Chandramukhi (2005)
படத்தில் நிறைய ஆச்சர்யப்பட வைக்கும் விஷயங்கள். டைட்டில் கார்டிலேயே கமலுக்கு நன்றி சொல்கிறார்கள். ரஜினி படத்தில் வழக்கமாக வரும் விஷயங்களுக்கெல்லாம் கெட்அவுட் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முலாம் பூசப்பட்ட டயலாக் இல்லை; தனிமனித துதி பாடும் பக்கவாத்தியங்கள் இல்லை; ஆர்ப்பரிக்கும் செயற்கையான பின்னணி இசை இல்லை. லாஜிக்கை மீறிய மேஜிக் காட்சிகள் இல்லவே இல்லை. ரஜினி படம்தானா என்று கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சர்ச்சைக்கு தீனி போடும் மேட்டர் கிடைக்காமல் மீடியாதான் அல்லாடப்போகிறதுஇ பாவம்!
லாங் ஷாட்டில் ஓடி வந்துஇ வில்லனை உதைக்க தாவி குதித்து அதை தூக்கிப்போட்டு வாயில் பிடித்து...அதுதான் சிகரெட் அல்ல... சூயிங்கம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம்இ சிகரெட்டை மறந்து விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு சூயிங்க விஷயத்தை மென்று வைக்கலாம்!
எப்போதும் ரஜினியை சுத்திதான் கதை. சந்திரமுகியில் கதையைச் சுற்றி ரஜினி! படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் ரஜினியின் கிளாமரா அல்லது ஜோவின் நடிப்பான்னு பட்டிமன்றம் வைக்கலாம். கிளைமாக்ஸில் ஜோதிகா அசத்துகிறார் என்றால் படம் முழுக்க ரஜினி காட்டும் கிளாமர் கைதட்டலை அள்ளிக்கொள்கிறது. படு கச்சிதமான திரில்லர் திரைக்கதை. ஆவிஇ பழைய பங்களா என்றெல்லாம் காட்டினாலும் ஸ்பிளிட் பர்ஸனாலிட்டி பற்றிய சுவராசியமான விளக்கங்களுடன் திரைக்கதையை கவனமாக பின்னியிருக்கிறார்கள். கதையோட்டத்துடன் வரும் காமெடிஇ அரண்டு போயிருப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
ரஜினி ஏதோ சொல்ல வருகிறார்னு காதை தீட்டிக்கொண்டு கவனமாக இருந்தால் பெரிதாக எதுவுமில்லை. படத்தின் மைனஸ் பாயிண்ட்இ டயலாக்தான். ரஜினிக்கொன்று ஏதும் ஸ்பெஷலாக எழுதாமல் சாதாரண டயலாக்கை வைத்ததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரஜினி படத்தில் இல்லாத சங்கதியான நான் வெஜ்டயலாக்இ நாசர்-வடிவேலு ஜோடி உபயத்தில். உரைநடை தமிழையே பேச்சுத் தமிழக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. பிரபு ஒரு காட்சியில் மல்லிகை மணம் என்கிறார். மல்லிகை வாசனை என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் நேட்டிவிட்டி இருந்திருக்கும்.
ஜோதிகாவா இது? சில குளோஸப் ஷாட்டுகளில் ஆச்சர்யப்படுத்துகிறார். அம்மிணிக்கு ஏதாவது அவார்டு கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. திரைக்கதையில் அதிகமான வேலையில்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார் நயன்தாரா. சான்ஸ் கிடைத்தால் தன்னாலும் நன்றாக நடிக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு ஜோதிகாஇ நயன்தாராவை விட சொர்ணாவுடன்தான் காம்பினேஷன்!
'என்னை மட்டும் அவுட்டோருக்கு அனுப்பி வையுங்க.. அசத்திப்புடறேன்'னு சொல்கிற மாதிரி படத்தின் ஒளிப்பதிவு. அரண்மனைக்குள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் காமிராஇ வெளியே வந்தால் மிரட்டுகிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஆர்ட் டைரக்டர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரிசல்ட்டும் நன்றாகவே வந்திருக்கிறது. தோட்டா தரணிக்கு வாழ்த்துக்கள். மொத்தத்தில் தமிழ்சினிமாவில் சந்திரமுகி முக்கியமான படமாகவிருக்கிறது. வருஷக்கணக்கா டி.வியோடு முடங்கியிருக்கும் தாய்க்குலங்களை தியேட்டருக்கு அழைத்துவரப்போகிறது. தியேட்டரில் மட்டுமே பார்க்கத்தூண்டும் திரைக்கதை வி.சி.டி வியாபாரிகளை திணறவைக்கும்.
