Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Baba (2002)

Rajini is fascinated by the Himalayas. He also knows a Babaji who has been alive for 2000 years! He has mixed all this up in a perfect movie-masala and has stuffed it down our throats. All we can do is grin and bear for our beloved Rajini.

Even at his birth, Rajini is declared to be someone almost divine and extraordinary.

He grows up as a Non-believer. At a stage, a holy-man in the guise of a beggar (Sayaji Shindae) takes him to the Himalayas. At the mountains, the saints teach him 7 mantras. These mantras have the power to make any wish come true. Initially, Rajini is skeptic about the power of the mantras and playfully wastes some of them away. He then begins to give up his lack of faith in God and begins to transform into a Believer. His lifestyle begins to change. He uses his final mantra to create an honest, non-corrupt Chief Minister of the state.When the other corrupt politicians kill the honest CM, Rajini reluctantly gives up his path of Saatvik lifestyle by choosing Karma yoga. He does this by entering active politics himself. The film ends with an ' it continues' note.

Rajini carries the film squarely on his shoulders. What captivates the audience the most is his undiminishing youthfulness and energy.

Rajni had a light beard in this film to give a carefree image to the Characterization. Rajni's name is associated with the style and he performed each and every moment of Baba character with great e'lan. Rajni's introduction is shown with the song 'Tippu Tippu, in a railway station set. He also did different dances for the songs 'Baba Kichu Kichu and 'Maya Maya in the dance direction of Prabhudeva and Lawrance respectively. His mannerism in the film is saying 'Gatham Gatham' (past is past) by showing his trademark Baba symbol (see the image of Baba). Another interesting mannerism is giving shake-hand to his pal for every dialogue he or his friends crack.

Rajini's dance is the best thing that had happened to the song sequences. His dance, his rapid dialogue deliveries and his fast paced gait are received by applauses of joy and jubilation by the audience.

Since he clashes directly with the 'CM' and 'Deputy CM' in the film, the dialogues are laced liberally with political overtones. These too are greeted with whistles and applauses. Towards the end of the film, Koundamani plainly tells him, "Why don't you become the CM yourself, Baba?" Even before the dialogue ends, the fans go crazy with their shouts of joy and affirmation.

Manisha's character was put together in a big rush or that's what it looks like. One doesn't get the feeling that she is the heroine of the film. She doesn't have the appeal or glam of the heroine. Pretty dry she looks. Aashish Vidhyarthi's character adds strength to Rajini's role. Koundamani is very hilarious in the first half of the film. Sujatha's character portrays motherhood sentiments to perfection.

The song 'Rajjiyamaa' with AR Rehman's score gels beautifully with the story and spins magic. When seen along with the film, Rehman's music score works. The music has supported the film very well indeed! Cinematographer Chota K Naidu and editor Vijayan deserve special mention. They have put in tremendous effort in further strengthening the scenes that portray Rajini's might and strength.

It's an interesting twist when the Babaji gives the boons to a Non-Believer like Rajini. The film picks up speed when Rajini has only one more manthra to use. The story has some good instances of screenplay, like when everybody starts compelling Rajini to take up the CM position himself with the Opposition too trying to capture the coveted position, and when Rajini attempts to use his last boon to create an honest politician.

Rajini has done the story and screenplay of this film. So, director Suresh Krishna couldn't do anything much there. But, he has done his best in bringing out the opulence in the framing of scenes and song sequences.

Rajini is very much into Spirituality. Rajini's fans are very much interested in seeing him enter into Politics.'Baba' is a coming together of both these desires.

Rajnikanth's intention of mixing the Indian philosophy with mass elements is commendable. At the end of the film Rajni asks the Baba to tell him what everybody should do to have a harmony in society. Baba replies Rajni 3 principles 1. You should keep your body and heart very clean 2. one must keep his/her family very happy 3. One must help the society. Even if you don't help society, you should never harm it.

The film moves almost along the lines of a 'God and goddess' film. The film doesn't offer a wide option in entertainment elements. So, the only entertainment factor of the film is Rajini and his styles

 

பாபா - ஆனந்த விகடன் விமர்சனம்

பாபாவின் பிறப்பு ரகசியம் , ஜாதக விசேஷம் என்று ' ஹாரி பாட்டர் ' படம் போல் ஏதோ பில்டப் கொடுக்கிறார்கள் . தூர்தர்ஷனில் குழந்தைகள் பார்க்கிற சக்திமான் ' சீரியல் மாதிரி யோகம் , தியானம் , இமயமலையில் 2000 வயசு கொண்ட மகா அவதார் என்று ஏதேதோ சொல்கிறார்கள் . காதில் பூ மணம் கமகமக்கப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது ! 

தியேட்டரில் விசில் , கைதட்டல் , அடித் தொண்டையிலிருந்து ' தலைவா ' கத்தல் எல்லாமே முதல் பதினைந்து , இருபது நிமிடங்களுக்குத்தான் . அதன் பிறகு படம் முடியும்வரை தியேட்டரில் பயங்கர நிசப்தம் - நடுநடுவே வரும் சண்டைக் காட்சிகள் மற்றும் ' படையப்பா ஃப்ளாஷ்பேக் காட்சி நீங்கலாக ! 

ரஜினியிடம் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பது பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த மசாலாவை , இளமைத்துள்ளலுடன் அவர் காதல் செய்வதை படுஸ்டைலாக நடந்துவந்து சவால் விடுவதை , வீராதி வீரனாக எதிரிகளைத் துவம்சம் செய்வதை இவை எல்லாவற்றையும் பாபாவில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது . 

