Nallavanukku Nallavan
வச்சிக்கவா ஒன்ன மட்டும்
Movie |
Nallavanuku Nallavan |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Gangai Amaran |
Singers |
K. J. Yesudas, S. Janaki |
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெட்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருனாளய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சார கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல
வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ஸ்
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி
வெட்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
உன்னைத்தானே தஞ்சம்
Movie |
Nallavanuku Nallavan |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Vairamuthu |
Singers |
K. J. Yesudas, Manjula |
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே….
மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே…
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
Movie |
Nallavanuku Nallavan |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Na. Kamarasan |
Singers |
K. J. Yesudas |
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
சிறுகதையா தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை
நாம் போடும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா
காலம் செய்த கோலம்
பாசம் என்பதா வேஷம் என்பதா
காலம் செய்த கோலம்
கூடி வாழ கூருதடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம்
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
சிறுகதையா தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
சிறுகதையா தொடர்கதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
நம்ம முதாலாளி
Movie |
Nallavanuku Nallavan |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Vaali |
Singers |
Malaysia Vasudevan, S. P. Balasubramaniam |
நல்லவருக்கு நல்லவரு நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே ஒருத்தரா இருப்பவரு
நல்லாயிருக்கனும் நாளும் சிரிக்கணும்
எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்…
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
ஆடு நெனஞ்சா ஓணாயி அழுது
அந்த கதைதான் அய்யாவின் மனது
எந்த மனம் நல்ல மனம் பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது தன்னாலே புரியும்
ஊரார ஏமாத்த புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வராம்ம பசு தோளால மூடிக்கிச்சாம்
தன்னிடத்திலே தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்கள பழிச்சுதான்
பொழப்பு நடத்தணும்
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்….
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
கடையில் இருக்கும் தேங்காயை எடுத்து
ஒடச்ச வரைக்கும் போதாதோ நிருத்து
ஆண்-2 : நித்தம் நித்தம் நானும் கூட உழைக்கிற ஜாதி
நாடறியும் ஊரறியும் என்னுடைய சேதி
வேதாந்தம் பேசாதே சும்மா வாதங்கள் பன்னாதே
ஏய், நீ என்ன சொன்னாலும் என் எண்ணங்கள் மாறாதே
ஆண்-2 : அஹா, ஹா, கண்டுபுடிச்சேன் உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு என்னித்ததிலே எதுக்கு நீ முறைச்சி உதிக்கணும்
ஏய்...
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்….
ஆ&பெ குழு : நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
முத்தாடுதே முத்தாடுதே
Movie |
Nallavanuku Nallavan |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Muthulingam |
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே… லால்ல லா லா லா
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
அமுதே… ராப்ப பா பா பா
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
|