Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள் (பாகம் 5)

ரஜினியிடம் சிறு வயது முதல் ஒரு பழக்கம். யாரும் அவரிடம் அன்பாகப் பேசினால் பேசுவது யாரென்று கூட நினைக்காமல் அவர்களின் எண்ணப்படி நடப்பார். ஆனால் அதிகாரம் காட்ட நினைத்து அவரை வசப்படுத்த முனைந்தால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும்.

'அபூர்வ ராகங்கள்' படத்திற்கு முன்பே திரைப்படக் கல்லூரி மாணவர் என்ற வகையில் ரஜினிக்கு சில கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. நடிக்கச் சென்றால் அவருக்கு மேக்கப் போட்டுவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் கூட நடிக்க அழைத்ததில்லை. அதில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.

பின்னர் ஐந்தாறு கன்னடப் படங்களில் நடித்தாலும் அங்குள்ள நட்சத்திர ஆதிக்கத்தின் பேதம் காரணமாக ரஜினியை மதிக்காமல் சரியாகப் பணம் தராமல் இழுத்தடிக்க, அதனால் தமிழில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

"இன்றைக்கு ரஜினியின் படங்கள் பெங்களூரில் திரையிடும்போது வருகின்ற கூட்டம் அங்குள்ள கன்னட முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட இல்லை" என்று பெருமையாகக் கூறி மகிழ்கிறார் சத்யநாராயணா.

அவர் குறிப்பாகச் சொன்ன தகவல் இது: "இங்குள்ள குறிப்பிட்ட ஒரு நடிகரின் ரசிகர்கள் இப்போதும் வீட்டுப் பக்கம் வந்தால் ரஜினி தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறை கூறி திட்டி விட்டுச் செல்வார்கள். அதை நான் பெரிதுபடுத்துவதில்லை."

ரஜினியிடம் சிறு வயது முதல் ஒரு பழக்கம். யாரும் அவரிடம் அன்பாகப் பேசினால் பேசுவது யாரென்று கூட நினைக்காமல் அவர்களின் எண்ணப்படி நடப்பார். ஆனால் அதிகாரம் காட்ட நினைத்து அவரை வசப்படுத்த முனைந்தால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும்.

ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீபிரியா அவருக்கு ஒரு தம்ளரில் மோர் கொடுத்தார். உடனே அருகில் இருந்த நண்பர் ஒருவர், "மோர் குடிக்காதீர்கள். மோர் சாப்பிட்டால் உணர்ச்சி (emotion) அதிகமாகும்" என்று கூறினார். "அப்படியானால் பரவாயில்லை எனக்கு இரண்டு தம்ளர் மோர் கொடுங்கள், நான் சாப்பிடுகிறேன்" என்று சொல்லி ஸ்ரீபிரியா கொண்டு வந்த எல்லா மோரையும் குடித்து விட்டார் ரஜினி.

ரஜினிக்கு 'படிக்காதவன்', 'எங்கேயோ கேட்ட குரல்', ஆறிலிருந்து அறுபது வரை', 'முள்ளும் மலரும்' ஆகிய படங்களில் நல்ல வேடங்கள். அந்தப் படங்களைப் பற்றியெல்லாம் அண்ணன் சத்யநாராயணாவிடம் ரஜினி பேசும்போது, ''ஆறிலிருந்து அறுபது வரை நம்ம வீட்டுக் கதை மாதிரி இருந்தது. அதனால்தான் அந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பல இடையூறுகள் குழப்பங்கள் ஏற்பட்டாலும் உங்களையெல்லாம் நினைத்துக் கொண்டு நடித்தபோது எனக்குச் சிரமமில்லாமல் இருந்தது" என்றாராம்.

