Rajini Story
Rajini Story Titles
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 18A
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Part 53
Part 54
Part 55
Part 56
Part 57
Part 58

  Join UsSubscription

 Subscribe in a reader

Rajini Story - Part 2

சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை


சிறு வயதில் ரஜினியைப் பள்ளிக்கு அனுப்பும் போது சில சமயம் நானும் உடன் செல்வேன். அப்போது அவனது நடையழகைப் பார்த்து ரசிப்பேன். அப்போதே நடையில் வேகமுண்டு. வயதில் பெரியவர்களையெல்லாம் மிஞ்சியிருக்கும் அவனது நடையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.

"மிகவும் வறுமையான சூழ்நிலையில்தான் ரஜினி பிறந்தார். ஆனால் "அவர் பிறந்த நேரம் ராசியான நேரம் என்று சொல்ல வேண்டும்" என்ற சத்யநாராயணராவ் மேலும் தொடர்ந்தார்.

ரஜினி பிறந்த போது வீட்டில் பசு கன்று போட்டது. அக்கா அஸ்வத் பாலுபாய் வயசுக்கு வந்தார். ஏழாம் வகுப்பு தேர்வில் பாஸ் செய்தார். இத்தனைக்கும் எனக்கு அப்போது பத்து வயதிருக்கும்.

ரஜினி பிறந்த ஒரிரு நாட்களிலேயே பிரசவித்த உடம்பைப் பொருட்படுத்தாமல் அம்மா வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார். வீட்டில் உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாததால் அம்மா தன் சிரமங்களைப் பார்க்கவில்லை.

அப்போதெல்லாம் அம்மாவுக்கு வருடத்தில் இரண்டு புடவைகள்தான். அதைத்தான் அவர் மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வார். அவருக்கு மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எந்த நகைகளும் இல்லை. அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவது இல்லை. "குழந்தைகள்தான் எனக்கு ஆஸ்தி. அதுவே போதும்" என்று அடிக்கடி சொல்வார்.

அம்மாவுடைய கம்மலைத்தான் என் மனைவி கலாவதிபாய் இப்போதும் அணிந்திருக்கிறார். அந்த கம்மலுக்கு நூறு வயசு என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

எனக்கு வேலையில் சேர 50 ரூபாய் தேவைப்பட்டது. அதற்காக அம்மா கம்மலைக் கழற்றிக் கொடுத்தார். நான் வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை அம்மாவின் கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் அவர் காலமாகிவிட்டார். அப்போது ரஜினிக்கு வயது 8.

ரஜினி விரும்பி சாப்பிடும் உணவு எது?

கம்மலை அப்புறம் அடகுக் கடையிலிருந்து மீட்டாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாக எத்தனை முறை அது அடகுக் கடைக்குச் சென்றது என்பதற்கு கணக்கே இல்லை. அந்த கம்மலுக்காக நான் கொடுத்த வட்டிப் பணத்திற்கு பத்து செட் கம்மல் வாங்கியிருக்கலாம்.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இரண்டு வேளை உணவு தான். இரவில் ராகி ரொட்டியை அம்மா எங்களுக்கு சுடச்சுடத் தருவார். நான், சிவாஜி (ரஜினி) எல்லோரும் சமையலறையில் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். ஒவ்வொன்றாக எங்களுக்கு வரிசையில் வரும்.

இப்போதும் எங்கள் வீட்டில் ராகி ரொட்டி உண்டு. ரஜினிக்கு ராகி ரொட்டி என்றால் மிகவும் இஷ்டம். பெங்களூர் வந்தால் தவறாமல் ராகி ரொட்டி சாப்பிடுவார். சென்னையில் அதைச் சாப்பிடுகிறாரா என்று தெரியாது" என்றார் சத்யநாராயணராவ்.

