Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Murattukaalai (1980)

Murattu Kaalai (ROUGH BULLOCK) was a blockbuster Rajnikanth's film of 1980s. This was the first film for Rajnikanth with AVM Productions. AVM had stopped producing films by 1970 and Murattukaalai was the re-entry into Tamil films. The famous song 'Podhuvaaga en manasu thangam' was featured in this film. This song is till date, one of the best Rajnikanth song and will remain so forever. Rajnikanth played the character named Kaalaiyan and he became a larger than life figure and a true superstar of Tamil film industry after this film. S.P.Muthuraman who directed this film went onto direct 25 films with Rajnikanth.

One of Tamil Cinema's classics , "Murattu Kaalai" , is still considered evergreen . Released in 1980 , this movie catapulted Rajni to great heights and is considered to be one of his finest movies.

The story is rather cliched , but is acceptable , considering the era in which it was made. There are 2 neighbouring villages , and Kaaliyan ( Rajni) is the best "Jallikattu " ( bull-fighting) player in the vicinity. Kaaliyan also happens to be a rather prominent person in his village , but is very down to earth. Jaishankar holds the same position in the neighbouring village , but is a stark contrast to Kaaliyan . Jaishankar lives an extravagant lifestyle , complete with goondas for sidekicks. Jaishankar 's sister , and Kaaliyan have a brief romance.

Kaaliyan , however is very affectionate towards his brothers and his entire world revolves around them . Jaishankar , decides to marry off his sister to Kaaliyan , with an eye on his land. The marriage almost gets fixed , but Kaaliyan comes to know that Jaishankar's sister wants to split the bond between the brothers. He then calls off the marriage.

What happens after that is rather predictable , and involves a dozen sub-plots , as was the trend in those days. What stands out however is some fine acting by the cast .

Rajinikanth is such a delight to watch . This movie was made much before he was crowned the "Superstar" , and although we don't get to see the trademark Rajinikanth stuff in this movie , he comes up with a very fine performance. Comic timing was his forte those days , and the comedy scenes involving him are nice. There are a few " angry young man" scenes , which highlight his acting potential.

Jaishankar and his sister don't have much scope for acting and are rather monotonous in their performances. Rati Agnihotri as , the young Kannamma , who takes refuge under Kaaliyan , to escape the clutches of Jaishankar , comes up with a decent act . Y.Gee.Mahendra , as Kaaliyan's brother , comes across as a very funny character. He makes you laugh , in almost every frame involving him.

Technically , this film was a trend setter in Tamil Cinema. The stunt sequences , were such a novelty those days. The train fight sequence is worth mentioning , and is brilliantly shot. The locations for the movie are very beautiful , replete with lakes , waterfalls, and lush green fields.

There are some brilliant scenes . The one in which Jaishankar visits Kaaliyan's place to offer his sister's hand for marriage is one of the most hilarious sequences I have come across. Watch out for Y.Gee.Mahendra's body language in this scene. And of course the bull fighting sequences. There is also a brilliant scene in which Jaishankar's sidekick whips Kalliyan's brothers. Kaaliyan's anger is portrayed in such a ruthless manner , by the Superstar.

The songs , composed by Maestro Illayaraaja, are simply amazing. Of particular importance is the "Pothuvaga En manasu Thangam" , number. This is one of the most famous songs till date , and has still not lost its appeal. The song , picturized after Kaaliyan wins the bull fighting contest , is very well shot , with some wonderful lyrics , and will remain legendary forever.

Overall , the movie is decent . The time in which it was made is an important factor. This is such a trend setting movie , and is considered to be a cult. It has been referred to in quite a fewTamil movies , the latest being "Subramaniyapuram". Although it has many cliched scenes and characters , it does not really bore you , except in a few scene

Probably, Art Director A.K.Sekhar last film and first film with Rajnikanth, which got awards for Sekhar postumously.

