Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

சினிமா ஆசை (பாகம் 3)

இதயம் வேகமாகத் துடிதுடிக்க மெதுவாகக் கதவைத் தட்டினார் ரஜினி. கதவு திறந்தது. அப்பா, அண்ணன்கள் கைகள் நீண்டன. ரஜினி போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் தூக்கமும் பறிபோனது. அதற்குப் பின் ரஜினி வீட்டிற்கு வெளியே தூங்குவதே இல்லை. நினைத்தது போல் சினிமாவிற்கு போக முடியவில்லை.

Rajinikanth'குருஷேத்ரா' நாடகத்தில் நடித்துவிட்டு வந்தபின் ரஜினிக்கு சில நாட்களாக சரியான தூக்கமில்லை. நாடகத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்த கைதட்டலும் கரகோஷமும் பாராட்டுகளுமே அதற்குக் காரணம். அந்த தூக்கமின்மையே 'நாமும் சினிமாவில் நடித்தால் என்ன' என்ற சிந்தனையை உருவாக்கியது.

ரஜினியை சினிமாவில் நடிக்கத் தூண்டிய காரணங்களில் இன்னொன்று, அவர் கணக்கு வழக்கின்றி பார்த்த பல மொழிப்படங்கள்தாம்.

இந்தியாவின் பெருநகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆங்கிலம், இப்படிப் பெருவாரியான மொழிப்படங்களைப் பார்க்க வசதியும், வாய்ப்பும் உள்ள இடம் பெங்களூர்தான். ஆனால் இத்தனை மொழிப்படங்கள் பார்க்க ரஜினிக்கு நேரம் வேண்டுமே, அதுவும் பள்ளியில் படிக்கின்றபோது! அதனாலென்ன, வகுப்புகளை கட் அடித்தால் போயிற்று! நாம் சரியாகப் படிக்க வேண்டும்; அதில் குறை வைக்கக் கூடாது. மற்றபடி வகுப்பை கட் அடித்து படம் பார்ப்பதால் யாருக்கும் நஷ்டம் இல்லையே! என்ற ரீதியில் உருவான ரஜினியின் சினிமா பார்க்கும் சிந்தனைக்கு நியாயங்கள் தோன்றின. இதில் அவருக்குள் ஓரே பிரச்னை பணம். வீட்டில் கேட்டால் நிச்சயமாய்க் கிடைக்காது. ரஜினியைத் தவிர வீட்டிலுள்ள அனைவரும் சினிமா பார்ப்பதற்கு எதிரானவர்கள். நூறு நாட்களைக் கடந்து, வெள்ளி விழா காணும் புராணப் படங்களை மட்டும் குடும்பத்தோடு போய்ப் பார்ப்பார்கள். அது ரஜினியின் மனவேகத்திற்கு ஒத்து வராத ஒன்று.

ஏதாவது காரணம் சொல்லி வீட்டிலேயே 50 பைசா அபேஸ் செய்வார். காரணம் சினிமா டிக்கட் 50 பைசாதான்.

வகுப்பு நேரத்தில் கட் அடிப்பதற்காக ஆசிரியருக்கு அவ்வப்போது கடிதம் எழுதித் தருவார் ரஜினி. ஒரு நாள் அண்ணன் சத்யநாராயணாவிடம் தியேட்டரிலேயே மாட்டிக் கொண்டார் ரஜினி. பள்ளிக்கு அடிக்கடி மட்டம் போடுவது அவருக்குத் தெரிந்து விட்டது. அதனால் வந்த வினை, ரஜினிக்கு செமத்தியான அடி, உதை. அந்த அடிகளால் ஏற்பட்ட தழும்பின் அடையாளத்தை இன்றைக்கும் ரஜினியின் வலது முழங்கையில் காண முடியும்.

அப்புறமென்ன! தம்பியை இப்படி அடித்துக் காயப்படுத்தி விட்டோமே என்று அண்ணன் பட்ட வேதனைகள் கொஞ்சமா? இந்த சம்பவத்திற்குப் பின் ரஜினி சினிமாவுக்குப் போவது நின்றதா? இல்லை! அது எப்படி நிற்கும்? எல்லாம் மாலைக் காட்சி, பள்ளி முடித்து வீடு திரும்புகையில். ஆனால் பார்த்ததெல்லாம் பாதிப் பாதி படங்கள்தான். எப்படி?

