Pollathavan
அதோ வாரான்டி
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக (அதோ )
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக (அதோ)
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக (அதோ)
சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக...கண்ணோடு கண்ணாக- (அதோ)
சின்னக் கண்ணே
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா
நீ தங்கம் போலே அழகு நீ எங்கள் வானில் நிலவு
இளம் தாமரைப் பூவே விளையாடு காவிரி போலே கவி பாடு
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா.........
கோபம் உண்டாகலாமா கண்ணே
குழந்தை தெய்வங்கள் அன்றோ – அந்த
கோவில் வாசலில் பிள்ளை தீபம் அல்லவோ
நல்ல ஆசை பாசமே மணியோசை அல்லவோ
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா.........
அணைக்கும் அன்பான கைகள் - அங்கே
சொந்தம் கொண்டாட வேண்டும் - வரும்
நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம்
நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம்
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா.........
நான் பொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
வானத்தில் வல்லூரு வந்தாலே
கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு
என்றே தான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி (நான் பொல்லாதவன்)
நீ என்ன நான் என்ன நிஜம் என்ன
பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை
மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி (நான் பொல்லாதவன்)
நானே என்றும் ராஜா
நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்ல கூடும்..
நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா……
கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால் - அங்கே
கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு - அஞ்சும்
கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு,
பூ போல கையை கொண்டு போனாலே நன்மை உண்டு
பூ போல கையை கொண்டு போனாலே நன்மை உண்டு,
நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா……
மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி - அங்கே
மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன
வானை கீரி அந்த வைகுண்டத்தை - இந்த
ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன,
தள்ளாடும் பேதை பெண்ணே வெள்ளாடு வேங்கை அல்ல
தள்ளாடும் பேதை பெண்ணே வெள்ளாடு வேங்கை அல்ல
நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா……
|