முரட்டுத் தனம்

ரஜினிகாந்த் இதுநாள் வரை பத்திரிகை பேட்டிகளிலாகட்டும், மேடைகளில் பேசுவதிலாகட்டும், தனது இளம் பிராயம் பற்றிச் சொல்கையில் தான் சிறு வயது முதலே முரட்டுத் தனமாக வளர்ந்து வந்த சூழ்நிலையை, நிகழ்ச்சிகளை நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். எதையும் மறைத்ததில்லை.

ரஜினியின் இரண்டு அண்ணன்மார்களும் பிறந்தபோது நல்ல கொழு கொழு குழந்தைகளாக இருந்திருக்கிறார்கள். இருவரும் ஓரளவு நல்ல நிறமும் கொண்டவர்கள். ஆனால் ரஜினி கருவில் உருவானபோதே அவரது தாயார் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டுதான் ரஜினியைப் பெற்றெடுத்திருக்கிறார். தனது மற்ற உடன் பிறப்புகளை விட மெலிந்த தேகத்துடன், கறுப்பாகப் பிறந்த குழந்தை ரஜினியைக் கண்டு இவன் உயிர் பிழைப்பானா? என்று பார்த்தவர்களெல்லாம் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்.

ரஜினி வளர வளர குடும்ப கஷ்டங்களும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. அதனால் கடைக்குட்டி என்று செல்லமாக எந்த ஒரு குடும்பத்திலும் குழந்தைகள் அனுபவிக்கும் வசதிகள் அவருக்கு அமையவில்லை. சாதாரணமாகவே கடைக்குட்டிகள் முரட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். ரஜினியும் அதற்கு மாறாக இல்லை. தனக்குக் கிடைக்காத பொருட்களை அடையாமல் விடுவதில்லை என்று வீம்போடு சாதித்துக் கொள்வார். அதனால் கிடைத்தது அடியும், உதையும் தான். தந்தையிடம் பட்ட அடிகளுக்கு கணக்கே இல்லை. இத்தனைக்கும் மத்தியில் ரஜினியிடம் அன்பும், அரவணைப்பும் காட்டிய ஓரே குடும்பத்து நபர் அண்ணன் சத்யநாராயணன்.

ரஜினி தந்தையிடம் அடிபடும் போதெல்லாம், அதற்காக தம்பிக்குப் பரிந்து கொண்டு சத்யநாராயணன் "சிவாஜி சின்னப் பையன்தானே அவனை ஏம்பா இப்படி அடிக்கிறீங்க" என்று தந்தையைக் கோபித்துக் கொள்வார்.

தாயார் இறந்த பின் ரஜினியின் நிலைமை மோசமானது
. அண்ணனைத் தவிர யாரும் தன்னிடம் அன்பு காட்டுவதில்லை என்ற சூழ்நிலையில் வீட்டில் மட்டுமின்றி வெளியிலும் அவரது முரட்டுத்தன நடிவடிக்கைகள் வளர்ந்தன. அதனால் ரஜினி தந்தையின் கோபத்திற்கு தினமும் ஆளாக நேர்ந்தது. ஒரு நாள் இரண்டாவது அண்ணன் நாகேஷ்ராவ் ரஜினியை அடித்துவிட, மாலையில் வீடு திரும்பிய சத்யநாராயணா அதை அறிந்து நாகேஷ்ராவை அடித்து நொறுக்கிவிட்டார்.

இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்டத்தில், குடும்ப கஷ்டத்திற்காகவும் படிப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஒரு வேலையில் சேர்ந்தார் சத்யநாராயணா. தம்பிக்கு தனி கவனிப்பு வேண்டும் என்பதற்காக தன் 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியிடம் அவர் பேசுவதில் பெரும் பகுதி தம்பியைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

ரஜினியைப் பள்ளியில் சேர்த்து நன்றாகப் படிக்க வைப்பதிலும் ஆர்வம் காட்டினார். "நம் குடும்பத்தில் யாரும் சரியாகப் படிக்க முடியவில்லை. நீயாவது நல்ல முறையில் படித்து நம் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும்" என்று ரஜினியை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.

