Thudikkum Karangal
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் (சந்தனம்)
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்…ஹா
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவண்டு மோகனம்…இசை வண்டு மோகனம் (சந்தனம்)
நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன…ஹா
உன் கைகள் என்னை கொய்தன (சந்தனம்)
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம் (மேகம்)
முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும் கையோடு எடுத்து வந்தேன் கட்டிலும்
நானுண்டு எட்டி எடுப்பேன் கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்
கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா
கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா (மேகம்)
மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
தெப்பத்து குருவி மஞ்சம் தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்
இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்
காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம்
மேகம் முந்தானை ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப்பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
ஆ........ஹோ.....
அடடா இதுதான் சுகமோ
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே (அடடா)
விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்
விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்
கன்னங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்
கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்
அடடா இது தான் சுகமோ....
ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி
தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி
நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்
குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்
அடடா இதுதான் சுகமோ......
லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால
உள்ளத்தில் என்னென்ன
உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள் (உள்ளத்தில்)
இளம் பாவை கொடுத்த மனது
எனக்கென்று அடித்த கனவு
இளங்காற்றில் இணைந்து
கலந்துதான் போனதோ
இசை பாடி திரிந்த குயிலும்
விளையாடி களித்த மயிலும்
பிரிவென்ற இடத்தை
நினைத்துதான் சேர்ந்ததோ
வீசும் காற்றில் துன்பம்
வேகும் நெஞ்சில் துன்பம்
எங்கோ எங்கெங்கோ இன்பமே
பெண் உள்ளம் ஒரு நெருப்பு
பெருகுதடி வெறுப்பு
இளமை எனும் களிப்பு உன்
இதழில் வந்த சிரிப்பு
தந்தனதந்தனனா லாலலலாலா
நெருக்கத்தில் இனித்த இனிப்பும்
விருப்பத்தில் அணைத்த அணைப்பும்
வெறுப்பினில் அனைத்தும்
மறந்துதான் போகுமோ
விரல் தொட்டு பிடித்த பிடிப்பும்
மனம் தொட்டு துடித்த துடிப்பும்
விரைவினில் நடித்த நடிப்பென ஆகுமோ
வெள்ளை பூவில் கள்ளம்
சொல்லி பார்க்கும் உள்ளம்
உண்மை என்னென்பேன் பெண்மையே
தெரிந்ததடி உன் நெஞ்சம்
தேவை இல்லை பொன் மஞ்சம்
மனதுகளில் ஏன் வஞ்சம்
மதுவின் வசம் என் நெஞ்சம் (உள்ளத்தில்)
வாலிபம் வாடாத பூமாலை
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹான்...
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் காவிரி நீரலை ஓடி வர
நினைவில் புது வித ஆனந்தம்
மயக்கம் பூவிழி பார்வையும் பாடி வர
மகிழும் இனிமைகள் ஆரம்பம்
பூங்காற்றும் தேகம் யாவும் தழுவிடும்
ஏதேதோ எண்ணம் நெஞ்சில் துளிர் விடும்
யாவும் ஆனந்தம்
நம்தன நம்தன தனனம் (வாலிபம்)
வசந்தம் வாலிபம் வாழ்வினில் நாளும் வர
வரவு வருவது ஆனந்தம்
வயது பெண்மகள் வாசனை மேனி தொட
உறவு உணர்வுகள் ஆரம்பம்
ஆஹாஹா ஆடும் கூடும் இனிமைகள்
ஓஹோஹோ ஓடும் பாடும் தனிமைகள்
இன்பம் பேரின்பம் ரப்பபபம்......
வாலிபம் வாடாத பூமாலை......
|