Panakkaran
இரண்டும் ஒன்றொடு
Movie |
Panakkaran |
Music |
Ilaiyaraaja |
Year |
1990 |
Lyrics |
Vaali |
Singers |
K. S. Chithra, S. P. Balasubramaniam |
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
பெண் : காதல் காதல் டிங் டாங்
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
***
பெண் : காதல் இல்லா ஜீவனை
நானும் பார்த்ததில்லை
ஆண் : வானம் இல்லா பூமி தன்னை
யாரும் பார்த்ததில்லை
பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும்
வேதனை வேதனை
ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும்
சோதனை சோதனை
பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கு முத்தங்கள் இட்ட சத்தம்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
பெண் : காதல் காதல் டிங் டாங்
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
***
பெண் : காதல் கண்ணன் தோளிலே
நானும் மாலை ஆனேன்
ஆண் : தோளில் நீயும் சாயும் போது
வானை மண்ணில் பார்த்தேன்
பெண் : நீயும் நானும் சேரும் போது
கோடையில் மார்கழி
ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி
பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்
பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஆண் : காதல் காதல் டிங் டாங்
பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்
பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்
ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
நூறு வருஷம்
Movie |
Panakkaran |
Music |
Ilaiyaraaja |
Year |
1990 |
Lyrics |
|
Singers |
Mano |
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
......
உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணச்சக்க தாங்காது பாரம்
இவரு ஏழு அடி நடக்கும் ஏணி எடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி
இரண்டும் இணைஞ்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
ரெட்டை மாட்டு வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்தஒட்டகந்தான் கட்டிக்கிட
குட்டவாத்த புடிச்சான்
நூறு வருஷம்
ஹே ஹே ஹேய்
நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும் ஹேய்
..........
புருஷன் பொஞ்சாதி
பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு
மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்
நூறு வருஷம்
ஹேய் ஹேய் ஹேய்
நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்
மரத்த வெச்சவன்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : { படைத்தவனின்
துணையிருக்க அடுத்தவனின்
துணை எதற்கு இதயத்திலே
துணிவிருக்க வருத்தமிங்கே
உனக்கெதற்கு } (2)
ஆண் : உன்னை நல்ல
ஆளாக்க உத்தமனை
போலாக்க எண்ணியவன்
யாரென்று கண்டுக்கொள்ள
யாருண்டு ஊரெல்லாம்
உந்தன் பேரை போற்றும்
நாள் வரும்
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : { உதவியின்றி
தவிப்பவர்க்கு உதவிடவே
நீ படிப்பாய் உணவு இன்றி
துடிப்பவர்க்கு உணவுதர
நீ படிப்பாய் } (2)
ஆண் : புத்தியுள்ள
உனக்கெல்லாம் புத்தகத்து
படிப்பென்ன சக்தியுள்ள
உனக்கெல்லாம் சத்தியத்தில்
தவிப்பென்ன காத்து இருப்பது
எத்தனை பேரோ உன்னிடம்
தோற்பதற்கு
ஓம் சாந்தி ஓம் (4)
ஆண் : மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஆண் : ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
சைலென்ஸ் சைலென்ஸ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { சைலென்ஸ்
குழு : சைலென்ஸ்
ஆண் : சைலென்ஸ்
குழு : சைலென்ஸ் } (2)
ஆண் : பியூட்டிபுல்
குழு : { சைலென்ஸ்
ஆண் : காதல் செய்யும்
நேரம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : காமன்
பள்ளிக்கூடம் இது } (2)
பெண் : மௌனம் தான்
இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம்
பாடுங்கள் மௌனம்
தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம்
பாடுங்கள் பாடும் நேரம்
குழு : சைலென்ஸ்
ஆண் : காதல் செய்யும்
நேரம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : காமன்
பள்ளிக்கூடம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : எழுதாத உன் மேனி
நான் படிக்கவே தெரியாத
வண்ணங்கள் தெரியுதே
இதழாலே முத்துக்கள்
நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள்
தெரியுமே
பெண் : பார்க்கும் பார்வையில்
பாதி வேர்த்ததே என் மேனி
வேர்த்து வேர்த்து தான்
மீதி தேய்ந்ததே
ஆண் : பாவை மேனியே
ஹே பாடமானதே
தொட்டாட ஆடை
கூட தான் பாரமானதே
பெண் : ஆண்மை நாளும்
காவல் காக்க ஆசை
தேனை அள்ளி சேர்க்க
ஆண் : ராகதேவன் பாடல்
போல ராகம் தாளம் நாமும்
சேர்ந்து பாடும் நேரம்
குழு : சைலென்ஸ்
பெண் : காதல் செய்யும்
நேரம் இது
குழு : சைலென்ஸ்
பெண் : காமன்
பள்ளிக்கூடம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : வானிலாடும்
நிலவு தன்னில் ஆடை
ஏதடி மண்ணில் வந்த
நிலவு நீயும் கூறடி
பெண் : பெண்ணுகிங்கு
நாணமுண்டு அறிந்து
கொள்ளையா நிலவுக்கென்று
நாணம் இல்லை தெரிந்து
கொள்ளையா
ஆண் : ஒருவருக்கு தான்
சொந்தமானது என்னோடு
இருவிதத்திலும் பந்தமானது
பெண் : காதல் இரவு தான்
விடியலானதே அந்த காமன்
உறவு தான் தொடரலானதே
ஆண் : காதல் ஆற்றில்
நீந்தும் வேலை காற்று
போல நானும் மாற
பெண் : ஜாதி பூவில்
வாசம் போல ஆவல்
இன்றி நாமும் சேர்ந்து
பாடும் நேரம்
குழு : { சைலென்ஸ்
ஆண் : காதல் செய்யும்
நேரம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : காமன்
பள்ளிக்கூடம் இது } (2)
பெண் : மௌனம் தான்
இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம்
பாடுங்கள் மௌனம்
தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம்
பாடுங்கள் பாடும் நேரம்
குழு : சைலென்ஸ்
ஆண் : காதல் செய்யும்
நேரம் இது
குழு : சைலென்ஸ்
ஆண் : காமன்
பள்ளிக்கூடம் இது
குழு : சைலென்ஸ்
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : பெத்தெடுத்தவ
யாரு அழகு பேருவச்சது
யாரு தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : { அம்மா வந்து
சொன்னால்தான் அப்பாவின்
பேர் தெரியுமடா அவளும்
சொல்லவில்லையென்றால்
தப்பாகத்தான் போகுமடா } (2)
ஆண் : { எல்லோரும்
இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம்
கலக்கத்திலே } (2)
ஆண் : ஒரு பொழுது
அது விடியாதா அட
போடா உலகம் கெடக்குது
கெடக்குது
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : பெத்தெடுத்தவ
யாரு அழகு பேருவச்சது
யாரு தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஹா
ஆஆ
ஆண் : { பந்தி போட்டு
பரிமாற பச்சை இலை
வெட்டி வெட்டி உண்ட
பின்பு எறிவாரே எச்சி
இலை குப்பை தொட்டி } (2)
ஆண் : { என் தாயும்
அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே
எச்சில் இல்லை } (2)
ஆண் : புயலாச்சு
பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும்
எறியுது எறியுது
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
ஆண் : பெத்தெடுத்தவ
யாரு அழகு பேருவச்சது
யாரு தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
ஆண் : உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா
உண்மையில மெழுகுவர்த்தி
போடா போ நான் உள்ளுக்குள்ள
சக்கரவர்த்தி ஆனா உண்மையில
மெழுகுவர்த்தி
|