Pokkiri Raja
கடவுள் படைச்சான்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹா இம்ஹும்
கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஹுஹுஹுஹு ஹஹஹாஹா…..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஆண் : அந்தி பட்ட நேரத்திலே
சந்திரனை ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனோ
சூரியந்தான் அதுன்னான்
சந்திரனா சூரியனா
சண்ட வந்து சேர்ந்ததய்யா (வசனம்)
ஆண் : இந்த நேரம் பார்த்து
எதுக்கால ஒரு மனுஷன்
தள்ளாடி தள்ளாடி
தலை கீழா நடந்து வந்தான்
சண்டை இட்ட ரெண்டு பேரும்
சாட்சியா அவன வச்சு
சந்திரனா சூரியனா
சரியாய் நீ சொல்லு
எனக்கு ஒண்ணும் தெரியாது
நான் வெளி ஊருன்னு போட்டான் அவன்
ஹான்ன் ஹான்….. (வசனம்)
ஆண் : என்னதான் போட்டாலும்
நிதானம்தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதய்யா
……………………….
ஆண் : கன்னிய தாய் என்பேன்
கிழவிய கண்ணே என்பேன்
கண்ட்ரோல் கொஞ்சம் கூட குறையாதய்யா
அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி…….
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : அட ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஆண் : …………………………
ஆண் : ஒரு பெண்ணைப் பார்த்தேன்…..
என்னம்மா கல்யாணம் ஆச்சான்னேன்
ஆகலேன்னா
குழந்த குட்டி இருக்கான்னேன்
குடுத்தா பளார்ன்னு
நான் விடுவேனா…….
அடுத்த பெண்ண பார்த்து……..
முன் கூட்டியே குழந்த குட்டி
இருக்கான்னேன்
ஆமாம் ரெண்டு கொழந்த இருக்குன்னா
அப்புறம்தான் கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன்
அன்னைக்குதான் தங்க பல்லு
கட்ட வேண்டிய அவசியம் வந்தது
ஹிஹிஹஹஹா….(வசனம்)
ஆண் : விஸ்கிய போட்டேன்னா
இங்கலீசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா
தமிழ் பாட்டு தன ந ந ந………
ஆண் : கள்ளை குடிச்சேன்னா
நாடோடிப் பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும்
அதை கேட்டு
ஆண் : அட ஆகாயம் கால் மேலே
பூலோகம் கை மேலே
ஆடி காட்டுறேன் வா நைனா
……………………………..
ஆண் : கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஹான் கடவுள் படைச்சான்
உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான்
உலகம் ரெண்டாச்சு
ஆண் : ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
ஐயா மேலே சாமி
வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்
நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி
ஓ ஓ என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ
ஆண் : என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
பெண் : {வெத்தலைய போட்டு செவந்தது
என்னோட வாயி
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு
உன்னோட வாயி} (2)
ஆண் : {இரு உடம்பிருக்கு
ஒரு மனசு நம்மோட தானே
இனி தெனம் தெனமும்
சொகம் இருக்கும் சிந்தாத தேனே} (2)
பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண
சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும்
ஏதோ கேக்குற
பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி
ஆண் : {மஞ்ச மோகம் மணமணக்குது
எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது
எல்லாம் உன்னாலே} (2)
பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக
என்ன விஷயம்
சாயுங் காலத்திலே சிரிக்கிரீக
என்ன விஷமம்
ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு
ஸ்ருதி ஏறுது
தொட்டுபுட்ட பின்னாலதான்
மனம் மாறுது
ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி
ஓ ஓ என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
பெண் : {கோழிக்கறி கொழம்பிருக்கு
பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வறுவலும்
மணம் புடிக்கலையோ} (2)
ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும்
மந்தாரக் குயிலே
உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும்
சிங்கார மயிலே
பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்தது
வெளையாடுது
சொக்க வெச்ச மச்சானுக்கு
சொகம் ஏறுது
ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி
பெண் : ஓ ஓ என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி
விடிய விடிய சொல்லித்தருவேன்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பெண் : மாலையில் மல்லிகை
அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை
அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பாக்குதே
உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே
உன்னிடம் கேட்கிறேன்
ஆண் : சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
ஆண் : வெட்டி எடுக்காத தங்கமோ
கட்டு குலையாத அங்கம்மோ
வெட்டி எடுக்காத தங்கமோ
கட்டு குலையாத அங்கம்மோ
கட்டி பிடிக்காத பிள்ளையோ
முத்தம் கொடுக்காத முல்லையோ
கட்டி பிடிக்காத பிள்ளையோ
முத்தம் கொடுக்காத முல்லையோ
ஆண் : சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : லா ல லா ல லா ல லா ல லா ல லா
லா ல லா ல லா ல லா ல லா ல லா
பெண் : பேசினால் மந்திரம்
பூசினால் சந்தனம்
ஆண் : மார்பினில் குங்குமம்
காரணம் சங்கமம்
பெண் : ஆரம்பம் தாய்மொழி
அடுத்ததோ புதுமொழி
ஆண் : சொல்லித்தர நானிருக்கேன்
ராஜாத்தியே
ஆண் : விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பெண் : என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இருவர் : இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
வாடா என் மச்சிகளா
வாடா என் மச்சிகளா ஒஹ்..ஒஹ்..ஒஹ்..
நல்ல வெங்காய பஜ்ஜிகளா ஹே..ஹே...ஹே...
எங்கும் விக்காத பூண்டுகளா
ரொம்ப பொல்லாத வாண்டுகளா இனி
என் கிட்ட உன் பப்பு எப்போதும் வேகாது
போயிட்டு வாரீகளா.......(வாடா)
நீ செய்யாத பாவமில்லே
இப்போ வாங்காத சாபமில்லே
அட அப்பாவி ஆளுன்னு தப்பாக நீ எண்ணி
பண்ணாத மோசம் இல்ல......இல்ல....
நீ எல்லார்க்கும் முன்னால சொல்லாத பொய் இல்ல
போடாத வேஷமில்ல
உன்ன கண்ணால பார்த்தாலே கஷ்டங்கள் உண்டாகும்
சுட்டாலும் தப்பே இல்ல ஹஹஹஹஹா (வாடா)
பூசைகள் நான் போடவா என்
ஆசைக்கு நீ ஆடவா உங்க
அப்பாரு சொன்னாரு அம்மாவும் கேட்டாரு
தப்பாக நீயும் வந்தே......ஏண்டா டேய்.....
ஒங்க கும்மாளம் எல்லாமும் சும்மாக போயாச்சு
ஏண்டாப்பா இங்கே வந்தே
இனி வாய்ப்பேசக் கூடாது
வம்பேதும் இல்லாது போடாப்பா நல்ல பிள்ளே (வாடா)
அட பொல்லாத கூட்டங்களா
நீங்க போடாத ஆட்டங்களா ஆஹ்...
ஒங்க சந்தோசம் சல்லாபம் எல்லாமும்
தீந்தாச்சு சொல்லாமே போறீகளா டோய்..
அட போன் என்ன வீடென்ன
பெட் என்ன துட்டென்ன எல்லாமும் தாரீகளா
அந்த தென்காசி வடகாசி ராமேஸ்வரம் போயி
பாவத்த தீப்பீங்களா ஓஹ்ஹ...ஓஒஹ்ஹ்ஹ...(வாடா)
|