Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

எம்.ஜி.ஆரிடம் மோகம் (பாகம் 4)

தியேட்டரில் விளக்குகள் அணைந்து திரையில் விளம்பரப் படங்கள் தொடங்கின. டாக்குமெண்டரி, சோப்பு விளம்பரம், தலைவலி மாத்திரை விளம்பரம், டூத் பேஸ்ட் விளம்பரம் என்று வரிசையாக வர ரஜினிக்குக் கோபமும், எரிச்சலும் தாங்கவில்லை. இன்னும் படம் போடாமல் இருக்கிறார்களே என்று.

M.G.R.வீட்டில் ஒரு சமயம் எம்.ஜி.ஆர் நடித்த படத்திற்குச் சென்றார்கள். ரஜினியும் ஆவலோடு சென்றார். திரையில் எம்.ஜி.ஆர் வரும் வரை அவர் மனம் நிலை கொள்ளவில்லை. இத்தனைக்கும் இதுதான் எம்.ஜி.ஆர் முகம் என்று அவருக்கு அடையாளம் தெரியாது. ஆனால் படம் திரையிடப்பட்டதும் தியேட்டரில் இருந்த ரசிகர்கள் கை தட்ட, விசில் ஒலி எழுப்ப, யாருக்கு இப்படிச் செய்கிறார்கள் என்று ரஜினி உன்னிப்பாகக் கவனித்து எம்.ஜி.ஆரை இனம் கண்டு கொண்டார்.

எம்.ஜி.ஆருக்குக் கைதட்டல்

அப்புறமென்ன? எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் அவரும் கை தட்ட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளிலெல்லாம் ரஜினி உற்சாகம் தாங்காமல் துள்ள ஆரம்பித்து விட்டார். அடி, குத்து என்று கத்த, அவரை அடக்குவது குடும்பத்தாருக்குச் சிரமமாகிப் போனது.

ரஜினியின் அந்தச் செயல்கள் உடன் இருந்த அவரது தந்தை, சித்தி, அக்கா இவர்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருந்தது. திரையில் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதை விட்டு ரஜினியைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ரஜினிக்கு அப்போது 10 வயது இருக்கலாம்.

முதலாவது மாணவன்

அந்த வயதில் ரஜினியிடம் சிறுவர்களுக்கே உள்ள விளையாட்டுத்தனங்கள், குறும்புத்தனங்கள் மேலோங்கி இருந்தாலும் படிப்பில் கோட்டை விடுவதில்லை. தேர்வு எழுதினால் ரஜினிதான் வகுப்பில் முதலாவது. இந்தப் புத்திசாலித்தனம் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கும் பிடித்தது. குறிப்பாக எதிர் வீட்டு தமிழ் பேசும் மாமிக்கு ரஜினியின் மீது தனி அன்பு. ரஜினியையும் தனது குழந்தைகளில் ஒருவராக நினைத்தார்.

கட்டபொம்மன்

Shivajiஒரு நாள் காலையில் (விடுமுறை நாள்) மாமி வீட்டுக்குப் போனார் ரஜினி. அங்கு ஒவ்வொருவரும் 'கட்டபொம்மன்', 'கட்டபொம்மன்' என்று பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில்தான் அவருக்கு விளங்கியது, அது நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படம் பெங்களூரில் சில நாட்களில் வெளியாவதாகவும், அதற்குப் போக வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள். "நானும் உங்களோடு வருகிறேன்" என்று ரஜினி அடம் பிடிக்க, மாமி 'நீ இல்லாமலா' என்று அன்போடு தட்டிக் கொடுத்தார்.

அடுத்த வெள்ளிக் கிழமையைப் பற்றி ரஜினி நினைக்காத நேரமில்லை. படம் வெளியாகும் கீதா தியேட்டரும் அதன் திரையும், அந்தத் திரையில் தோன்றி முழக்கமிடப் போகிற சிவாஜியும் அவரது மனக் கண்ணில் இரவு பகலாகத் தோன்றி வலம் வந்தார்கள். வேறெதிலும் அவருக்குக் கவனமில்லை. வீட்டிலுள்ளவர்களும் ரஜினியின் போக்கு கண்டு விழித்தார்கள், "இவனுக்கு என்ன ஆயிற்று? உளறிக் கொண்டே இருக்கிறானே!" என்று.

