Rajathi Raja
சிலு சிலுவென
பாடகர்கள் : மனோ & குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிலு சிலுவென
குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர்
வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே
ஆண் : { மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி } (2)
ஆண் : மலமுடியினில்
பனி வடியுது வடியுது
மண் மணக்குதம்மா
காலை அழகினில் மனம்
கரையுது கரையுது
கண் மயங்குதம்மா
ஆண் : மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
ஆண் : ஹே……………..
ஓஓ பம் பிம் பாம் பாம்
நீரில் மெல்ல சிறு நெத்திலி
துள்ள நீரோடை தாயை போல
வாரி வாரி அல்ல
ஆண் : நீல வானம்
அதில் அத்தனை மேகம்
நீர்கொண்டு காற்றிலேறி
நீண்ட தூரம் போகும்
ஆண் : காதோரம் மூங்கில்
பூக்கள் வாசம் வீச காதோடு
ஏதோ சொல்லி ஜாடை பேச
ஆண் : தேக்கும் பாக்கும்
கூடாதோ தோளை தொட்டு
ஆடாதோ பார்க்க பார்க்க
ஆனந்தம் போகப்போக
வாராதோ என் மனம் துள்ளுது
தன் வழி செல்லுது வண்ண
வண்ண கோலம்
ஆண் : மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
ஆண் : மலமுடியினில்
பனி வடியுது வடியுது
மண் மணக்குதம்மா
காலை அழகினில் மனம்
கரையுது கரையுது
கண் மயங்குதம்மா
ஆண் : மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
குழு : …………………..
ஆண் : தூறல் உண்டு
மலை சாரலும் உண்டு
பொன்மாலை வெயில்
கூட ஈரமாவதுண்டு
தோட்டமுண்டு கிளி
கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மை
போல காதல் வாழ்க்கை
உண்டு
ஆண் : நான் அந்த கிள்ளை
போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு
பாட வேண்டும் எண்ணம்
என்னும் சிட்டு தான் ரெக்கை
கட்டி கொள்ளாதா எட்டு திக்கும்
தொட்டு தான் எட்டி பாய்ந்து
செல்லாதா என் மனம் துள்ளுது
தன் வழி செல்லுது வண்ண
வண்ண கோலம்
ஆண் : ஹே மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி
மலையாள கரையோரம் தமிழ்
பாடும் குருவி அலையாடை
கலையாமல் தலையாட்டும்
அருவி
ஆண் : மலமுடியினில்
பனி வடியுது வடியுது
மண் மணக்குதம்மா
காலை அழகினில் மனம்
கரையுது கரையுது
கண் மயங்குதம்மா
ஆண் : { மலையாள
கரையோரம் தமிழ்
பாடும் குருவி
அலையாடை கலையாமல்
தலையாட்டும் அருவி } (2)
அடி ஆத்துக்குள்ள
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ………………….
ஆண் : அடி ஆத்துக்குள்ள
அத்தி மரம் அந்தியில பூத்த
மரம் மொத்த மரம் எத்தனனு
கூறு கூறு நேத்து இருந்து
தொங்குதடி குருவி எல்லாம்
தாங்குதடி மரத்து மேல
தூக்குனான் கூடு கூடு
ஆண் : அடி ஆத்துக்குள்ள
அத்தி மரம் அந்தியில பூத்த
மரம் மொத்த மரம் எத்தனனு
கூறு கூறு நேத்து இருந்து
தொங்குதடி குருவி எல்லாம்
தாங்குதடி மரத்து மேல
தூக்குனான் கூடு கூடு
ஆண் : ஆண் சிட்டுக்கு
ஜோடி ஒன்னு சேர்ந்தது
பொண்ணு ரெண்டு சிட்டும்
தான் சேர்ந்து கூடு கட்டுச்சு
கண்ணு
ஆண் : ஆண் சிட்டுக்கு
ஜோடி ஒன்னு சேர்ந்தது
பொண்ணு ரெண்டு சிட்டும்
தான் சேர்ந்து கூடு கட்டுச்சு
கண்ணு
