Kochadaiyaan
எங்கே போகுதோ
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
S. P. Balasubramaniam |
ரஜினி : எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
ரஜினி : உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்
குழு : வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும்
ரஜினி : இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா
வாளில் கூர்மை
வாழ்வில் நேர்மை
இரண்டும் என்றுமே வெல்லும்
எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
குழு : போராடு இளைய சிங்கமே எழுந்து போராடு
வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
ரஜினி : உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு – என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்
உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது ஓயாது
மாற்றம் ஒன்றுதான்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Rajinikanth, Haricharan, Jathi by V. Umashankar |
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு
குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்
மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது
சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை – செயல்
உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்
உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது
நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?
நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்
பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி
சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்
நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!
மாற்றம் ஒன்றுதான் மாறாதது..
இதயம்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Srinivas, Chinmayi |
தளபதி ரஜினி சிறையில். காதலிக்கும் இளவரசி அந்தப்புரத்தில் சங்க இலக்கிய மொழியில் காதல் பிரிவைப் பாடும் பாடல்
தீபிகா படுகோன் :
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் …
இதயம்
நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்த மலராய்…
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
*
ரஜினி :
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
மறக்கிலேன்
*
ரஜினி :
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
இதயம் செந்தீ விழுந்த
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Chinmayi, Srinivas |
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
வாய் மொட்டுடைந்தால்
பூவாசம் வாசத்துக்கேது சிறைவாசம்.?
கர்ம வீரனே
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
A. R. Rahman, A. R. Reihana |
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது
ஹே ஏலே கர்ம வீரனே கடமை வீரனே கர்ம வீரனே
ஹோ…
தோல்விகளாலே துவண்டுவிடாதே வெற்றிகளாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை
மாலைகளை கண்டு மயங்காதே
மலைகளை கண்டு கலங்காதே
சொல்லடி படும் என்பதாலே வெற்றி காணாமல் போவதில்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே நில்
நிம்மதி வாழ்வு வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
கோழைகள் மண்ணில் காண் அது பெரிதல்ல பேறல்ல
வீரர்கள் மண்ணில் காண் அது வரலாறு வரலாறு ஆ…
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே
அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே கர்ம வீரனே
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது
எங்கள் கோச்சடையான்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Kochadaiiyaan Ensemble |
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காற்றைக் கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காலம் கடந்தும் பேச்சுடையான்
மாசில் வீணையே
மாலை மதியமே
வீசு தென்றலே
வீங்கிள வேனிலே
மூசு வண்டறை
பொய்கைப் பூவே
ஈசா உந்தன்
இணையடி சரணம்
நின்னடி சேர்ந்தால்
நேராது மரணம்.
மெதுவாகத்தான்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vaalee |
Singers |
S. P. Balasubramaniam, Sadhana Sargam |
பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா
பெண் : மயிலாசனம்
அருகினில் நானே மழை
மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து
விட்டேனே நான்
ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா
ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே
பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மடி போல யாவும் சுகம்
நல்குமா
ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது
என்னை வெல்ல யாரும்
இல்லை உனையென்றி
திசைகள் வெல்லும்
இசையே
குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா
பெண் : ராணா ரா ணா
என்னை கொஞ்ச ராணா
உன்னை மிஞ்ச ஆனா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா
ஆண் : தொட்டு வந்த
முல்லை விட்டு வைத்த
தில்லை கொஞ்சம் அன்பு
தொல்லை காட்டும்
இன்ப எல்லை
குழு : ஜாரே ஜாரே
ஜாரே ஜாரே ஜாரே
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜாரே ஜாரே
ஜா
குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ருரு ரூ ருரு ரூ
ருரு ரூ …..
ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே
பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மாா் போல யாவும் சுகம்
நகுமா
ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது
பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா
ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா
மணப்பெண்ணின் சத்தியம்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Latha Rajinikanth |
காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திட செய்வேன்
மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி
நித்திரை தருவேன்
காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்
கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன் உன்
ஆண்மை நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்
மணமகனின் சத்தியம்
Movie |
Kochadaiyaan |
Music |
A. R. Rahman |
Year |
2014 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Haricharan |
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
|