Guru Sishyan (1988)
குரு சிஷ்யன் 1988ல் S.P. முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும். 1987 ல் வெளியான ''இன்சாப் கி புகார்'' என்ற இந்தி படத்தின் மறுஆக்கமே இத்திரைப்படம். ரஜினிகாந்த், பிரபு, சீதா மற்றும் கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் பாண்டியன், சோ ராமசாமி, ரவிச்சந்திரன், ராதா ரவி, செந்தாமரை,, வினு சக்ரவர்த்தி, மனோரம்மா, LIC நரசிம்மன் மற்றும் சுதா ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். செய்யாத குற்றத்திற்காக சிறையி;ல் அடைக்கப்பட்ட இரு குற்றவாளிகள் தங்களை எப்படி நிரூபிக்கிறார்கள் என்பது தான் கதை.
மீனா பஞ்சு அருணாச்சலம் P.A. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ''குரு சிஷ்யன்'' திரைப்படத்தை தயாரித்தார். திரைக்கதையை அவரது கணவர் பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார். T.S. விநாயகம் ஒளிப்பதிவில் R. விட்டல் மற்றும் C. லான்சி எடிட்டிங் செய்துள்ளனர். மேலும் கலை இயக்குனராக B. சலாம் பணியாற்றினார். இத்திரைப்படத்தின் மூலம்தான் கௌதமி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ரஜினிகாந்த் மற்றும் பிரபு இருவரும் முதலில் இணைந்து நடித்தது இத்திரைப்படத்தில் தான். படப்பிடிப்பு முதலில் சென்னை மற்றும் மைசூரில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படதின் படப்பிடிப்பு 25 நாட்களில் நிறைவடைந்தது.
குரு சிஷ்யன் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு 13 ஏப்ரல் 1988 ல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் M.G. ராமசந்திரன் இறந்த பின்னர் சில மாதங்கள் கழித்து இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. அரசியல் கொந்தளிப்புகள் மத்தியில் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட போதிலும் வணிக ரீதியான வெற்றியை பெற்றது. மேலும் 175 நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடியது.
கதை
விரைவாக விடுதலை ஆக உள்ள ராஜா மற்றும் பாபு மரண தண்டனை விதிக்கப்பட்ட மனோகரை சந்திக்கின்றார்கள். தனது சகோதரி சுமதியை ஒரு டாக்ஸி ஓட்டுநர் கடத்தி சென்று முத்துராஜ் என்பவனிடம் ஒப்படைத்ததாகவும் அவன் தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டான் என்று அவர்களிடம் கூறுகினான் மனோகர். முத்துராஜ் அவனது மூத்த சகோதரன் ராஜமாணிக்கம், ஜெயராம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லசிவம் ஆகியோர் இணைந்து அந்த டாக்ஸி ஓட்டுனரை கொலை செய்துவிட்டு பழியை தன மேல் போட்டுவிட்டார்கள் என்றும் மனோகர் அவர்களிடம் சொல்வான். ராஜா மாற்றும் பாபு இருவரும் மனோகரை நம்புகிறார்கள். மனோகரின் மரண தண்டனையை சிறிது காலம் தள்ளிவைக்க அவனது இடது கையை ராஜா முறித்துவிடுவான். பிறகு ராஜாவும் பாபுவும் விடுதலை அடைந்து மனோகரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற ஒரு திட்டத்தைப் போடுவார்கள்.
நல்லசிவம் இல்லாத போது ராஜாவும் பாபுவும் சிபிஐ அதிகாரிகளாக நடித்து அவரது வீட்டில் வருமான வரி சோதனையை நடத்துவார்கள். சட்டவிரோதமாக அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். மேலும் அவை அனைத்தும் நல்லசிவத்தின் வீட்டில் கைப்பற்றப்பட்டவை என்பதை ஒரு காகிதத்தில் எழுத்து அவரது மனைவி கல்யாணியிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். நல்லசிவம் தனது வீட்டில் நடந்த சோதனையை பற்றி தெரிந்து கொண்டு ராஜாவையும் பாபுவையும் கைது செய்வதாக மிரட்டுகிறார். ஆனால் அவ்ர்கள் அந்த காகிதத்தை நகல்கள் எடுத்து வைத்துக் கொண்டு நல்லசிவத்தை இருவரும் மிரட்டுவார்கள்.
