Velaikaran
மாமனுக்கு மயிலாப்பூர்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்
ஆண் : பாத்தி கிட்டது மாம்பலத்துல
பழகி கிட்டது தாம்பரத்துல மாலை
இட்டது மண்ணடியில அணைச்சு
கிட்டது ஆவடியில டோய்
ஆண் : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் ஹேய் ஹேய்
ஆண் : குயிலோட நான்
பாடனும் மயிலோட நான்
ஆடனும் ஹேய் அடியே நீ
மீனாட்சியா அழகான
காமாட்சியா
ஆண் : யாரு இங்கே மகாராணி
யாரு இங்கே யுவ ராணி ஞானி
கூட வழி மாறி போக வேணும்
சுதி ஏறி
ஆண் : கத்துறதிலே கத்துற
புள்ளையா சுத்துறதிலே
குழு : சுத்தல சுத்தல
ஆண் : வெத்தல வெள்ள
வெத்தல வெத்தல பத்தல
கொஞ்சம்
குழு : பத்தல பத்தல
ஆண் : சட்டுன்னு தந்தா
தந்துரு தந்துரு ஜம்முன்னு
வந்தா வந்துரு வந்துரு
ஆண் : தமிழா தெலுங்கா
உருதா மன்மத காளைக்கு
பாஷைல்லே
ஆண் : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் எங்க மாமனுக்கு
மயிலாப்பூர் தான் உங்க மாமிக்கு
அந்த சித்திர குளம் தான்
ஆண் : பாத்தி கிட்டது
மாம்பலத்துல பழகி
கிட்டது தாம்பரத்துல
மாலை இட்டது மண்ணடியில
அணைச்சு கிட்டது ஆவடியில
டோய்
குழு : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : மனசோரம் மல்லிகபூ
மடி மேல செந்தாமரை ஆ
சிரிச்சாலே செண்பகபூ
செவக்குதம்மா உன்
நெனைப்பு
ஆண் : வாழ வேணும்
சுகமாக வாழ்க இங்க
நலமாக யாரு என்ன
எதுக்காக நாம இங்க
நமக்காக
ஆண் : கெட்டது இல்லே
கெட்டத கெட்டத
தொட்டது இல்லே
குழு : தொட்டது தொட்டது
ஆண் : தொட்டது இல்லே
தொட்டது தொட்டது
விட்டது இல்லே
குழு : விட்டுரு விட்டுரு
ஆண் : பாட்டுன்னு வந்தா
தட்டி குடுக்கணும் சட்டுன்னு
வந்தா கட்டி புடிக்கணும்
ஆண் : திருந்தி வருந்தி
இருந்தா சித்திர குப்தனும்
வந்திடுவான்
ஆண் : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான்
ஆண் : பாத்தி கிட்டது
மாம்பலத்துல பழகி கிட்டது
தாம்பரத்துல மாலை இட்டது
மண்ணடியில அணைச்சு
கிட்டது ஆவடியில டோய்
ஆண் : மாமனுக்கு மயிலாப்பூர்
தான் உங்க மாமிக்கு அந்த சித்திர
குளம் தான் ஹேய் ஹேய் ஹேய்
குழு : ……………………………………
பெத்து எடுத்தவதான்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
ஆண் : பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
தத்து கொடுத்துப்புட்டா
ஆண் : வயித்துல வளத்த
புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியில வளந்ததுக்கு
இங்கிருக்க ஆசையில்லை
ஆண் : மகனா பொறந்ததுக்கு
தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது
நியாயமில்லை
ஆண் : தொட்டிலில் நாம்
கிடந்தா சோகம் வந்து
சேர்வதில்லை தோளிலே
வாழும் வரை துன்பமின்னு
ஒன்னுமில்லை
ஆண் : கட்டில பார்த்த
பின்னே காண்பதெல்லாம்
எங்கு சொல்ல கண்ணுல
ஆறிருக்கு போவதுக்கு
தோணி இல்லை
ஆண் : சட்டை கிழிஞ்சிருந்தா
தைச்சி முடிச்சிரலாம் நெஞ்சு
கிழிஞ்சிருச்சே எங்க
முறையிடலாம் காவிரி கங்கை
ஆறுகள் போல கண்களும்
இங்கே நீராட
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
ஆண் : தலையில் வகிடெடுத்த
தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதிவைச்ச
அந்த விரல் பார்த்தேனா
ஆண் : கிளியை வளர்த்தெடுத்தா
கேள்வியது கேட்காது புலியை
வளர்த்தெடுத்தா பாசமுன்னு
பார்க்காது
ஆண் : சொல்லத்தான்
வார்த்தையின்றி தாய்
மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி
ஓர் மனசு வாடுமிங்கே
ஆண் : சொல்லிலே
வேலெடுத்து வீசுகின்ற
சேயுமங்கே மௌனத்தை
பேசவிட்டா மாறிவிடும்
யாவும் இங்கே
ஆண் : ரெண்டு கிளியிருக்கு
ஒன்னு தனிச்சிருக்கு பெத்த
கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே
காட்டுங்க எங்க தாய்ப்போல
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
ஆண் : பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு
ஆண் : பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
தோட்டத்துல பாத்தி கட்டி
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், சாய்பாபா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏங்குதே மனம் இன்ப
நாளிலே தூங்குதே ஜனம்
இந்த ராவிலே தாங்குதே
குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும்
பாடலை
ஆண் : ஏங்குதே மனம்
தூங்குதே ஜனம் தாங்குதே
குணம் ஏங்குதே தினம்
ஹாஹா தினம்
பெண் : தினம் தினம் ஒரு
கூட்டம் மயில்களின்
நடமாட்டம் மலர்களும்
தலையாட்டும் இரவுகள்
அரங்கேற்றம்
பெண் : கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் ஹே
ஹே கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் இது
தான் நம் தோட்டம் தோட்டம்
ஆண் : தன்னனான தந்தான்னா
தன்னனான தந்தான்னா
ஆண் : தோட்டத்துல பாத்தி
கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன் தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்
ஆண் : { சோத்துக்குள்ள
பாத்திய கட்டுற பட்டணம்
பட்டணமே கொஞ்சம்
கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டிடும்
கெட்டிடுமே } (2)
ஆண் : தோட்டத்துல பாத்தி
கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன் தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்
குழு : லல்லா லாலா
லல்லா லாலா லல்லா
லாலா லலலலலல
லலலலலல
ஆண் : { சிங்காரமா ஊரு
இது சென்னையினு பேரு
ஊரை சுத்தி ஓடுதய்யா
கூவம் ஆறு } (2)
ஆண் : தொட்டாலும் கை
மணக்கும் தொட்ட இடம் பூ
மணக்கும் கூவமுன்னு பேரு
சொன்னா சொன்னவங்க
வாய் மணக்கும்
ஆண் : தோட்டத்துல பாத்தி
கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன் தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்
ஆண் : { சோத்துக்குள்ள பாத்திய
கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டிடும் கெட்டிடுமே } (2)
ஆண் : தோட்டத்துல பாத்தி
கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன் தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்
குழு : டுறுடுறு டுறுடுறு
டுடுடுறு டுறுடுறு டுறுடுறு
டுடுடுறு டுறுடு டுறுடு டுடு
ரூ ரூ டுறுடு டுறுடு டுடு
ரூ ரூ
ஆண் : { கல்லூரிக்கு போனா
கன்னி பொண்ணு மீனா
கல்லூரிய படிச்சதுல
கர்ப்பம் ஆனா } (2)
ஆண் : காட்சிகளும் வாங்கி
இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்ட படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தான் இருக்கு
ஆண் : கல்யாண மண்டபங்கள்
கட்டி வச்சு காத்திருக்கு கைகளிலே
காசு இல்ல கன்னி பொண்ணு
மூத்திருக்கு
ஆண் : இன்னமும் கதைய
சொல்லட்டுமா குப்பைய
கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய
சொல்லட்டுமா குப்பைய
கூடையில் அள்ளட்டுமா
ஆண் : சொல்வது ஒன்னு
செய்வது ஒன்னு பட்டணம்
கைகளை சுட்டதானே
ஆண் : தோட்டத்துல பாத்தி
கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன் தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்
ஆண் : { சோத்துக்குள்ள பாத்திய
கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டிடும் கெட்டிடுமே } (2)
ஆண் : தன்னனான தன்னான
தன்னான தன்னான தன்னனானா
தன்னா தன்னனான தன்னான
தன்னான தன்னான தன்னனானா
குழு : { லல்லலால லல்லல
லல்லல லல்லல லல்லல
யே லல்லலால லல்லல
லல்லல லல்லல லல்லல
லா } (2)
குழு : லல்லலால லாலாலல்லா
ஹே லல்லலால லாலாலல்லா
ஹே லல்லலால லாலாலல்லா
லல்லலால லாலாலல்லா
வேலை இல்லாதவன் தான்
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஹேய்
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஆண் : ஏய்.. மொத்தமாக
வந்தால் அதை சுத்தமாக
முடிப்பேன் வெறும் சத்தம்
போட வேண்டாம் அட
ஒத்தைக்கு ஒத்த வாடா
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஆண் : படிச்சா போதுமின்னு
நினைக்காதப்பா இங்கே
படிச்சுப்புட்டு பட்டம் விட்டா
பறக்காதப்பா
ஆண் : எதிர்த்துப் பட்டம்
விட்டா அறுப்பேனப்பா
வந்த எவனோடும்
மல்லுக்கட்டி ஜெயிப்பேனப்பா
ஆண் : காலம் நம்ம
கையில இருக்குது
கவலைகள் ஏதும்
கிடையாது ஏழை எங்க
வாழ்க்கையை யாரும்
ஏலம் போட முடியாது
ஆண் : படிச்சவன்தான்
வாங்குற பட்டமும்
குழு : காகிதந்தான்
காகிதந்தான்
ஆண் : படிக்காதவன்
விடுற பட்டமும்
குழு : காகிதந்தான்
காகிதந்தான்
ஆண் : புத்தகம் உள்ளது
பையில அந்த வித்தைகள்
உள்ளது கையில இங்க
நான் படிப்பது மனுசனைத்
தான்டா
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஆண் : ஏய்.. மொத்தமாக
வந்தால் அதை சுத்தமாக
முடிப்பேன் வெறும் சத்தம்
போட வேண்டாம் அட
ஒத்தைக்கு ஒத்த வாடா
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
விஷ்லிங் : …………………….
ஆண் : விவரம் இல்லையின்னு
சிரிக்காதப்பா சிறு விளையாட்டுப்
பிள்ளையின்னு நெனைக்காதப்பா
ஆண் : பிறப்பே அப்பா
அம்மா விளையாட்டப்பா
இந்த பெரியவங்க
செய்வதெல்லாம்
சரியா தப்பா
ஆண் : கண்ணாமூச்சி
ஆட்டம் நடக்குது
காணாமப் போச்சு நம்
தேசம் மேடை போட்டுத்
தேடும் தலைவரைப்
பாருங்க எல்லாம்
பொய்வேசம்
ஆண் : ஆறோடுற
ஓட்டத்தைப் பார்
குழு : ஓட்டத்தைப்
பார் ஓட்டத்தைப் பார்
ஆண் : அது தானே
சுதந்திரன்டா
குழு : சுதந்திரன்டா
சுதந்திரன்டா
ஆண் : வந்த சுதந்திரந்தான்
போனது எங்கே சட்டமும்
பட்டமும் விக்குது இங்கே
விக்கிற வாங்கற வேலை
எனக்கேன்டா
ஆண் : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஹேய்
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஆண் : ஏய்.. மொத்தமாக
வந்தால் அதை சுத்தமாக
முடிப்பேன் வெறும் சத்தம்
போட வேண்டாம் அட
ஒத்தைக்கு ஒத்த வாடா
குழு : வேலை இல்லாதவன்
தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன்
ஹோய்
வா வா வா வா கண்ணா வா
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வா வா வா
வா கண்ணா வா
பெண் : வா வா வா
வா கண்ணா வா தா
தா தா தா கவிதை தா
பெண் : உனக்கொரு சிறு
கதை நான் இனிமையில்
தொட தொட தொடர்கதை
தான் தனிமையில்
பெண் : உனக்கொரு சிறுகதை
நான் தொடத் தொட
தொடர்கதை தான்
பெண் : உருகி உருகி இதை
படித்திட வா வா வா வா
கண்ணா வா வா வா வா
ஆண் : வானில் காணும்
வானவில்லின் வண்ணம்
ஏழு வண்ணமோ தோகை
உந்தன் தேகம் சூட மேகமாலை
பின்னுமோ
பெண் : காணும் இந்த
பூக்கள் மேலே காயம்
