Anbulla Rajinikanth
கடவுள் உள்ளமே
Movie |
Anbulla Rajinikanth |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Vaali |
Singers |
Latha Rajinikanth, Chorus |
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு
என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும்
பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!
தேன் பூவே பூவே வா
Movie |
Anbulla Rajinikanth |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Vaali |
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா
லால...லா...லா..
லா...லால..லால....லா...லால..லா...லா..
|