Manithan
காளை காளை முரட்டு காளை
Movie |
Manithan |
Music |
Chandrabose |
Year |
1987 |
Lyrics |
Vairamuthu |
Singers |
S. P. Balasubramaniam, S. P. Sailaja |
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரி தானா
வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
உள்காய்ச்சல் ஏறலையா
உன் உள்ளம் மாறலையா
பந்திக்கு அழைத்தேனே
பசி இல்லையா
நெஜமாத்தான் ஏங்குறியா
நீ என்ன பொம்பளையா.. ஹோய்
என்னை விட்டா உனக்கேதும்
வழி இல்லையா
அட மாமா..அழலாமா
நான் தாலி கட்டட்டா
அடி மானே ..திமிர் தானே
உன் கொட்டம் அடக்கிட
கற்றவன் நானே
காளை காளை முரட்டு காளை
அ..முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரிதானா
நாடெல்லாம் என் பேர சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
ஆ..ஹா.ஹா.ஹா.ஹா.
ஓ..ஹோ.ஹோ.ஹோ..ஹோ..
ஆ..ஹா.
ஆ..ஹா.
ஏ..ஹே..ஏஹேஹே.....
பொம்பளைய சேராம
போய் சேர்ந்த ஆளுகளை
கட்டையில தீ கூட தீண்டாதையா
சேலைக்குள் தெரியாம
சிக்கி விட்ட ஆம்பிள்ளைக்கு
சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதம்மோய்
கிளிப்போல தோள் மேலே
நான் ஏறி கொள்ளட்டா
என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா..
காளை காளை எம்முரட்டு காளை
முரட்டு காளை நீதானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரி தானா
வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா
காளை காளை ஆ..முரட்டு காளை
அஹ..முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் எம் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
காளை காளை
இ..ஹஹா..
முரட்டு காளை
ஏ.ஹே..ஹே..ஹேய்..
மனிதன் மனிதன்
Movie |
Manithan |
Music |
Chandrabose |
Year |
1987 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Malaysia Vasudevan |
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா ?
கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா ?
கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா ?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா ?
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா ?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா ?
காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா ?
கற்பைமட்டும் கரண்சி நோட்டில் கறப்பவன் மனிதனா ?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன்…
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
வானத்தை பார்த்தேன்
Movie |
Manithan |
Music |
Chandrabose |
Year |
1987 |
Lyrics |
Vairamuthu |
Singers |
S. P. Balasubramaniam |
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே –
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே –
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
—
குரங்கிலிருந்து பிறந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?
யாரை கேள்வி கேட்பது?
டார்வின் இல்லையே…
கடவுள் மனிதனை படைத்தானா?
கடவுளை மனிதன் படைத்தானா?
ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லையே –
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை…
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை…
—
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
—
சில நாள் இருந்தேன் கருவரையில்
பல நாள் கிடந்தேன் சிறை அறையில்
அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம் தானடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?
இல்லை போராட்டமே வாழ்க்கை…
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?
இல்லை போராட்டமே வாழ்க்கை…
—
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
அந்த நிம்மதி இங்கில்ல…
ஏதோ நடக்கிறது
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஹா ஹா ஹா
ஆஆ ஹே ஹே ஹே
ஏய்
ஆண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது
பெண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது
ஆண் : ஏதோ நடக்கிறது
பெண் : இதமாய் இருக்கிறது
ஆண் : மானே இள
மானே வா இன்னொரு
வானம் அமைத்திடுவோம்
பெண் : வானில் சொந்த
வானில் வண்ண விண்மீன்
எல்லாம் பயிரிடுவோம்
ஆண் : நிலவு அந்த
நிலவு விடி விளக்காய்
ஆகாதோ
பெண் : மேகம் வெள்ளி
மேகம் வந்து ஜன்னல்
திரைகள் ஆகுமோ
ஆண் : ஏதோ நடக்கிறது
பெண் : இதமாய் இருக்கிறது
ஆண் : இறக்கை முளைக்கிறது
பெண் : இதயம் பறக்கிறது
ஆண் : ஆதாம் அந்த
ஏவாள் மீண்டும் பிறந்தது
போலே பிறந்து விட்டோம்
பெண் : ஆடை மேல்
ஆடை அது இருக்குது
கண்ணா மறந்து விட்டோம்
ஆண் : தனிமை ரொம்ப
தனிமை இங்கு தண்டங்கள்
ஏதுமில்லை
பெண் : பொறுங்கள் கொஞ்சம்
பொறுங்கள் அங்கு போவது
யார் அது தேவதை
ஆண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
பெண் : இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது
வானத்தை பார்த்தேன் (சோகம்)
பாடகி : வனிதா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை முரளி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா
ஆண் : தங்கை என்னும்
தங்கம் இங்கே தீயில்
வேகும் இப்போது கண்கள்
சிந்தும் கண்ணீராலே எந்த
தீயும் அணையாது
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா
ஆண் : நிலைமையை
சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை
கிடையாது பூவை வைத்த
பாவியே தீயை வைக்கிறான்
ஆண் : நெருப்புக்கு
உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பு
எரியாது உண்மை
வந்து பேசுமா ஊமை
நான் அம்மா
ஆண் : மணநாள்
பார்த்தவன் நானே
பிண நாள் பார்ப்பதும்
நானே மணநாள் பார்த்தவன்
நானே பிண நாள் பார்ப்பதும்
நானே
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா
ஆண் : ஏற்கனவே
அவன் எரித்து விட்டான்
எரித்ததை மறுபடி எரித்து
விட்டான் தர்மம் காக்கும்
தேவனோ தூங்கி போய்
விட்டான்
ஆண் : வாழ்க்கை எது
வென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும்
வசதியில்லை வெந்த
புண்ணில் அல்லவோ
வேலும் பாய்ந்தது
ஆண் : விதியால் வந்ததா
இல்லை சதியால் வந்ததே
தொல்லை விதியால் வந்ததா
இல்லை சதியால் வந்ததே
தொல்லை
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா
ஆண் : தங்கை என்னும்
தங்கம் இங்கே தீயில்
வேகும் இப்போது கண்கள்
சிந்தும் கண்ணீராலே எந்த
தீயும் அணையாது
ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா
முத்து பெண்ணே முத்தம்
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : ஆஆ ஹா
ஆ ஹா ஆஆ முத்து
முத்து பெண்ணே முத்தம்
தரும் கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே
பெண் : கட்டு பட்டு
வாழும் கண்மணியே
வாழ்க உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க
பெண் : உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க
பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே
பெண் : ரத்த பந்தம்
என்னென்ன செய்யும்
கண்டுகொண்டேன்
கண்ணே காலம் கொஞ்சம்
ஆறட்டும் என்று கண்ணீர்
விட்டேன் பெண்ணே
பெண் : காயம் என்ன
காயம் என்று கலங்கி
போனேன் மானே காயம்
அல்ல தியாகம் என்று
தெரிந்து கொண்டேன்
நானே
பெண் : தேனே என்னை
காத்து நின்ற பிம்பம் நீ
பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே
பெண் : மல்லிகையே
மங்கள பூவே மாமா
மாமன்க மாய் வாழ்க
பூவரங்கள் சோர்கின்ற
போதும் தூய மனம் வாழ்க
பெண் : சுவருக்கும்
காத்திருக்கும் உணர
வேண்டும் உண்மை
சத்தியத்தை நம்பி
நின்றால் நடப்பதெல்லாம்
நன்மை
பெண் : நாளை வெற்றி
மாலை வரும் அல்லவா
பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே
பெண் : கட்டு பட்டு
வாழும் கண்மணியே
வாழ்க உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க
பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே
|