தியேட்டரில் தன்னை யாரேனும், ஏன் தனது அண்ணனே அடையாளம் கண்டு கொள்ளலாமென்று படம் ஆரம்பித்த பின்பே, இருட்டில் நுழைவார். படம் முடிந்து வீட்டுக்குப் போகத் தாமதமாகிவிடும் என்று இடைவேளைக்குப் பின் வருகின்ற படத்தில் பாதியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விடுவார். இப்படிப் பாதிப் படம் பார்த்து திருப்திபட்டுக் கொண்ட ஓரே சினிமா ரசிகர் ரஜினியாகத்தானிருக்க முடியும்.

சமாளிப்புத் திலகம்

Rajinikanthஒரு நாள் கன்னடப் படமொன்று பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போன ரஜினி, படம் முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே எழுந்துவிட்டார். சைக்கிளை எடுப்பதற்காக அதற்குரிய இடத்தில் வந்து பார்த்தால் சைக்கிள் இருந்தது. டைனமோ மட்டும் இல்லை. யாரோ அதைக் கழற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிக்கு அப்போது வந்த கோபத்தில் சைக்கிள் நிறுத்துமிடப் பொறுப்பாளரை ஒரு வழி பண்ணியிருப்பார். ஆனால் வீட்டு நினைவு வந்து கோபத்தைக் காணாமல் செய்து விட்டது. வீட்டில் டைனமோ எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற பய சிந்தனையிலேயே புறப்பட்டார். வழியில் அதற்கு ஒரு உபாயமும் கிடைத்தது.

நேராக சைக்கிளைக் கொண்டு சென்று வீட்டின் முன் நிறுத்திய ரஜினி, ஒரு கல்லை எடுத்து வீட்டினுள் இருக்கின்றவர்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓங்கி சைக்கிளை அடித்தார். சட்டென்று அருகே பதுங்கிக் கொண்டார்.

உள்ளே இருந்தவர்கள் "என்ன இப்படி சத்தம் வருது?" என்று பதறியபடி வெளியே வந்து சைக்கிளைப் பரிசோதித்தபோது டைனமோ இல்லை என்பது தெரிய வந்தது. ரஜினியும் அப்போதுதான் வெளியே எங்கோ சென்றுவிட்டு வருவதுபோல் வந்து 'என்னாச்சு', என்று தெரியாததுபோல் விசாரித்து சங்கடப்பட்டார். ஆனால் இந்த நடிப்புக்கும் ஒரு முடிவு வந்தது.

குறட்ட

இரவுக் காட்சியில் படம் பார்ப்பது என்று தன் திட்டத்தை மாற்றிக்கொண்ட ரஜினிக்கு, பார்க்கக் கிடைத்த வாய்ப்பெல்லாம் பழைய படங்கள். அதுவும் வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள 'பசவேஸ்வரா' என்ற டூரிங் தியேட்டரில். படம் பழையதானால் என்ன, சினிமா சினிமாதானே. அதற்கு ஈடு இணை அதுவேதான்.

ரஜினி தன் தந்தையோடு வீட்டுக்கு வெளியே படுத்துக் கொள்வது வழக்கம். வீட்டிற்குள் இட நெருக்கடி. அதனால் ஒன்பது மணிக்கே ரஜினி தந்தையோடு வெளியே படுத்துக் கொள்வார். சரியாக ரானோஜி ராவிடமிருந்து குறட்டை சத்தம் வந்துவிடும். அதுதான் ரஜினிக்கு சிக்னல். அப்போதும் அவரது கண்கள் மூடிக் கொண்டுதானிருக்கும். மனம் மட்டும் பசவேஸ்வரா டூரிங்கில்.

ரஜினி ஒரு முறை இந்த விஷயத்திலும் மாட்டிக் கொண்டார். எப்படி?