மேலும் , உள்ளூர் கோயிலிலும் மலைச் சாரலிலும் காவி உடைகள் நிகழ்த்தும் தத்துவ விசாரங்கள் சூழ்நிலையை ' சத்சங்க மாநாடு ' மாதிரியாக மாற்றிவிடுகின்றன ! 

கடவுள் பக்தி இல்லாத நாத்திகராக ரஜினி வரும் ஆரம்பப் பகுதிகளில்தான் யானைப்பசிக்கு சோளப்பொரியாவது கிடைக்கிறது . ' டிப்பு . . டிப்பு . . ' பாடலில் அவர் போடும் துள்ளாட்டங்களும் , முஸ்லிம் பெரியவர் கிட்டிக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது வாலிபால் கோர்ட்டில் ரியாஸ்கான் கோஷ்டியைப் பந்தாடும் தருணங்களும் சொற்ப அளவில் ' அட ' போட வைக்கின்றன ! அந்தச் சண்டையிலும் கூட ரஜினியின் வேகத்தைவிட , கிராபிக்ஸ்தான் ஒரு படி தூக்கல் ! 

' பாபா ' வில் ஆன்மீகம் கொச்சைப்படுத்தப்படுவதுதான் வருத்தமான விஷயம் . மந்திரத்தால் மாங்காயை மடியில் விழவைப்பதுதான் ( ஒரு மாறுதலுக்கு இங்கே காற்றாடி ! ) ஆன்மிகம் என்ற தவறான செய்தியை படத்தில் ரஜினி பரப்பியிருப்பது ஆச்சரியம் ! எந்த குரு பீடமுமே , எந்த மகா அவதாரங்களுமே ஆன்மீகத்தை சித்து வேலையோடு சம்பந்தப் படுத்தவில்லை ! ஏதோ விட்டலாச்சாரியா படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிட்டார்கள் ! 

வலுவான வில்லன் பாத்திரம் கதையில் அமைக்கப்படாதது பெரும்குறை . 

ரஜினியிடம் இருக்கும் மந்திரத்தை லவட்டிக் கொண்டு வந்துவிட்டால் , முப்பது வருடங்களுக்கு பதவி நாற்காலி உறுதி என்று ஒரு முதலமைச்சர் நினைப்பதும் , அது கிடைக்காமல் போகவே ரஜினியை அவர் தீர்த்துக்கட்ட முடிவெடுப்பதும் அபத்தக் களஞ்சியம் !

அமைச்சர் ஆசிஷ் வித்யார்த்தி எப்படி ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும் என்பதற்கு பாடம் எடுக்கிறார் . அமைதி தவழும் முகத்தில் புன்னகயைப் படர விட்டுக் காரியத்தைச் சாதிக்க நினைக்கும் லேட்டஸ்ட் வில்லன்கள் இன்றைய சினிமாக்களில் வந்துவிட்டனர்.

கவுண்டமணி பழைய form - க்கு வந்துவிட்டார் . ரஜினிக்கு சாதகமாகப் பேசியும் , சம்யங்களில் அவரை காலை வாரி விட்டும் கலகலப்பூட்டுகிறார் மணி . அடுத்த ரவுண்டுக்கு வாழ்த்தி வரவேற்போம் . 

இந்தப் படத்துக்கு திரைக்குப் பின்னால் இரண்டு கதாநாயகர்கள் உழைப்பு சிந்தியிருக்கிறார்கள் . வாலி வைரமுத்துவைத்தான் குறிப்பிடுகிறோம் ! ஓங்கி உலகளந்த உத்தமனாகக் கருதப்படும் ரஜினியின் எதிர்காலத்தை மையப்படுத்தி இவர்கள் எழுதிய கவிதை வரிகள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டன ! 

எங்கேயோ லண்டனில் உட்கார்ந்து டியூன் போட்டால் எப்படி இருக்கும் , ' பாபா ' படப் பாடல்கள் மாதிரிதான் இருக்கும் ! 

படம் முழுவதும் கிட்டத்தட்ட செட் போட்டு எடுத்திருப்பதால் ஏதோ ஒரு நாடகத்தனம் உறுத்துகிறது .

வயது கூடிவிட்ட பின்னரும் படங்களில் எம் . ஜி . ஆர் . நடித்தார் . ஆனால் , இளமையிழந்த தோற்றம் திரையில் துளியும் தெரியாத வகையில் காமிரா கோணங்களைக் கவனமாக அமைத்துக் கொள்வார் . ஆனால் , அந்த கவனம் ரஜினிக்கு இந்தப் படத்தில் கொடுக்கப்படவில்லை . இது ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் ஒரு கரும்புள்ளியே ! 

' ரஜினிக்கு ராஜ்யமா இல்லை , இமயமா ? அதாவது , அரசியலா அல்லது ஆன்மீகமா ? 

- கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து பட்டிமன்றம் நடத்த வேண்டிய சப்ஜெக்ட் இது . அதிகபட்சம் பண்டிகை நாளில் டி . வி - யில் அரைமணி நேரம் ரசிக்கலாம் ! 

இந்த சொந்தக் கதையை மூன்று மணி நேரத்துக்கு இழுத்திருக்கிறார்கள் . முடிவில் தொடரும் ' என்று வேறு போடுகிறார்கள் . 

அரசியலா , ஆன்மீகமா என்ற ரஜினியின் குழப்பம் தொடருமா அல்லது பாபா - 2 என்று படம் தொடருமா ? 

விகடன் விமரிசனக் குழு

விகடன்  மதிப்பெண் : 39

(25.08.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . .  .)

 

BABA - KUMUDAM REVIEW



BABA - KALKI REVIEW

(25.08.2002 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information