"ரஜினி தொடர்ந்து அடிக்கடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களாகவே நடித்துக் கொண்டிருந்ததில் எல்லாம் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நல்ல குடும்பப் பாங்கான வேடங்களிலும் நடிக்கலாமே?" என்று ரஜினியிடம் சொல்வேன். அவரோ, "எனக்கும் அப்படி நடிப்பதில் ஆசைதான். ஆனால் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை. அவர்களின் விருப்பத்தை மீற முடியவில்லை. என்ன செய்வது?" என்று சொல்லி விட்டார். ஆனால் அவர் படங்களைக் குறைத்து நடிக்க ஆரம்பித்த பின் ஓரளவு எங்கள் எண்ணப்படியே நடித்து வருவது பார்த்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று சத்யநாராயணா பூரிப்போடு சொன்னார். அவர் 'சந்தோஷம்' என்ற வார்த்தையை உச்சரிக்கும் அழகே தனி.

ரஜினியின் தன்னம்பிக்கையும் தைரியமும

ரஜினியின் முன்னேற்றத்திற்கு அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் மிகப் பெரிய சொத்தாக அமைந்திருக்கிறது. இந்தச் சொத்து அவரது தந்தை ரானோஜி ராவிடமிருந்து வந்ததாகும்.

ரானோஜி ராவின் இளம் பிராயத்து வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் கண்களில் நீர் மல்கிவிடும். அவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்.

ரானோஜி ராவின் தாயார் மன்னாபாய். எம்.ஜி.ஆருக்கு சத்யபாமா எப்படிக் கண்கண்ட கடவுளோ, அது போல்தான் ரானோஜி ராவுக்கு மன்னாபாய். 'பசி' யென்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாது அமுது படைத்தவர் அவர். இல்லையென்று வருபவர்களுக்கு முறத்தில் அரிசி கொடுத்திருக்கிறார். அப்படிபட்ட மன்னாபாய், ரானோஜி ராவ் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே காலமாகிவிட்டார். ரானோஜி ராவின் தந்தை மல்லார் ராவ் வேறொரு திருமணம் செய்து கொண்டு தனியாகப் போய்விட்டார்.

நிர்க்கதியான ரானோஜிக்கு துணை அவரது சித்தப்பா ராம்ஜிராவ்தான். தனது அண்ணன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமென்பதற்காக அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் அந்த நல்ல நோக்கத்திற்குப் பழுது ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே வந்து சேர்ந்தார்கள் ராம்ஜியின் தம்பிகளுக்கு வந்த மனைவியர்.

ரானோஜி வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டால், குடும்பத்து பெரியவரின் மகன் என்ற வகையில் ஆஸ்தியில் பெரும் பங்கை உடையவராகி விடுவாரோ.... நமக்கு ஏதும் இல்லாமல் பண்ணி விடுவாரோ என்று சித்திமார்கள் கொடுமைக் களத்தின் அவதாரங்களாக இருந்தார்கள்.

கொலை முயற்சி

சித்தப்பா வீட்டில் இல்லாத சமயங்களில் ரானோஜி சித்திமார்களிடம் படும் துயரங்களுக்கு கணக்கில்லை. ஒரு சமயம் மூத்த சித்தி ரானோஜியிடம் மிகவும் அன்பாகப் பேசியபடியே வெளியே அழைத்துச் சென்று இனிப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சித்தியின் திடீர் அன்பு ரானோஜிக்குப் புரியவில்லை. அந்த இனிப்பு தந்த சுவை சிறிது நேரத்திற்குத்தான். வழியில் ரானோஜியை ஒரு கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போனார் மேன்மைமிகு சித்தி. நல்ல வேளை கிணற்றில் தண்ணீர் இல்லை. அதிக ஆழமும் இல்லை. சிராய்ப்புக் காயங்களோடு உயிர் மீண்டார் ரானோஜி.

