Netrikan
ராமனின் மோகனம்
Movie |
Netrikkann |
Music |
Ilaiyaraaja |
Year |
1981 |
Lyrics |
Kannadasan |
Singers |
K. J. Yesudas, S. Janaki |
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடமும் வலமும் இரண்டு
உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
தீராத விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - இவன்
சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை
தீராத விளையாட்டுப் பிள்ளை..........!
அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
காதல் கவிதை பல பாடி
அவன் பார்த்த பெண்கள் ஒரு கோடி
கன்னிப் பெண்ணைக் கண்டால்
காதல் கொள்ளும் வண்டு
ஆடி வரும் பாடி வரும்
வாலிபனைப் போல் ஓடி வரும் (தீராத)
மனம் ஆறு பதினாறில் உருவாகும்
அது அறுபதைக் கடந்தால் தவறாகும்
ஒரு காலம் வரையில் பலமாகும்
மறு காலம் சபலம் பலவாகும்
சேலை கண்டபோதே
வேலை கெட்டுப்போகும்
சேயுமில்லை தாயுமில்லை
சட்டம் தர்மம் ஏதுமில்லை (தீராத)
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற (மாப்பிள்ளைக்கு)
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் நியாயம் இல்லை
தசரதா....... புரிந்ததா... ஹரிகதா தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்தவரையில் புரியட்டும் (.மாப்பிள்ளைக்கு)
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
குற்றமெனச் சொன்னது சொன்னது தான்
நெற்றிக் கண்ணை திறந்தவன் கண்டதுதான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா (மாப்பிள்ளைக்கு)
ராஜா ராணி ஜாக்கி
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
தினம் தினம் ஒரு கல்யாணம்
சுகம் சுகம் அது சங்கீதம் (ராஜா)
இந்த இரவுக்கு நீ புது நிலவு
இது புது உலகம் வாரே வாஹ்..
ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ........ஆ........
ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப
இந்த இரவுக்கு நீ புது நிலவு பஹூத் அச்சா
உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு
தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு
அழகு முன்னால் வரும் ம்ம்ம்ம்...ஆஹ்
ஆடை பின்னால் வரும் ம்ம்ம்ம்.....ஆஹ்
இரண்டும் சேர்ந்தால் என்ன
பிரிந்து போனால் என்ன..........
ராஜா ராணி ஜாக்கி வா.....வா....வா
வாழ்வில் என்ன பாக்கி
ஆஹு ஸபநி ஸபநி ஸபநி நிஸப
ஆஅ...ஆ.....ஆ......ஆ.....ஆ....ஆ...
கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு ஆ.....ஆ....ஆ..சபாஷ் ஹேய்
உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு
உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு
இரவு முன்னால் வரும் ம்ம்ம்ம்...ஆஹ்
விளக்கு பின்னால் வரும் ம்ம்ம்ம்...ஆஹ்
அணைக்கும் கையும் உண்டு
ரசிக்கும் கண்ணும் உண்டு
ராஜா ராணி ஜாக்கி வா.....வா....வா
வாழ்வில் என்ன பாக்கி ஆஹஅஹாஹ்
ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா......
|