Naan Potta Saval
சுகம் சுகமே
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா ஞாயமா
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணா
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா (சுகம்)
துள்ளத் துள்ள காதல்
அள்ளிக் கொள்ள ஆசை
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா
மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச் சரம் கண்டு நின்றேன்
தேன் மழை போல் என வாலிப நாள் வருமா ஆ.....(சுகம்)
வஞ்சித் தொடர்ந்தாளே.....
வாச மலர் போலே
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா
செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்
பஞ்சணை பால் பழம் நீ தரும் நாள் வருமா ஆ...(சுகம்)
லாலாலலலலாலா ஆ....ஆ.....ஆ....ஆ..
லாலாலலலலலா ஆ.....ஆ.....ஆ.....ஆ...
அந்தி வெய்யில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால் விடை வருமா
பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டேன் நின்றேன்
அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா.ஆ....
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா (சுகம்)
நெஞ்சே உன் ஆசை என்ன
நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன (நெஞ்சே..)
சத்தியத்தை நாடு சாதனையை தேடு
எத்திசையும் அதை பாடு
கத்தும் கடல் கண்ணயற ஓய்வு கேட்குமா
அந்த காட்சியை கண்ட போதிலே
மனக் கண்கள் தூங்குமா.....(நெஞ்சே..)
ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
நட்டமென்ன கெட்டதென்ன
சிற்பி என்றால் சீலன் என்றால் தியாகி ஆகலாம்
நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய்
நீ ஜெயித்து காட்டலாம்....................(நெஞ்சே..)
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது –ரொம்ப
நாணயமான சில புலிகள் இருக்குது
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது –ரொம்ப
நாணயமான சில புலிகள் இருக்குது......
நோட்டம் பாத்துக்க தம்பி – என்
பாட்டை கேட்டுக்க தம்பி – இந்த
நைனா புலிகள் வேசத்தில் மயங்கி
நல்லது கெட்டதை உணரத் தயங்கி
நம்பி விடாதே வெம்பி விடாதே
தம்பி தம்பி தம்பி........(நாட்டுக்குள்ளே)
பஞ்சமா பாதகர் ஐஞ்சு பேரு –அதை
பங்கிட்டு கொண்டவர் நாலு பேரு
கொலை களவு பொய் குரு நிந்தைகள்
வஞ்சக சிரிப்பு வார்த்தையில் இனிப்பு
நெஞ்சிலே கசப்பு இரண்டு பேரு
தஞ்சமடைந்தவர் தன்னை தொடர்ந்தவர்
மிஞ்சுவதில்லை ஊர் பேரு
பட்டம் பிடித்தார் சில பேரு
பார்த்து துடித்தார் பல பேரு
வட்டம் போட்டு அதில் திட்டம் தீட்டியிங்கு
கொக்கு தலை போட்டு வெண்ணை பூசிவிட்ட
கோமாளி கூத்தாடி கொம்பேறி காத்தாடி யார்யாரு
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது.......
கட்டிக் காத்தவர் பல பேரு
காட்டிக் கொடுத்தவர் சில பேரு
ஒட்டிக் கொண்டு நின்று ஓசை என்னவென்று
எட்டி பார்த்தவர்கள் நாலு பேரு
பட்டப் பகல் கொள்ளை பாவிகளின் தொல்லை
விட்டு வைப்பதில்லை ஊரு பேரு
அண்ணன் தம்பி ரெண்டு பேரு
அதை பிரித்தவர் நாலு பேரு
வம்பில் மாட்டிவிட்டு வழக்கில் போகவிட்டு
நம்பிக்கையும் கெட்டு நாணயமும் கெட்டு
சந்தி சிரித்தானே சவால் விடுத்தானே கேளு கேளு
நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது.........
மயக்கமா ஒரு தயக்கமா
மயக்கமா ஒரு தயக்கமா
இந்த மங்கை வந்து நின்றாலே
சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே
இளமையிலே இனிமையிலே தனிமை என்ன (மயக்கமா)
பொன்னாடைத் துள்ளத் துள்ள பூ வண்ணம் கண்டாயா
பூ வண்ணம் கண்டு கிள்ள பால் வண்ணம் கண்டாயா
மண் ஆசையா பொன் ஆசையா பெண் ஆசையா
உன்னோடு காதல் என்றாள் ஊரோடு வாழ்வு என்றாள்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா (மயக்கமா)
பெண் வாடை கிள்ளக் கிள்ள பேசாமல் நின்றாயா
பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா
மண் ஆசையா பொன் ஆசையா பெண் ஆசையா
இன்பங்கள் வாழ்வு என்றால் எப்போதும் சொர்க்கம் என்றால்
என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா (மயக்கமா)
சில்லறை தேவை இப்போ
சில்லறை தேவை இப்போ
தேவை எங்கள் தேவை
நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ (சில்லறை)
புடிப்பட சாட்சி இல்லை
போக்கிரி உன்னோடு வந்தாலென்ன
போலீசு கையிலே மாட்டாத
கைதியே நின்றாலென்ன
கோட்டை காட்டிவிட்டு பூட்டை மாட்டிக்கிட்ட
போலி பொய்யனடியோ
பூட்டை போட்டு அதில் நோட்டை காத்த அந்த
பாட்டன் பூட்டனடியோ
நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ (சில்லறை)
ஒரு முறை பார்த்தல் போதும்
உண்டாகும் சந்தேகம் என்னென்னவோ
வியாபார கலப்படம் செய்யாதே
வியாதியை உண்டாக்காதே
காசை வாங்கி விட்டு ஊசி போடும்
இவன் வேசக்காரனடியோ
கல்லை ஏற்றிவிட்டு நெல்லை வாங்கும்
இவன் மோசக்காரனடியோ
நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ (சில்லறை)
நடப்பது நல்ல நேரம்
ராஜாங்கம் பண்ணாத சன்யாசியோ
நாள்தோறும் பணத்திலே நீராடும்
ரகசிய கில்லாடிடோ
ஆளை ஏவி விட்டு வாலை
தாவித் தொட்ட சீமை சாமியடியோ
ஆடல் பாடல் அதில் ஊடல் கூடல்
சுகம் தேடும் மாமனடியோ
நன்மையா தீமையா எண்ணிக்கோ
நம்பிக்கை மோசமா தள்ளிக்கோ (சில்லறை)
|