Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் திரையுலக அனுபவங்கள் (பாகம் 7)

எம்.ஜி.ஆரைப் போல் ரஜினியும் சந்தேக குணமுள்ளவர். யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அதனால் எளிதில் பழகவும் மாட்டார். பழகினாலும் எதிராளியின் கருத்துகளைக் கூர்ந்து கவனிப்பாரே தவிர தன் மனதில் உள்ளதை முழுவதும் வெளிப்படுத்திவிடமாட்டார்.

பின்னாளில் ரஜினிக்கு சகஜ உணர்வு வந்தாலும், விஷயமில்லாமல் யாருடனும் பேச மாட்டார். குறிப்பாக சீரியஸான காட்சிகள் படமாக்கும் நேரத்தில் யாருடனும் ரஜினி பேசுவதில்லை. அந்த மூடிலேயே இருக்க விரும்புவார். வசனத்திலும், நடிப்பிலும் ஒருமனப்பட்டு திரும்பச் சொல்லியும், செய்தும் பார்த்துக் கொள்வார்.

'படாபட்' ஜெயலட்சுமி இதற்கு நேர்விதம். எந்தக் காட்சியாக இருந்தாலும் உரையாடலை ஒரு முறை பார்த்துவிட்டு அரட்டை அடிக்கத் தொடங்கி விடுவார். கதறி அழ வேண்டிய காட்சியாக இருந்தாலும் சரி, வேடிக்கையாகப் பேசிக் கொண்டே இருப்பார். டேக்கின் போது 'ரெடி' என்று கூறிவிடுவார்.

இதனால் 'முள்ளும் மலரும்' படத்தில் படாபட்டுடன் நடிக்கும்போது ரஜினிக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. அதற்கு முன் படாபட்டுடன் அவருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. யோசித்துக் கொண்டிருக்கும்போது, படாபட் தன் பாட்டிற்கு வழவழாவென்று வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுவார். 'இப்படிப் பேசுவது நன்றாக இல்லை' என்று படாபட்டிடம் சொல்லப் போய் அவர் தன்னைத் தவறுதலாக நினைத்துக் கொள்வாரோ என்ற எண்ணத்தில் ரஜினி பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக படாபட் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்' போட்டுத் தலையாட்டுவார். ஆனால் ரஜினிக்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருக்கும், இப்படி நேரம் காலம் தெரியாமல் கழுத்தறுக்கிறாரே என்று. ஒரு பக்கம் மூடு வரவழைக்க இந்தப் பாடு படவேண்டியிருக்கிறதே என்று ரஜினிக்கு எரிச்சலாக இருந்தாலும், படாபட் எந்த உணர்ச்சிகரமான காட்சியிலும் மடமடவென்று நடித்து விடுகிறாரே என்று பொறாமையாகவும் இருக்கும்.

பாலச்சந்தரைப் பார்த்தால் அவரிடம் பேசுவதற்கு எந்தப் புதுமுகமாக இருந்தாலும் தயங்குவார்கள். ஆனால் 'தப்புத் தாளங்கள்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளே அதன் கதாநாயகி சரிதா சிறிதும் பயமின்றி எல்லோருடனும் ஜாலியாகப் பேசி அரட்டை அடிக்க ஆரம்பித்தது கண்டு ரஜினிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ரஜினியோ சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திற்கு வந்த பின்பும்கூட, பாலசந்தர் அருகில் இருக்கும்போது மற்றவர்களுடன் பேச சங்கடப்படுவார்.

'தப்புத்தாளங்கள்' படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது. சரிதா கர்ப்பிணியாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சி காலையில் படமாக்கப்பட்டது. அதனால் 17 வயது சரிதா 30 வயது பெண் போல் முதிர்ந்த தோற்றத்தில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தார். ரஜினி அவரை அந்தக் கோலத்தில்தான் சந்தித்தார், அறிமுகப்படுத்தப்பட்டார்.

