Pandian
![](../mp3/images/Pandian.jpg)
பாண்டியனின் ராஜ்ஜியத்தில்
Movie |
Paandiyan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
Chithra |
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
***
ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க
பூ மணக்க தேன் கொடுக்க
பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க
நாள் முழுதும் நான் மயங்க
ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க
ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண்குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
***
பெண் : மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே
ஆண் : என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி
பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க
பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பாண்டியனா கொக்கா
Movie |
Paandiyan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
Mano |
ஆண் : ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஹோய்
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஆஹா
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
***
ஆண் : நோட்டுக்களை நீட்டினா
நோட்டங்களை காட்டினா
ரூட்டு நான் மாறாதவன்
மாலைகளை சூட்டினா
ஆசைகளை மூட்டினா
ராங்கா நான் போகாதவன்
பெண்குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு
ஆண் : மிஸ்டர் ரைட்டு
பெண்குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு
ஆண் : ரொம்ப கரெக்டு
என் பேரு மிஸ்டர் ரைட்டு
பெண்குழு : மிஸ்டர் ரைட்டு
ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு
பெண்குழு : ரொம்ப கரெக்டு
ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா
முடிப்பேன் அதைக் கச்சிதமா
புடிச்சா நான் உடும்பாட்டம்
புடிப்பேன்டா
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஆஹா
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஹேய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான் ஹோய்
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஆங்
பெண்குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர ஓஓ
***
ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு
காதுலத்தான் பூ சுத்த
பார்த்தா நான் பொல்லாதவன்
நான் படைச்ச மூளைய
என்னுடைய வேலைய
வெளிய நான் சொல்லாதவன்
பெண்குழு : போடாதே தப்புக் கணக்கு
ஆண் : தப்புக் கணக்கு
பெண்குழு : ஏராளம் நம்ம சரக்கு
ஆண் : நம்ம சரக்கு
போடாதே தப்புக் கணக்கு
பெண்குழு : தப்புக் கணக்கு
ஆண் : ஏராளம் நம்ம சரக்கு
பெண்குழு : நம்ம சரக்கு
ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்
வலை வீசிப் பார்த்தாலும் விழ மாட்டேன்
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஓய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : ஆங்
பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : எனக்கு
பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : காக்கா காக்கா} (ஓவர்லாப்)
அன்பே நீ என்ன
Movie |
Paandiyan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
Mano, Chithra |
பெண் : அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
***
பெண் : வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில்
ஆடை நழுவுதையா
மேனி உருகுதையா மனதினில்
மோகம் வளருதையா
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
***
பெண் : அம்மாடி போட்டதென்ன சொக்குப் போடி
என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி
பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப் பிடி
சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி
தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு
பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது
காதல் நினைவுகளில் குளிர் தரும்
காற்றும் சுடுகிறது
ஆண் : அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ
காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ
மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ
|