Rajini Story
Rajini Story Titles
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 18A
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Part 53
Part 54
Part 55
Part 56
Part 57
Part 58

  Join UsSubscription

 Subscribe in a reader

Rajini Story - Part 25

அழகான ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

வெளிப்புறப் படப்பிடிப்பின்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் காத்திருந்தது ரஜினியைக் காண. ராகவேந்திரர் தோற்றத்தில் ரஜினி அங்கே வந்தபோது அத்தனை பேரும் மௌனமாகிவிட்டார்கள். சிறு குரல் கூட எழும்பவில்லை. ரஜினிக்கு அது பேராச்சர்யம்.

ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோது நாளும் அவரது மனதில் சஞ்சலம் இருக்கும். "வாழ்க்கையில் நாம் முன்னேறுவோமா, நாமும் வளமான வசதியான வாழ்க்கை வாழ முடியுமா?" என்று தனக்குத்தானே அவர் கேட்டுக் கொள்ளாத நாள் இல்லை. எப்போதும் அவரது மனம் ஒரு நிலையில் இன்றி சஞ்சலத்திலேயே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் வேலை செய்து கொண்டே மேற்படிப்பு படிக்கலாம் என்று அதற்காக ரஜினி பணமும் கட்டினார். கட்டிய பின்பும் ஒரு குழப்பம். "நாம் பஸ் கண்டக்டரிலிருந்து செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆவோம். நமது மேற்படிப்புக்குக் கிடைக்கும் பலன் அதுவாகத் தானிருக்கும். அதற்கு மேலே நாம் போக முடியாதா?" என்று.

இதுபோன்ற மனக் குழப்பங்களின் காரணமாக ரஜினி பல சமயம் தனிமையை நாடுவதுண்டு. ஒரு நாள் இப்படி தனிமையை நாடி அருகிலுள்ள அனுமார் மலைக்குச் சென்றார். பாதி வழியிலேயே அங்குள்ள மலைப் பாறை ஒன்றில் அழகான ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அதைப் பார்த்து அவரது மனதில் என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதற்கு மேல் அவரது கால்கள் நகரவில்லை. அதே இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்தபின் அந்த ஓவியத்தின் தன்மையைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னபோது, அது ஸ்ரீராகவேந்திரரின் திருவுருவம் என்று தெரியவந்தது.

அன்றிரவு ரஜினியின் தூக்கத்தில் ஒரு கனவு. கனவில் தோன்றியவர் ஸ்ரீராகவேந்திரர். ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியை மறு கரையிலிருக்கும் ராகவேந்திரர் அழைக்கிறார். அதனால் அவரை அடையும் பொருட்டு ரஜினி வேகமாக ஆற்றைக் கடக்க முயலுகிறார். ராகவேந்திரர் அருகில் நெருங்கியதும் கனவு கலைந்துவிட்டது. விழித்துக் கொண்ட ரஜினிக்கு, வேகமாகச் சுழன்ற மின்விசிறி காற்றிலும் வியர்த்துப் போனது. அருகிலுள்ள சகோதர, சகோதரிகள், தந்தை அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். அந்த இருட்டு நேரத்திலேயே அனுமார் மலைக்குச் செல்ல ரஜினி விரும்பினார் என்றாலும் காலைவரை பொறுத்திருந்தார்.

காலை எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு அனுமார் மலைக்குச் சென்றார். அங்கு ஏற்கெனவே பார்த்த ராகவேந்திரரின் ஓவியத்தின் முன் பல மணி நேரம் நின்றார். முன் இரவில் கண்ட கனவுக்கான பலன் என்னவென்று தெரிந்து கொள்ளும் எண்ணமே அப்போதைக்கு ரஜினியிடம் இருந்தது. அதனால் 'மண்டிப்பெட்'ல் உள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர் முன் அடிபணிந்து தன் கனவைப் பற்றிச் சொன்னார். அந்த அர்ச்சகரோ, 'இன்று என்ன கிழமை' என்றார். ரஜினி 'வெள்ளிக் கிழமை' என்றார். "அப்படியானால் நேற்று'' என்று அர்ச்சகர் மீண்டும் கேட்க, ரஜினி 'வியாழன்' என்றார்.

''ஸ்ரீராகவேந்திரரின் நாள் வியாழன்தான். அந்த நாளில் உங்களுக்குக் கனவு வந்திருக்கிறது. கனவில் ராகவேந்திரர் தோன்றியிருக்கிறார். அவர் உங்களைப் பார்த்து 'வா' என்றும் அழைத்திருக்கிறார் என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். இனி உங்களுக்கு நல்ல காலம்தான்" என்று ஆசீர்வதித்தார். அந்தக் கோயிலில் உள்ள ராகவேந்திரரை வணங்கி, அவரது படம் ஒன்றையும் வாங்கிக் கொண்டு ரஜினி வீடு திரும்பினார்.

