Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Kuselan (2008)

The superstar is a super actor too — an aspect which both he and his directors seem to have forgotten in the past few years. P. Vasu breaks the norm with gusto, as Rajini, the actor, takes over and finishes with a flourish in the last 20 minute s of ‘Kuselan’ (U). Joining the league of meaningful films that warrant a watch with the family, ‘Kuselan’ is a colourful treat from Kavithalaya and Seven Arts. And despite the imposing image of Rajini to contend with, Pasupathy makes his presence felt, with a natural portrayal — a little more could have made it melodramatic, a little less, listless. He manages the balancing act beautifully!

If Rajini is brilliant in the moving climactic portion at the school anniversary, Pasupathy scores in the finale when he comes to face to face with the superstar.

This is their fifth film together and once again Vasu’s screenplay has been moulded with a clear understanding of the psyche of the fans of the phenomenon — he did it in ‘Chandramukhi’ and he’s done it in ‘Kuselan.’ So what if they are remakes of films from God’s own country? The screenplay makes them all Vasu’s. Cleverly he’s seen to it that the Rajini factor looms large throughout. And the explanation for the title is not what you surmise — it’s a surprise!

The tether of the story is strong and the narrative, taut. Into the simple line of childhood friendship between hairdresser Balakrishnan (Pasupathy) who as a grown-up is struggling to make ends meet, and hero Ashok Kumar (Rajinikanth) whose status makes him unapproachable, is woven several strands of interesting subtexts.

She played the role in the Malayalam original. The choice of Meena as a mother of three may sound strange, but the lady slips into the role with the ease of a veteran. After watching tearjerkers where poverty spells sadness and unbearable melodrama, seeing this happy housewife unfazed by odds is a real relief! As the heroine of ‘Kuselan,’ Meena sparkles. (Though her starched saris and matching blouses belie her penury.) Nayantara fills the glam bill, sings and dances in heavy costume, or sizzles in the rain. In fact, the latter sequence is a tad too contrived. That goes for the ‘Chandramukhi Part II’ concept and the ‘Mannan’ - like number.

The goal of Vadivelu and Pasupathy is the same, but Vadivelu meets the superhero after some hilarious escapades, while Pasupathy’s meek, complex-filled attempts lead him nowhere. The comedian has been effectively used in ‘Kuselan.’ The next light character that stays in your mind is Livingston. A perfect choice! Otherwise the battalion of comedians tickles little. Santhana Bharati’s half-head-covering wig is awful. So is M.S. Basker’s. In fact wig makers have worked overtime for ‘Kuselan.’

Many popular faces come and go. But the purpose is perplexing. Was it Mamta Mohandas playing the director’s associate? Did you actually see Kamalini Mukherjee in a song sequence? Was Sneha there or were your eyes playing truant?

Composer G.V. Prakash Kumar’s ‘Paerinba Paechukaran …’ reminds you too much of his earlier hit, ‘Veyyilodu Vilayaadi …’ The melodic tune, however, has caught on, and how! The lyric of the piece glorifies the hero to an unbelievable extent. Eulogy unplugged! Editor Saravana’s skill comes to the fore in the ‘Cinema Cinema …’ number. Outdoor (‘Sollu … Sollu’ song) or indoor (the barber shop and Balakrishnan’s home) Arvind Krishna’s camera works wonders. And the grandeur of the backdrops is typically Thotta Tharani. Rajini’s entry on a Pegasus marks the deft use of graphics (Ocher Studios) that continues throughout the film.

After quite a while Rajini proves that without gimmickry, stunts and his brand of humour, he can still win hearts. Here he achieves it with a dash of sentiment.

Cast your votes for this Vasu-Rajini alliance once again! The team is worth it!

 

 

குசேலன் - ஆனந்த விகடன் விமர்சனம்

பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேல - கிருஷ்ணனின் கதை!

சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!

மலையாளத்தில் வந்த 'கத பறயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். சூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து, ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே-தான். 'தலைவா... நயன்தாராவையே பார்க்காத... எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!

வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சிங். பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து, கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!

ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத் திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங். படம் முழுக்க 'குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், 'அண்ணாமலை பார்ட் 2', கொஞ்ச நேரம் கழித்து, 'சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.

ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார், ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார், தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட் டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர் களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், 'வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்!

'அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு!' என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் 'பன்ச்'கள் பற்றி விளக்கம் சொல்லி, ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!

பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க... படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால், ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும், பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்துகொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.

படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக 'வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும், க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.

நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது.

ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில், கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு.

பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.

'ஓம் சாரிரே...', 'செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும் அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.

ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம்,கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!

 - விகடன் விமர்சனக் குழ

 

 

குசேலன் - குமுதம் விமர்சனம் 

ரஜினிக்கு முதலில் கை குலுக்க வேண்டும். ஆக்ஷன், அதிரடி, மசாலா படங்களிலிருந்து விலகிக் கதைக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடித்ததற்கு. அதை ரசிக்கும்படி செய்ததற்குக் கூடவே ஒரு கொசுறு கை குலுக்கல்.

மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட `கத பறயும் போள்' கதை. இரண்டு நண்பர்கள். ஒருவன் சினிமாவில் சிறந்து சூப்பர் ஸ்டாராகிறான். இன்னொருவன் உடைந்து போன நாற்காலியுடன் முடி திருத்தகம் நடத்துகிறான். இருவரும் முப்பது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்தச் சின்னப் பொறியை வைத்துத் திரைக்கதை செய்திருக்கிறார்கள், ரஜினிக்காக அதிகம் மாற்றாமல்.

சூப்பர் ஸ்டாரை, சூப்பர் ஸ்டாராகவே பார்ப்பது தமிழுக்குப் புதுசு. ரஜினியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். அத்துடன் ரசிகர்களின் ஆர்வமான பல நாள் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்,

அரசியலில் சேருவேன் என்று சொல்லிவிட்டு சும்மா டபாய்க்கிறீர்களே ஏன்?

நீங்கள், கமல் எல்லாம் ரொம்ப பந்தா பண்ணுகிறீர்களே?

அடிக்கடி இமயமலை போகிறீர்களே. இங்கே இல்லாத எது அங்கே உங்களுக்குக் கிடைக்கிறது? இப்படி சுவாரசியமான கேள்விகள். பதில்களை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினி அழுவதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. `ஆறிலிருந்து அறுபது வரை'யை ஞாபகப்படுத்தும் நடிப்புத் திறமை இத்தனை மசாலா, ஃபார்முலாக்களைத் தாண்டி வந்தும் அவரிடம் அப்படியே இருக்கிறது. கடைசி அரை மணி நேரம் அவர் கண் கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

ரஜினியின் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும் கண்ணில் தெரியமாட்டார்கள். ஆனால், அதையும்மீறி மனதோடு, மண் மணத்தோடு ஒட்டிக் கொள்கிறார் பசுபதி. சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று மற்றவரெல்லாம் மதிக்கும்போதும், புகழும்போதும் வெட்கமும் ஏக்கமும் கலந்து இயலாமையாய்ப் பார்க்கும் அவரது அழுத்தமான பார்வைக்கு ஆயிரம் பாராட்டுக்களைத் தரலாம்.

நயன்தாரா `நெய்'ந்தாரா. வழுக்கும் உடலில் வழுக்கும் உடைகளில் இதயங்களை வழுக்கி விழ வைக்கிறார். அவர் நடை, உடை பாவனைகைளப் பார்க்கும்போது கூடிய விரைவில் ஹாலிவுட் படங்களில் அரங்கேறுவார் என்று பட்சி சொல்லுகிறது.

மீனாவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று. அப்படியே இருக்கீங்க அம்மணி!

கஸ்டமர் கிடைக்காததால், முடி வளர்ந்தவர்களைக் கடத்திக் கொண்டு வந்து `கட்டிங்' செய்யும் பார்பராக வந்து கலகலக்க வைக்கிறார் வடிவேலு. அவரின் மனைவியாக வரும் சோனா... செமை சால்னா!

முதல் பாதியில் ரஜினி எப்போது வருவார் என்று பார்த்துப் பார்த்து கொஞ்சம் அலுப்பு வருவது திரைக்கதையின் பலவீனம். ஆனால், அந்தக் குறையை கடைசி அரைமணி நேரத்தில் மனதைக் கரைத்து மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர். ரஜினி போன்ற ஆக்ஷன் சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டு, இது போன்ற அழுத்தமான படங்களை எடுப்பது சற்று சிரமமான காரியம். கெட்டியாகச் செய்திருக்கிறார் பி.வாசு. சபாஷ்.

லிவிங்ஸ்டன், சின்னிஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், டி.பி.கஜேந்திரன் என்று காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு மூட்ட முயற்சிக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் இசையில் `தலைவா' பாடல் தாளம் போட வைக்கிறது. வாலியின் வரிகள் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாக கொஞ்ச காலத்திற்கு இருக்கும். இவர் வாத்தியங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது, அவருக்கும் கேட்பவர்களின் காதுகளுக்கும்.

அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா குசேலனை, குபேரனாக்கியிருக்கிறது. தோட்டாதரணியின் செட்டிங்ஸும் பிரமாண்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு ரசிகரின் வீட்டுக்குள்ளும் நுழைவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம். ரஜினி ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

குசேலன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, டைரக்டர் பி.வாசுவிடம் சொன்ன கமெண்ட் இதுதான். ``படம் 25 வாரம் ஓடும்.''

உண்மைதான். ரஜினி ரசிகர்கள் ஓட வைத்துவிடுவார்கள்.

 



KUSELAN - KALKI REVIEW

(17.08.2008 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information