இன்னொரு புல் மீல்ஸ் படம் ரஜினியிடமிருந்து. ஆனால்இ ரஜினி ரசிகர்களுக்கு அல்ல; தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு!
- ரஜினி ராம்கி
சந்திரமுகி - ஆனந்த விகடன்விமர்சனம்
ஹை... ரஜினி படம்!
அதிரடி ஆக்ஷன், தடாலடி சவால் ஃபார்முலாவை விட்டு விட்டு, இந்த முறை அமானுஷ்ய த்ரில்லருடன் வந்திருக்கிறார் ரஜினி.
பெரிய கான்ட்ராக்ட் பிஸினஸ்மேன் பிரபு. அவரது நண்பர் ரஜினி ஒரு மனநோய் மருத்துவர். பிரபு தன் காதல் மனைவி ஜோதிகாவுடன், அத்தை ஊருக்குச் செல்கிறார். அதே ஊரிலுள்ள ஒரு பழைய அரண்மனையில் சந்திரமுகி என்ற நாட்டியக்காரியின் ஆவி அலைவதாக ஊருக்குள் பேச்சு. அதையும் மீறி பிரபு அந்த அரண்மனையை விலைக்கு வாங்கி அதில் தங்குகிறார். அத்தை குடும்பமும் அவர்களுடனே தங்குகிறது.
பிரபு & ஜோதிகாவுக்கு தைரியம் தருவதற்காக அவர்கள் கூடவே சில நாட்கள் தங்குகிறார் டாக்டர் ரஜினி. அப்போது அந்த அரண்மனைக்குள் திடீர் திடீரென மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. பிரபுவின் உயிரைப் பறிக்கும்விதமாகசில சதிகளும் நடக்கின்றன. இதையெல்லாம் செய்வது யார்? ஜோதிகாவை பிரபு மணந்துகொண்டது பிடிக்காத அவரது அத்தையின் குடும்பத்தினரா... அல்லது தோட்டக் காரரின் மகளான நயன்தாராவா? அந்த அரண்மனையில் நிஜமாகவே ஆவி இருக்கிறதா? திகிலான கேள்வி களுக்கு விடை தேடுகிறார் ரஜினி. அத்தனை கலாட்டாக்களுக்கும் காரணம்... ஜோதிகா!
'ஸ்பிலிட் பர்சனாலிட்டி' எனப் படுகிற பன்முக ஆளுமை மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிற ஜோதிகா, தன்னை சந்திரமுகியாகவே பாவித்துக் கொண்டு, பழங்காலத்தில் நடந்த படுகொலைகளுக்குப் பழிவாங்க கொலைவெறிகொண்டு அலைவது தெரிகிறது. ரஜினி இந்த சிக்கல்களிலிருந்து தன் நண்பனின் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று ஒரு மாயாஜாலக் கதையை, சைக்காலஜி கலந்து சொல்லி இருக்கிறார்கள். வழக்கமாக ரஜினியைச் சுற்றியே அவர் படங்களின் கதை அமையும். இதில் எங்கெங்கோ சுற்றுகிற கதைக்குள் ரஜினி!
�பாபா� தந்த அனுபவமோ என்னவோ... பஞ்ச் டயலாக், சவால் வசனங்கள், அரசியல் சீண்டல்கள் என எதுவும் இம்முறை இல்லாதது இனிய ஆறுதல். ரஜினியின் ஸ்பெஷல் ரசிகர் களுக்கு அதுவே லேசான ஏமாற்றம்! மர்ம அரண்மனை யில் வடிவேலுவுடன் தனியே இருக்கும்போது, 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் ரேஞ்சுக்கு ரஜினி அவரிடம் பேய்க் கதை சொல்வதும், அதற்கு அலறி நடுங்கி வடிவேலு ரியாக்ஷன் காட்டுவதும்... சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை சாமியாடிச் சிரிக் கிறார்கள். க்ளைமாக்ஸில் ராஜா வேஷம் கட்டிக்கொண்டு, கண்களில் குரூரம் தெறிக்க... ஜோதிகாவை நோக்கி, 'லக்கலக்கலக்க' என்று அடித்தொண்டை யில் சவுண்ட் விடும்போது, 'பதினாறு வயதினிலே...' பரட்டையே திரும்ப வந்துவிட்ட உணர்வு!
நயன்தாராவோடு ஓவர் ரொமான்ஸ் பண்ணாமல் அடக்கி வாசித்திருப்பதில் பக்குவ ரஜினி. அதேசமயம், பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ஸ்டைலாகச் செய்திருக்கலாம். அவருடைய துறுதுறு மிஸ்ஸிங்!