ஆண் : கூட்டுக்குள்ள
பாரு அங்கு குருவி எத்தன
கூறு கூட்டுக்குள்ள பாரு
அங்கு குருவி எத்தன கூறு
ஆண் : அடி ஆத்துக்குள்ள
அத்தி மரம் அந்தியில பூத்த
மரம் மொத்த மரம் எத்தனனு
கூறு கூறு நேத்து இருந்து
தொங்குதடி குருவி எல்லாம்
தாங்குதடி மரத்து மேல
தூக்குனான் கூடு கூடு
என்கிட்ட மோதாதே
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒன் டூ த்ரீ
ஃபோர்
குழு : சுண்டல் பயற
ஊற வெச்சு
பெண் : ஃபைவ் சிக்ஸ்
செவன் எய்ட்
குழு : காலையில
தின்று விட்டு
பெண் : ஒன் டூ த்ரீ
ஃபோர்
குழு : தண்டால் எடு
தண்டால் எடு
பெண் : ஃபைவ் சிக்ஸ்
செவன் எய்ட்
குழு : பஸ்கி எடு
குஸ்தி போடு
பெண் : ஒன் டூ
குழு : வேஷ்டி எடுத்து
பெண் : த்ரீ ஃபோர்
குழு : வரிஞ்சு கட்டு
பெண் : ஒன் டூ
குழு : மீசையத்தான்
பெண் : த்ரீ ஃபோர்
குழு : முறுக்கி முறுக்கி
சிலம்பை எடுத்து சொழட்டு
சொழட்டு ஆம்பளையா
வளரு வளரு ஹோய்
ஹோய்
ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஆண் : { இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே அட
அப்புறமா குட்டு பட்டு
ஓடாதே } (2)
ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஆண் : முன்னால கோழை
பின்னால வீரன் பெண்ணாலே
தானே நான் ஆளாகினேன்
எல்லார்க்கும் வீரம் கட்டாயம்
உண்டு எனக்கு அது கொஞ்சம்
அதிகம் தம்பி
ஆண் : தப்பான வேலைக்கு
எந்நாளும் நானே எப்போதும்
துணையாக ஆனதில்ல
தற்காப்புக்காக நான் போடும்
சண்டை தப்பாக ஒரு நாளும்
போனதில்ல
குழு : சரக்கு இருந்தா
வித்து பாரு ஜாடை
பேச்சு பேச வேண்டாம்
அட வெறப்பு எதுக்கு
நரம்பு சுளுக்கும் உன்
உடம்பு ஒச்சம் ஆக
வேண்டாம்
ஆண் : ஹே வெத்து
வேட்டு கொஞ்சம் ஓரம்
கட்டு அட டாங்கு டக்கர
டக்கர டக்கர டக்கர டா
ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஹா ஹா ஹாஹாஹாஹா
ஆண் : கத்தி கத்தி
சண்டை வாய் வலிக்க
போட்டா காத்தோட போகும்
அது தேவை இல்லை கட்சி
கட்டி ஆடும் ஆட்டம் இங்கு
வேணாம் புத்தி கெட்டு
போகாதே நீயும் வீணா
ஆண் : உன்னோட
வாழ்க்கை உன் கையில்
இருக்கு அடுத்தவன்
கொடுத்தா அது நிக்காதப்பா
ஹேய் கஷ்டப்பட்டு உழைச்சு
முன்னேற பாரு இஷ்டபட்டு
எல்லோரும் பின்னால்
வருவார்
குழு : பதவி இருந்தா பத்து
பேரு பணத்துக்காக நூறு
பேரு காசுக்கு தான் மதிப்பு
இருக்கு மனுஷனுக்கு எங்கே
இருக்கு
ஆண் : எனக்கு கட்சியும்
வேணாம் ஒரு கொடியும்
வேணாம் அட டாங்கு
டக்கர டக்கர டக்கர
டக்கர டா
ஆண் : என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
ஆண் : { இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே அட
அப்புறமா குட்டு பட்டு
ஓடாதே } (2)
பெண் : என் மாமன் கிட்ட
மோதாதே அவர் ராஜாதி
ராஜனடா வம்புக்கு இழுக்காதே
இவர் சூராதி சூரனடா ஆஆ
ஆஆ
மாமா உன் பொண்ண கொடு
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண
கொடு ஆமா சொல்லி
புடு அட மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
ஆண் : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