மற்றொரு சமயம் கிணற்றில் தள்ளிய கொடுமைக்கார சித்தி ரானோஜியின் மீது வந்த எரிச்சலில், "எங்களை ஏன் உயிரை வாங்கறே? நீ நாசமாப் போக, கட்டையிலே போக" என்று சாபம் விட்டார். சிறுவனாக இருந்தாலும் ரானோஜியின் பொறுமை எல்லை கடந்து, "நீதான் கட்டையிலே போவே" என்று பதிலுக்கு சாபம் விட்டார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்களில் பிளேக் நோயில் சிக்கி மாண்டு போனார் அந்தச் சித்தி. அப்போதெல்லாம் பிளேக்கில் சிக்கியவர்களை ஊருக்கு வெளியே உள்ள வெட்டவெளி மைதானங்களுக்கு கொண்டு போய் விடுவார்கள். தங்களுக்கும் பிளேக் பற்றிக்கொண்டு விடுமென்று உறவினர்கள் யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். அப்படித்தான் அந்தச் சித்தி அனாதையைப் போல் மாண்டு போனார். இந்தச் சம்பவத்திற்குப் பின் மற்ற சித்திமார்கள், எங்கே ரானோஜி தங்களுக்கும் சாபம் விட்டுவிடுவாரோ என்று பயந்து ஒதுங்கினார்கள். அப்புறம் ரானோஜிக்குத் தொல்லை என்பதே இல்லை.

கான்ஸ்டபிள்

ஆனாலும் படிப்பு போயிற்றே! சரியாகப் படிக்காததால் அவர் போலீஸ் வேலையில் சேர்ந்து 35 ஆண்டுகள் வெறும் கான்ஸ்டபிளாகத்தான் இருக்க முடிந்தது.

போலீஸ் பணியில் ரானோஜி ராவ் கடைப்பிடித்த நேர்மையே அவரது பதவி உயர்வுக்குத் தடையாக அமைந்துவிட்டது. "சட்டப்படி அவர் தன் கடமையைச் செய்ததால் பாதிக்கப்பட்ட பலரும் அவருக்கு எத்தனையோ கெடுதல்கள் செய்தும் அதிலிருந்து அவர் மீண்டிருக்கிறார் என்றால் அது தெய்வமாகிவிட்ட அவரது அன்னையின் ஆசிர்வாதங்களால்தான்" என்று கூறுகிறார் சத்யநாராயண ராவ்.

பெட்டிக்கடை

ரானோஜி ராவ் ஓய்வு பெற்ற பின்பும் தனக்குரிய தேவைகளைத் தானே கவனித்துக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளை அவர் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. வீட்டின் பின்புறம் 6 x 8 சதுர அடி அளவில் சிறிய கடையொன்று வைத்து அதை அவரே பார்த்துக் கொண்டு தன் பொழுதைக் கழித்திருக்கிறார். ரஜினியின் சினிமா மோகத்திற்கு அந்தக் கடைதான் களமாக இருந்திருக்கிறது.

தான் இறந்து போனால் இறுதிக் காரியங்கள், ஈமச் சடங்குகளெல்லாம் தனது செலவிலேயே நடத்தப்படவேண்டுமென்பதற்காகவே வங்கியில் 15 ஆயிரம் ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தார் ரானோஜிராவ். அதே குணம்தான் ரஜினிக்கும், அவரது உடன் பிறப்புகளுக்கும் இருக்கிறது. ரஜினியிடம் உதவி பெறாமலே தங்களுக்குரிய தேவைகளைச் சொந்தக்காலில் நின்று தாங்களே பூர்த்தி செய்து கொண்டு வருகிறார்கள். இதில் விதிவிலக்காக இருந்தது ரஜினியின் இரண்டாவது அண்ணன் நாகேஷ் ராவின் குடும்பம் மட்டுமே.

பூனூல்

பிராமண குடும்பங்களில் ஆண்கள் பூணூல் போட்டுக் கொள்வதை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்துவார்கள். அதை 'பூணூல் கல்யாணம்', 'உபநயனம்' என்பார்கள். அதே போல் ரஜினியின் கெய்க்வாட் குடும்பங்களிலும் இந்த பூணூல் அணியும் வழக்கம் உள்ளது.

நடிகராக புகழ் பெற்றுவிட்ட ரஜினி பெரும்பாலும் பூணூல் அணிந்து நாம் பார்த்ததில்லை. ஆனால் அவர் லதாவை மணம் செய்து கொண்ட போது பூணூல் போட்டுக் கொண்டாராம். படப்பிடிப்புக்குச் சென்றால் பூணூலைக் கழற்றி வைத்து விட்டு, வீட்டில் இருக்கும்போது அணிந்து கொள்வார் என்ற சத்யநாராயண ராவ், பூணூல் அணிந்திருந்தார்.

