Kabali
மாய நதி இன்று
Movie |
Kabali |
Music |
Santhosh Narayanan |
Year |
2016 |
Lyrics |
Uma Devi |
Singers |
Ananthu, Pradeep Kumar, Shweta Mohan |
நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே
தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா
மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே
யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே
உலகம் ஒருவனுக்கா
Movie |
Kabali |
Music |
Santhosh Narayanan |
Year |
2016 |
Lyrics |
Kabilan, Vivek, Roshan Jamrock |
Singers |
Ananthu, Santhosh Narayanan, Gana Bala, Roshan Jamrock |
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்
விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்
நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய் புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் நினையாதே
விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு
வானம் உனதே பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே
ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு
ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே ( இசை )
கபாலி…
இதுக்குப் பேர் தான் தலைவர் அதிரடி ( இசை )
கபாலி… கிங் ஆஃப் டைம்
இன் த கான்கிரீட் ஜங்கிள் வாச்சிங் ஓவர் மை ப்ரைடு
நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போயா
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா
ஐ’ம் ஸ்டாக்கிங் மை ப்ரே வோன்ட் லெட் ஹிம் கெட் அவே
வித் த திங்ஸ் தட் தே டூ பேட் மூவ்ஸ் தட் தே மேக்
வந்தவன போனவன வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்டப் போறான் வாய மூடி கவனி
ட்ரெஸ்டு டு கில் கால் இட் கபாலீஸ்வேர்
கம் அன்ட் கெட் சம் லை த கே டௌன் க்லான்
இட் ஏய்ன்ட் அபௌட் த சைஸ் ஆஃப் த டாக் இன் த ஃபைட்
பட் த ஸ்பிரிட் ஆஃப் த ஃபைட் இன் த டாக் தாட்ஸ் ரைட்
வேரும் பூவும் வேறில்லை கருமேகம் போலே நீரில்லை
அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு எப்போதும்
நீரின் வீழ்ச்சி நீ தானே உனை நீந்திக் கடக்க முடியாதே
ஒரே பனித் துளி அது எரிமலை அணைத்திடுமா
மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே
மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ளே கேட்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே
விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு
வானம் உனதே பாதி வழியில் பறவை பறக்க மறக்காதே
ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு
ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே
நெருப்பு டா நெருங்கு டா
Movie |
Kabali |
Music |
Santhosh Narayanan |
Year |
2016 |
Lyrics |
Arunraja Kamaraj |
Singers |
Arunraja Kamaraj, Rajinikanth |
நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் கபாலி…
ஹஹஹா… ஹூஹா… ஹஹஹா… ஹூஹா…
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
வெறும் வார்த்தை கூட புது மாற்றம் காணும் ( இசை )
நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு…
கபாலி டா…
விடுதலை அடை விடை என நினை
பயத்தையே முறை பகல் கனவை உடை
வீரம் தியாகம் மோதும் மோதும்
உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும் ( இசை )
கபாலி…. கபாலி…. கபாலி…. கபாலி….
வானம் பார்த்தே
Movie |
Kabali |
Music |
Santhosh Narayanan |
Year |
2016 |
Lyrics |
Kabilan |
Singers |
Pradeep Kumar |
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனால்
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
இருந்தவள் அவள் எங்கு போனாளோ
இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
வீரத் துரந்தரா
Movie |
Kabali |
Music |
Santhosh Narayanan |
Year |
2016 |
Lyrics |
Uma Devi, Roshan Jamrock |
Singers |
Gana Bala, Lawrence R, Pradeep Kumar, Roshan Jamrock |
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா புது யுகத்தில் சமர் வீரா
உன் நிலை கண்டு இன்புற்றார்க்கு இரை ஆகாமல்
அன்புற்றார் அழ அடிமைகள் எழ
அவர் துன்புற்றத் துயரங்கள் நீக்கும் ( இசை )
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
குழு :
கபாலி கமிங் கேன் யூ ஃபீல் த க்ரௌன்ட் ஷேக்
லைக் அன் எர்த் க்வேக்
நோ வேர் டு ரன் இட்ஸ் டூ லேட்
ரியல் கேங்ஸ்டர் ஃப்ரம் த சிட்டி டு த எஸ்டேட்
ரியல் கேங்ஸ்டர் சபரேட் குட் ஃப்ரம் த கிரேட்
கீபிங் இட் ஸ்ரெய்ட் ஓ ஜி சின்ஸ் த எய்டீஸ்
அன் டச்சபுள் ஏ கே ஏ கபாலி
ஃபைடிங் ஃபார் வாட்ஸ் ரைட்
ஸ்டான்டிங் அப் ஃபார் த வீக்
லூகிங் ஃப்லை கிக்கிங் ஆஸ்
இன் எ சூட் அன் ஹாக்கி ஸ்டிக்
சரணம் – 1
ஆண் :
டும் டும் டும் என வெடித்திடும் பகை
களத்தினில் ஆட வெறித்திடும் புகை
உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை
வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை
பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ
நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா
உன் நிலை தாண்டியே மலை உயருமா
வழி காட்டும் தலைவனே இனி அறம் உறங்குமா ( இசை )
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
குழு :
லென்ட் மீ யோர் இயர்ஸ் ஐ’ல் ஸ்லைஸ் எம் ஆல் ஆஃப்
வித் த சேம் பேர் ஆஃப் சிஸ்ஸர்ஸ்
மை மம்மா யூஸ் டு கட் க்லாத்
எவ்ரி மேன் காட்ட ரைட் டு டிசைட் ஹிஸ் டெஸ்டினி
ஐ’ட் ரேதர் டை ஸ்டான்டிங் அப் தேன்
லிவிங் லைஃப் ஆன் மை னீஸ்
பீட் த வார் ட்ரம்ஸ் ஹார்ட் டோன்ட் லெட் த மியூஸிக் ஸ்டாப்
மகிழ்ச்சி முதல் லவர்ஸ் காஸ் திஸ் ஜம் ராக்ஸ்
பீட் த வார் ட்ரம்ஸ் ஹார்ட் டோன்ட் லெட் த மியூஸிக் ஸ்டாப்
மகிழ்ச்சி முதல் லவர்ஸ் காஸ் திஸ் ஜம் ராக்ஸ்
சரணம் – 2
ஆண் :
உரிமை யாழ் மீட்டினான் உணர்வால் வாள் தீட்டினான்
உலகில் யார் என காட்டினான்
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
தடைகள் அறுந்திட தலைகள் நிமிர்ந்திட
கடையும் படை என ஆகினான்
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டர் ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண் : கூர் விழிப் பார்வை
குழு : மேக் வே ஃபார் த பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : கொளுத்திடும் தீயை
குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டர் ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண் : அடிமைகள் வாழ்வை
குழு : மேக் வே ஃபார் த பீப்புல்ஸ் சாம்பியன்
ஆண் : சீர் அமைத்திடும் தானை ( இசை )
|