ராஜா மற்றொரு ஆய்வாளரான கீதாவை காதலிக்கிறார். மேலும் அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜமாணிக்கத்தின் மகளான சித்ராவை காதல் செய்யுமாறு பாபுவிடம் கூறுகிறான் ராஜா. ஆரம்பத்தில் சித்ராவை காதலிக்க பாபு தயக்கம் காட்டுகிறான். பின்னர் சித்ராவை காதலிக்க ஆரம்பிக்கின்றான். கீதா போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லசிவதின் மகள் என்பதை ராஜா தெரிந்து கொள்கிறான். அதனால் கீதாவிடமும் தான் ஓரு சிபிஐ அதிகாரி என்று பொய் சொல்கிறான். ஒரு புது அடியாளாக முத்துராஜிக்கு மாறி அவரை கண்கணிக்க நல்லசிவத்தின் உதவியுடன் வீட்டின் உள்ளே நுழைகிறான் ராஜா. பிறகு பாபு உண்மையாகவே சித்ராவை காதலிக்க ஆரம்பிக்கின்றான்.
தான் ஒரு சிபிஐ அதிகாரி இல்லை என்றும் அவளது அப்பாவின் ஊழலை கண்டுபிடிக்கவே இப்படி நடித்ததாகவும் உண்மையை கீதாவிடம் ராஜா சொல்லிவிடுவான். இருப்பினும் கீதா ராஜாவை தொடர்ந்து காதலிப்பாள். ராஜா கொடுத்த அழுத்தத்தால் பாபுவை ஒரு பணக்காரன் என்றும் அவன் சித்ராவை காதலிப்பதாகவும் ராஜாமணிகத்திடம் அறிமுகப்படுத்துவான் நல்லசிவம். திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார் ராஜமாணிக்கம். திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமண நாள் அன்று ராஜமாணிக்கம் மற்றும் அவனது கூட்டாளிகள் செய்த குற்றஙகள் தனக்கு தெரியும் என்றும் அந்த குற்றங்களை ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்தால் மட்டுமே சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறான் பாபு. ஆனால் ராஜமாணிக்கம் மறுத்துவிடுகிறார். பின்னர் பாபு தனது உண்மையான அடையாளத்தை ராஜமாணிக்கத்திற்கு காண்பித்து திருமணத்தை நிறுத்திவிடுகிறான். சித்ராவிடம் அவளது தந்தை தான் கேட்ட வரதட்சணையை கொடுக்க மறுத்துவிட்டார் என்று கூறுகிறான். முத்துராஜ், ராஜமாணிக்கம் மற்றும் ஜெயராம் ஆகியோர் நல்லசிவம் தங்களிடம் பொய் சொன்னதை தெரிந்து கொள்கிறார்கள். மேலும் பாபு மனோகருக்கு உதவி செய்து தங்களை பழிவாங்க முயற்சிக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறார்கள்.
20 வது வருடங்களுக்கு மேலாக ராஜமாணிக்கம் தனது அடித்தளத்தில் உள்ள ஒரு சிறையில் கந்தசாமி என்பவரை அடைத்து வைத்திருப்பான். கந்தசாமிக்கு தெரிந்த ஒரு ரகசியத்தை வெளியில் கொண்டுவர ராஜமாணிக்கம் முயல்வான். ஆனால் கந்தசாமிக்கு மறதி ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து அவரை மீட்டு உண்மையை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இருப்பான் ராஜமாணிக்கம். அந்த முயற்சி வெற்றி பெறுகிறது. ஆனால் அவர் ராஜமாணிக்கத்திற்கு சொல்ல மறுக்கிறார். கந்தசாமி பாபுவிடம் மட்டுமே சொல்வான் என்று ஜெயராமன் நம்புகிறார் ஏன் என்றால் கந்தசாமி தான் மனோகரின் அப்பா.எனவே ராஜமாணிக்கம் கைதியாக இருக்கும் பாபுவை அடித்தளத்திற்கு அழைத்து செல்ல அனுமதிக்கிறார். பாபுவை ராஜா பின் தொடர்ந்து செல்வான். அவர்கள் கந்தசாமியையும் அவரது மனைவி பத்மாவையும் ரகசியமாக மீட்டுக்கொண்டு தப்பிக்கின்றார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கந்தசாமியின் மூத்த மகன் அவன் தான் என்பது ராஜாவிற்கு நினைவிற்கு வருகிறது. ஆனால் தனது பெற்றோர்களை கொன்றது கந்தசாமி என்பதை அடையாளம் காண்கின்றான் பாபு. அப்போது கந்தசாமி உண்மையை அனவைருக்கும் சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் ஒரு புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பார். அதை முதலில் பாபுவின் அப்பாவான IG ஸ்ரீராமிடன் தெரிவிக்க நினைப்பார். ஆனால் ராஜமாணிக்கம் அந்த இடத்தை சொல்லுமாறு கந்தசாமி, அவரது மனைவி பத்மா, சுமதி மற்றும் மனோகர் ஆகியோரை சிறையில் அடைத்துவிடுவான். இருப்பினும் கந்தசாமி உண்மையை சொல்ல மறுத்துவிடுவார். அதனால் கந்தசாமி போல வேடமிட்டு பாபுவின் பெறோர்களை கொலை செய்வான் ராஜமாணிக்கம். பாபுவை உயிரோடு விட்டுவிட்டு வந்துவிடுவான். பின்னர் கந்தசாமியின் குடும்பத்தார் அங்கிருந்து தப்பித்து சென்றுவிடுவார்கள். மனோகர் சிறைக்கு சென்ற பிறகு கந்தசாமி மற்றும் அவரது மனைவி பாபத்மாவை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவான் ராஜமாணிக்கம். இந்த உண்மையை ராஜா மற்றும் பாபுவிடம் பத்மா சொல்வாள். ராஜா தனது குடும்பத்தின் பிரிவுக்கு பழிவாங்க நினைப்பான்.
கீதா மற்றும் சித்ரா இருவரும் ராஜா மற்றும் பாபுவின் முயற்சியில் இணைகின்றார்கள். ராஜமாணிக்கம் இருவரையும் சந்திக்கின்றான். அப்போது தான் கேட்ட வரதச்சனையை கொடுத்தால் அதற்கு ஈடாக புதையல் இருக்கும் இடத்தை சொல்வதாக ஒப்புக்கொள்கிறான் பாபு. அதனால் ஜெயராமின் தூண்டுதலின் பேரில் புதையல் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள அனைத்து குற்றங்களுக்கும் முத்துராஜ் தான் காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்திட்டு தருவதாக ராஜமாணிக்கம் ஒப்புக்கொள்கிறான். ராஜமாணிக்கம் மற்றும் ஜெயராம் பேசிக்கொள்ளும் உரையாடலை ஒரு டேப்பிள் பதிவு செய்து அதை முத்துராஜுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த உரையாடலை டேப்பிள் கேட்ட முத்துராஜ் நல்லசிவத்துடன் மீண்டும் இணைந்து சதி செய்கிறான்.
கந்தசாமி, ராஜமாணிக்கம், ஜெயராம், ராஜா மற்றும் பாபு ஆகியோர் புதையல் இருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு நிறைய தங்க கட்டிகளை காண்கிறார்கள். ராஜமாணிக்கம் வாக்குறுதி அளித்தபடி காகிதத்தில் கையெழுத்திடுவார். ஆனால் ராஜமாணிக்கத்தின் குற்றத்திற்காக அவரையும் கைது செய்ய நினைக்கிறார்கள். மேலும் ராஜமாணிக்கத்தின் கூட்டணியை முடிக்கிறார் ஜெயராம். அதன் பின் முத்துராஜ் மற்றும் நல்லசிவம் தனது கூட்டாளிகளுடன் வந்து சண்டை இடுகின்றனர். ராஜா, பாபு மற்றும் கந்தசாமி ஆகியோர் தப்பிக்கின்ற போது ராஜமாணிக்கம் மற்றும் ஜெயராம் கொள்ளப்படுகின்றனர். முத்துராஜ் மற்றும் நல்லசிவம் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு தப்பிக்கின்றனர். ஆனால் ராஜா மற்றும் பாபு இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டு கீதாவால் கைது செய்யப்படுகிறார்கள். இப்போது முழுமையாக குணமான மனோகர் விடுதலை செய்யப்படுகிறார்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - ராஜா
பிரபு - பாபு
சீதா - சித்ரா
கௌதமி - கீதா
பாண்டியன் - மனோகர்
சோ ராமசாமி - ஜெயராம்
ரவிச்சந்திரன் - ராஜமாணிக்கம்
ராதா ரவி - முத்துராஜ்
வினு சக்ரவர்த்தி - நல்லசிவம்
மனோரம்மா - கல்யாணி
K. நட்ராஜ் - சாலமன்
LIC நரசிம்மன் - ஸ்ரீராம்
நாகராஜா சோழன் - டாக்ஸி ஓட்டுநர்
பத்மஸ்ரீ - பத்மா
சுதா - சுமதி
தயாரிப்பு