வீரபாண்டிய கட்டபொம்மன் பார்க்க மாமியின் தயவில் முதன் முதலாக கீதா தியேட்டரில் பால்கனி பிரவேசம். அதுவே அவருக்கு ஒரு தனி பரவசத்தைத் தந்தது.

மாமியின் இந்தப் பக்கம் ரஜினி, அந்தப் பக்கம் மாமியின் செல்ல வாண்டுகள் சுரேஷா, ரமேஷா, சத்தீஷா, பங்கஜா, கடைக்குட்டி நீரஜா (மூன்று வயது) மாமியின் மடியில் அமர்ந்திருந்தாள்.

அவளைப் பற்றிதான் அனைவருக்கும் பயம். படம் நடக்கும்போது ஏதாவது அடம் பிடித்து அமர்க்களம் பண்ணி விடுவாளோ என்று. ஆனால் அந்தக் கடைக்குட்டி அன்று நல்ல மூடில் இருந்தாள்.

தியேட்டரில் விளக்குகள் அணைந்து திரையில் விளம்பரப் படங்கள் தொடங்கின. டாக்குமெண்டரி, சோப்பு விளம்பரம் தலைவலி மாத்திரை விளம்பரம், டூத் பேஸ்ட் விளம்பரம் என்று வரிசையாக வர ரஜினிக்குக் கோபமும், எரிச்சலும் தாங்கவில்லை. இன்னும் படம் போடாமல் இருக்கிறார்களே என்று. கடைசியாக 'நிரோத்' விளம்பரம். சின்னஞ்சிறுசுகள் இது போல் விளம்பரங்களைப் பார்த்தால் என்ன ஆகும்? சுரேஷ் அம்மாவிடமே கேட்டான், 'நிரோத்துன்னா என்னம்மா?" என்று. மாமி சிரித்து விட்டார். அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் ரஜினிக்கு அப்போது விளங்கவில்லை. நல்ல வேலையாக சுரேஷின் தொணதொணப்பு தொடங்கு முன், படம் தொடங்கிவிட்டது.

டைட்டிலில் தொடங்கும் போதே காது செவிடாகும் அளவுக்கு கரகோஷம், கைதட்டல், விசில்!

சிவாஜி வந்தபோது மாமியும் உற்சாகம் தாங்காது 'அட சிவாஜி என்ன ஜோராக இருக்கார்!' என்று சொல்ல ரஜினிக்கு சிவாஜி அறிமுகமானார். சிவாஜியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தார். ரசித்தார். அந்த நடிப்புக்குள்ளேயே ஐக்கியமாகி விட்டார்.

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புலக வாழ்வுக்கு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' தெருக்கூத்து நாடகம் எப்படி அஸ்திவாரமாக அமைந்ததோ, அதுவே ரஜினியின் நடிப்பு ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

ரஜினி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தபோது அவர் எல்லோராலும் நிராகரிக்கப்பட்டார். காரணம் என்ன?

ரஜினி சினிமாவில் நடிக்க விரும்பி, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்ற பின், சினிமாவில் வாய்ப்புகளைத் தேடியபோது அவர் நிராகரிக்கப்பட்ட பல காரணங்களில் ஒன்று அவரது நிறம்தான். அப்போதெல்லாம் சிவந்த நிறமுடையவர்களே நடிப்பதற்கென்றே பிறந்ததாக ஒரு தகுதியைத் திரையுலகில் நிர்ணயித்திருந்தார்கள். அதற்கு ரஜினி என்ன செய்ய முடியும்? அதையெல்லாம் மீறி ரஜினியிடம் புலப்பட்ட திறமை, அவரது தோற்றம் பாலச்சந்ரைக் கவர்ந்தது.

