Rajini Story
Rajini Story Titles
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 18A
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Part 53
Part 54
Part 55
Part 56
Part 57
Part 58

  Join UsSubscription

 Subscribe in a reader

Rajini Story - Part 17

ரஜினியின் ரசிகை நடிகை ராதா

'ராஜாதி ராஜா' படத்தில் நானும் ரஜினியும் சேர்ந்து நடனம் ஆடினோம். "எப்படி நான் சரியா நடனம் ஆடினேனா?" என்று ரஜினி ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம்! "ரொம்ப பிரமாதமா ஆடினீங்க. நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலேயும் ரொம்ப முன்னேறிட்டீங்க!" என்றேன்.

பெங்களூரில் உள்ள 'கோடே' மதுபான தயாரிப்பாளர
் கொடேஸ்வரா, பெரும் பணக்காரர். அவர் ரஜினியை வைத்து படமெடுக்க விரும்பி என்னைப் பிடித்தார். நான் அவரைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் சென்னைக்கு அழைத்துச் சென்றேன்.

ரஜினி கொடேஸ்வராவிடம் நாசூக்காக மறுத்துவிட்டு, என்னைத் தனியாக அழைத்து, "உனக்காக என்னிடம் எது வேண்டுமானாலும் கேள். யாருக்காகவும் கால்ஷீட் மட்டும் கேட்காதே" என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அதுவும் ஒரு வகையில் நல்லதாகப் போனது. இல்லையென்றால் அந்தத் தயாரிப்பாளருக்கு ரஜினி ஒத்துக்கொண்டு இருந்தால், அப்புறம் அடுத்தடுத்து சிபாரிசுகள் வந்து எங்கள் நட்பையே கெடுத்து இருக்கும்" என்றார் ராஜ்பகதூர்.

(ராஜ்பகதூரைச் சந்திக்க உதவியாக இருந்தவர் சிவாஜி நகர் பஸ் நிலையத்தில் டிக்கெட் ஆய்வாளராக இருக்கும் ஈ.நாகலிங்கம். பெங்களூரிலுள்ள அத்தனை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தவர் பத்திரிகையாளரான தஞ்சை மா.ராஜேந்திரன்)

ரஜினி ரசிகை ராதா

திருமணத்திற்கு பின் மும்பையிலிருக்கும் நடிகை ராதா ரஜினியின் மீது எத்தகைய மதிப்பு கொண்டிருந்தார் என்பதைச் சொன்னால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ரஜினிகாந்தின் லட்சக்கணக்கான ரசிகர், ரசிகைகளில் வித்தியாசமான ஒரு ரசிகை. திருவனந்தபுரம் அருகிலுள்ள கல்லறாவைச் சொந்த ஊராகக் கொண்ட அந்த ரசிகை உதய சந்திரிகா. அது அவர் நிஜப் பெயர். சினிமாவிற்கு வந்தபின் ராதா. அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ரஜினியின் தீவிர ரசிகை. அவர் ரஜினியின் 'ஆடு புலி ஆட்டம்' படத்தை முதன் முதலில் பார்த்துவிட்டு, தனது தாயாரையும் அக்காக்கள் அம்பிகா, மல்லிகாவையும் இரவு முழுவதும் தூங்கவிடவே இல்லை.

"ஆஹா! என்னா ஸ்டைல்! மனுஷன் என்னமா சுறுசுறுப்பா..... பிரமாதமா சண்டை போடுறாரு. அதைவிட நல்லாவே 'ரேப்பிங்' பண்றாரு. நான் ரஜினியோட ரசிகை ஆயிட்டேன். அவருடைய படங்கள் கிடைச்சா ஆல்பம் பண்ணப் போறேன்" என்று சொன்னது மட்டுமல்லாமல், பத்திரிகைகளில் வரும் ரஜினி படங்களை வெட்டி ஆல்பம் தயாரிக்க ஆரம்பித்தார். அன்று முதல் ரஜினி எந்த வேடத்தில் நடித்து படம் வெளி வந்தாலும் ராதா அதைத் தவற விடுவதில்லை. என்றாவது ஒருநாள் ரஜினியைப் பார்த்துப் பேச முடியுமா என்று கனவுகளில் மிதந்த அன்றைய டீன் ஏஜ் பெண் ராதா, நடிகையாகி ரஜினியைச் சந்தித்தபோது பேசினாரா?

ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட, தான் தயாரித்த ஆல்பம்,
புகைப்படங்களை எல்லாம் நம்மிடம் எடுத்து வந்து காட்டி தன்னை ரஜினியின் ரசிகை என்பதை நிரூபித்துக் கொண்ட ராதா, ரஜினியோடு தனக்கேற்பட்ட சந்திப்புகள் பற்றி சொன்னார். திருமணத்திற்கு முன் ராதா சொன்ன விஷயங்கள் இவை.

"ரசிகையாக இருந்தபோது ரஜினியோடு எவ்வளவோ விஷயங்கள் பேச வேண்டுமென்று கனவுகளில் மிதந்த நான், நடிகையான பிறகு ஏதோ சில வார்த்தைகள் பேசியதோடு சரி. அவரும் அப்படித்தான்.