தன் மனைவி சொர்ணாவுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் வடிவேலு, ரஜினியைப் பார்த்தாலே டார்ச்சராகித் திரிவது நல்ல தமாஷ். ரஜினியும் சொர்ணாவும் ஒரே போர்வைக்குள் ஆவி பிடிக்க... வெளியிலிருந்து அதைப் பார்த்து வடிவேலு டென்ஷனாகிற காட்சி காமெடியாக இருந்தாலும், தேவை இல்லாமல் அங்கே 'ச்சீய்' ரக இரட்டை அர்த்த வசனங்கள். தேவையா ரஜினி படத்தில்?
ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு 'படையப்பா' மாதிரி, ஜோதிகாவுக்கு 'சந்திரமுகி'. கடைசி சில நிமிடங் களில் கதிகலக்கிவிடுகிறார் ஜோதிகா. அமைதிப் பூனை போல அலையும் ஜோ, மனதளவில் சட்சட்டென சந்திரமுகியாக மாறுவதும்... பகீர் பார்வையும் கொலைவெறிச் சிரிப்புமாக ருத்ர தாண்டவம் போடுவதும்... ரஜினி யைப் பார்த்து, அசுரத்தனமாக அலறுவதும் அற்புதமான நடிப்பு! அடித்தொண்டையில் குரலெடுத்து, தெலுங்கில் அவர் போடும் பேய்க் கூச்சலுக்கு 'டப்பிங்' குரல் கொடுத்த சசிகலா வுக்கு ஒரு சூப்பர் சபாஷ்!
ரஜினியின் நாயகி என்று பெயர்தானே தவிர, நயன்தாரா வுக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. போதாக்குறைக்கு திடீரென்று அவரை ஒரு அறைக்குள் தள்ளி ரஜினி பூட்டிவிடுகிறார். அப்புறம் க்ளைமாக்ஸில் தான் நயன்தாரா தலைகாட்டுகிறார்.
கெஸ்ட் ரோல் மாதிரி வந்து போகிறார் பிரபு. அவருக்கும் ஜோதிகா வுக்குமான காட்சிகளிலும் எந்த அழுத்தமும் இல்லை.
"ஒரு ஊர்ல ஒரு ராஜா" என்று ஆரம்பித்து, நீண்ட ஃபிளாஷ்பேக்கை ஒரு கோயில் பூசாரியின் வாயாலேயே முழுவதுமாகச் சொல்ல வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி முன்பாதியில் ஆங்காங்கே சில இடங்களில் வளவள வசனங்களோடு டி.வி. சீரியலாக நகர்கிறது.
இசை வித்யாசாகர். எண்பதுகளில் கேட்ட இதமான, முறையான, நிதான மான இசைக் கலவையை காலத்துக் கேற்ற முன்னேற்றங்களோடு பாட லாக்கி இருக்கிறார். சந்திரமுகியின் மர்ம அறையை திரையில் காட்டும் போதெல்லாம் பின்னணி இசை உறைய வைக்கிறது. 'கொஞ்ச நேரம்', 'ராரா' இரண்டு பாடல்களும் இனிக்கிறது காதிலும் நெஞ்சிலும்!
சந்திரமுகி கதையைப் படித்து ஜோதிகா சந்திரமுகியாக கொலை வெறி கொள்வது ஓ.கே! ஸ்பிலிட் பர்சனாலிட்டி மனோபாவம் தன்னை ஆட்கொண்டதுமே, அட்சர சுத்தமாக அவர் தெலுங்கு பேசுவது எப்படி..? அவருக்குள் திடுமென பரதத் திறமை வருவது நடக்கிற காரியமா? கடைசி இருபது நிமிடம்தான் கதை. அதற்காக ஆரம்பத்திலிருந்து ரஜினிக்காகவே காமெடி, ஆக்ஷனைத் தூவி இழுத்துப் போகிறார்கள். அதையெல் லாம் கொஞ்சம் அழுத்தமாக, திருத்தமாகச் சொல்லியிருந்தால், படம் இன்னும் ருசித்திருக்கும்.
பல வருடங்களுக்குப் பிறகு தனக்கென்று இனியரு இமேஜ் வளையம் இல்லை என்று சந்திரமுகியில் ரஜினியே காட்டிவிட்டார்!
விகடன் விமர்சனக் குழு
விகடன் மதிப்பெண் : 40
CHANDRAMUKHI - KALKI REVIEW
(24.04.2005 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|