மாலையில் ஒப்பனை ஏதும் இல்லாமல் சரிதா மாக்ஸி அணிந்து, தங்கியிருந்த ஹோட்டல் போர்டிகோவில் உலாவிக் கொண்டிருந்தார். தனது அறைக்குச் செல்வதற்காக வந்த ரஜினிக்கு முதலில் சரிதாவை அடையாளம் தெரியவில்லை. யாரோ என்று நினைத்துக் கொண்டார். ஆனாலும் ரஜினியிடம் சரிதா, 'குட் ஈவினிங் சார்' என்றார். ரஜினியும் பதில் வணக்கம் போட்டு வைத்தார். யார் நமக்கு வணக்கம் சொல்றது என்று சிறிது யோசித்தவருக்கு ஒப்பனையில்லாத சரிதாவை அடையாளம் காண சிறிது நேரம் பிடித்தது. ஆச்சர்யப்பட்டுப் போனவர் உற்சாகமாக, "ஐயய்யோ! உனக்குப் போயா வணக்கம் போட்டேன், ரொம்ப மரியாதையா? என் வாழ்க்கையில், ஒரு வணக்கத்தை வீணடிச்சுட்டேனே" என்று கிண்டலாகப் பேச ஆரம்பித்துவிட்டார். அப்புறமென்ன, சரிதா கறுப்பு நிறமென்பதால் கிண்டலாக அவரை 'கறுப்பி' என்று அழைக்க ஆரம்பித்தார். சரிதாவும் பதிலுக்கு "மிஸ்டர் கறுப்பா" என்றார்.

ரஜினி மிகவும் அமைதியானவர். இரைந்து பேசாதவர் என்றுதான் பலருக்கும் தெரியும். கேலியாக, கிண்டலாகப் பேசுவதென்றால் அது அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. அதையெல்லாம் கவனித்தால் 'ரஜினியா இப்படி?' என்று நினைக்கத் தோன்றும். அதனால்தான் நகைச்சுவைக் காட்சிகளை அவர் பிரமாதப்படுத்தி விடுகிறார்.

எம்.ஜி.ஆரைப் போல் ரஜினியும் சந்தேக குணமுள்ளவர். யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அதனால் எளிதில் பழகவும் மாட்டார். பழகினாலும் எதிராளியின் கருத்துகளைக் கூர்ந்து கவனிப்பாரே தவிர தன் மனதில் உள்ளதை முழுவதும் வெளிப்படுத்திவிடமாட்டார். கேள்வி ஞானம் அதிகமுள்ளவர் ரஜினி. இது சிறுவயது முதலே அவரிடம் குடிகொண்டிருந்தது. அவரிடம் ஆன்மிகப் பற்று ஏற்படக் காரணமும் அந்தக் கேள்வி ஞானம்தான்.

சிறுவயதில் ஆன்மிகத்தில் ரஜினிக்கு நிறையச் சந்தேகங்கள் வரும். அதையெல்லாம் தன் தந்தையிடம் கேட்பார். "எல்லோருமே மனுஷங்கதானே....! அப்புறம் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு பேதம் எதற்கு? இது ஏன்....?" என்ற கேள்விகளுக்கெல்லாம் தந்தையிடமிருந்து பதில் வரும். ஆனால் அதில் ரஜினிக்குத் திருப்தியிருக்காது.

தந்தையிடம் மட்டுமின்றி, மூத்த அண்ணன் சத்யநாராயணா, அக்கா அஸ்வத்பாலுபாய்.... இப்படித் தன்னைவிட வயதில் பெரியவர்களையெல்லாம் கேள்விகள் கேட்டுத் துளைப்பார் ரஜினி. என்றாலும் அவர் திருப்தியாகும் அளவுக்கு அவர்களது பதில்கள் அமைவதில்லை.

ரஜினியின் வீட்டில் அடிக்கடி கோயிலுக்குச் சென்று வருவார்கள். 'கடவுளே...... இந்தக் காரியம் நடந்தால்..... உனக்கு இது நேர்த்திக் கடனாகச் செய்கிறேன்' என்று கூறி அதன்படி செய்வார்கள். அந்த நேர்த்திக் கடனை "என்ன இது இறைவனுக்கே லஞ்சமா?" என்று ரஜினி யோசிப்பதுண்டு. அதுபற்றி வீட்டிலுள்ளவர்களிடம் கேட்பதும் உண்டு.

அதற்கு அவர்கள் "அது..... அப்படித்தாண்டா! காரணம் கேட்காதே...." என்று கூறிவிடுவார்கள். இப்படி மதம் சம்பந்தமாக, சமுதாய சம்பந்தமாக ரஜினி கேள்விகள் எழுப்பும் போதெல்லாம் அவர்களது பதில்கள் இப்படித்தான் இருந்தன. "நமக்கு முன் வாழ்ந்தவர்கள் இப்படித்தான் வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். அதனால் நாம் அவர்களைப் போலத்தான் வாழமுடியும்!"