 

முரட்டுக்காளை

முரட்டுக்காளை 1980 இல் வெளியான தமிழ் அதிரடி நாடக திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் இயக்கப்பட்டது மற்றும் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் எழுத்தப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த்,ஜெய்சங்கர்,ரதி அக்ரிஹோத்ரி மற்றும் சுமலதா ஆகிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். இக்கதை காங்கேயன் என்பவனை சுற்றியே அமைந்துள்ளது. காங்கேயன் ஒரு கெளரவமான கிராமத்து பணக்காரனாக  இருந்தாலும் சராசரி வாழ்வையே அவன் விரும்பினான். அவனது கிராமத்தின் அருகில் மற்றொரு கிராமம் இருந்தது. அதில் சுந்தரவேலு என்ற மற்றொரு பணக்காரன் இருந்தான். அவன் காளையனின் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கிறான் எனபதை பற்றியதே இக்கதை.  

முரட்டுக்காளை ரஜினிகாந்துக்கு ஏ. வி. எம் தயாரிப்பில் முதல் படம் மேலும் இப்படத்தின் மூலம் ஏ. வி. எம் தமிழ் சினிமாவில் நீண்ட ஓய்விற்க்கு பிறகு  மீண்டும் நுழைந்தது. இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி 1980 இல் வெளியானது மேலும் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது மற்றும் இப்படம் ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டாராகவும் அதிரடி நாயகனாகவும் இரு வகையாக காட்டியது. 

கதை       

காளையன் ஒரு இரக்க குணம் கொண்ட நல்ல மனிதன். அவன் தன் நான்கு சகோதரகளுடன் ஒரு அழகான கிராமத்தில் வாழ்ந்து வந்தான். சுந்தரவேலு என்பவன் காளையன் போலவே ஒரு சமமான பணக்காரன் ஆனால் காளையனின் குணத்திற்கு நேர் எதிரானவன். சுந்தரவேலுவுக்கு காளையன் நிலத்தின் மேல் ஒரு கண் அதனால் சுந்தரவேலு தனது உதவியாளரான சாமிப்பிள்ளை என்பவரை காளையனிடம் அனுப்பி அவனது இடத்தை வாங்குவதற்க்காக சில சலுகைகளை தருவதாக கூறுகிறான்.  சாமிப்பிள்ளையின் குடும்பத்தை எரித்தது சுந்தரவேலுவின் தந்தை. அதனால் தான் யார் என்று சுந்தரவேலுவிற்கு சொல்லாமல் சமயம் வரும் போது சுந்தரவேலுவின் குடும்பத்தை அழிக்க சுந்தரவேலுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளான் சாமிப்பிள்ளை. காளையன் தனது இடத்தை தர மறுக்கின்றான் அப்போது சாமிபிளைக்கு காளையன் ஒரு ஜல்லிக்கட்டு வீரன் என்பதை  சுந்தரவேலுவிடம் கூறினான் மேலும் சுந்தரவேலுவை தனது கிராமத்தில் நடக்க போகும் ஊர் திருவிழாவில் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துமாறு ஒரு யோசனையை கூறினான். மேலும் ஆதில் யார் வெற்றி பெருகிறார்களோ அவருக்கு சுந்தரவேலு தனது தங்கை சௌந்தர்யத்தை திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறான். அப்போட்டியில் காளையன் வெற்றி பெறுகிறான் மேலும் சுந்தரவேலுவின் சூழ்ச்சியை தெரிந்து கொள்கிறான் காளையன் அதனால் சௌந்தர்யத்தை திருமணம் செய்ய மறுக்கிறான் காளையன் இதை கேட்டு சௌந்தர்யம் மணமுடைகிறாள் மற்றும் ஏமாற்றம் அடைகிறான். சுந்தரவேலு அவமானம் படுத்தப்படுகிறான்.       