இப்படி ரஜினியின் கண் கண்ட கடவுளாக (ரஜினியே ஒரு முறை அப்படிச் சொல்லியிருக்கிறார்) விளங்கிய சத்யநாராயணாவிடம் நாம் பேசுகையில், அவர் தனது தம்பியின் இளம் வயது முரட்டுத் தனமான செயல்கள், நடிவடிக்கைகள் பற்றி எதையும் சொல்வதற்கு மட்டுமின்றி அது பற்றி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத அபூர்வ அண்ணனாக இருக்கிறார். ரஜினியின் பிறவிப் பயன்களில் இதுவும் ஒன்று என்று சொன்னால் அது சரியாக இருக்கும்.

சத்யநாராயணா, தம்பியைப் பற்றி எப்படிச் சொல்கிறார்?

"சிறு வயதிலேயே ரஜினி வீட்டில் அனைவரிடமும் அன்புடனும் பாசத்துடனும் இருப்பார். எங்கள் தந்தைக்கு மாதந்தோறும் வரும் பென்ஷன் பணம் 30 ரூபாயில், 5 ரூபாயை ரஜினி தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்வது உண்டு. தந்தையும் கொடுக்க மறுப்பதில்லை.

சிறு வயதில் ரஜினியைப் பள்ளிக்கு அனுப்பும் போது சில சமயம் நானும் உடன் செல்வேன். அப்போது அவனது நடையழகைப் பார்த்து ரசிப்பேன். அப்போதே நடையில் வேகமுண்டு. வயதில் பெரியவர்களையெல்லாம் மிஞ்சியிருக்கும் அவனது நடையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது.

ஆசிரமம்

கங்காதீஸ்வர் சுவாமி கோவில் எதிரேயுள்ள கவிபுரம் பிரைமரி ஸ்கூலில் ரஜினியின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இந்த ஸ்கூலுக்கு அருகில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த லவன் பாரதி சுவாமிஜி என்பவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரது ஆசிரமத்திற்குச் செல்வதென்றால் ரஜினிக்கு மிகவும் விருப்பம். அவருக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவான்.

70 வயதுடைய சுவாமிஜி நம்பிக்கைக்குரிய எந்த வேலையையும் ரஜினியிடமே தருவார். அவனது நேர்மை, பக்தி சிரத்தையைக் கண்டு பூரித்துப் போய் நல்லா வருவே என்று ஆசிர்வதித்தார். அப்போதிருந்தே வயதில் பெரியவர்கள் என்றால் ரஜினி மிகவும் மரியாதை காட்டுவது உண்டு.

ரஜினி ஏழாம் வகுப்பு படிக்கையில் ராமகிருஷ்ணா மிஷனில் சேர்த்து விட்டோம். பள்ளி முடிந்ததும் ரஜினி நேராக மிஷன் சென்றுவிட வேண்டும். அங்கு ரஜினிக்குத் தியானம், உபநிஷதம், ஞானமெல்லாம் கற்றுத் தரப்பட்டது.

மிஷனுக்கு ரஜினி சரியாகச் செல்கிறானா என்று நாங்கள் கவனிப்பது உண்டு. திடீர் திடீரென்று அங்கு செல்வோம். 'அண்ணா வந்தாலும் வருவார்! என்ற எண்ணத்திலேயே ரஜினி தவறாமல் மிஷனுக்கு சென்று விடுவான். வீடு, பள்ளி, மிஷன் இதை விட்டால் ரஜினியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் ரஜினியின் இளைய பருவம் மிக நல்ல முறையில் அமைந்தது. அங்கு சுமார் ஒன்பது வருடங்கள் அனுபவம் அவனுக்கு.

மிஷனில் சுவாமி புருஷோத்தம நந்தாஜி மகராஜ், ரஜினியின் பணிகளைக் கவனித்தவர், மற்றொன்றையும் கவனித்தார். வசதியின்மையால் குறிப்பிட்ட ஒரு சில ஆடைகளையே ரஜினி மாற்றி மாற்றி அணிவது அவருக்கு என்னவோ போல் இருந்தது. எங்கள் வீட்டிலுள்ள சூழ்நிலையில் புதிதாக ஆடைகள் வாங்க முடிவதில்லை. பண்டிகை சமயங்களில் கூட புத்தாடைகளுக்குப் பிரச்னைதான்.