இத்தனைக்கும் ரஜினியின் உடன் பிறப்புகளெல்லாம் அம்மா ஜாடையில் மாநிறமாக இருக்க ரஜினி மட்டும் தன் தந்தையைப் போல கறுப்பாக இருந்தார்.

"மூன்று முகம் படத்தில் ரஜினி ரவுடி வேடமொன்றில் விக் வைத்து நடித்திருப்பார். அந்த விக் அப்பாவின் ஹேர் ஸ்டைலைப் பார்த்து செய்ததாகும்" என்றார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா.

மூன்று முகம்

Rajinikanth"மூன்று முகம் படத்திற்கும் எங்கள் தந்தைக்கும் இன்னொரு வகையில் ஓர் ஒற்றுமை உண்டு. அந்தப் படம் வெளியான அக்டோபர் 1-ம் தேதி மாலை 4.30-க்கு எங்கள் தந்தை இறந்து போனார். அதை சென்னையில் ரஜினியின் வீட்டுக்குத் தெரிவித்தபோது அவர் 'மூன்று முகம்' பிரிவியூ பார்க்கப் போயிருந்தார். மறுநாள் காலை விமானத்தில் மனைவியுடன் வந்து சேர்ந்தார். மூன்று நாட்கள் தந்தையின் ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டு சென்னை சென்ற ரஜினி, மீண்டும் பத்தாம் நாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

போயஸ் கார்டனில் ரஜினியின் புது வீடு கிரகப்பிரவேசம் ஆனபோது, நாங்கள் குடும்பத்தோடு சென்று வந்தோம். நாங்கள் திரும்பி விட்டாலும், தந்தை மூன்று மாதம் ரஜினியோடு இருந்தார். அப்போது ரஜினி மிகவும் பிசியாக இருந்தாலும், இங்கு பெங்களூரைப் போல் பேச்சுத் துணைக்கு வேறு யாரும் இல்லாததாலும், அங்கிருக்க முடியாமல் திரும்பி விட்டார். அவருக்கு உடல் நலமில்லாத சமயங்களில் ரஜினியே மருத்துவ செலவுகளைக் கவனித்து கொண்டார்" என்றார் சத்யநாராயணா.

நடிகர் ஜெமினி கணேசன் ஒரு சமயம் இந்தி நடிகர் அமோல் பலேகரே பற்றி விமர்சிக்கையில், "அமோல் பலேகர் தென்னிந்தியாவில் பிறந்து நடிக்க ஆசைப்பட்டு, தமிழ்ப்படக் கம்பெனிகளுக்குத் தனது புகைப்படங்களை அனுப்பியிருந்தால் நிச்சயமாக அந்தப் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் விழுந்திருக்கும்" என்று குறிப்பிட்டார்.

ரஜினியைப் பாலச்சந்தர் முதன் முதலாக நடித்துக் காட்டச் சொன்ன போது 'துக்ளக்' நாடகத்திலிருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டினார். பாலசந்தருக்கு அதுவே போதுமானதாக இருந்தது அவரது திறமையை எடைபோட. ரஜினியின் மீதுள்ள நம்பிக்கை என்பதைவிட தன் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினியை நடிக்கச் செய்த போது "போயும் போயும் இவரைப் போட்டு பாலச்சந்தர் படமெடுக்கிறாரே" என்று கேலி செய்தவர்கள் ஏராளம். ஆனால் படம் வெளிவந்த பின் கேலி செய்தவர்களின் கணிப்பு மாறிப்போனது. யாரெல்லாம் கேலி செய்தார்களோ, அவர்களெல்லாம் ரஜினியிடம் நேரில் சென்று 'உங்களை மாதிரி உண்டா?' 'உங்க ஸ்டைலுக்கு ஈடு இணை எதுவுமில்லை' என்றார்கள்.

