Sri Raghavendra
ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது..............
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
ஆடல் கலையே தேவன் தந்தது........
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ,
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ
தலைச் சிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்........ (ஆடல்)
கதிரவன் எழுந்தான்
கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்........
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்......
மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
சீலம் வழுவாத துறவறம் காத்தானே
சினங்களை அறியாத சிந்தனை வாய்த்தானே
அமைதியை காக்கும் அழகிய தோற்றம்
அருள் மலர் பூக்கும் அறிவெனும் தோட்டம்
குருநாதன் அருள் வாழ்கவே
குலம் யாவும் நலம் காணவே..... (அன்பு)
சேத்திரம் பல நாடி திருமாலின் இசை பாடி
நேத்திரம் மலர்ந்தானோ
சாதிகள் பிரிக்காத சமுதாய நலம் கூறும்
சாத்திரம் படைத்தானோ
ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏத்திடும் பெம்மானே
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா...........(அன்பு)
பேசுகின்ற தெய்வம் நீ ராகவேந்திரா
பேதமற்ற ஞானி நீ ராகவேந்திரா
வாழுகின்ற ஜீவன் நீ ராகவேந்திரா
வாழ வைக்க வேண்டும் நீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா......
அழைக்கிறான் மாதவன்
அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை! (தேடினேன்)
காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்!
மாயனே நேயனே மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...... (தேடினேன்)
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?
தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!
பூஜ்யாய ராகவேந்த்ராய
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
ஸா....ஸரிகமபா பதமபா
பதமபதநிஸா ஸாநிதபமகரிஸ......
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே......
அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்
ராம நாமம் ஒரு வேதமே........
ஓர் நவமி் அதில் நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே....
தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
ராம நாமம் ஒரு வேதமே........
மழைக்கொரு தேவனே
ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ....
மழைக்கொரு தேவனே..வருணனே.....வருகவே.....
மண்ணிசை தண்புனல் மாரியை பொழிகவே.......
அழைக்கிறேன் நின்னிரு அடிமலர் போற்றியே.....
அனல் வசப்பட்டதோ ஆருயிர் பிழைக்கவே.....
மாரியே வருக........மழையே வருக........
தீயினை அணைத்து திருவருள் புரிக.........!
பார்த்தாலே தெரியாதோ
பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு....புரியாத ஆனந்தம் நோக்கு
உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்
எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார் (பார்த்தாலே)
ஏண்டி எல்லாமே புரிஞ்சுண்டியா
எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா
சுகமோ சாந்தி கல்யாணமோ
அசடே துளிக்கூட தூங்கல்லையா
அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா
அடியே..ரொம்ப கும்மாளமோ
நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே
எங்கிட்ட கன்னத்த காமி
தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்
தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்
பொல்லாத மோகம் வந்ததென்ன
உல்லாசம் நீதான் கண்டதென்ன.......(பார்த்தாலே)
எங்கே மணவாளன் கைப்பட்டதோ
அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ
ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ
கண்ணே சிவப்பான கதை என்னடி
கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி
விடியும் வரையில் போராட்டமோ
நீ பட்டப்பாடு என்ன பெண்ணே
இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ
சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி
சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி
சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி
எங்கிட்ட வந்து கேட்டுக்கடி......(பார்த்தாலே)
உனக்கும் எனக்கும் ஆனந்தம்
உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்
பாலாடைதான் ஆடுதோ ஓர்.....
நூலாடைதான் மூடுதோ வா.....
நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம் (உனக்கும்)
கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
பெண் பாவை கண்டானது காமபாணமே
எங்கேயும் உண்டாகும் சோமபானமே
உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்
என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்
பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி (உனக்கும்)
தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
தாளாது தாங்காது ஜோடி தேடுது
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது
நீ எடுக்க எடுக்க தீராது உன்
புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன்சுரங்கம் இருக்கு இங்கே
பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி (உனக்கும்)
|