Thee
ஐயாவுக்கு மனசிருக்கு
ஐயாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பம் ஆகின்றது இஷ்க்......இஷ்க்.....இஷ்க்......
அங்கே கொஞ்சம் இடமிருக்கு
அதை நெனச்சா சொகமிருக்கு
அச்சாரம் கேட்கின்றது இஷ்க்...இஷ்க்..இஷ்க்..(ஐயா)
நெனச்சா போதும் இனிப்பா மாறும்
நேரம் இதுதானம்மா
அணைச்சேன் உன்னை அதிலே என்னை
நானே மறந்தேனம்மா
எனக்கும் ஆசை அதிகம் ஆனால்
நாணம் விடவில்லை
இருந்தும் கூட அருகில் வந்து
நீயும் விடவில்லையே.........(ஐயா)
இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால் கூட
ஏக்கம் வருமேயய்யா
மலர்கள் தூவி படுக்கை போட்டு
மஞ்சம் அமைப்போமடி
மயக்கம் பாதி மௌனம் பாதி
கொஞ்சி மகிழ்வோமடி......(ஐயா)
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
எப்பண்ணா வந்ததின்னேன் –எனக்கும்
தெரியல்லேன்னார்
அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா.......(சுப்பண்ணா)
தளுக்கு....ஏ..குலுக்கு...ஏ...மினுக்கு
ஏ...தளுக்கு ஏ...அலுக்கு குலுக்கு மினுக்கு
தளுக்கு ஆஹா,,,,ஹா,,,ஹா...ஹோய்......
மாடி வீட்டைப் பார்த்ததுண்டு
மாடிப்படி ஏறியதில்லே
பூட்டி வைக்க நோட்டுமில்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணை விழிப்போம்
மூலையிலே வாழ்வு நடக்குது
புள்ளை பொறக்குது வஞ்சனை இல்லாம (சுப்பண்ணா)
தாயிடத்தில் பாலுமில்லை
தந்தை முகம் பார்க்கும் பிள்ளை
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண்கலங்கிப் பார்க்கும் தந்தை
ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒண்ணு ரெண்டு வாழுது அப்பா
சோஷலிச பாடலைக் கேட்கிறோம்
பானையைப் பார்க்கிறோம்
ஒண்ணையும் காணோமே........(சுப்பண்ணா)
நாம ஒரு மூச்சு விட்டா
நாடி எங்கோ பறக்குமப்பா
காலம் ஒண்ணு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டியிருப்போம்
நல்லவர்கள் கெட்டதுமில்லே
பட்டதுமில்லே நம்பிக்கை கொள்வோமே (சுப்பண்ணா)
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா....ஹோ...
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா....ஹோ...
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வாரே வா ராஜா இது இந்திரலோகம்
வந்தாத்தான் தீரும் உந்தன் ஆசையின் தாகம்
சொன்னாலும் சொன்னேன் இது சொர்க்க போகம்
சொர்க்கத்தில் நீதான் எந்தன் பக்க மேளம் (வாரேவா)
முப்பதுக்கு மேலேதான் கொண்டாட்டம் –உந்தன்
முன்னாலே ஆடுது பார் வண்டாட்டம்
எப்பொழுது பார்க்கப் போற என்னாட்டம் –நீ
இப்பொழுதே ஆடிவிடு உன்னாட்டம்
நீ சொல்லு நான் வாரேன் நீ கேளு நான் தாரேன்... (வாரேவா)
ராப்பகலா பேசுவதில் சந்தோஷம் – இங்கே
நான்தானே எப்பொழுதும் சங்கீதம்
கூப்பிடுங்கள் தேடி வரும் உல்லாசம் –ஒரு
கோடி முறை நான் தருவேன் சல்லாபம் ஆ....
என் ஆடல் நீ பார்க்க என் கூடல் நீ சேர்க்க..ஆ..(வாரேவா)
|