ஏளனம்

அதற்கப்புறம் ரஜினிக்குப் படங்கள் வந்தாலும் அவரைப் படப்பிடிப்புக் குழுவினர் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. காப்பி, டீ கேட்டால் கூட ஏளனமாகப் பார்த்துவிட்டு அலட்சியமாக, தாமதமாக தருவார்கள். அதையெல்லாம் ரஜினி ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதே இல்லை. தன் வளர்ச்சி, முன்னேற்றம் மட்டுமே அவரது கண்களில் தெரிந்தது.

வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தத் துறைக்கு வந்திருக்கிறோம். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும் வரை நம் முன்னேற்றம் பெருக வேண்டும். நமது கோபத்தால் அதற்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தார்.

ரஜினி வேண்டாம்

Rajinikanth'மூன்று முடிச்சு' படம் முடிந்த பின் பெங்களூரில் கன்னடப் படமொன்றில் நடிப்பதற்காகச் சென்றார் ரஜினி. பிற்பகலுக்கு மேல் ஸ்டுடியோவிற்குச் சென்றார். அங்கு படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ரஜினிக்கு மனதில் புழுக்கம் ஏற்பட்டு உடலெல்லாம் வியர்வை பொங்க காய்ச்சல் வந்தது போலாகிவிட்டது. டைரக்டரிடம் சென்று கேட்டபோது, ரஜினியை மேலும் கீழும் பார்த்த அவர், "உனக்கு விஷயம் தெரியாதா? உனக்குப் பதிலாக வேறொருவரைப் போட்டுவிட்டோம். படத்தின் கதாநாயகிதான் உன்னை வேண்டாமென்று கூறிவிட்டார்" என்று சொல்லிவிட்டு, ரஜினியின் ரியாக்ஷன் என்னவென்று கூடக் கவனிக்காமல் படப்பிடிப்பில் மூழ்கி விட்டார்.

"நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது?" என்று மனக் குழப்பம் அடைந்தவராய் வீடு திரும்பியவர் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டார். அவருக்கு அப்போதிலிருந்து அருமருந்து அதுதான். புகைத்துத் தள்ளிவிட்டார். மனதிலிருந்த பாரம் இறங்கியது போல் குழப்பம் தீர்ந்து அமைதியானார்.

மாலையில் தற்செயலாக ரஜினியின் வீட்டிற்கு வந்த அந்தக் கன்னடப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, ரஜினியைச் சுற்றிலும் சிகரெட் துண்டுகளாக இருப்பது பார்த்து 'இவருக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டார். தான் படத்திலிருந்து தூக்கப்பட்ட காரணத்தை ரஜினி சொன்னபோது தயாரிப்பு நிர்வாகி சொன்ன பதில் ரஜினியை அதிர்ச்சியடைய வைத்தது.

"டைரக்டர் உன்னை கலாட்டா செய்வதற்காக அப்படிச் சொன்னார். உன்னிடம் இப்படி சொல்லியனுப்பியதைச் செட்டில் அனைவரிடமும் சொல்லி தமாஷ் செய்து கொண்டிருந்தார். நீ அதைப் போய் நிஜமென்று நம்பி இப்படி உட்கார்ந்திருக்கியே" என்று பதில் தெரிந்தபோது ரஜினி திணறிப் போனார். நடப்பது நிஜம்தானா என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். புதுமுக நடிகர்களின் நிலை எப்போதும் இப்படித்தான்.

ரஜினி அறிமுகமான நிலையிலேயே பாலச்சந்தர் மூலமாக தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் அறிமுகமாகியபோது தமிழ் சரியாகத் தெரியாத காரணத்தால் இடையிடையே கன்னட வார்த்தைகளைப் பேசி மிகவும் சங்கடப்பட்டார். தமிழில் நன்றாகப் பேசத் தெரிந்து கொண்ட பின், கன்னடப் படங்களில் நடித்த போது நடுநடுவே தமிழில் வசனங்களைப் பேசித் திணறும் நிலை ஏற்பட்டது. அதைப் படிப்படியாகச் சரி செய்து கொண்டார்.

திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள் பற்றி அடுத்த இதழில

Previous Page

Previous

 

Next Page

 

Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information