சுந்தரவேலு அவனது கிராமத்தில் வசிக்கும் கண்ணம்மா என்பவளை காதலிக்கிறான் மேலும் அவனது காதலை தெரிவிக்கிறான். ஆனால் அவள் அதை மறுக்கிறாள் அதனால் சுந்தரவேலு அவளை பலவந்தப்படுத்த முயற்சிக்கிறான் அதனால் அவள் தப்பித்து காளையனிடம் தஞ்சம் அடைகிறாள்.  காளையன் அவளை தனது வீட்டில் தங்க அனுமதிக்கிறான். அவள் மேலும் வீட்டில் தங்கி வீட்டு  வேலைகள்  எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். மேலும் காளையனது தம்பிகளை கவனத்தை ஈர்க்கிறாள். கிராமத்தில் உள்ளவர்கள் கண்ணம்மாவை பற்றி தவறாக பேசியதால் காளையனின் தம்பிகள் கண்ணம்மாவிற்கும் காளையனுக்கும் திருமணம் செய்ய நினைக்கின்றனர். இதை அறிந்த சுந்தரவேலு தனது அடியாட்களின் ஒருவனான சங்கிலி என்பவனை அனுப்பி சண்டை இட்டு திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறான். ஆனால் காளையன் அமைதியாக செல்கிறான்,அப்போதும் சங்கிலி வீடாமல் சண்டைக்கு அழைக்கின்றான். சிறிது நேரத்தில் சுந்தரவேலு சங்கிலியை கொலை செய்து விட்டு பழியை காளையன் மேல் போட்டுவிடுகிறான். காவல்துறை காளையன் குற்றவாளி என முடிவு செய்து காளையனை  கைது செய்ய திருமணம் நடக்கும் இடத்ததிற்க்கு வருகின்றது. ஆனால் காளையன் காவல்துறையிடம்மிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறான். சௌந்தர்யம் தனது அண்ணனின் தவரை தெரிந்துகொண்டு காலையனை தேடி காட்டுக்குள் செல்கிறாள். அங்கு காளையனை சந்தித்து உண்மையை கூறுகின்றாள். சௌதர்யத்தை பின் தொடர்ந்த அவளது அண்ணன் சுந்தரவேலு காளையனை கத்தியால் குத்த முயற்சிக்கிறான் அப்போது சௌந்தர்யம் இடையில் வந்து கத்தி குத்தை தனது வயிற்றில் வாங்கிக்கொள்கிறாள். உடனே அதே இடத்தில் மரணமடைகிறாள்.      

சுந்தரவேலு மறுபடியும் சௌந்தர்யத்தின் கொலையை காளையன் மேல் பழிபோட்டுவிடுகிறான். இதனால் போலீஸ் காளையனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தனிப்படை அமைத்து காட்டுக்குள் தேடி செல்கின்றது. அந்த தனிப்படையில் ஒருவன் சுந்தரவேலுவின் கையாள். அவன் ஒரு காவலரை அடித்துக் கொன்றுவிட்டு அவன் இறந்து விட்டதாக நினைத்து திரும்பி சென்றுவிடுவான் ஆனால் அவர் இறக்கவில்லை. அந்த காவலரை காளையன் கண்டுபிடித்து காப்பாற்றிவிடுவான். சுந்தரவேலு அந்த தாக்கப்பட்ட காவலர் உயிருடன் இருப்பதை தெரிந்துகொண்டு காளையன் ரயில் வண்டியில் செல்வதை தெரிந்து கொண்டு அவனை தாக்க சில ஆட்களை அனுப்புகிறான். ஆனால் காளையன் அவர்களுடன் சண்டை இட்டு வெற்றி பெற்று அவர்களிடம் அமைதியாக தானும் அந்த அடிப்பட்ட காவலரும் இறந்து விட்டதாக சுந்த்ரவேலுவிடம் கூறச்சொல்கிறான். காளையனும் கண்ணம்மாவும் சுந்தரவேலு பிறந்தநாள் விழாவிற்கு நடனம் ஆடுபவராக உருமாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆட்டம் முடிந்தவுடன் சுந்தரவேலு அவர்களுக்கு பணம் கொடுப்பான் அப்போது காளையன் தனது உருவத்தை களைத்துவிட்டு சண்டை போட ஆரம்பம் ஆகிறது. போலீஸ் வரும் வரை சண்டை நடக்கிறது. சுந்தரவேலுவை போலீஸ் அவன் செய்த கொலைக்காக கைது செய்கிறது. ஆனால் சுந்தரவேலு தான் செய்த குற்றத்திற்கு சாட்சி மற்றும் ஆதாரம் கேட்கிறான் அப்போது சாமிப்பிள்ளை முன்வந்து தனது அடையாளத்தை காண்பித்து சாட்சியம் மற்றும் ஆதாரத்தை கொடுக்கிறான். சுந்தரவேலு இதற்கு மேல் தனக்காக யாரும் ஆதரவு இல்லை என்று நினைந்துக்கொண்டு மேலும் கைதில் இருந்து தப்பிக்க தன்னை தானே சுட்டுக்கொண்டு மரணம் அடைந்தான்.              

