. ஒரு வித்தியாசம் : இங்கு பேனாவிற்கு மை கண்ணீர்! இது மாதிரி நெஞ்சைத் தொடும் அடுக்கடுக்கான சம்பவங்கள் கொண்ட குடும்பக் கதையைச் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. படத்தில் இடம் பெற்றிருக்கும் பல சம்பவங்கள் அடுத்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வையும், எங்கோ நம் உறவினர் வீட்டில் ஏற்கெனவே நிகழ்ந்திருப்பது போன்ற ஒரு ஈடுபாட்டையும் ஏற்படுத்துகின்றன.

விகடன் விமரிசனக் குழு

விகடன்  மதிப்பெண் : 45

(21 .10 .1979 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . .  .)

 



AARULIRUNTHU ARUPATHUVARAI KALKI REVIEW

(07.10.1979 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information