ரஜினியின் 2-வது அண்ணன் நாகேஷ் ராவ் ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர். 1971-ல் இந்தியா பாகிஸ்தான் போர் நடக்கையில் போர் முனைக்கே சென்று சண்டையிட்டவர் அவர். அந்தச் சமயத்தில் எதிரியின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு நாகேஷின் முதுகை உரசிச் சென்று பலத்த காயத்தோடு விழுந்துவிட்டார். சிகிச்சைக்குப் பின் குணமானாலும், மீண்டும் ராணுவத்தில் சேர அவருக்கு விருப்பமில்லை. அதனால் பெங்களூர் திரும்பிவிட்டார். இரண்டு வருடங்கள் வேலை இல்லாமலேயே இருந்தார். அப்போது ரானோஜி ராவின் உறவினர் வெங்கோப ராவ் (ரஜினிக்கு கண்டக்டர் வேலை வாங்கித் தந்தவர்) மகள் ஜீஜாபாயை நாகேஷ§க்கு மணம் செய்து வைத்தார். ராணுவத்தில் பணிபுரிந்ததை வைத்து நாகேஷ§க்கு 'இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்' (HAL) நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் என்று நாகேஷ§க்கு அழகழகான வாரிசுகள் உதித்தாலும் அதை அவரால் நீடித்து அனுபவிக்க முடியவில்லை. 42 வயதிலேயே காலமாகிவிட்டார்.

இறந்த அண்ணன் நாகேஷ் ராவின் குடும்பம் தவித்துப் போய்விடக்கூடாது என்பதற்காக தங்களது பூர்வீக வீட்டிற்கு அருகிலேயே, நாகேஷ்ராவ் குடும்பத்திற்கு வீடொன்று வாங்கித் தந்தார் ரஜினி. நீள வாட்டிலுள்ள அந்த வீட்டின் கீழே ஏழு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்தக் கடைகளால் வருகின்ற வாடகை வருமானம்தான் நாகேஷின் குடும்பத்திற்குப் பெரும் ஆதாரமாக இருக்கிறது. நாகேஷ் இறந்தபின் அவர் வேலை பார்த்த இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் மகன் கோவிந்த ராவ் சேர்க்கப்பட்டு வேலை செய்து வருகிறார். அடுத்த மகள் மகாலட்சுமி படிப்பு முடிந்து ரவிச்சந்திரா என்பவருடன் மணமாகி, அவர்களுக்கு மோகனா என்று 7 வயதில் ஒரு மகள் உண்டு. மூன்றாவது மகன் ஜெகன்னாதராவ் படிப்பு முடிந்து சொந்தமாக சிறுதொழில் செய்துவருகிறார். கடைக்குட்டி துளசி 8-ம் வகுப்பு படிக்கிறார்.

துளசி விவரமறிந்த வயது முதலே ரஜினி ரசிகை. துறுதுறு கண்களுடன் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு மலர் அவள். ரஜினி ஸ்டைலில் தலைமுடியை ஒதுக்கி விட்டு, கையை சொடுக்கிவிடுவதும், ரஜினியைப் போல் நடனமாடுவதும் துளசியின் ஸ்பெஷாலிட்டி.

ரஜினியின் படம் பார்த்து விட்டு வந்தால், அந்த வாரம் முழுவதும் ரஜினி படத்தில் என்னென்ன ஸ்டைல் செய்து இருக்கிறாரோ, அதை அப்படியே நடித்துக் காட்டுவாள். அந்த வகையில் ஜீஜாபாய்க்கு வீட்டில் குடும்பத் தலைவர் இல்லையே என்ற மனக்குறைக்கு மருந்தாக இருப்பவள் துளசி.

அண்ணணின் குடும்பத்தைப் பற்றிய பல சுவாரசியமான செய்திகள்...

அடுத்த இதழில்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information