நடிகர்கள் 

    *      காளையனாக ரஜினிகாந்த் 

    *      சுந்தரவேலுவாக ஜெய்சங்கர் 

    *      கண்ணம்மாவாக ரதி அக்னிஹோத்ரி 

    *      சௌந்தர்யமாக சும்மலத்தா 

    *      காளையனின் சகோதரனாக ஒய். ஜி. மாகேந்திரன்

    *      சாமிப்பிள்ளையாக சுருளிராஜன் 

    *      எஸ். அசோகன் (சிறப்பு தோற்றம்)

    *      தேங்காய் ஸ்ரீநிவாசன் (சிறப்பு தோற்றம)  

தயாரிப்பு நிறுவனம் 

இயக்குனர் எஸ். பி. முத்துராமன் மற்றும் ரஜினிகாந்த் இனைத்திருக்கும் நான்காவது திரைப்படம் தான் முரட்டுக்காளை. ரஜினிகாந்துக்கு இது தான் ஏ. வி.எம் தயாரிப்பில் முதல் திரைப்படம். மேலும் இத் திரைப்படம்       ஏ. வி. எம் மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான மற்றும் ஒரு சிறந்த திரைப்படமாக விளங்கியது.  இத் திரைப்படத்தை இயக்கியது எம். குமரன்,எம். சரவணன், மற்றும் எம். பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று சகோதரர்கள் மற்றும்  இப்படத்தின் கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். இப்படத்தில் பாபு புகைப்பட கலைஞராகவும் ஆர். விட்டல் திருத்துபவராகவும் பணியாற்றியுIயுள்ளார்கள் . இது வரை ஜெய்சங்கரை ஒரு கதாநாயகனாக பார்த்து வந்தவர்கள் இப்படத்தில் தான் முதல் முறையாக ஒரு வில்லனாக பார்த்துள்ளனர். முத்துராமன் தயாரிப்பாளர்கள் இக்கதையை ஜெய்சங்கரிடம் முதலில் எடுத்து செல்ல தயங்குவார்கள் என நினைத்தார் ஏனென்றால் இக் கதையில் ஜெய்சங்கருக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம் மேலும் இதில் நடித்தால் அவருடைய ஹீரோ பிம்பம் போய்விடும் என நினைத்தனர். ஆனால் ஜெய்சங்கர் இப்படத்தில் நடிக்க எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் நடிக்க  ஒததுக்கொண்டார்.ஜெய்சங்கருக்கு தன்னை போலவே சமமான விளம்பரம் அனைத்து படங்களிலும் கிடைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விருப்பினார் அது போலவே நடந்தது. படத்தின் உச்சகட்டதில் ரயிலின் மேல் வரும் சண்டை காட்சி ஜூடோ எ. கே. ரத்னம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது மேலும் இந்த காட்சியை படமாக்க மூன்று நாட்கள் ஆனது.                        

வெளியீடு மற்றும் வரவேற்பும் 

 முரட்டுக்காளை 20 டிசம்பர் 1980 வெளியிடப்பட்டது. இதற்கு ஆனந்த விகடன் "பி" மதிப்பீடு தந்தது. மேலும் இந்த திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடி ஒரு வணிக வெற்றியை தந்தது. 

மரபு   

முரட்டுக்காளை திரைப்படம் தான் அறிமுக பாடல் ஏன்ற ஒன்றை ஏற்ப்படுத்தியது. அதன் பின் ரஜினியின் அனைத்து படங்களிலும் அறிமுக பாடல் என்ற ஓன்று ஒரு அடையாளமாக மாறியது. இத் திரைப்படம் தான் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என ஒரு புதிய பெயரை தந்தது. மேலும் உச்சகட்ட சண்டை காட்சி மற்றும் ஜல்லிக்கட்டு காட்சி இவை இரண்டும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக மாறியது. 'சீவிடுவேன்" என்ற வசனம் அத்திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தது.

 





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information