Naan Sigappu Manithan
பெண் மானே சங்கீதம் பாடிவா
பெண் மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம் (பெண் மானே)
தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
காணுவேன்.. தேவியை கண்களின் விழாவில்
உன் மானே சங்கீதம் பாட வா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாட வா
யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன்
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வரதோ (பெண் மானே)
எல்லாருமே திருடங்கதான்
எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்......
பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு........
மன்னன் இல்ல.......மன்னன் இல்ல......(எல்லாருமே)
பந்தலும் மேடையும் போட்டுகிறான்
ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான்
ஓட்டுகள் போட்டிட கேட்கிறான்
அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்
எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான்
எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான்
எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும்
அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும்
ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல
புத்தனும் இல்ல ஹே...ஹே.......ஹே........(எல்லாருமே)
எத்தனை எத்தனை சாமியடா இதில்
என் மதம் உன் மதம் சண்டையடா
எத்தனை எத்தனை ஜாதியடா இதில்
முட்டுது மோதுது மண்டையடா
கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு
எல்லோரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு
தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும்
அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
புண்ணியமில்ல ஹே......ஹே......ஹே......(எல்லாருமே)
காந்தி தேசமே காவலில்லையா
காந்தி தேசமே காவலில்லையா
நீதிமன்றமே நியாயம் இல்லையா
பதவியின் சிறைகளில்
பாரதமாதா பரிதவிக்கிறாள்
சுதந்திர தேவி சுயநலப் புலிகளின்
துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள்
தாயை மீட்க்கவா.....தர்மம் காக்கவா.......(காந்தி)
காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம்
ஒரு சிலர் உரிமையில்லை
வளமுண்டு குறைவில்லை ஏழைக்கு நிறைவில்லை
வறுமைக்கு வறுமை இல்லை
சாலையில் தனிமையில் அழகிய இளமயில்
நடக்கவும் முடியவில்லை
இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது
வேலையும் கிடைக்கவில்லை
ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று
ரத்தம் கேட்கின்றதே
தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள்
தஞ்சம் கேட்கின்றதே.......(காந்தி)
இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள்
எல்லையில் நிறைந்திருப்பார்..
நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர்
ஊருக்குள் ஒளிந்திருப்பார்..
அஹிம்சையைப் போதித்த தேசத்தில்
ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா ..
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல்
வான் வரை ஏறுதடா..
விடுதலை வாங்க அன்று நாம் தந்த
விலைகள் தான் கொஞ்சமா ..
வேலியே இன்று பயிரை மேய்கின்ற
நிலைமைதான் மாறுமா.........! (காந்தி)
குங்குமத்து மேனி
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ
இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா
இல்லாதத வா.....நீ.......தா......ஹோய்.........
குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........
பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது
பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது
இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு
இளமை என்ன நீ தேடு............
இறுதி வரை ஏக்கம் கூடாது
இளைய மகள் என்னோடு
வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்
ஆனந்த ராகம்........நீ........பாடு,,,,,,,.(குங்குமத்து)
மடியில் விழ நாளேது மலருடலும் தாங்காது
தலைவன் இன்றி தாளாது தனிமையிலும் தூங்காது
கனவுகளும் நாளும் தீராது கவலை வரக்கூடாது
கலந்த வரை காதல் மாறாது கடைசிவரை வாடாது
பூவானதே தேகம் போராடுதே தாகம்
ஆனந்த ராகம்........நீ........பாடு,,,,,,,.(குங்குமத்து)
வெண் மேகம் விண்ணில் நின்று
வெண் மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து
மஞ்சள் நீராட்டும்..........
விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால் தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே…...............
ஏழேழு ஜென்மம் இந்த
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
என்னாளும் எந்தன் பக்கம்
தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால்
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி
ரெண்டும் ஒன்றாகும்
உன் கண்கள் இல்லாமல்
என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல்
என் கால்கள் போகுமோ
என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
உந்தன் பார்வையால்…......(கண்ணே)
மன்னாதி மன்னன் எல்லாம்
உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன்
கண்ணோ மண் பார்க்க
கண்ணோரம் வெட்கம் வந்து
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக்கோலம்
மண்ணில் நீ போட.......
செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே… (வெண் மேகம்)
|