Thambikku Entha Ooru
ஆசை கிளியே அரைகிலோ புளியே
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே..ஏ….ஏ
ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
அடியே என் அருமை தவக்களையே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
ஆண் : தாயாகும் பெண்கள்
கொடும் பேயாகும் போது
வேப்பிலை அடிப்பேன் அம்மா..
தாயாகும் பெண்கள்
கொடும் பேயாகும் போது
வேப்பிலை அடிப்பேன் அம்மா..
ஆண் : அடிப்பவன் இல்லாமல்
அடங்காது குதிரை…ஆ..ஆ..ஆ..
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை
திமிரே அழகே அத்தையின் மகளே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளி..ஏய்..
ஆண் : கனிவான நெஞ்சம்
ஒரு கல் ஆகும் போது
அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ..
கனிவான நெஞ்சம்
ஒரு கல் ஆகும் போது
அன்புக்கு அர்த்தம் இல்லை
ஆண் : பாசத்தை நீ காட்டு
பண்போடு பழகு…. ஆ..ஆ..ஆ..ஆ..
அன்பினில் விளையாடு
சுகம் கோடி வளரும்
பகை தீர உறவாடு என் மாமன் மகளே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா
அடியே என் அருமை தவக்களையே
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே
அழுகின தக்காளியே
என் வாழ்விலே வரும் அன்பே வா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா
நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண- இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே
ஆண் : {இரும்பாக நினைத்தேனே
கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள்
உன் நெஞ்சிலே} (2)
ஆண் : காணாத சொர்க்கம்
உந்தன் காதல் அல்லவா
லாலாலா லா லா லல லல லால லா
தீராத மோகம்
தந்த தேவி இங்கு வா
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா
நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண- இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே
ஆண் : சொன்னாலும் தீராது
சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
சொன்னாலும் தீராது
சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
ஆண் : பூவாடும் தேகம் எங்கும்
வாசம் கொண்டு வா
நான் பாடும் பாடல் எங்கும்
நேசம் உண்டு வா
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
லாலா லா
லல லல லா லா லா
லல லல லா லா லா இன்பம்
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா
வரும் அன்பே வா
வரும் அன்பே வா
வரும் அன்பே வா
ஹேய் லல லல்லா லா….
காதலின் தீபம் ஒன்று
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { ஆஹா
ஆஹா ஆஹா } (2)
ஹே ஹோ ஹ்ம்ம்
ஹ்ம்ம்
ஆண் : { காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில் } (2)
ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க
ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்
ஆண் : { நேற்று போல்
இன்று இல்லை இன்று
போல் நாளை இல்லை } (2)
ஹான்
ஆண் : அன்பிலே வாழும்
நெஞ்சில் ஆஆஆ…….
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே ஒன்றுதான்
எண்ணம் என்றால் உறவுதான்
ராகமே எண்ணம் யாவும்
சொல்ல வா
ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்
ஆண் : { என்னை நான்
தேடித் தேடி உன்னிடம்
கண்டு கொண்டேன் } (2)
பொன்னிலே பூவை
அள்ளும் ஆஆஆ………
பொன்னிலே பூவை
அள்ளும் புன்னகை
மின்னுதே கண்ணிலே
காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம்
சொல்ல வா
ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்
ஆண் : ஊடலில் வந்த
சொந்தம் கூடலில் கண்ட
இன்பம் மயக்கம் என்ன
காதல் வாழ்க
ஆண் : காதலின் தீபம்
ஒன்று ஏற்றினாலே என்
நெஞ்சில்
கல்யாண மேள சத்தம்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………..
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
பெண் : புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி
பெண் : வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து
தள்ளாட…ஹோய்
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
பெண் : மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
பெண் : மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
பெண் : துள்ளி வரும் கன்று குட்டி
முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம்
அம்மாடி ….ஹோய்……….
பெண் : கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
குழு : {அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு} (2)
|