பத்தே கால் மணிக்கு தியேட்டரில் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு எழும் ரஜினியிடம் எப்போதும் மூன்று தலையணை இருக்கும். மூன்றையும் வரிசையாகப் படுக்க வைத்துப் போர்வையால் போர்த்தி (சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோமே. நம்மில் பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம்) குட்பை சொல்லி விட்டு தியேட்டரை நோக்கி ஓடுவார். படம் பார்த்து விட்டு, முழுப்படம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு விடுவார். காரணம் படம் பார்த்துத் திரும்பும் மக்களது நடை, பேச்சு, ஓசை தந்தையை அசைத்து விடும். சில சமயம் விழித்துக் கொள்வதுமுண்டு. அதனால் அந்த ஓசையால் தந்தை பக்கத்து படுக்கையைப் பாதுகாப்பு உணர்வால் கவனிக்கும் போது ரஜினி தவறாமல் இருப்பார்.

'ஜெகதேகவீரனி கதா' என்றொரு படம். அதன் விறுவிறுப்பான காட்சிகள் ரஜினியை கிளைமாக்ஸ் வரை உட்கார வைத்துவிட்டது. படம் முடிந்து வணக்கம் கார்டையும் பார்த்து விட்டார். பயத்தோடு வேகமாக வெளியே வந்தார். மழை தூறிக் கொண்டிருந்தது. எடுத்தார் வீட்டுக்கு ஓட்டம். ஆனால் அங்கே வெளியே அப்பாவும் இல்லை. படுக்கையும் இல்லை. மழை பெய்த புண்ணியத்தால் வீட்டிற்குள் அடைக்கலம். இதயம் வேகமாகத் துடிதுடிக்க மெதுவாகக் கதவைத் தட்டினார் ரஜினி. கதவு திறந்தது. அப்பா, அண்ணன்கள் கைகள் நீண்டன. ரஜினி போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் தூக்கமும் பறிபோனது. அதற்குப் பின் ரஜினி வீட்டிற்கு வெளியே தூங்குவதே இல்லை. நினைத்தது போல் சினிமாவிற்கு போக முடியவில்லை.

இது போன்ற ரஜினியின் பால்ய பருவத்துச் சம்பவங்களைச் சிரித்துக் கொண்டே நினைவு கூர்ந்த சத்யநாராயணா, ரஜினியின் நடிப்புப் பிரவேசத்திற்கு வந்தார்.

''ரஜினி திரைப்படக் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்தபோது, எனக்கு சிறிதும் சம்மதமில்லை. என் தந்தையோ கூடவே கூடாதென்றார். ஆனால் ரஜினியின் பிடிவாதத்திற்கு முன்னால் எங்களது சம்மதமின்மை சாதாரணமாகிவிட்டது. முதலில் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ரஜினியை விட்டு சிறிது காலத்திற்காவது நாம் பிரிந்திருக்க வேண்டுமே என்றுதான் முதலில் சங்கடப்பட்டேன். என் தந்தை சமாதானமாகாவிட்டாலும் (காரணம் குடும்பச் சூழ்நிலை) ரஜினிக்கு நான் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன். ரஜினியின் கண்டக்டர் நண்பர் ராஜ்பகதூர் அவருக்கு உதவியது போக, நானும் என்னால் முடிந்த தொகையை அவ்வப்போது அனுப்பி வைத்தேன்.

'அபூர்வ ராகங்கள்' படத்தில் பாலசந்தர் ரஜினியை அறிமுகம் செய்திருக்கிறார் என்ற செய்தி வந்ததும் என் சந்தோஷத்தைவிட என் தந்தையின் சந்தோஷம்தான் எனக்குப் பெரிதாக இருந்தது. ரஜினியின் மீது அவருக்கு இருந்த அவநம்பிக்கைதான் அதற்கு காரணம்.

'அபூர்வ ராகங்கள்' பெங்களூரில் திரையிடப்பட்டபோது, குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றிருந்தோம். எங்களோடு தந்தையும் வந்திருந்தார். அப்போது அவருக்கு பார்வை சரியாகத் தெரியாது. ஆனாலும் நான் ரஜினியை அவருக்கு திரையைக் காட்டி அடையாளம் சொன்னபோது, அவருக்குத் தெரிந்ததோ இல்லையோ, 'தெரியுது, தெரியுது' என்று குழந்தையைப் போல் ரசித்து மகிழ்ந்தார்.

