Thappu Thalangal
தப்பு தாளங்கள்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
ஆசையில் ராகங்கள்
ஆனால் அபசுர கீதங்கள்
ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
ஆண் : நேராக வாழ்கின்ற மோகம்
நேரத்தில் மறைக்கின்ற மேகம்
மதியோடு நடக்கின்ற தாகம்
விதியோடு செல்கின்ற வேகம்
பாராளும் வேஷங்கள்
பரதேசி கோலங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்
ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
ஆண் : நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
நிதம் தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை
இவள் பொருள் தாரம் ஆகிவிட்ட சந்தை
அவள் மானம் பாருங்கள்
அவமான கோலங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்
ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
ஆண் : சமுதாய சந்தைக்கு போனால்
இவன் போல பல பேரை காண்போம்
பிடிபட்ட பின்தானே கள்வன்
அது மட்டும் அவன் பேரும் தலைவன்
இது போன்ற பாவங்கள்
சமுதய பாடங்கள்
விதி வழி தினம் ஓடும் ஓடங்கள்
ஆண் : தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
என்னடா பொல்லாத வாழ்க்கை
பாடகர் : எஸ். பி. பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
ஆண் : காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தான் பா
நம்ப நிலை தேவலை யப்பா
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
ஆண் : படிக்க ஆச வச்சேன் முடியல
உழைச்சும் பார்த்து புட்டேன் விடியல
பொழைக்க வேறு அழி தெரியல
நடந்தேன் நான் நெனச்ச வழியிலே
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிய போய் கேளு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
ஆண் : அட என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
ஆண் : நான் செய்யுறேன் தப்பு தண்டா
வேற வழியேதும் உண்டா
ஊருக்குள்ளே யோக்கியனைக் கண்டா
ஓடிப் போய் என்னிடம் கொண்டா
கெடச்சா கிடைக்கிற வரைக்கும் பாரு
பிடிச்ச திருட்டு பட்டம் நூறு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
ஆண் : என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான்
விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா..ஹூ ஊ …
அழகான இளமங்கை
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்
பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
பெண் : திருமண மேடை
என்பதில் தொடங்கி
பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு
பிள்ளையில் தொடங்கி திருமணமாகி
இல்லறம் காணும் இவளது வாழ்வு
பெண் : தெய்வமே……ஆஅ……ஆஅ….ஆ ஹா….
தெய்வம் உண்டு என்பதைத்தானே
நீ உரைத்தாய்
கை கொடுத்தாய்
வாழவைத்தாய்
பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
பெண் : காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில்
ஓடைகள் ஆக ஓடிய நேரம்
கோவிலில் ஒருவர் வாரி எடுத்து
புனிதம் இது என்றார் பிறந்தது நேரம்
ஊமை நான் ஆ…..ஆஅ…..ஹா….ஆ….
ஊமையாவே நான் இருந்தேனே
நீ சிரித்தாய் கை கொடுத்தாய்
வார்த்தை தந்தாய்
பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
பெண் : கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி
கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை
மலடியின் வயிற்று மைந்தனைப்போலே
மண்டலம் ஆளும் அரசனுமில்லை
பெண் : அன்னை நான்….ஆஅ….ஆ….ஹா…..ஆ….
அன்னையாக ஆசைகொண்டேனே
நீ சிரித்தாய்
கை கொடுத்தாய்
வாழ வைத்தாய்
பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்
|