Lingaa
என் மன்னவா மன்னவா
Movie |
Lingaa |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
|
Singers |
Sonakhi Sinha |
பெண்:
என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு - ஆனால்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை - ஆமாம்
உன்னைவிட உன்னைவிடத்
தலைவன் இல்லை.
பெண்:
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களோ உன் கண்களோ
பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ
வேர் தேடுதே
பெண்:
நூறு யானைகளின்
தந்தம்கொண்டு - ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே
ஆண்:
தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ - நான்
பசிக்காரன் வா வா
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி
ஆண்:
வெய்யில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் - உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
பெண்:
சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா....
ஓ நண்பா நண்பா
Movie |
Lingaa |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Aaryan Dinesh Kanagaratnam, S. P. Balasubramaniam |
ஹே ஹே ஓஹோ ஓஹோ
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாம்!
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாம்!
ஆசை இருந்தால் நண்பா,
சொர்க்கம் திறக்கும் நண்பா!
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு,
முத்தெடுபோம் வா நண்பா!
வானம் வலது கையில்,
பூமி இடது கையில்,
வாழ்வே நமது பையில்!
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாமா ?
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா ?
ஹே நண்பா…
ஓ நண்பா….
காதல் பெண்ணும்,
ரசிக்க தானே கிண்ணம்,
ருசிக்க தானே ரெண்டும்,
அளவுத் தாண்டி செல்லாதே!
உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை….
உனக்கு இல்லை!
மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே!
உன்னோடு செல்வம்,
எல்லாம் சேர்த்துக்கோ,
கொண்டாட நண்பன்,
வேணும் பார்த்துக்கோ!
ஹே முன்னோர்கள் சொன்னால்
சொன்னால் ஏத்துக்கோ!
வேலைக்கு ஆகதென்றால்
மாத்திக்கோ….!
ஓ நண்பா…
மண்ணில் இன்பம்
இயற்கைதானே
துன்பம் செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதே!
முன்பு இன்பம்
கொடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்!
கண்ணா நீ
கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் பெரிதாக
வாழ்ந்து பார்
இன்பம் பெரிதாகி தீருமே!
உன்னை எல்லாருக்கும்
தந்து பார்
உலகம் உனதாகி போகுமே….!
ஓ நண்பா…
ஓ நண்பா நண்பா நண்பா
வா கலக்கலாம்.
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாம்.
ஆசை இருந்தால் நண்பா
சொர்கம் திறக்கும் நண்பா
நான் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுபோம் வா நண்பா
வனாம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நமது பையில்
ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா?
மோனா மோனா
Movie |
Lingaa |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Madhan Karky |
Singers |
Mano, Neeti Mohan, Tanvi Shah |
மோனா மோனா மோனா மோனா ஹே
மோன மோன மோன காஸோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா காஸோலினா
அடி மோனா மி டியர் காஸோலினா
நெஞ்சு தான குதிக்குதடி டிரம்போலினா
உன் கண்ணு காம்பேஸ
நா உன் கொலம்பஸ
நங்கூரம் நான் போட
நீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா
காஸோலினா நான் தேனா
ஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா
நான் இங்கு தங்க முன்னா நீந்தான் கிங்கா
கப்பலில தீ வெச்ச
கடலில தீ வெச்ச
காதோடு காதாக என் நெஞ்சில் தீ வெச்ச
மோனா மோனா மோனா மோனா ஹே
மோன மோன மோன காஸோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா காஸோலினா
கசான கசான போல உன் மோனா
குத்தாசு நீ அல்ல விழக்கவா
நீதானே நேரெனியா ஓ நீதான் காஸோலினா
நீதானே ஓ நீத்தா காஸோலினா