அதனால் ஒரு சமயம் நந்தாஜி என்னை அழைத்து பதினைந்து ரூபாய் கொடுத்து ரஜனிக்குப் புதிய ஆடைகள் வாங்கித் தரச் சொன்னார். அதில் இருந்து ரஜினிக்கு நந்தாஜி மீது பெரும் மதிப்பு. நடிகரான பின்பு பெங்களூர் வந்தால் அவரை ரஜினி பார்க்காமல் செல்வதில்லை. ராகவேந்திரா திருமண மண்டபத் திறப்பு விழாவிற்குக் கூட ரஜினி அவரை அழைத்தார். ஆனால் அந்த தேதியில் நந்தாஜியால் வரமுடியவில்லை.

முதல் நடிப்பு

ரஜினியின் முதல் நடிப்பு அனுபவம் 11 வயதிலேயே நிகழ்ந்தது. மிஷனில் நடந்த நாடகம் ஒன்றில் ரஜினி விவசாயியாக நடித்தான்.

அவனது நடிப்பைக் கண்ட கர்நாடக கவிஞரும், ஞானபீட விருது பெற்ற தத்தாத்ரே ராமச்சந்திரே பேந்த்ரே மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அப்படி சிறு வயதிலேயே ரஜினியின் எந்த ஒரு செயலும் பிறரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

சிகரெட்!

பிரைமரி ஸ்கூலைத் தொடர்ந்து இதே (ஹனுமந்தா நகர்) பகுதியில் உள்ள 'ஆச்சார்யா பாடசாலா'-வில் ரஜினியின் படிப்பு தொடர்ந்தது. இங்கு கல்லூரி வரை உண்டு. அதில் பி.யு.சி. இரண்டாமாண்டுடன் ரஜினி படிப்பை நிறுத்திவிட்டார். கல்லூரிப் பருவத்திலிருந்துதான் ரஜினிக்கு சிகரெட் பழக்கம் ஏற்பட்டது. என் கண் எதிரில் அதெல்லாம் நடப்பதில்லை. இன்றைக்கும் அப்படித்தான்.

கண்டக்டர் வேலை

கல்லூரிப் பருவத்தில் ரஜினிக்குப் படிப்பில் நாட்டம் குறைந்து போனது. வீட்டு சூழ்நிலையில் தானும் வேலைக்குப் போனால் நல்லது என்று அவருக்குத் தோன்றியது. அதனால் நாகேஷ்ராவின் மாமனார் வெங்கோபராவைப் பார்த்தார். அவர் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர். அவரது சிபாரிசில் கண்டக்டர் லைசென்ஸ் பெற்று பெங்களூர் நகர பஸ்ஸில் ரஜினி கண்டக்டராக வேலைக்குச் சேர்ந்தார்.

கண்டக்ராக இருந்தபோது ரஜினியின் சம்பளம் ரூ.550-லிருந்து ரூ.750 வரை வந்தது.

சம்பளப் பணத்தை ரஜினி என்ன செய்வார்?

சம்பளப் பணத்தில் தனக்கென்று ஒரு பைசா கூட எடுத்துக் கொள்ளாமல் மொத்தத்தையும் என்னிடமே தந்து விடுவார்.

நான் அவரது சம்பளப் பணத்திலிருந்து செலவுக்காகப் பணம் தந்தாலும் பெற்றுக் கொள்வதில்லை. தனக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை மேல் வருமானத்திலேயே தனது செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.

கண்டக்டரான பின்பே ரஜினிக்கு ஸ்டைல், தலைவாரிக் கொள்ளாத ஹேர் ஸ்டைல் எல்லாம் வந்தது. ரஜினி பீர் குடித்ததாக யாரோ என்னிடம் சொன்னார்கள். நான் கேட்ட போது, "அப்படியெல்லாம் இல்லை" என்று சிரித்துக் கொண்டே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்பதற்கு முன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு விடுவார். அப்புறம் வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்கிறாரே, அதுவே போதுமென்று விட்டு விடுவேன்.

