Pokkiri Raja (1982)
போக்கிரி ராஜா 1982 ல் S.P. முத்துராமன் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படம் ''சுட்டலுன்னரு ஜாக்கரதா'' என்ற தலைப்பில் 1980 ல் வெளியான தெலுங்கு படத்தின் மறுஆக்கமாகும். ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் R. முத்துராமன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வசூலில் பெரும் வெற்றியை கண்டது மேலும் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. ''மவாலி'' என்ற தாளிப்பில் ஹிந்தியிலும் ''பஜார் பீமா'' என்று 1987 ல் கன்னடத்திலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
கதை
ரமேஷ் ஒரு தொழிலதிபரின் அலுவலகத்தில் மேலாளராக வேலைபார்த்து வருவார். அந்த தொழிலதிபரின் உறவினர்கள் தொழிலதிபரின் பணத்தை கொள்ளையடிப்பதாக ரமேஷுக்கு சந்தேகம் வருகிறது. ரமேஷ் குற்றவாளியை கண்டு பிடிக்கின்றான். மேலும் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் முடிவு கட்டுகிறார். இதனால் தொழிலதிபரின் உறவுக்காரர்கள் கோபத்திற்கு ஆளாகிறார் ரமேஷ். ஆரம்பத்தில் ரமேஷ் மற்றும் தொழிலதிபரின் மகள் வனஜா இருவரும் ஒருவரை ஒருவர் முட்டாளாக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல வனஜா மற்றும் ரமேஷ் இருவரும் காதலிக்கின்றனர். தொழிலதிபர் தனது வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் ரமேஷ் தனது மகளை காதலிப்பது தெரிந்தவுடன் அந்த மகிழ்ச்சி சென்றுவிடுகிறது. அதனால் கோபம் கொண்டு அந்த தொழிலதிபர் ரமேஷை அதே நாளில் சுடுகிறார்.
தொழிலதிபர் கொலை செய்யப்படுகிறார். அதே இரவில் ரமேஷை தனது வீட்டில் பார்க்கிறாள் வனஜா. ரமேஷ் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.மேலும் அவர் மேல் கொலை குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் வனஜா வருத்தப்படுகிறாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துக் கொள்ளும் அவளது உறவினரிகள் அவளை சுற்றி சூழ்ச்சி செய்ய துவங்குகிறாரகள். Y.G. மகேந்திரன் உறவுக்காரர்களில் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு வனஜாவை கட்டாயப்படுத்துகிறார்.
இதனால் கவலைப்படுகிறார்ரமேஷ். மேலும் தன்னை போல் தோற்றம் கொண்ட ராஜா என்ற மற்றொருவரை சிறையில் சந்திக்கின்றார் ரமேஷ். ராஜாவும் ரமேஷும் இணைந்து குற்றவாளிகளை தண்டிக்கின்றனர். மேலும் அவர்களது பாதைகளை சரிசெய்கின்றனர்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - ரமேஷ் மற்றும் ராஜா
ஸ்ரீ தேவி - வனஜா
ராதிகா - ராக்காயி
R. முத்துராமன் - வெங்கடாச்சலம்
மனோரம்மா - வெங்கடாச்சலத்தின் மனைவி
Y.G. மகேந்திரன் - சந்திரன், வெங்கடாச்சலத்தின் மகன்
S.R. வீரராகவன் - பரந்தாமன், வனஜாவின் அப்பா
I.S.R - சிறை அதிகாரி
T.M. சாமிக்கண்ணு - ராக்காயின் அப்பா
S.A. அசோகன் - வழக்கறிகர்
T.K.S. நட்ராஜன் - போலீஸ் கான்ஸ்டபிள்
காஜா ஷெரீஃ - பெட்டிக்கடை முதலாளி
ஓமக்குச்சி நரசிம்மன் - குடிகாரன்
தயாரிப்பு
''சுட்டலுன்னரு ஜாக்ரதா'' என்ற தலைப்பில் 1980 ல் வெளியான தெலுங்கு திரைப்படத்தின் மறுஆக்கமே ''போக்கிரி ராஜா'' திரைப்படமாகும். மேலும் ராதிகாவுக்கு ரஜினியுடன் ஜோடியாக இதுவே முதல் படமாகும். ஈஸ்ட்மன் கலரை பயன் படுத்தி வண்ணமயமாக்கப்பட்டது இத்திரைப்படம். இதுவே நடிகராக முத்துராமன் நடித்த இறுதிப் படமாகும்.
POKKIRI RAJA - KALKI REVIEW
(31.01.1982 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|