Sivaji
அதிரடிக்காரன் மச்சான்
Movie |
Sivaji |
Music |
A. R. Rahman |
Year |
2007 |
Lyrics |
Vaali |
Singers |
A. R. Rahman |
குழு: அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!
அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!
(இசை....)
ஆண்: ரதீ தீ தீ தீ
ஜக- ஜோதீ ! ஜோதீ ! ஜோதீ !
த ள ப தீ.. வெடி - ஜாதீ ஜாதீ ! ஜாதீ !
அடி பில்லா ரங்கா பாஷாதான் -இவன்
பிஸ்டல் பேசும் பேஷாதான் !
குழு: ரதீ ! தீ ! சுட்டா.......
டக்கால் டக்கால்
டம்மால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா... காஞ்சா மேஞ்சா...
தோஞ்சா மாஞ்சா..!
ஜா! ஜா! ஜா! ஜா! (ரதீ தீ....)
(இசை....)
ஆண்: தில் திக் தில் தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில் ஜில் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில் லென்றொரு ஜின் தான் கண்ணில்!
குழு: தாதா! தொட்டுக்கொஞ்சத்
தோதா - சிட்டுக் சிக்குதே! சொக்குதே!
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா
தோட்டா - ஒண்ணு ரெண்டு
போட்டா - பொண்ணு துள்ளுதே! தள்ளுதே!
வெடி வேட்டுப் போட விழும் ஃப்ளாட்டா!
ஆண்: Gun! Gun! என் - Sten Gun!
ரோஜர் மூர் போலே- டிஷ்யூம்!!
முன்னால் பெண்ணுண்டு! எந்தன்
பின்னால் கண்ணுண்டு! பார்!!
பெண்: Fun! Fun! -உன் Love Fun!
Eddy Murphy போல்- Naughty!!
ஆண்: நீ எந்தன் - மான் தான்........
நான் தான்...... Don தான்! (அதிரடிக்காரன்...)
(இசை....)
ஆண்: Man! Man! Man-சூப்பர்மேன் தான்
மிட் நைட்டுல - ஸ்பைடர் மேன் தான்!
பெண்: N.R.I உந்தன் eye தான்
ஜேம்ஸ்பாண்ட் போல செய்யும் spy தான்!
க்யூபா - போல ஒரு தீவா
பொண்ணு நிக்குதே! முக்குதே!!
ஆண்: எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா!
கேஸ்ட்ரோ - போல இந்த மாஸ்ட்ரோ
சொந்தம் கொள்ளவா? கிள்ளவா?
இந்த ஃபஸ்ட்டு நைட்டு என்ன வேஸ்ட்டா?
Bun! Bun! நீ ஸ்வீட் Bun!
பட்டர் ஜாம் போலே - நான் தான்!
உந்தன் மேலே தான் -நான்
ஒட்டிக் கொள்ளத் தான் வா!!
பெண்: ஒன் டூ த்ரி போர் பைவ்
முத்தம் தந்தாலே தேன் தான்
ஆண்: என் அன்பே My fair lady - நீ தான்!! (அதிரடிக்காரன்...)
சஹானா சாரல்
Movie |
Sivaji |
Music |
A. R. Rahman |
Year |
2007 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Chinmayi, Udit Narayan |
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
(இசை)
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
(இசை)
பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பெண்: ஹ் ம் ம் ம்
ஆண்: பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
ஆண் பெண் இருவரும்: அடடா
ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹானா
ஆண்: சாரல் தூவுதோ
பெண்: ஓ... ஓ... ஓ...
ஆண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண்: ஓ... ஓ... ஓ...
வாஜி வாஜி வாஜி
Movie |
Sivaji |
Music |
A. R. Rahman |
Year |
2007 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Madhushree |
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்
ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
பூம்பாவாய்..
பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....
Style
Movie |
Sivaji |
Music |
A. R. Rahman |
Year |
2007 |
Lyrics |
Pa. Vijay |
Singers |
|
ஆண்: Give me one time style yea..........
Give me two time style yea.........
Give me three time style yea..........
(இசை....)
ஆண்: ஒரு கூடை சன் லைட்
ஒரு கூடை மூன் லைட்
ஒன்றாக சேர்ந்த
கலர் தானே என் ஒயிட்
அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
எப்போதும் பச்சைத் தமிழன்
பெண்: Yes
ஆண்: இப்போ நான் வெள்ளைத் தமிழன்.....
குழு: Aayo aayo inaadi wayo
Aayo aayo inaadi wayo
Oh ye ye...
