Kazhugu
![](../mp3/images/Kazhugu.jpg)
பொன்னோவியம்
லாலா லலா
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
பொன்னோவியம்
காதல் காதல் காதல் தினம் தேனாகும்
வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்
பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம்
நூறாகும்…நூறாகும்
பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்
போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்
கைகள் இணையும் கண்கள் மயங்கும்
சொர்க்கம் திறக்கும்
லாலா லலா
லாலா லலா லாலா லா
லாலா லலா லாலா லா
மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்
மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்
கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி
நானுண்டு…நானுண்டு
பாச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்
இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்
காயும் கனியும் மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
லாலா லலா
தேடும் தெய்வம்
வாழ்வென்பது ஆனந்தமே
சேர்கின்றதே பேரின்பமே
ஒரு நாளும் திருநாளே
மனம் போலே ஆடுங்கள்
தேடும் தெய்வம் நேரில் வந்தது
மனம் காணும் இன்பம் யோகம் என்றது
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி......
ஆனந்த ரதமும் உண்டு... ஆ... ஆ...
அதிலே ஓரு சுவையும் உண்டு... ஏ... ஏ... ஏ... ஹேய்
அழகான மலரில் வாசம் உண்டல்லோ
மோகத்தை வெல்லும் முன்பு
தாபத்தை தீர்த்துக் கொள்ளு
ஞானத்தின் உண்மை இங்கே கண்டாயோ…(தேடும்)
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
உறவென்னும் வேலி தாண்டி... ஆ... ஆ...
உலகத்தின் பந்தம் தாண்டி... ஆ...ஆ..ஹா
தெய்வீக ஒளியை காண வாருங்கள்
உனக்கிங்கு ஏதும் இல்லை
எனக்கென்று யாரும் இல்லை
எல்லாமே இன்பம் என்று பாடுங்கள்........(தேடும்)
காதல் என்னும் கோவில்
காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்………(காதல்)
பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும் பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை நினைவெல்லாம் நீ...(காதல்)
காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும் நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாத பூவில்லை மனமெல்லாம் நீ... (காதல்)
ஒரு பூவனத்தில
ஒரு பூவனத்தில சுகம் குளுகுளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளுகிளுக்குது
மலர்ச் சோலை வண்ணத்திலே
பல கோடி எண்ணங்களே……. (ஒரு பூவனத்தில)
தென்றலெனும் தேரிலேறி
ஊர்வலங்கள் போகும் மேகம்
மோகம் தந்ததடி ஒரு வேகம் வந்ததடி
ஜோடிக்குயில் கூடு கண்டே
கூட்டிலொரு ஆசை கொண்டேன்
காதல் பொங்குதடி
உனைக் காவல் கொண்டதடி
பூவில் மெல்லிய சாயல் கொண்டவள்
தேனில் ஊறிய த்ராட்சை கொண்டவள்
உன் பூஞ்சிரிப்பில் வரும் கோடி முல்லை
உன் கண்ணழகில் தேனருவி ஓடி வந்ததே (ஒரு பூவனத்தில)
மஞ்சள் வெயில் மாலை சூட
பட்டு வண்ண ஊஞ்சல் ஆட
நேரம் வந்ததடி இளம் சாரல் வந்ததடி
ஆஆ காற்று வந்து மூங்கில்மீது
தொட்டுச் செல்லும் நேரம் பார்த்து
ராகம் வந்ததடி ஒரு பாடல் வந்ததடி
பாடல் வந்ததும் ஆடல் வந்தது
ஆடல் வந்ததும் கூடல் வந்தது
கொடித் தேன் மணக்கும் உடல் பூ மணக்கும்
விழிதான் மயங்கும் பேரழகை காட்சி தந்ததே (ஒரு பூவனத்தில)
லல லால லலலல்லா ரர ரார ரரத்ததா
|