பாதிப்பை ஏற்படுத்திய எம்.ஜி.ஆரும், சிவாஜியும்

இன்றைக்கு ரஜினியும், கமலும் எப்படி ரசிகர்களிடையShivajiே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்களோ, அது போல் இவர்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரும். சிவாஜியும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ரஜினியை இருவருமே பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் வீரம், அழகு, குணம் ரஜினியை மயக்கியிருக்கிறதென்றால், சிவாஜியின் நடிப்பு அவர் மீது அபிமானம் கொள்ளச் செய்திருக்கிறது. நாடகத்தில் நடித்த போதும் சினிமாவிற்கு வந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்த பின்பும் சிவாஜியின் நடிப்புச் சாயலிலிருந்து விடுபட சற்று சிரமமாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கு ஸ்டைல் நடிப்புதான் அவரது தனித்தன்மைக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது.

ரஜினி சின்னஞ்சிறு வயதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி 'படத்தில் நன்றாக நடிப்பார். பிரமாதமாக சண்டை போடுவார். நிஜ வாழ்வில் ஏழை மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்வார். அதனால் மக்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலம். அவரது படங்கள் வெளியானால் தியேட்டரில் டிக்கெட் கிடைப்பது சிரமம்' என்றெல்லாம் கேள்விப்பட்டு அவரது படங்களைப் பார்க்காமலே மோகம் கொண்டிருக்கிறார்.

ஒரு சமயம் பெங்களூரிலிருந்து மூன்று பேர் சென்னை வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புவதற்குள் வைத்திருந்த பணம் பறிபோய் விட்டது. எப்படி ஊர் திரும்புவது என்று மலைத்துப் போய்விட்டார்கள். எங்கெல்லாமோ அலைந்து பார்த்தார்கள். யாரிடமெல்லாமோ உதவி கேட்டுப் பார்த்தார்கள். அவர்களுக்கு ஓர் உபாயம் மட்டும் யாரோ சொன்னார்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்தால் வழி கிடைக்குமென்று.

M.G.R.அதன்படி எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அங்கே காவலாளி அவர்களைக் கேட்டிலேயே தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் காத்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு புறப்பட்ட போது வாசலில் நின்ற இவர்களைப் பார்த்திருக்கிறார். 'என்ன விஷயம்?' என்று கேட்டிருக்கிறார். இவர்களும் தங்கள் பரிதாபக் கதையைக் கூறினார்கள். எம்.ஜி.ஆர். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, வீட்டினுள் இருந்த தனது உதவியாளரை அழைத்து அவரது காதில் ஏதோ சொல்லியிருக்கிறார். அடுத்து இவர்களிடம், "இன்னிக்கு இங்கேயே தங்கி இருங்க. நாளைக்கு நீங்களெல்லாம் ஊர் திரும்பலாம்" என்று சொல்லியிருக்கிறார். மூவரும் கண்களில் நீர் மல்க எம்.ஜி.ஆரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். எம்.ஜி.ஆர். அதற்கு ஒரு புன்னகையை வீசிவிட்டு காரில் போய்விட்டார்.

மறுநாள் காலையில் ரயிலில் பெங்களூருக்குச் செல்வதற்கான மூன்று டிக்கெட்டுகளுடன் செலவுக்குப் பணமும் தந்து மூவரையும் எம்.ஜி.ஆரின் உதவியாளர் அனுப்பி வைத்தார். புறப்படுவதற்கு முன் வீட்டினுள் இருந்த எம்.ஜி.ஆரிடம் நன்றி சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், "ஏதாவது கஷ்டம் இருந்தா வாங்க. நல்ல படியா போயிட்டு வாங்க!" என்று கூறி அனுப்பி வைத்தாராம். இது ராஜா என்ற ரஜினியின் நண்பனானவர் எம்.ஜி.ஆரைப் பற்றி ரஜினியின் மனதில் சிறு வயதில் போட்ட விதை. இதற்குப் பின் எம்.ஜி.ஆர். படம் பார்க்கும் ஆவல் ரஜினியிடம் மிகுதியானது.

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தை பார்த்தாரா ரஜினி? விவரம் அடுத்த இதழில 

Previous Page

Previous

 

Next Page

 

Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information