சாராங்கி நரம்ப நான் ஏங்கிக் கடந்தேன்
நீ என்ன ஒரசா நா என்ன மறந்தேன்
பீரங்கி குழலில் நான் தூங்கி கிடந்தேன்
நீ காதல கொடுத்த நா வானில் பறந்தேன்
உன் விலா சொல்ல எதில் என்ன சாய்ச்ச
கள்ள வெள்ள மனசில் தீ பாய்ச்ச
யாரும் என்ன அடிச்சதில்லையே
மோனா மோனா மோனா மோனா ஹே
மோன மோன மோன காஸோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா காஸோலினா
நெஞ்சு தான குதிக் கூதாடி டிரம்போலினா
அம்பு வெச்சு மீன் பிடிச்சா
என்னோட கண்ணோட ஆம்பள தேனே என்ன குடிச்சா
உன் கட்ட வெறலில் நான் ரேகை எடுத்தேன்
அத நெத்தியில வெச்சு நான் உன்ன தொறந்தேன்
நா கன்னி கணினி போல் பூட்டி கிடந்தேன்
முத்தம் வெச்சு நீ தொறக்க காதல் சுமந்தேன்
தேக்க தேக்க இதயத்த ஹாக் பண்ண
உள்ள உள்ள என்ன என்ன பார்த்தேனே
யாரும் என்ன இதுவர சிற பிடிச்ச தில்லையே
மோனா மோனா மோனா மோனா ஹே
மோன மோன மோன காஸோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா காஸோலினா
அடி மோனா மி டியர் காஸோலினா
நெஞ்சு தான குதிக்குதடி டிரம்போலினா
உன் கண்ணு கொலம்பஸ
நா உன் கொலம்பஸ
நங்கூரம் நான் போட
நீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா
ஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா
நான் இங்கு தங்க முன்னா நீ தான் கிங்கா
உன் கண்ணு காம்பஸ்ஸ
நா உன் கொலம்பஸ
நங்கூரம் நான் போட
நீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா
இந்தியனே வா
Movie |
Lingaa |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
A. R. Rahman |
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும்
நீ வரலாற்று துளியாக வா
வலியவனே வா
உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை காட்டுவோம்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
ஊரெல்லாம் சேருவோமா உற்சாகம் கொள்வோமா
பட்டாளம் கான்போமா கான்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
தநீர் இல்லாமல் மனிதர் கிடயாது வா
மனிதர் இல்லாமல் மாற்றம் கிடயாது
துளியாகி வெளியாகி போராடு
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
விலங்கிட்ட விலங்காக இனி மேலும் வாழ்வோமா
போர்க் காலம் கான்போமா கான்போமா
இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட வேண்டும்
நம் பாலை வனத்தில் பாலை விட வேண்டும்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதி யெல்லாம் வெல்வோமா
வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா
கச்சேரி கான்போமா கான்போமா
வரலாறு பார்போமா கண்ணமா கண்ணமா
கச்சேரி கான்போமா கான்போமா
ஒன்று படு வென்று விடு
உலகில் பெரி தென்று எதும் இல்லை வா
பறக்கும் வானம் அது பெரியது தானே
சிறாகின் முன்னே அது சிறியது தானே
தேசம் ஒன்றாய் செய்வோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
இந்தியனே வா புது இமயத்த்தை உண்டாக்க வா
இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும்
நீ வரலாற்று துளியாக வா
வலியவனே வா
உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை காட்டுவோம்
சேருவோமா சேருவோமா ஒர் ஜாதி ஆவோமா
வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோமா
மலை கட்டி வாழ்ந்தோமே
அணை கட்டி வாழ்வோமா
கொடி கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா
உண்மை ஒருநாள்
Movie |
Lingaa |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Haricharan |
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே கரையாதே
ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை
ஆணியாகப் பிறந்தாய்
உனக்கு அடிகள் புதிதில்லை
கலங்காதே கலங்காதே கரையாதே
சிரித்து வரும் சிங்கமுண்டு
புன்னகைக்கும் புலிகளுண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்திவிட்டு
உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது
சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே
கெட்டாலும் நம் தலைவன்
இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது
|