குழு : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
ஆண் : தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சு
ஆண் : அட மாமா
குழு : உன்
பொண்ண கொடு
ஆண் : ஆமா
குழு : சொல்லி புடு
ஆண் : ஊருக்குள்ள
என்ன பத்தி
குழு : கேட்டுக்குங்க
நல்ல புள்ள
ஆண் : உத்தமனா
வாழ்ந்து வந்தேன்
குழு : தப்பு தண்டா
ஏதும் இல்ல
ஆண் : அட மாப்பிள்ளை
நான் யோக்கியன் தான்
குழு : நீங்க செஞ்ச
பாக்கியம் தான்
ஆண் : மாப்பிள்ளை
நான் யோக்கியன் தான்
குழு : நீங்க செஞ்ச
பாக்கியம் தான்
ஆண் : யாருக்கும்
தெரியாம நான் தாலிய
கட்டவும் மாட்டேன்
நியாயத்த மறக்காம
அட நானும் உன்கிட்ட
கேட்டேன் என்னோட
ஆசை உன் பொண்ணோட
பேச என் மாமா நீ சொன்னா
கேளு ஹே
ஆண் : மாமா
குழு : உன்
பொண்ண கொடு
ஆண் : அட ஆமா
குழு : சொல்லி புடு
ஆண் : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
குழு : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
ஆண் : தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சே ஹேய் ஹேய்
ஆண் : பண்ணபுரம்
போனதில்ல
குழு : பாஞ்சாலிய
பாத்ததில்ல
ஆண் : ஆமா காஞ்சிபுரம்
போனதில்ல
குழு : காமாட்சிய
கண்டதில்ல
ஆண் : அட பட்டணம்
தான் போனதில்ல
குழு : பத்தினிய
பாத்ததில்ல
ஆண் : அட பட்டணம்
தான் போனதில்ல
குழு : பத்தினிய
பாத்ததில்ல
ஆண் : ஆயிரம் இருந்தாலும்
உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம்
அட வாழை பூவு குருமா
பொண்ணோட நானும் ஆஹா
ஒன்னாக வேணும் என்
மாமாவே என்ன வேணும்
ஆண் : மாமோய்
குழு : உன்
பொண்ண கொடு
ஆண் : அட ஆமா
குழு : சொல்லி புடு
ஆண் : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
குழு : இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
ஆண் : ஓய் தாலி கட்டவும்
மேளம் கொட்டவும் நேரம்
வந்துடுச்சு ஊரு உலகம்
சேர்ந்து எனக்கு மாலை
தந்துடுச்சே
குழு : ………………….
மீனம்மா மீனம்மா
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர்கள் : மனோ & குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா….
ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
வேளை நாணமோ இதமாக சுகம்
காண துணை வேண்டாமோ ஓஓ
பெண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நெஞ்சம் தேனம்மா
பெண் : சிங்கம் ஒன்று நேரில்
வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே
ஆண் : முத்தை அள்ளி
வீசி இங்கு வித்தை
செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி
பெண் : மோகம் கொண்ட
மன்மதனும் பூக்கணைகள்
போடவே காயம் பட்ட காளை
நெஞ்சும் காமன் கணை மூடுதே
ஆண் : மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன
மாயமோ
பெண் : இதமாக சுகம்
காண துணை நீயும் இங்கு
வேண்டுமே சுகமான புது
ராகம் இனி கேட்கத்தான்….
ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : ஆஹா தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா
குழு : ………………….