அன்றிலிருந்து தினமும் காலை எழுந்தவுடன் அவரது பெயரை உச்சரித்து விட்டு, அவருக்கே உரித்தான சில சுலோகங்களைச் சொல்லிவிட்டு, அதன் பின்னர் தனது அன்றாட பணிகளைக் கவனிக்கத் துவங்குவார் ரஜினி. அதிலிருந்து ராகவேந்திரரின் அருள் ரஜினிக்குத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி முடித்தபின், ரஜினிக்கு இயக்குநர் பாலசந்தர் அளித்த முதல் வாய்ப்பு. 'அபூர்வ ராகங்கள்' படத்தில். முதல் நாள் படப்பிடிப்பு எப்போது வரும் என்று ரஜினி காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஞாயிறன்று படத்தின் நிர்வாகி ரஜினியிடம் வந்து, "திங்கட்கிழமை காலையிலேயே படப்பிடிப்பு, வந்துவிடுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் ரஜினி தன்னையறியாமல் வருத்தமுற்றார்.

'முதன்முதலாக கேமரா முன் நிற்கப் போகிறோம். அது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழனன்று இருக்கக் கூடாதா?' என்று மனதிற்குள் கேட்டு ஏங்கினார். ஆனால் திங்களன்று படப்பிடிப்பு ரத்தானதால் செவ்வாயன்று அழைப்பு வந்தது. அன்று முழுவதும் படப்பிடிப்பு நடந்தாலும் பாலசந்தர் ரஜினியை அழைக்கவே இல்லை. புதன் அன்று "இடைவேளைக்குப் பின்புதன் உங்கள் காட்சி வரும். அதனால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வாருங்கள்" என்று கூறியிருந்தார்கள். ஆனால் புதனன்று ஒரு மணிக்குப் பிறகு கடுமையான மழை பிடித்துக் கொண்டுவிட்டது.

ரஜினி எதிர்பார்த்த வியாழன் வந்தது. "இன்று கண்டிப்பாக நம்மை படப்பிடிப்பிற்கு அழைக்க வேண்டும்" என்று நினைத்தபடியே சென்றார். சரியாகக் காலை பத்து மணிக்கு பாலசந்தர் அழைக்க, ரஜினி கேமரா முன் நின்றார். ஆக ராகவேந்திரரின் வியாழன் ரஜினிக்கும் உகந்த நாளானது.

ராகவேந்திரரின் சக்தியோ என்னவோ, ரஜினி சொல்பவை பெரும்பாலும் சரியாக இருக்கும். "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்று படத்தில் வசனம் பேசியதும், "மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று பத்திரிகைகளுக்கு தந்த அறிக்கையிலும், "டெல்லியை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம். தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது" என்று ஜெயலலிதாவை எச்சரித்து அமெரிக்காவிலிருந்து அறிக்கை விட்டதெல்லாம் ராகவேந்திரரின் அருளின் காரணமாகவே என்று ரஜினி நம்புகிறார்.

ரஜினியின் திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு சில மாதங்களுக்குப் பின் ரஜினி ஒரு நாள் மனைவி லதாவிடம், "நீ தாய்மை நிலையை அடையப் போகிறாய். உனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது" என்றார். திருமதி லதா, அவர் சொன்னதை நம்பவில்லை. ஏனென்றால் அதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் தனது உடலில் ஏற்படவில்லை என்பதை உணர்ந்திருந்தார். சில நாட்களிலேயே அது உண்மை என்பதை லதா உணரத் தொடங்கினார். மருத்துவர்களும் அதை உறுதி செய்தார்கள்.

திரையுலகில் பிரபல நடிகனாக புகழ் பெற்றபின் ராகவேந்திரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ள மந்திராலயத்திற்குச் சென்றார் ரஜினி. கோயிலுக்குச் செல்லும் வழியில் துங்கபத்ரா ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ரஜினி அப்படியே நின்று விட்டார். சில வருடங்களுக்கு முன் ரஜினியின் கனவில் வந்த ஆறல்லவா அது! ஒரு கரையில் தானிருக்க, மறுகரையிலிருந்து ராகவேந்திரர் தன்னை அழைத்த அந்த இடத்தைப் பற்றிய ரஜினியின் கனவு அன்று நனவாகியது. அதை நினைத்து புல்லரித்துப் போனார் ரஜினி. கோயிலுக்குச் சென்று பிருந்தாவனத்தைப் பார்த்து வணங்கினார். அங்கிருந்து அகல அவருக்கு மனம் வரவே இல்லை.

இங்கே சென்னையில் ஒரு நாள் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரஜினிக்கு ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை. அதனால் தன் மனைவி லதாவிடம் "வா, நாம் ராகவேந்திரர் கோயிலுக்குப் போய் விட்டு வரலாம்" என்று அழைத்தார். லதாவோ, "இரவு ஒன்பது மணியாகிறதே, இந்த நேரத்தில் கோயிலைத் திறந்து வைத்திருப்பார்களா?" என்று கேட்டார். ஆனாலும் கணவரின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் கிளம்பினார்.