தயரிப்பாளரும் எழுத்தாளருமான பஞ்சு அருணாச்சலம் நிதி நெருக்கடியில் இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் அருணாசலத்தின் படத்தில் நடித்து கொடுத்தால் அவர் நெருக்டிலிருந்து தப்பிப்பார் என்று S.P. முத்துராமன் கூறினார். அருணாச்சலத்திற்காக ஒரு படம் நடித்து கொடுப்பதாக ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார். மேலும் அவருக்காக ரஜினிகாந்த் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். பின்னர் முத்துராமனிடம் ஒரு கதையை தயாரிக்க சொன்னார். ரஜினிகாந்த் ஒரு விருந்தினர் கதாபாத்திரத்தை செய்தால் பார்வையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மற்றும் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க முன் வரமாட்டார்கள் மேலும் அது குறைந்த லாபத்தை ஈட்டும் என்பதால் S.P. முத்துராமன் ஆட்சேபித்தார். அதனால் முத்துராமன் ரஜினிகாந்திடம் 25 நாட்கள் கால்ஷீட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த நாட்களுக்குள் படத்தை முடிப்பேன் என்றும் கூறினார். சராசிரியாக ஒரு தமிழ் படத்தை முடிக்க 45 நாட்கள் ஆகும்
''இன்சாப் கி புகார்'' என்ற ஹிந்தி திரைப்படத்தை முத்துராமன் பார்த்திருந்தார். இத்திரைப்படத்தை மறுஆக்கம் செய்ய முடிவு செய்தார். அதனால் அவர் ரஜினிகாந்திடம் 25 நாட்கள் போதும் என்று கூறினார். ரஜினிகாந்த் இப்படத்தில் கையெழுத்திட்டார்.ஆனால் கொடுக்கப்பட்ட தேதிகளை விட அதிகமாக நடிக்க மாட்டேன் என்று கூறினார். இத்திரைப்படத்தை அருணாசலத்தின் மனைவி மீனா அவர்களின் சொந்த நிறுவனமான P.A. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் கீழ் தயாரித்தார். அருணாச்சலம் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதினார். B. சலாம் இயக்கத்தில் T.S. விநாயகம் ஒளிப்பதிவில் R. விட்டல் மற்றும் C. லான்சி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார்கள். அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு இப்படத்திற்கு உதவி தயாரிப்பு மேலாளராக பணியாற்றினார்.
வெளியீடு மற்றும் வரவேற்பு
''குரு சிஷ்யன்'' திரைப்படம் 13 ஏப்ரல் 1988 ல் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. மாங்காடு அம்மன் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை விநியோகம் செய்தனர். ''இத்திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் 60,000 ரூபாய்க்கு வெளிநாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றனர் ஆனால் இப்படம் ஆய்வின் கூற்றுப்படி ஸ்ரீதர் பிள்ளைக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிற்கு வணிகம் செய்தது'' என்று பிரதிபா பரமேஸ்வரன் தெரிவித்தார்.
24 ஏப்ரல் 1988 ல் 100க்கு 40 என்று மதிப்பீடு செய்து ''குறு சிஷ்யன் ஒரு நகைச்சுவை திரைப்படம் மற்றும் ரஜினி இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்''என்று ஆனந்த விகடன் பாராட்டியது. ''ரஜினிகாந்த் மற்றும் பிரபு ஆகியோரது கதாபாத்திரங்கள் தங்கள் மனம் கவர்ந்தது'' என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கிருஷ்ணசாமி எழுதியுள்ளார். அறிமுக நாயகி கௌதமியின் நடிப்பு அபாரமாக இருந்தது மேலும் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் நடனங்கள் படத்திற்கு பிரகாசத்தை சேர்க்கிறது என்றும் விமர்சித்துள்ளனர். M.G. ராமச்சந்திரனின் மறைவிற்கு பிறகு அரசியல் கொந்தளிப்பின் போது இத்திரைப்படம் வெளியிடப்பட்டாலும் வணிக ரீதியாக வெற்றியை கண்டது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் இத்திரைப்படம் ஓடி வெள்ளி விழாவை கண்டது.
|