Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது (பாகம் 23)

"ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."

பீட்டர் செல்வக்குமார் கூறியது:

அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை.

படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது.

படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார்.

ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.

ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம் ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு.

ஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே மகிழ்ச்சி.

மகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன்.

'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார்.

ஜானி போலீஸ§க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார்.

அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். "என்ன நடிப்பு..... என்ன நடிப்பு...." என்று

ஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, "அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன்.

'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7 மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின் மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு.

இதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார்.

'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷ¨வைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். "என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலை?" என்று சங்கடப்படுவார். "உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார்.

"ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."

'பாலு ஜேனு....' இது ரஜினியின் ஐந்தாவது படம் என்றாலும், தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் பெரிய வேடத்தில் ரஜினி நடித்த முதல் படம் இது. இதனைத் தயாரித்தவர் கே.ஆர். பாலன். சில ஆண்டுகளுக்கு முன் காலமான இவர் எம்.ஜி.ஆர். நடித்த தாயின் மடியில், கடவுளைக் கண்டேன், நாம் மூவர், சபாஷ் தம்பி ஆகியற்றைத் தயாரித்தவர். 'பாலன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் டப்பிங், ரிக்கார்டிங் தியேட்டர்களைக் கொண்ட நிறுவனம் அவர் தொடங்கியதுதான். அதை அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்த அந்த விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், பாலனின் கன்னடப் படத்திற்காக மைசூரில் இருந்தபோது தனக்கேற்பட்ட ஆபத்திலிருந்து பாலன் காப்பாற்றியதை நினைவுகூர்ந்து பேசினார். அந்தப் படத்துடன் ரஜினியின் தொடர்பு பாலன் குடும்பத்துடன் நின்று விடவில்லை. 'அதிசயப் பிறவி' உட்பட சில படங்களின் டப்பிங்கை பாலன் ஸ்டூடியோவில் வைத்துக் கொண்டார். பாலனின் மகன் வேலன், ரஜினியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர்.

கே.ஆர். பாலன் உயிரோடிருந்தபோது ரஜினி சம்பந்தப்பட்ட பழைய விஷயங்ளை நினைவுகூர்ந்தார்.

"தமிழில் வெளிவந்த 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தை நாங்கள் கன்னடத்தில் 'பாலு ஜேனு' என்று உருவாக்கினோம். தமிழில் சுஜாதா நடித்த வேடத்தில் கன்னடத்தில் ஆர்த்தி நடித்தார். முத்துராமன் வேடத்தில் கங்காதர் நடித்தார். தேங்காய் சீனிவாசன் வேடத்திற்கு பம்பாயைச் சேர்ந்த அனில்குமார் என்பவரைத் தேர்ந்தெடுத்தோம். இவர்களைக் கொண்டு சுமார் 4 ஆயிரம் அடிகள் வரை படமாக்கி விட்டோம். ஆனால் அனில் குமாரின் நடிப்பும், அவரது நடிவடிக்கைகளும் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் அவரைத் தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகரைத் தேடினோம்.

ஆர்த்தி அப்போது பிஸி நடிகை. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட ஒட்டு மொத்தமாக கால்ஷீட் வாங்கியிருந்தோம். அனில் குமாருக்கு பதிலான நடிகரைத் தேடியபோது ரஜினியைப் பற்றி தகவல் வந்தது. உடனே வரச் சொன்னோம். ரஜினி தன் புகைப்படங்களைக் காண்பித்தார்.

அவர் புகைப்படங்கள் மட்டுமின்றி, அவரது தோற்றமும், காட்டிய மரியாதையும் முதல் சந்திப்பிலேயே பிடித்து விட்டது. அப்போதுதான் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்து முடித்திருந்தார். வேறு எதுவும் பேசாமல் அவரை மைசூர் போக பணமும் கொடுத்து அனுப்பினோம்.

எங்களிடம் விடை பெற்றுக் கொண்ட ரஜினி, மைசூர் செல்ல பஸ் ஏதும் கிடைக்காமல், ஒரு லாரியைப் பிடித்துச் சென்று மறுநாள் காலை சரியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தைத் தழுவினாலும் கதையை மாற்றாமல் அப்படியே படமாக்கினோம். அதனால் எங்கள் திட்டப்படி படத்தை முடித்துவிட்டோம்.

படப்பிடிப்பில் ரஜினியுடன் எத்தனை பேர் கலந்து கொண்டாலும், நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரஜினியே. படத்தில் கதாநாயகி ஆர்த்தி தனது கல்லூரி பருவத்தில் தவறு செய்து விடுகிறார். அதை ரஜினி படமெடுத்து விடுகிறார். ஆர்த்திக்கு திருமணமானபின் தான் எடுத்த படத்தைக் காட்டியே அவரை மிரட்டுகிறார். இப்படி வில்லத்தனமான வேடம் அது.

இதுவரை ரஜினி நடித்த படங்களில் எத்தனை ஸ்டைல் உண்டோ, அத்தனையும் எங்கள் கன்னடப் படத்தில் உண்டு. நாங்கள் நினைத்ததைவிட பல மடங்கு தனது கேரக்டரை பிரமாதப்படுத்திவிட்டார் ரஜினி. இதில் ரஜினியின் மற்றொரு சாதனை, ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கியதுதான்.

இப்படிப் பல வழிகளில் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரஜினிக்கு மைசூரில் ஒரு சோதனை வந்தது. அதனை வெற்றிகரமாக அவரே சமாளித்தார். நாங்களும் உதவினோம்.

படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இன்றி நடித்த ரஜினியின் வீரத்தைக் கண்ட நாங்கள், அதை நேரிலும் பார்த்தோம். படத்தில் நடித்தவர்களுக்காக மைசூரில் 'மயூரா' ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ரஜினியும் அங்குதான் இருந்தார்.

என்ன நடந்தது ஹோட்டலில்...?
வரும் இதழில்.....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information