ஆண்: அட அட அட
அசத்துது ஸ்.........டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்........டைல்
கட கட கட
சிரிப்பதும் ஸ்...........டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்..........டைல்
குழு: Yes Yes
பெண்: கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்
குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்
ஆண்: அட அட அட
அசத்துது ஸ்........டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்.........டைல்
கட கட கட
சிரிப்பதும் ஸ்........டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்..........டைல்
சுட சுட சுட
தொடுவதும் ஸ்.......டைல்
தட தட தட
அதிரடி ஸ்..........டைல்
அடிக்கடி முடி
கலைவதும் ஸ்......டைல்
வர வர
எல்லாமே ஸ்டைல்
பெண்: Aayo aayo nuestro del vido
Aayo aayo nuestro del vido!
Nuestro furturo del vido
Tengo marquadenel pecho todos los dias! (ஒரு கூடை சன்...)
(இசை...)
பெண்: ரகளை செய் ரௌத்திர வீரா
மிரளச் செய் மன்மத மாறா!
கனி தேடும் கலகக் காரா
கண் தடவும் கந்தள மாரா
கிண் னென்ற கண்ணிய கூரா!
தின் னென்ற வெள்ளைக் காரா!
(இசை....)
ஆண்: Yes
ஆண்: அடடா நீ... ஐந்தடி மிட்டாய்
நடந்தாயே பறக்கிற தட்டாய்
இருந்தாயே உருவத்தில் எட்டாய்..
மலர்ந்தாயே கொழு கொழு மொட்டாய்..!
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்!
தீ என்னும் சொல்லிலே சுட்டாய்!
ஐபிள் டவர் இதயத்தில் நட்டாய்!
பட்டாசாய் பட்டாய்....
குழு: ஆ.. ஓ... லெட்ஸ் த்ரோ த ஃபிடோ!
ஆ.. ஓ.. லெட்ஸ் த்ரோ த ஃபிடோ!
ஹீரோ... ஹீரோ.. ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ... ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ (ஒரு கூடை சன்...)
ஆண்: Give me one time style yea...
Give me two time style yea....
Give me three time something!!
பெண்: SSSSStyle...
பல்லே லக்கா
Movie |
Sivaji |
Music |
A. R. Rahman |
Year |
2007 |
Lyrics |
Na. Muthukumar |
Singers |
S. P. Balasubrahmanyam, A. R. Reihana, Benny |
பெண்குழு: சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
சட்டுன்னு சொல்லு......
சேரப்பாண்டி சூரனும் இவனோ........
சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
சட்டுன்னு சொல்லு......
சேரப்பாண்டி சூரனும் இவனோ........
சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
பாரடி பாரடி பாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ....
ஆண்குழு: ஏ....பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..... மெட்ராசுக்கா... திருச்சிக்கா.... திருத்தணிக்கா...
ஏ.....பல்லே லக்கா பல்லே லக்கா...............
ஒட்டு மொத்த மக்களுக்கா.............
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா!
ஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா......?
ஓ......தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா........?
நம்ம களத்து மேடு.......கம்மாக் கரை கரிசக் காடு.........
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு...........
ஏ.......சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி............
படுப்படுப்படுவென போர்த்திய புல்வெளி..............
தொடத் தொடத் தொடத் தொட உடைகிற பனித்துளி.....
சுடச் சுடச் சுட கிடைக்கிற இட்லி
தட தட தடவென அதிர்கிற ரயிலடி.......
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுயெவன மடிக்கிற வெற்றிலை
முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்.......மெய்.......... (சூரியனோ சந்திரனோ...)
(இசை....)
பெண்: சட்டென சொல்லு....
சட்டென சொல்லு.....
குழு: ஏலே.... லே.. லல்லல் லாலா....
ஆண்: ஏலேலே.......கிராமத்துக் குடிசையிலே கொஞ்சக் காலம்
தங்கிப் பாருலே.......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: கூரையின் ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே..
ஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அனைத்து
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!
பெண்: ஆல மரத்துக்கு ஜடையை
பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே.......
ஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சிவலாமே...... (ஏ பல்லே லக்கா...)
(இசை....)
பெண்: சட்டென சொல்லு....
ஆண்: ஏலே.....லே.....அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்.....
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: ஏலே..... ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்....
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்.....
மண்ணு எங்கும் வீசும்.....
பெண்: பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்!
ஆண்: பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.... (ஏ பல்லே லக்கா...)
ஆண்: cool...........
|