Mappillai
என்னோட ராசி நல்ல ராசி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………………………
ஆண் : ஹே என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
ஆண் : {ராசி உள்ள பக்கம்
தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ள பக்கம்
வெறும் திமிரு வந்து சேரும்} (2)
ஆண் : நேரம் கூடும் போது
இந்த ஊரும் உன்னை பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அன்பு சேனை
அட அத்தனையும் கூடும்
விட்டுப் போன சொந்தமும் வரும்
ஆண் : கோடியிலே ஒருத்தனுக்கு
ராசி உச்சத்திலே
எந்த குறைகளுமே அவன்கிட்டதான்
தேடி வந்ததில்லே
எது வந்தாலும் போனாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமடா
ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை
வாசக் கருவேப்பில்லை
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை
வாசக் கருவேப்பில்லை
ஹேய் ஹேய் ஹேய்
குழு : பேய் பிடிச்ச பேர்கள
ஓட்டி விடும் வேப்பில்லை
ஹோய் ஹோய் ஹோய்
பேய் பிடிச்ச பேர்கள
ஓட்டி விடும் வேப்பில்லை
ஹோய் ஹோய் ஹோய்
குழு : அவர் சிரிப்பில
ஹோய்
ஒரு வெறுப்பில்ல
அவர் ஸ்டைலத்தான்
ஹேய்
யாரு ரசிக்கல
ஹேய் ஹொய்யா தன்னா ஹொய்யா தன்னா
ஹொய்யா தன்னா தன்னானா
ஆண் : {ஊரு வம்பு பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்ய சொல்லி ஏசும்} (2)
ஆண் : ஜில்லா டாங்கு டாங்கு
அட என்ன உங்க போங்கு
ஏண்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்ல போக்கு
நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்குள் கொட்டப் பாக்கு
ஆண் : ராணியம்மா மனசு வச்சா
நன்மை உண்டாகும்
நல்ல பேச்ச கேக்கலைன்னா
வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பித்தாச்சி
அத்தனை வித்தையும் சொல்லணுமா
ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்க பேசி
கொட்டு மேளம் கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
மானின் இரு கண்கள்
பாடகி : எஸ்.ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : { ஜனக்கு ஜனக்கு
ஜம்ஜம் ஜனக்கு ஜனக்கு
ஜம்ஜம் ஜான் } (2)
ஆண் : { மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே } (2)
பெண் : உள்ளதெல்லாம்
அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ
கொண்டாட்டம் தான்
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே
பெண் : நானா நா நா நா
நா நன்னா நா நானா நா
நா நா நா நன்னா நா
ஆண் : முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கனையாய் நான் தொடுத்து
வண்ண மொழி பெண்ணுக்கென
காத்திருக்க
பெண் : பொய்குழலில் பூ
முடித்து மங்களமாய் பொட்டு
வைத்து மெய் அணைக்க கை
அணைக்க மன்னவனின் நல்
வரவை பார்த்திருக்க
ஆண் : இன்னும் ஒரு
ஏக்கம் என்ன என்னைத்
தொடக் கூடாதா
பெண் : உன்னைத் தொட
தேனும் பாலும் வெள்ளம்
என ஓடாதா
ஆண் : முன்னழகும் பின்னழகும்
ஆட இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும் இள
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே
பெண் : சூசூசூ சூசூ சூசூசூ
லலலல லலல லால லா
குழு : ………………………….
பெண் : ஊசி இலை காடிருக்க
உச்சி மலை மேடிருக்க
பச்சைக் கிளி கூடிருக்க
பக்கம் வர வெட்கம் என்ன
மாமனுக்கு
ஆண் : புல்வெளியில்
மெத்தையிட்டு மெத்தையிலே
உன்னையிட்டு சத்தமிட்டு
முத்தமிட உத்தரவு இட்டு
விடு நீ எனக்கு
பெண் : அந்திப் பகல்
மோகம் வந்து அங்கும்
இங்கும் போராட
ஆண் : எந்தப் புறம்
காணும் போதும்
அந்தப் புறம் போலாக
பெண் : செங்கரும்பு
சாறெடுக்க தானே
உனக்கு ஒரு சம்மதத்தை
தந்துவிட்டேன் நானே
ஆண் : மயக்கும் இள
ஆண் : { மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே } (2)
பெண் : உள்ளதெல்லாம்
அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ
கொண்டாட்டம் தான்
ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே
உனைத்தான் நித்தம் நித்தம்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
பெண் : சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்
இங்கு இதுதான் என் சட்டம்
பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
ஆண் : கதவு திறக்கட்டுமே
அங்கிருக்கும் அழகு தெரியட்டுமே ஹான்
கனவு பலிக்கட்டுமே
நெஞ்சிருக்கும் நினைவு நிலைக்கட்டுமே
பெண் : இதுதான் சென்றால் வாராது
முதுமையில் இன்பம் சேராது
தனிமை இங்கே கூடாது
ஒரு மனம் சொர்க்கம் காணாது
ஆண் : ஹே பக்கத்தில் சொர்க்கம் என
பாவை நீ வா
சொர்க்கத்தில் சொந்தம் என
தேவை நீ வா
இருவர் : இதழில் பொங்கும் தேன் ஆறு
தரும் வரை கண்கள் மூடாது ஹோய்….
பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
ஆண் : ஹஹ ஹா
பெண் : உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
ஆண் : ஹேய் சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்….ஹா
இங்கு இதுதான் என் சட்டம்
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
குழு : ………………………………
பெண் : இளமை கொடி கட்டவே
வந்திருக்கும் இனிய இள வட்டமே
ஆண் : உறவு இருகட்டுமே
உள்ளிருக்கும் உணர்வு பரவட்டுமே
பெண் : விரல்கள் மெல்ல தீண்டாது
ஆண் : நரம்பினில் சத்தம் வாராது
பெண் : இதழ்கள் ஒன்றாய் கூடாது
ஆண் : இனித்திடும் முத்தம் வாராது
ஆண் : கோட்டைக்குள் குடி ஏறுவோம்
கோதை நீ வா
பேட்டைக்குள் முடி சூட்டுவோம்
பெண்ணே நீ வா
இருவர் : பருவம் செய்யும் கோளாறு இது
அதை என்றும் விடாது ஹோய்….
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
பெண் : சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்
ஆண் : ஹஹா
பெண் : இங்கு இதுதான் என் சட்டம்
ஆண் : ஹஹஹஹா
பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
ஆண் : ………………………………
வேறு வேலை உனக்கு இல்லையே
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
குழு : லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
காதல் போல வேலை இல்லையே
என்னைக் கொஞ்சி ஆதரி
என் ராஜா ராஜாதி ராஜா ஓ…
புது ரோஜா வாடாத ரோஜா ஓ…
ஆண் : வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
குழு : ……………………………
பெண் : தானாக பூத்த முல்லையே
வாசம் இன்றிப் போகுமோ
பூ மீது வீசும் தென்றலே
மாறிப் போதல் நியாயமோ
ஆண் : நீயாகப் பேசவில்லையே
காசுதானே பேசுது
பெண் : அஹான்
ஆண் : நானாகப் பாடவில்லையே
அனுபவம்தான் பாடுது
பெண் : வயசு இள வயசு
எனக்கிருக்கு மனக்கிறுக்கு
ஆண் : ஒட்டாதடி என்னைச் சுத்தாதேடி
இது எட்டாது கிட்டாது பித்தான மானே
ஆண் : வேலை தேடும் காளை மீதிலே
காதல் கொண்ட கன்னியே
போதும் போதும் உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
என் வாணி ஆகாது போணி ஹோய்
அன்பே நீ ஆகாசவாணி ஆ….ஆஅ….ஆஅ…..
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆண் : ஆஅஹ்ஹ
குழு : ………………………….
விசில் : ……………………………….
ஆண் : அருகதை இல்லாத என்னை
ஆதவனே என்கிறாய்
இவன் ஒரு பொல்லாத பிள்ளை
மாதவன் நான் என்கிறாய் ஓ……ஓ…ஓ
ஆண் : அருகதை இல்லாதவன்தான்
ஊரில் உந்தன் பேச்சுத்தான்
கதைகள் விடும் மாதவன்தான்
கன்னி எந்தன் மூச்சுத்தான்
ஆண் : கிறுக்கு பணக் கிறுக்கு
அது இருக்கு உனக்கிருக்கு
பெண் : ஏகாந்தனே
நீ என் காந்தனே
அந்த மின்காந்தம் என் மீது
ஒன்றாக வேண்டும்
பெண் : வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆண் : ஓ ஹோய் போதும் போதும்
உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
பெண் : என் ராஜா ராஜாதி ராஜா ஓ…
ஆண் : என் வாணி ஆகாது போணி ஹோய் ஹோய்
பெண் : ஹோய் வேறு வேலை
உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
ஆண் : ஹோய் போதும் போதும்
உனது வேலையே
நில்லு கொஞ்சம் தள்ளியே
பெண் : ஆஹ்ன்
ஆண் : ஆஹ் ஆஹ்ன்
என்னதான் சுகமோ நெஞ்சிலே
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ஆண் : ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே……..
ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
பெண் : பூவோடு வண்டு
புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள்
நீ சொல்லத்தான்
ஆண் : நான் சொல்லும்போது
இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள்
நீ சொல்லத்தான்
பெண் : இன்பம் வாழும்…..
உந்தன் நெஞ்சம்…..
ஆண் : தீபம் ஏற்றும்…..
காதல் ராணி…..
பெண் : சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ஆண் : தீராத மோகம்
நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து
சீராட்டதான்
பெண் : காணாத வாழ்வு
நீ தந்த வேலை
பூமாலை நீ சூடி
பாராட்டத்தான்
ஆண் : நீ என் ராணி……
நாந்தான் தேனீ……
பெண் : நீ என் ராஜா…..
நான் என் ரோஜா…..
ஆண் : தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே…..
ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
பெண் : ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே……
பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே
ஆண் : இதுதான் வளரும் அன்பிலே
|