ரஜினியும் ஒருநாள் இதுபோன்ற பதிலைக் கேட்டு விட்டு, "பழைய காலத்திலே பள்ளம் என்று தெரியாமலேயே பள்ளத்தில் விழுந்தார்கள். நமக்கோ இது பள்ளம் என்று தெரிகிறது. தெரிந்தும் பள்ளத்தில்போய் ஏன் விழ வேண்டும்?" என்று கேட்பார். அதற்கு யாராலும் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை.

"உன்னோட கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கிற இடத்திலே உன்னைச் சேர்த்து விடுகிறோம்" என்று கூறி ரஜினியை ராமகிருஷ்ணா ஆசிரமப் பள்ளியில் சேர்த்துவிட்டார் பெரியண்ணன் சத்யநாராயணா. தன்னைத் தானே உணர அந்த இடம் அவருக்கு வழி வகுத்துக் கொடுத்தது.

ஆரம்ப காலத்தில், தன் வாழ்வில் ஏதேனும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர் ரஜினிகாந்த். பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட வலுவில் ஒரு பிரச்னையை உண்டாக்கிக் கொண்டு அதைத் தீர்வு காண்பதில் அக்கறை செலுத்துவது ரஜினியின் வழக்கம். அதனால் போரடிக்கிறது என்பதே அவரிடத்தில் இல்லை. இன்றைக்கு அவர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருப்பது கூட அப்படித்தான் இருக்க வேண்டும்.

சினிமாவில் ரஜினியின் ஸ்டைல் அவருக்கு குறுகிய கால அளவில் பெரும்புகழைத் தேடிக் கொடுத்தபோது நிறைய படங்கள் அவரைத் தேடி வந்தன. குறைவான படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு நடிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி விரும்பினாலும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரை விடுவதாக இல்லை. ஒருமுறை தான் நடித்த கதாபாத்திரத்திற்காக ரஜினி கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டபோது ஒரு டைரக்டர் (பெயர் வேண்டாம்) அவரிடம், "நீங்க ஏன் சார் இவ்வளவு கஷ்டப்படுறீங்க? நீங்க எது செஞ்சாலும் ஆக்ஷன்தான். கைதட்டல் தானாக வரும் பாருங்கள்" என்றாராம்.

கண்டக்டர் உடை

Rajiniநடித்துக் கொண்டிருந்த புதிதில் பிரபலமாகிய ரஜினியாக பெங்களூருக்குப் போகும்போதெல்லாம் தனது பழைய போக்குவரத்துக் கழக நண்பர்களைச் சந்திக்கச் செல்வார். அதுவும் பழைய உடையணிந்தபடி. அந்தத் தோற்றத்தில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் பெரிதும் மகிழ்ந்து 'போவார்கள். "நம்ம ஆட்களில் ஒருத்தன் சினிமாவில் நடிக்கிறான்" என்று ஒருவருக்கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.

ஒரு சமயம் அந்த நண்பர்கள் ரஜினியிடம், "படங்களின் டைட்டிலில் ரஜினிகாந்த் என்று போடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. கே.டி.சி. (கர்நாடகா டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன்) பஸ்ஸில் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் ரஜினிகாந்த் என்று போட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு முன் ரஜினிகாந்த் டைட்டிலைப் பற்றிக் கவலைப்பட்டவரல்ல. ஆனாலும் நண்பர்கள் ஆசையை நிறைவேற்றவென்று தயங்கித் தயங்கி சில தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது "அப்படியெல்லாம் போடக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாக இருக்கும்" என்று அவர்களிடமிருந்து ஒரே மாதிரி பதில் வர ரஜினி அத்தோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

எதையும் மாறுபட்ட எதிர் கோணத்தில், அதாவது நெகடிவ் அப்ரோச் செய்தே ரஜினி பழக்கப்பட்டவராக இருந்தார். யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும்போது வேண்டுமென்றே அவர்களிடம் குதர்க்க வாதங்கள் செய்வார். அந்தப் பழக்கத்தையும், கண்டக்டராகப் பணி புரிந்தபோது தொற்றிக் கொண்ட முரட்டு சுபாவத்தையும் மாற்றிக் கொள்வதற்கு ரஜினி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

நாயுடன் வாக்கிங்!

