Bairavi (1978)
பைரவி 1978 ஆம் ஆண்டு M. பாஸ்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு, கதை மற்றும் திரைக்கதையை கலைஞானம் கையாண்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தனி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு ''சூப்பர் ஸ்டார்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீபிரியா முக்கிய கதப்பித்திரத்திலும் கீதா ரஜினியின் சகோதரியாகவும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஸ்ரீகாந்த் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிகர் சுதீர் பைரவியின் வளர்ப்பு சகோதரனாகவும் நடித்துள்ளனர். மனோரமா மற்றும் சுருளி ராஜன் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் 8 ஜூன் 1978 ல் வெளியிடப்பட்டது.
கதை
மூக்கையன் மற்றும் அவரது சகோதரி பைரவி இருவரும் ஒரு குடிகாரனின் குழந்தைகள். ஒரு விபத்தில் பைரவி சிக்கிக் கொள்வாள். அந்த விபத்திற்கு பிறகு மூக்கையன் மற்றும் அவனது சகோதரி பைரவி இருவரும் பிரிந்து விடுவார்கள். அதன் பின் மூக்கையன் உள்ளூர் பணக்கார பண்ணையார் ராஜலிங்கத்திடம் வேலைக்கு சேர்வான். அந்த பண்ணையாருக்கு மிகவும் விசுவாசமாக இருப்பான் மூக்கையன். அவர் இடும் அனைத்து கட்டளைகளையும் செய்து முடிப்பான் மூக்கையன். அப்போது பக்கத்து கிராமத்தில் இருக்கும் பாக்கியம் என்ற பெண்ணை கடத்தி வருமாறு மூக்கையனுக்கு கட்டளையிடுவார் பண்ணையார் ராஜலிங்கம். அவளை கடத்தி வந்து ஒரு அறையில் அடைத்து விட்டு சென்றுவிடுவான் மூக்கையன். மூக்கையன் இல்லாத போது பாக்கியத்தை பலாத்காரம் செய்துவிடுவார் ராஜலிங்கம். பாக்கியத்தின் வளர்ப்பு சகோதரனான மாணிக்கம் இந்த செயலை பற்றி தெரிந்து கொள்வான். பிறகு காவல்துறையிடம் மாணிக்கம் பூகார் கொடுப்பான். காவல்துறை மாணிகத்திடம் விசாரிக்கும் போது பாக்கியம் அவனது வளர்ப்பு சகோதரி என்பதை தெரிவிப்பான். அதை மறைந்து பார்த்துக் கொண்டு இருப்பான் மூக்கையன். அப்போது பாக்கியம் தான் அவனது காணாமல் போன சகோதரி பைரவி என்பதை தெரிந்து கொள்வான் மூக்கையன். உடனே மூக்கையன் ராஜலிங்கத்தை சந்தித்து தனது சகோதரி பைரவியை திருமணம் செய்து கொள்ளும் படி கட்டாயப்படுத்துவான். முதலில் ராஜலிங்கம் மறுப்பான் பிறகு அவளை திருமணம் செய்து கொள்வதாக மூக்கையாவுக்கு உறுதி அளிப்பான். பைரவியை கடத்தியது மூக்கையா என்பதால் காவல்துறை அவனை சந்தேகிப்பார்கள். மூக்கையானவை பற்றி தெரிந்து கொள்ள ராஜலிங்கத்தின் வீட்டிற்கு போலீஸ் வருவார்கள். அப்போது மூக்கையன் தான் பைரவியை பலாத்காரம் செய்தான் என்று போலீஸிடம் ராஜலிங்கம் கூறுவான். ராஜலிங்கத்தின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு மூகையனை போலீஸ் கைது செய்வார்கள். இதற்கிடையில் பைரவி மருத்துவமனையில் மயக்கிய நிலையில் இருப்பாள். அவள் கண் விழித்தால் தன்னை காட்டிகொடுத்துவிடுவாள் என்று ராஜலிங்கம் அவளை கொலை செய்து விடுவான். பைரவிதியை மூக்கையன் கொலை செய்துவிட்டான் என்று தவறாக நினைத்துக் கொள்வான் மாணிக்கம். அதனால் மூக்கையனை பழிவாங்க செல்வான் மாணிக்கம். பைரவி கொலை செய்யப்பட்ட செய்தி கேள்விப்பட்டு சிறையிலிருந்து தப்பித்து தனது சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக ராஜமாணிக்கத்தை கொலை செய்ய புறப்படுவான் மூக்கையன்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - மூக்கையன்
