Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்? (பாகம் 33)

எந்த ஒரு மனிதனுக்கும் ஆத்மார்த்தமான நண்பன் இல்லாமலிருக்க மாட்டான். அது யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வதுதான் கொஞ்சம் சிரமம். வாழ்க்கையில் நிறையவே அடிபட்ட எனக்கும் ஒரு ஆத்மார்த்த தோழன் இருக்கத்தான் செய்கிறான்.

எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நெருக்கம் என்பது வேறு. ஆத்மார்த்தம் என்பது வேறு. இதற்கு அர்த்தம் சொல்லவே முடியாது. உதாரணம் வேண்டுமானால் சொல்லலாம்.

எவ்வளவோ முயன்றேன். தோற்றுப் போய் மனமுடைந்து திசை திரும்ப இருந்த என்னை நடிகனாக்கி புதுவாழ்வு கொடுத்தவர் டைரக்டர் பாலச்சந்தர் சார். அவர் என் ஆத்மார்த்த குரு. அப்பாவுக்கும் மேலானவர்.

எத்தனையோ பெண்களைச் சந்தித்தும், பலரோடு பழகியும், சிலரோடு நெருக்கமாக நடித்துமிருக்கிற என் முன் திடீரென மின்னலாய் எதிர்ப்பட்டு, என் மனதில் இடம் பிடித்து மனைவியாகிவிட்ட லதா, ஆத்மார்த்தமான மனைவி-தாய்-சகோதரி.

இதேபோல் தோழர்களில் யார் என்று சட்டென்று என்னால் சுட்டிக் காட்டிவிட முடியவில்லைதான். காரணம், நெருக்கமும் ஆத்மார்த்தமும் ஒன்றாகிவிடமுடியாது என்பதுதான்.

ஆனாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஆத்மார்த்தமான நண்பன் இல்லாமலிருக்க மாட்டான். அது யார் என்பதை அடையாளம் கண்டு கொள்வதுதான் கொஞ்சம் சிரமம். வாழ்க்கையில் நிறையவே அடிபட்ட எனக்கும் ஒரு ஆத்மார்த்த தோழன் இருக்கத்தான் செய்கிறான்.

எனது ஆத்மார்த்த அந்தத் தோழன் சிவாஜிராவ்.

ஆம்! ரஜினிகாந்தை முன்னுக்குத் தள்ளிவிட்டு பின்னணியில் அவருக்குப் பெருத்த பலமாக இருக்கும் சிவாஜி ராவேதான்.

என்ன இது? ஆத்மார்த்த நண்பன் யார் என்று கேட்டால் ரஜினிகாந்த் தன் பழைய உண்மையான பெயரைச் சொல்கிறாரே என்று நினைக்காதீர்கள்.

எனக்கு நான்தான் ஆத்மார்த்த தோழன். அதற்கு மனசாட்சி என்று இன்னொரு பெயரும் உண்டு. அவனோடு நான் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் நேரம் உறக்க காலம்தான். ஆமாம். தூக்கம் துவங்கும் முன்னும், தூங்கும் போதும்தான் எனக்கு தனிமை கிடைக்கிறது. அந்தத் தனிமையில்தான் நான் என் ஆத்மார்த்த தோழனோடு மனம் விட்டு பேசிக் கொள்கிறேன்.

- ரஜினிகாந்த் (1978-ல்)
போலி உருவங்களை உலவவிட மாட்டேன் -ரஜினி

எல்லாப் படங்களிலும் ஒரு மேனரிசத்தைச் செய்து வருவதால் உங்கள் படங்கள் எல்லாவற்றிலும் நீங்கள் ஒரே மாதிரி நடிப்பதாக அபிப்பிராயம் எழ வாய்ப்பிருக்கிறதே, அதை மாற்றிக் கொள்ளக்கூடாதா?

நடைமுறை வாழ்க்கையில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். ஒவ்வொருவருக்கென்ற தனிப் பழக்க வழக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன? அவற்றைப் படங்களில் பிரதிபலிப்பதில் என்ன தவறு? படத்துக்குப் படம் ஒரே மேனரிசத்தையா நான் கையாள்கிறேன்? இல்லையே!