ரஜினி 'மூன்று முடிச்சு' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம், இரவில் சாப்பிட்ட பின்னர் ஒன்பது மணிக்கு மேல் கைலியும், துண்டும் அணிந்தவராய் ரஜினி தனது நாயுடன் வாக்கிங் போவது வழக்கம்.

ஒரு நாள் அப்படி வாக்கிங் போன போது 'மூன்று முடிச்சு' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அமுதம் பிக்சர்ஸ் வெங்கட்ராமனின் அலுவலகம் வழியாகச் சென்றார். அந்த நேரத்தில் அலுவலகத்தில் யாராவது இருந்தால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று நாயை வெளியே விட்டுவிட்டு, உள்ளே நுழைந்து வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

அலுவலகத்தில் இருந்த அறிமுகமில்லாத ஒருவரிடம் ரஜினி, "தீப்பெட்டி இருந்தா கொஞ்சம் கொடுங்கள். சிகரெட் புகைக்கணும்" என்றார்.

நேரமோ இரவு, வந்திருக்கும் ஆளோ கறுப்பு. லுங்கியும், அழுக்கடைந்த துண்டுடனும் இருந்த ரஜினியைக் கண்டு முகம் சுளித்த அந்த நபர், "நீ யாருப்பா? முதலில் எழுந்திரு. நீ பாட்டுக்கு உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு அதிகாரமாகத் தீப்பெட்டி கேட்கிறியே!" என்றார் அதட்டலோடு.

ரஜினி அவரிடம், "நான் மூன்று முடிச்சு" படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன்" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவராய் "முதலாளி வெங்கட்ராமன் இல்லையா?" என்று கேட்டார்.

ரஜினியின் பேச்சில் அப்போதும் நம்பிக்கை ஏற்படாத அந்த நபர், "அவங்களெல்லாம் யாரும் இல்லை. ஊருக்குப் போயிருக்காங்க. நான் அவருக்கு உறவு. கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். உன்னை எனக்குத் தெரியாது. முதலில் இடத்தைக் காலி செய்யுப்பா" என்றார்.

அதற்குள் ரஜினியைத் தேடி அவரது பொமரேனியன நாய் உள்ளே நுழைய, அதைப் பார்த்த அந்த நபர், "நாய் யாருதுப்பா?" என்று கேட்டார்.

"நான் வளர்க்கும் நாய்தான்" என்று கூற, "அப்படியா?" என்று குழைவாகக் கேட்ட அந்த நபர், வேகமாக உள்ளே சென்று தீப்பெட்டியை எடுத்து வந்து கொடுத்து உபசரிக்கத் தொடங்கிவிட்டார்.

தனது தோற்றத்தைக் கண்டு நம்பாமல் உயர்ந்த ஜாதி நாயைக் கண்டு மரியாதையைக் கூட்டிய அந்த நபரின் செயலைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்ட ரஜினி, அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டார்.

உதை

'தப்புத்தாளங்கள்' படப்பிடிப்பு. ரஜினியை ஒருவர் காலால் உதைப்பது போல் காட்சி. பல டேக்குகள் எடுத்தும் குறிப்பிட்ட அந்த ஷாட் சரியாக வரவில்லை. ரஜினியுடன் நடித்தவர் ஒரு புதுமுகம்.

பாலசந்தர் கோபத்துடன, "என்னப்பா இது, ஒருத்தனை அடிக்கச் சொன்னா கசக்குதா? இதுக்கு இத்தனை டேக்குகள் வாங்குறியே. முடியவில்லையென்றால் சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே!" என்று கேட்டார்.

அதற்கு அந்த புதுமுகம், "இல்லை..... இவரை எப்படி சார் நான் காலால் உதைப்பது? எனக்கு சங்கடமா இருக்கு" என்றார்.

"நடிப்பிற்காக அவனை உதைக்கச் சொன்னால் உனக்கென்ன? நான் சொன்னதைச் செய்ய வேண்டியதுதானே?" என்று பாலச்சந்தர் சத்தம் போட்டார்.

.....தொடரும் திரையுலக அனுபவங்கள்
அடுத்த வாரம்

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information