ராகவேந்திரர் கோயிலை அடைந்ததும், ரஜினி தம்பதியரைப் பார்த்த அர்ச்சகர், "வாருங்கள், வாருங்கள், உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்" என்றார். ரஜினி அதைக் கேட்டு, "இது தான் ராகவேந்திர மகானின் கருணையோ?" என்று நினைத்தவாறு சிலையாகிப் போனார்.

சதா 'டென்ஷன்' 'டென்ஷன்' என்று தன மன உளைச்சலைப் பற்றியே எப்போதும் கூறிக் கொண்டிருக்கும் ரஜினி டென்ஷனே இல்லாமல் இருந்த சில மாதங்களும் உண்டு. அது அவர் ராகவேந்திரரின் வேடமிட்டு நடித்த 'ஸ்ரீராகவேந்திரர்' படப்பிடிப்பின்போதுதான்.

ரஜினி சினிமாவின் மூலம் நல்ல நிலையை அடைந்தபோது, ஒரு நாள் ராகவேந்திரரின் கதையையே படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதில் தானே ராகவேந்திரராக நடிக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் யாருமே அப்படிப்பட்ட ஒரு மகானின் கதையைப் படமாக எடுக்க முன் வரமாட்டார்கள் என்று தெரிந்து தானே அதைத் தயாரிக்க விரும்பினார். அது தனது 100-வது படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். சொந்தமாக படமெடுக்க அவருக்கு அந்தச் சமயம் நேரமில்லாத காரணத்தால் பாலசந்தரிடம் தன் விருப்பத்தைக் கூறி, "நீங்களே ராகவேந்திரர் வரலாற்றைப் படமாக எடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பாலசந்தரோ, அது சரியாக வராது என்று பல்வேறு காரணங்களைக் கூறி, வேண்டாமென்றார். ஆனால் ரஜினி விடவில்லை. 'கவிதாலயம்' (இன்றைய பிரமிட்) நடராஜனிடம் தன் விருப்பத்தைக் கூறி 'படம் நன்றாக வரும்' என்றார். அதை அவர் பாலசந்தரிடம் கூற, "ரஜினி விரும்புகிறான் என்றால் செய்யுங்கள். பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று முழுமனதுடன் ஒப்புக் கொண்டார். தன் குருநாதர் ஒரு விஷயத்திற்குப் பதிலளித்து, ரஜினி அதை விடாப்பிடியாக எதிர்த்து நின்று, அவரை தன் எண்ணப்படி இணங்க வைத்தது அதுதான் முதல்முறை. ஏனென்றால் பாலசந்தர் சொல்லி, ரஜினி எதையுமே மீறியதில்லை. ஆனால் 'ஸ்ரீராகவேந்திரர்' பட விஷயத்தில் மட்டும் அது மாறிப் போனது. அந்த வகையில் ரஜினிக்கு அது பெருமைதான்.

'ஸ்ரீராகவேந்திரர்' படம் துவங்கி, அந்த வேடத்தைப் போட்டுக் கொள்வதற்குள் ரஜினிக்குள்ளே ஆயிரம் கேள்விகள். 'மக்கள் தன்னை ராகவேந்திரர் வேடத்தில் ஏற்றுக் கொள்வார்களா' என்ற கேள்வியே முதலில் எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் ரஜினியை ராகவேந்திரராகப் பார்த்தவர்களெல்லாம் 'ஆக்ஷன் ஸ்டைல் ஹீரோ ரஜினியா இது?" என்று வியப்புக் கேள்விகளுடன் அவரைப் பாராட்டாதவர்களே இல்லை. ராகவேந்திரரின் ஒப்பனையைச் செய்து கொண்ட மாத்திரத்திலேயே ரஜினியிடம் வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. அமைதி, அன்பு, பாசம் எல்லாம் அவரிடம் குடி வந்துவிட்டன.

வெளிப்புறப் படப்பிடிப்பின்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் காத்திருந்தது ரஜினியைக் காண. ராகவேந்திரர் தோற்றத்தில் ரஜினி அங்கே வந்தபோது அத்தனை பேரும் மௌனமாகிவிட்டார்கள். சிறு குரல் கூட எழும்பவில்லை. ரஜினிக்கு அது பேராச்சர்யம். அதுவே வேறொரு படப்பிடிப்பாக இருந்தால், சூழ்நிலை எப்படி இருந்திருக்கும். எல்லாம் ராகவேந்திரரின் 'மகிமை' என்று அந்த நினைவுகளில் ஆழ்ந்துவிட்டார்.

இன்றைக்கும் ரஜினி தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு ராகவேந்திரருக்குப் பூஜை செய்த பின்பே படப்பிடிப்பு, மற்ற காரியங்களைக் கவனிக்கிறார். அதே போல் மாலை படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் குளித்து விட்டு பூஜை செய்த பின்பே மற்ற பணிகளைக் கவனிக்கிறார். முன்பு வாங்கிய ராகவேந்திரரின் படத்தையே இன்றைக்கும் பத்திரமாக தன்னுடைய பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறார்.

இன்னும் பல....

வரும் இதழில்

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information