Garjanai
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாடும் பூவே செங்கனியாடும் கொடியே
என் தோளோடு நீயாட நானாட வா....(வருவாய்)
மாலை இளம் வெய்யில்
சோலை இளம் தென்றல்
காதல் எனும் தேர் ஒன்றில்
நாம் இன்று போவோம்
புதுமை கொஞ்சும் இளமை இன்பம்
கண்ணில் தெரிந்தது வானம்
நெஞ்சில் வளர்ந்தது மோகம்
ஊஞ்சலில் ஆடிட நான் உனை கூடிட
நாயகி அருகினில் வா.......(வருவாய்)
காத்தாட பூவாட கனியாடும் கொடியாட
தோளோடு நீயாட நானாட வா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமோ
ஆடி வரும் மேகம் பாடி வரும் ராகம்
கோடி மலர் தேனுண்டு சேரட்டும் மோகம்
கனவே கண்டேன் இனிமை கொண்டேன்
கனவே கண்டேன் இனிமை கொண்டேன்
சித்தம் கெட்டது உன்னால்
பித்தம் கொண்டது பெண்ணால்
எண்ணம் யாவிலும் நீயென காதலில்
நீந்திட அருகினில் வா.........(வருவாய்)
என்ன சுகமான உலகம்
லாலாலலலலாலா லாலாலலலலா
லாலாலலலலாலா லாலாலலலலா
என்ன சுகமான உலகம் ஹோ......
என்ன சுகமான பருவம்.......
ஆனந்தம் ஓ......ஹோய்........
ஆரம்பம்........ஓ....ஹோய்.....
நாள் என்ன.......ஓ....ஹோய்......
பொழுதென்ன ஓ.......ஹோய்...,,(என்ன)
பூவிரு உதடுகள் பேசிடும் வார்த்தையில்
போதை வருகிறது
பொங்கிடும் காவிரி கொள்ளிடத்தோடு
சங்கமம் ஆகிறது
மை வழியும் இரு தீபங்களும்
மங்கலமாய் இரு சங்குகளும்
சாந்தி சாந்தி என்றே சொல்லி
பாடும் பாடல் ஒன்றல்ல.......லாலாலா (என்ன)
கட்டி அணைப்பவர் சேர்வதற்கென்றே
கட்டில் என்றார்கள்
கட்டிலின் மேலே பாடம் படிப்பதை
காதல் என்றார்கள்
ஊடலிலே சிறு கூடலிலே
கூடுகிறார் ஒரு பாடலிலே
காலம் எங்கே போனால் என்ன
காதல் தானே சொர்க்கங்கள் (என்ன)
ஒரு ஊரில் ஒரு மகராணி
ஒரு ஊரில் ஒரு மகராணி - அவள்
உல்லாசக் கலையில் கலைவாணி
சிலைக் கோவில் மலர் போலே - நல்ல
சிங்கார வடிவம் அவள் மேனி….. (ஒரு)
அலை போலே சுகம் பரிமாறும்
அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும்
அந்தாதி பாடி அம்மானை ஆடி
என்னோடு நடமாடும்
செவ்வாயில் அமுதானாள்
செந்தூரக் கலையானாள்
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்தேன்
செவ்வாழைக் கனியானாள் ஹோய் (ஒரு)
சுவை என்பேன் மணிச் சுடரென்பேன்
பிறர் சொல்லாத உவமை அவளென்பேன்
தொட்டாலும் கையில் கட்டான வண்ணம்
ஒட்டாமல் போகாது
பாடாத புது ராகம்
எதிர்பாராத மழை மேகம்
வண்டாடும் கன்னி கொண்டாட வந்தாள்
வாழ்நாளில் புது யோகம் ஹோய் (ஒரு)
|