Annaatthe
அண்ணாத்த அண்ணாத்த
பாடலாசிரியர்: விவேகா, பாடகர்கள்: SP பாலசுப்ரமணியம்
குழு: காந்தம் கணக்கா
கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா
அண்ணன் பாரு அன்னன் பாரு
குழு: ஊரு பூரா தாறு மாறா
விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம்
தெறிக்க தெறிக்க
குழு: வீரத்துக்கு வேற பேரு
காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம்
கூட சேந்து நில்லு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையிலே உடையில
கொல கொல மாஸு
ஆண்: கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்லை
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
ஆண்: உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
குழு: தலைவா தலைவா
தலைவா தலைவா
பெண்கள்: கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
பெண்கள்: தாளடிக்கும் களத்துல
நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
பெண்கள்: வேரில் வீரம் தாங்கி
ஓங்கி வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி போரில்
மோதும் மறத்தமிழ் இனமடா
பெண்கள்: பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா
காவக்கார வாயா
ஆண்: காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
ஆண்: உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
ஆண்: நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
ஆண்கள்: விறல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு
ஆண்: எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
ஆண்கள்: கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
ஆண்: நொடியும் நீ துஞ்சக்கூடாதே
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
குழு: தெருவெங்கும் வீசு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையிலே உடையில
குழு: கொல கொல மாஸு
ஆண்கள்: அண்ணாத்த மாஸுக்கே
பெண்கள்: மாஸு
ஆண்கள்: அண்ணாத்த வாக்கிங்கே
பெண்கள்: ரேசு
ஆண்கள்: அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
ஆண்கள்: அண்ணாத்த மாஸுக்கே
பெண்கள்: மாஸு
ஆண்கள்: அண்ணாத்த வாக்கிங்கே
பெண்கள்: ரேசு
ஆண்கள்: அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
சாரல் சாரல் காற்றே
பாடலாசிரியர்: D இமான்
பாடகர்கள்: சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல்
பெண்: சாரல் சாரல் காற்றே
சாரல் சாரல் காற்றே
பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே
பெண்: சட சடன்னு
கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே
என் ஆயுள் ரேகையே
ஆண்: பட படன்னு
கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே
நம் தோளில் மாலையே
பெண்: பச்சை மனது பால் நிறம்
மண்ணில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே
ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே
பெண்: யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ ஓ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ ஓ
ஆண்: தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ
பெண்: சித்தம் உனை யெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம்
புகுந்திட நடை மாறுதே
ஆண்: அந்தி பகலை மறந்து
உறவு நீள அன்பே நீ வந்தாயே
பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே
பெண்: சிலு சிலுனு
பூந்தென்றல் சூடேற்ற
உயிரெனவே
பொன்னூஞ்சல் ஆடுதே
ஆண்: குளு குளுனு
தீ வெயில் தாலாட்ட
அடை மழையில்
என் ஆசை மூழ்குதே
பெண்: லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே
ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
பெண்: ஓ சாரல் சாரல் காற்றே
மருதாணி செவப்பு செவப்பு
பாடலாசிரியர்: மணி அமுதவன்
பாடகர்கள்: நாகாஸ் அஜிஸ், அந்தோணி தாசன், வந்தனா ஸ்ரீனிவாசன்
பெண்: மான மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டுவாரான்
பெண்: மீனா மினுக்கையில
மின்னி சிணுங்கயில
மேளங்கோட்டப்போறான்
ஆண்: மலந்து மலந்து
அனிச்சங்கொழுந்து
மணமணக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
ஆண்: வளந்து வளைந்து
அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட
பெண்: அஞ்சன அஞ்சனமே
விழி பூச
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா
வலையோசை
ஆண்: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு
குழு: பொம்மி நடந்துவரா
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூடப் போறா
குழு: அம்மி மிதிக்கப்போறா
அன்ப விதைக்கப்போறா
தாயீ வீட்டுச் சீரா
ஆண்: தவுல அடிக்க நயனம் ஒழிக்க
நேரம் நெருங்குதடி
அட்சத அட்சத உன்மேல தூவ
ஆண்: வேறல புடிக்க விரதம் முடிக்க
வாரந்தெரிஞ்சிக்கடி
அங்கன இங்கன நீத்துள்ளி தாவ
பெண்: அக்கறஅக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி
குழு: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு
ஆண்: மண்ணுதான் விதை ஒன்னுதான்
அது நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்டை ஏத்தி காட்டுமே
ஆண்: நெட்டையில்ல குட்டையில்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கோட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
ஆண்: யாரு பெருசுன்னு
எண்ணாத விட்டுத்தள்ளு
வண்ணம் இணைஞ்சு
நின்னாதான் வானவில்லு
ஆண்: ஆணும் பொண்ணும்
ஒன்னுக்கொன்னு
சேர்ந்து வாழ
வேணும்கண்ணு
உள்ளத உள்ளத
நல்லத நல்லத கேட்டு
குழு: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு
வா சாமி வா சாமி
பாடலாசிரியர்: அருண் பாரதி
பாடகர்கள்: முகேஷ் முகம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன்
சாட்ட எடுத்துக்கிட்டு
வேட்டி மடிச்சிகிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா
கன்னங் கறுப்பிருட்டு
கடுவாப் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி வா சாமி
கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வா சாமி வா சாமி
திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
தருதரு தருமத்தின் தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறேதே
மீசையை பாரு கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி வா சாமி
கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வெள்ள குதிரையில
வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்
வேங்க திமிறையில
வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும்
வா சாமி வா சாமி
வா சாமி வா சாமி
உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன்
மதங்கொண்டு வாரான்
சந்ததியா காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
வாரான் வாரான் வாரான்
மதுர வீரன்
மதங்கொண்டு வாரான்
நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு
மீசையை பாரு கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா சாமி வா சாமி
கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வா சாமி வா சாமி
அடி அடி இடியென தர தெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே
சலங்கைகள் ஆடுது சடா சடா
சடையினில் இறுக்கிட வர்றானடா
உடுக்கையின் ஓசை விடா விடா
உருமிய ஓங்கி அடிங்கடா
மீசையை பாரு கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா
என்னுயிரே என்னுயிரே
வரிகள்: தாமரை
பாடகர்: சித் ஸ்ரீராம்
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
குலம் என்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியின் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
பூமாலை கோடி பொன்னாரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தொழுகின்ற நேரம் கண்ணம்மா
நிழலென நான் என்றும் இருப்பேனே
ஆடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேனே
நெடுமலையில் காப்பாத்த
தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புணருதே
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே
ஒரு கோடி பூக்கள் நாம் தாமே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனிமைய சுமையை தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்தேனே
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம்
தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
செல்ல தங்கோம் தங்கோம்
சொக்க தங்கோம்
என்னுயிரே
|