முதல் ஸ்டைல்

கண்டக்டராக இருந்தபோது போக்குவரத்துக் கழக ஆண்டு விழாவில் நாடகமொன்று நடைபெற்றது. அதில் ரஜினி நடிப்பதறிந்து குடும்பத்தோடு பார்க்கப் போனோம்.

நாடகத்தில் ரஜினியின் நடிப்பும், ஸ்டைலும் அனைவரையும் கவர, நாங்களெல்லாம் வியந்து போனோம்.

இடைவேளையில் எங்கள் சகோதரியின் கணவர் ரஜினியைப் பாராட்டி மாலையொன்று அணிவிக்க முதலில் அதைக் கழற்றாமலே நடித்த ரஜினி, பின் நடித்துக் கொண்டே அதை ஸ்டைலாகத் தூக்கி எறிந்தார். ரஜினி அதை யதார்த்தமாகச் செய்தாரென்றாலும் சகோதரியின் கணவர் சங்கடப்பட்டுப் போனார். அவரைச் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று என்றார்" சத்யநாராயணா.

துரியோதனன

சத்யநாராயணா சொன்ன ரஜினி நடித்த நாடகத்தின் பெயர் 'குருஷேத்ரா'. மகாபாரதக் கதையைப் பற்றியது. அதில் ரஜினியை நடிக்கச் சொன்ன போது அவரும் சரியென்று ஒப்புக் கொண்டார். ஆனால் தான் விரும்பும் வேடத்தைக் கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று எடுத்த எடுப்பிலேயே நிபந்தனை விதித்தார். என்ன வேடத்திற்கு தெரியுமா? துரியோதனன்!

துரியோதனன் வேடத்தில் நடித்தால் வித்தியாசமாக ஸ்டைல் காட்டி நடிக்க முடியும் என்று ரஜினி நினைத்தார். அது வில்லத்தனமான வேடமாயிற்றே! என்.டி.ராமராவ் துரியோதனனாக நடித்த படம் அவரது நினைவில் வந்து போயிற்று.

துரியோதனன் போன்ற பிரதான வேடத்தில் நடிப்பவர்கள் பாடி நடிக்க வேண்டும் என்று விதி வைத்திருந்தார்கள். ஆனால் ரஜினி பாட முடியாதென்று மறுத்துவிட்டார். அப்படியானால் துரியோதனன் வேடம் உங்களுக்கு கிடையாது என்று கூறிவிட்டார்கள். ஒன்றை விரும்பினால் அதை அடையாமல் விடுவதில்லை என்பது ரஜினியின் உறுதியான கொள்கை. துரியோதனன் தவிர வேறு எந்த வேடத்திலும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்த ரஜினி கடுமையாக வாக்கு வாதம் செய்து வென்றார். இப்படி நினைத்ததை சாதித்துக் கொள்ளும் செயல்திறன் அவரிடம் சிறு வயது முதலே இருந்தது.

இத்தகைய குணம் ரஜினிக்குள் உருவாகக் காரணம், பள்ளி வாழ்வில் அவருக்குக் கிடைத்த போதனைதான். முதல் போதனையே 'அகம் பிரம்மாஸ்மி' என்ற சுலோகம்தான். அதன் அர்த்தம் 'நாம் பிரம்மனின் அணுக்கள்.' அந்த வகையில் மனிதராய்ப் பிறந்த அனைவருமே படைப்பாளிகள்தான். அதில் அசைக்க முடியாத நம்பிக்கையும், முயற்சியும் இருக்குமானால் நம்மால் முடியாதது ஒன்றுமில்லை என்பது ரஜினியின் திடமான நம்பிக்கை.

ரஜினியின் சினிமா ஆசை - அடுத்த இதழில்...

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information