ஸ்ரீபிரியா - பவுனு
Y. விஜயா - லீலா
ஸ்ரீகாந்த் - ராஜலிங்கம்
சுதீர் - மாணிக்கம்
கீதா - பைரவி
T.K. ராமச்சந்திரன் - பைரவி மற்றும் மூக்கையனின் அப்பா
சுருளி ராஜன் - பண்ணை
V.K. ராமசாமி - மீனாட்சியின் அப்பா
மனோரமா - மீனாட்சி
K. நடராஜ் - சண்டியர்
தயாரிப்பு
''ஆறு புஷ்பங்கள்'' என்ற திரைப்படத்தில் நடித்த ரஜினியின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட கலைஞானம் அவரை ''பைரவி'' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகினார். ஆஸ்கர் மூவிஸ் இயக்குனர் M. பாஸ்கர் ரஜினியின் மீது நம்பிக்கை வைத்து அவரை ஒரு தனி கதாநாயகனாக அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில் தேவர் ''பைரவி'' திரைப்படத்திற்கு நிதி வழங்க ஒப்புக் கொண்டார். ஆனால் ரஜினி தனி ஹீரோவாக நடிக்கிறார் என்பதை கேள்விப்பட்டு ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டார். மேலும் படத்தை நிறுத்தவும் அல்லது ஹீரோவை மாற்றுமாறு கலைஞானத்திற்கு அவர் அறிவுரை கூறினார். பிறகு ஒரு வில்லனை கதாநாயகனாகவும் ஒரு கதாநாயகனை வில்லனாக தேர்வு செய்தற்கு காரணம் கேட்டு கலைஞாத்திடம் கேள்வி எழுப்பினார் தேவர். மேலும் இந்த முடிவு ஒரு பெரிய இழப்பை கொடுக்கும் என்று தேவர் உறுதியாக கூறினார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முத்துராமனை அணுகினார்கள். ஆனால் அவர் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். ஸ்ரீகாந்த் இறுதியாக அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். C.V. ஸ்ரீதரின் உதவியாளர் M. பாஸ்கர் இப்படத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.
வெளியீடு
பிளாசா திரையரங்கில் ரஜினிகாந்தின் 36 ஆடி உயர கட்டவுட் வைக்கப்பட்டது. கோலிவுட் பொறுத்தவரை முதலில் ரஜினிக்கு ''சூப்பர் ஸ்டார்'' என்று பெயர் சூடியவர் அப்போதைய முன்னணி விநியோகஸ்தரான கலைப்புலி S. தாணுவாகும். காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு அடுத்தபடியாக பிளாசா திரையரங்கிற்கு முன்னாள் ''சூப்பர் ஸ்டார்'' என்ற எழுத்துடன் ரஜினிகாந்திற்கு 35 அடி உயர கட்டவுட் வைக்கப்பட்டது. அது வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்து தாணு 1980 ல் அத்திரைப்படத்தை மீண்டும் திரையிட்டார். மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ''பைரவி'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
சிறிய விவரங்கள்
அக்டோபர் 2019 ல் தென்னிந்திய செய்திப்படி கலைஞாத்திற்கு ஒரு வீட்டை பரிசளித்தார் ரஜினிகாந்த். அதன் மதிப்பு ஒரு கோடியாகும்.
|