என்ன காயமோ
காற்சலங்கையோடு
வண்டு பாடிச் சென்ற
மாயமோ
ஆண் : நூறு நூறு தீபமாய்
வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய்
ஆகும் எங்கள் யாத்திரை
பெண் : நாளு கண்கள்
பாதை போட நாகரீகம்
தொடர்ந்தது
பெண் : வா வா வா வா
கண்ணா வா தா தா தா
தா கவிதை தா
ஆண் : எனக்கொரு சிறுகதை
நீ இனிமையில் தொடத் தொட
தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
ஆண் : உருகி உருகி உனைப்
படித்திட வா வா வா வா
அன்பே வா வா வா வா
பெண் : ஆசையோடு பேச
வேண்டும் ஆயுள் இங்கு
கொஞ்சமே ஆவலாக வந்த
பின்னும் தஞ்சம் இந்த
நெஞ்சமே
ஆண் : ஆசை கொண்ட
தேகம் ரெண்டு நீதிமன்றம்
போகுமே பேசத் தேவை
இல்லை என்றே அங்கு
தீர்ப்பு ஆகுமே
பெண் : ராக வீணை போலவே
நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே
தேவ கீதம் பாடவோ
ஆண் : நானும் நீயும்
காதல் கைதி எண்ண
எண்ண இனிக்குது
ஆண் : வா வா வா வா
அன்பே வா தா தா தா
அமுதம் தா
குழு : ஆஹா
ஆண் : காளிதாசன் காண
வேண்டும் காவியங்கள்
சொல்லுவான் கம்ப நாடன்
உன்னை கண்டு சீதை என்று
துள்ளுவான்
பெண் : ஷாஜகானை பார்த்த
தில்லை நானும் உன்னை
பார்க்கிறேன் தாகம் கொண்ட
தேகம் ஒன்று பாடும் பாடல்
கேட்கிறேன்
ஆண் : தாஜ்மஹாலின் காதிலே
ராம காதை கூறலாம் மாறும்
இந்த பூமியில் மதங்கள் ஒன்று
சேரலாம்
பெண் : பாதி நீயும் பாதி
நானும் ஜோதியாக
இணைந்திட
பெண் : வா வா வா வா
கண்ணா வா தா தா தா
தா கவிதை தா
ஆண் : எனக்கொரு
சிறுகதை நீ
பெண் : இனிமையில்
ஆண் : தொடத் தொட
தொடர்கதை நீ
பெண் : தனிமையில்
ஆண் : எனக்கொரு
சிறுகதை நீ
பெண் : ஆஆ …
ஆண் : தொடத் தொட
தொடர்கதை நீ
பெண் : ஆஆ …
ஆண் : உருகி உருகி
உனைப் படித்திட வா
வா வா வா அன்பே வா
வா வா வா ….
எனக்கு தா உன் உயிரை
பாடகி : பி.எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான் } (2)
பெண் : பாவை உன்னை
நாடினேன் பாடல் ஒன்று
பாடினேன் ஆடும் இந்த
நேரமே அழகிய கடல்
இது மூழ்கிட அழைக்குது
பெண் : எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான்
பெண் : இரவுகள் தூங்கும்
ஒரு மழை நாளில்
தனிமையில் நானே
வருவேனே உன்னை
தேடியே
பெண் : நதிக்கரை ஓரம்
விடுகதை போடும் ஒரு
சிறு ஓடம் அதில் ஆடும்
சுகம் கோடியே
பெண் : மலர்கனி
வீசுவேன் மாறி வந்து
பேசுவேன் அணைத்திடும்
போதிலே ஆவி எந்தன்
கையிலே
பெண் : ராகம் யாரோ
தாளம் யாரோ பாடல்
பாடி துடிப்பவள் நடிப்பவள்
பெண் : எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான்
பெண் : பாவை உன்னை
நாடினேன் பாடல் ஒன்று
பாடினேன் ஆடும் இந்த
நேரமே அழகிய கடல்
இது மூழ்கிட அழைக்குது
பெண் : எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான்
குழு : ……………………
பெண் : முகவரி தேடும்
கடிதமும் நானே கடிதமும்
நானே உன்னை தானே
தினம் தேடினேன்
பெண் : இரு விழி
வாசல் ரகசியம் நானே
ரகசியம் நானே
விதியோடு விளையாடினேன்
பெண் : தினம் தினம்
நாடகம் போடுகின்ற
பூமியில் நடந்திடும்
நாட்டியம் யாரும்
இல்லை சாட்சியும்
பெண் : வாதி ஏது நீதி
ஏது வாசல் தோறும்
வழக்குகள் இருக்குது
பெண் : எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான்
பெண் : பாவை உன்னை
நாடினேன் பாடல் ஒன்று
பாடினேன் ஆடும் இந்த
நேரமே அழகிய கடல்
இது மூழ்கிட அழைக்குது
பெண் : எனக்கு தா
உன் உயிரை எனக்கு
தா இனி எனக்கு தான்
உன் உடலும் எனக்கு
தான்
|