அடுத்தது 'சிகரெட் மேனரிசம்' பற்றியது. என் குடும்பத்தினர் புரொவிஷன் ஸ்டோர் வைத்திருந்ததால் சின்ன வயதிலிருந்தே சிகரெட் புகைக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்போதிலிருந்தே சிகரெட் பிடிப்பதில் எதையாவது செய்து கொண்டிருப்பது எனக்கு வழக்கம். அதைத்தான் படங்களில் அப்படியே செய்தேன். ரசிகர்கள் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதால் மாறுபட்ட ஸ்டைலில் பல படங்களில் அதைத் தொடர்ந்தேன். ரசிகர்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கொடுப்பதுதானே ஒரு நடிகனின் வேலை? சிகரெட்டில் வித்தை புரியமட்டும்தான் எனக்குத் தெரியும் என்று யாராவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா? நான் நடித்து, தொடர்ந்து வெளிவரும் படங்கள்தான் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

முகத்தை நிமிர்த்தியே நீங்கள் பேசுவதில்லை என்று உங்கள் பேரில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

அது உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். பேசும்போது பலவிதமாகக் தலையை ஆட்டியோ, நேருக்கு நேராகப் பார்த்தோ, சிரித்தபடியோ பேசுவார்கள். அப்படி என் சுபாவம் கீழே பார்த்தபடி பேசுவது. என்னுடைய இயல்பான போக்கை மாற்றி முகத்தைத் திருப்பிச் செயற்கையாகப் பேசுவதை நான் விரும்பாததாலேயே தொடர்ந்து இப்படிப் பேசி நடித்து வருகிறேன்.

என் நடிப்பையோ, பாத்திரத்தையோ இந்தச் சுபாவம் கெடுத்துவிடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா என்ன?

வளர்ந்துவிட்ட இந்த நிலையில் சில குறிப்பிட்ட பாத்திரங்களில்தான் நடிப்பது என்று உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு இமேஜை வளர்க்க விரும்புகிறீர்களா? அல்லது எல்லாப் பாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறீர்களா?

ரஜினி இமேஜ் என்பதையே நான் வெறுக்கிறேன். என்னை அப்படி ஒரு வட்டத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள நான் என்றுமே விரும்பியதில்லை. அதனால் எல்லாவிதமான பாத்திரங்களிலும் திறமை காட்டவே நான் விரும்புகிறேன். அதைப் போலத்தான் நடிகனாகி விட்டதால் நிஜ வாழ்க்கையிலும் ரஜினிகாந்த் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று போலி உருவத்தை உலவ விடவும் நான் எண்ணவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நடிகன் என்று பட்டம் சூட்டிக் கொண்டு மற்றவர்களிடமிருந்து விலகி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. நான் ரஜினிகாந்த் - ஆசாபாசங்களுடன் சாதாரண வாழ்க்கை நடத்தும் சராசரி மனிதன்.

உங்களுக்கு ஏகப்பட்ட காதலிகள் இருக்கிறார்களாமே?

என்னை விரும்பும் பெண் ரசிகைகளைக் கருத்தில் அல்லது கணக்கில் கொண்டு நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்றால் நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் கால்ஷீட் பிரச்னைகளைத் தீர்க்கவே நேரமில்லாதபோது காதலிப்பது (அதுவும் பல காதலிகளோடு) எப்படி சாத்தியமாகும்?

"எம்.ஜிஆருக்குப் பிறகு எனக்குத்தான் கைதட்டல்'' என்று நீங்கள் குறிப்பிட்டதாகப் பத்திரிகையொன்றில் வெளிவந்துள்ள செய்தி உண்மையா?

அப்பட்டமான பொய். "எம்.ஜி.ஆருக்குப் பிறகு எனக்குத்தான் கைதட்டல்" என்று எந்த நடிகனாவது சொல்ல முடியும் என்ற எண்ணத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் நான். அப்படியிருக்க, நான் எப்படி அந்த மாதிரியான கருத்தை வெளியிடுவேன்?

இன்னும் சில சந்தேகங்களைத் தௌ¤வுபடுத்துகிறார் ரஜினி....

அடுத்த இதழில்...

Previous Page

Previous

 

Next Page

 

Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information