ஆண் : இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
போடுங்கள்
பெண் : சங்கத்தமிழ் காளை
இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்
பெண் : பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்
ஆண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேலை நாணமோ
பெண் : இதமாக சுகம் காண
துணை வேண்டாமோ….ஓஹோ
ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
பெண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணுமே
இதமாக சுகம் காண துணை
வேண்டாமோ ஓஓ
ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா
பெண் : தேனம்மா
தேனம்மா நெஞ்சம்
தேனம்மா
உலக வாழ்க்கையே
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உலக வாழ்க்கையே
இங்கு ஜெயிலு வாழ்க்கை
தான் இங்கு உலவும்
பேரெல்லாம் அதில் கைதி
போல தான்
ஆண் : உலக வாழ்க்கையே
இங்கு ஜெயிலு வாழ்க்கை
தான் இங்கு உலவும்
பேரெல்லாம் அதில்
கைதி போல தான்
ஆண் : இங்க சுவரு குள்ளே
எங்கள போட்டு அடைச்சி
வெய்க்கனுமா அதில் கம்பி
போட்ட கதவ மூடி பூட்டி
வெய்க்கனுமா
குழு : இங்க சுவரு குள்ளே
எங்கள போட்டு அடைச்சி
வெய்க்கனுமா அதில் கம்பி
போட்ட கதவ மூடி பூட்டி
வெய்க்கனுமா
ஆண் : ஜெயிலு குள்ள
நாங்கள் எல்லாம் குத்தம்
செஞ்சி வந்தோம் அட
ஜெயிலர் அய்யா என்ன
குத்தம் செஞ்சி உள்ள
வந்தாரு
குழு : ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே ஓ
ஓஹோ ஓஹோ
ஆண் : ஜெயிலு குள்ள
நாங்கள் எல்லாம் குத்தம்
செஞ்சி வந்தோம் அட
ஜெயிலர் அய்யா என்ன
குத்தம் செஞ்சி உள்ள
வந்தாரு
ஆண் : உலக வாழ்க்கையே
இங்கு ஜெயிலு வாழ்க்கை
தான் இங்கு உலவும்
பேரெல்லாம் அதில்
கைதி போல தான்
குழு : இங்க சுவரு குள்ளே
எங்கள போட்டு அடைச்சி
வெய்க்கனுமா அதில் கம்பி
போட்ட கதவ மூடி பூட்டி
வெய்க்கனுமா
உன் நெஞ்ச தொட்டு சொல்லு
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
பெண் : வானம் தான்
சாட்சி இருக்கு பூமி
தான் சாட்சி இருக்கு
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
பெண் : தண்ணி குள்ளே
முக்குளிச்சு முத்து ஒன்னு
எடுத்ததென்ன தனிச்சிருந்து
சூடையிலே தவறி அது
விழுந்ததென்ன
பெண் : கோயிலிலே சாமி
முன்னே வேடிக்கை தான்
நடக்குதம்மா சாமியும் தான்
இருக்கு இங்கே வேடிக்கை
தான் நடக்குதம்மா நல்ல
காதலுக்கு இது வாடிக்கையா
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
பெண் : தாகத்திலே சிப்பி
ஒன்னு தண்ணிக் குள்ளே
மிதக்குதம்மா மேகத்திலே
நீர் குடிக்க நீருக்குள்ளே
தவிக்குதம்மா
பெண் : ஆயிரம் பேர்
ஊருக்குள்ளே ஆம்பளைங்க
இங்கில்லையா ஆயிரமும்
உனக்கிணையா எனக்கு அது
வழிதுணையா இந்த கேள்விக்கு
நீ ஒரு பதிலை சொல்லு
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
பெண் : வானம் தான்
சாட்சி இருக்கு பூமி
தான் சாட்சி இருக்கு
பெண் : உன் நெஞ்ச
தொட்டு சொல்லு என்
ராசா என் மேல் ஆசை
இல்லையா என் மேல்
ஆசை இல்லையா
வா வா மஞ்சள் மலரே
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர்கள் : மனோ & குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………..
வா வா வா
வா வா வா வூ
ஆண் : { வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே } (2)
ஆண் : { வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2)
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே
பெண் : குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே ஒயிலாள்
மனம் தவிக்குதையா உயிரே
தினம் உருகுதையா
ஆண் : வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா
பெண் : பொன்னான நேரம்
வீணாகுது என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு என்ன சொல்லுறே
ஆ ஆ ஆ ஆ
ஆண் : வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
பெண் : வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா
ஆண் : வா வா மஞ்சள்
மலரே ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
குழு : ………………………….
ஆண் : தென்னை மரம்
பிளந்து தெருவெல்லாம்
பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
பெண் : அம்மி அதை
மிதித்து அரசாணி பூட்டி
வைத்து அருந்ததியை
சாட்சி வைத்து அழகு
மஞ்சள் கயிர் எடுத்து
ஆண் : கல்யாணம் ஆகும்
காலம் வரும் எல்லோரும்
காணும் நேரம் வரும் என்ன
சொல்லுறே ஹா ஹா ஹா
ஹா
பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே
ஆண் : வைர மணி
தேரினிலே உன்ன வச்சு
நான் இழுப்பேன் என்னுயிரே
ஹா ஹா ஹா
பெண் : { வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே } (2)
|