எங்களது முதல் சந்திப்பே ஏவிஎம் ஸ்டுடியோவில் தான். "எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில் நானும், அக்காவும் முதன் முறையாக இணைந்து ரஜினியோடு சேர்ந்து நடித்தோம். அதற்கு முன்பே நான் ஒரு நடிகை ஆகிவிட்டேன் என்றாலும் ரஜினியைச் சந்தித்துப் பேச வாய்ப்பே கிடைத்ததில்லை. 'எங்கேயோ கேட்ட குரல்' படப்பிடிப்பின் போதுதான் என் அக்கா ரஜினியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் "ராதா உங்கள் தீவிர ரசிகையும் கூட" என்றார். அப்போதுதான் நான் ரஜினியிடம், "உங்களோடு இணைந்து நடிக்கிற இந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்றேன்.

நான் உண்மையிலேயே அவருடன் இணைந்து நடிப்பது பற்றி சந்தோஷம் கொண்டேன். ஆனால் ஜாலியாக எதுவும் பேச முடியாமல் அமைதியாகவே இருந்தேன்.

நான் ரஜினிக்கு ஜோடியாக பாயும்புலி, சிவப்பு சூரியன், துடிக்கும் கரங்கள், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் தலையைக் கோதிவிட்டு ஸ்டைல் காட்டினால், "என்ன ரஜினி ஸ்டைலா?" என்று கேட்பேன். யாரைப் பார்த்தாலும் அவர் ஸ்டைலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டேன்.

'ராஜாதி ராஜா' படத்தில் நானும் ரஜினியும் சேர்ந்து நடனம் ஆடினோம். "எப்படி நான் சரியா நடனம் ஆடினேனா?" என்று ரஜினி ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம்! "ரொம்ப பிரமாதமா ஆடினீங்க. நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலேயும் ரொம்ப முன்னேறிட்டீங்க!" என்றேன். அதுபோல் நீண்ட வசனக் காட்சிகள் படமாகும் போது, இருவரும் ஒத்திகையில் வசனம் பேசிப் பார்த்துக் கொண்டு நடிப்போம். அந்த வசனங்களை மிகவும் உணர்ச்சிபூர்வமாக ரஜினி தனிமையில் பேசிப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே, அதை நேரடியாகப் பார்த்து அனுபவித்தால்தான் புரியும். நகைச்சுவைக் காட்சிகளிலும் அப்படித்தான். சாதாரணமாகவே நகைச்சுவைக்கு நான் நல்லதொரு ரசிகை. ரஜினி நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும்போது என்னை மறந்து சிரித்து விடுவேன்.

ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து பல வருடங்களாக ரஜினி கறுப்பு உடை மட்டுமே அணிந்து கொண்டிருந்தார். அவருடைய திருமணத்திற்குப் பின்பு தான் படிப்படியாக உடை அணியும் பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சில நிகழ்ச்சிகளில் ரஜினி சந்தன கலர், வெள்ளை நிற உடைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவருடைய ரசிகை என்ற வகையில் மகிழ்ச்சியடைந்தேன்.

'ராஜாதி ராஜா' படத்தில் ரஜினிக்கு விதம் விதமான ஆடைகள். ஆனால் பல ஆடைகளுக்கு காக்கி கலர் ஷ மட்டும் மாற்றவே இல்லை. "என்ன சார், இந்த ஷவை மாற்றவே மாட்டீர்களா?" என்று நான் சொன்னதும், "ஏம்பா ராதாவே சொல்லிடுச்சு. ஷவை மாத்துங்கப்பா" என்று சொல்லி ஷவை மாற்றினார். ஒரு விஷயம் அவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். மிகவும் எளிமையான மனிதர் அவர். தயாரிப்பாளர்கள் பக்கம் உதவியாக இருப்பார். மனிதாபிமானம் உள்ளவர். ஆனால் யாருடைய மனசையும் புண்படுத்தாத அளவில் அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த பண்பே அலாதி. எப்போது பார்த்தாலும் தத்துவங்களாகத்தான் பேசிக் கொண்டிருப்பார்.

"நம்ம வாழ்க்கையில் நாம அனுபவித்துக் கொண்டிருக்கும் பணம், பங்களா, கார், எடுபிடி ஆட்கள் எல்லாமே கனவுதான். இப்படிக் கனவு கண்ட பிறகு கண்ணை விழித்துப் பார்க்கும்போது, எப்படி ஒன்றும் தெரியாதோ, அதுபோல தான் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாது" என்றெல்லாம் அவர் என்னிடம் சொல்லும்போது ஆரம்பத்திலுள்ள பழக்க வழக்களிலிருந்து இப்போது மாறுபட்டு காணப்படுகிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.

'நினைவே ஒரு சங்கீதம்' வெற்றி விழாவின் போது 'எங்க சின்ன ராசா' படத்தில் என் நடிப்புப் பற்றி ''ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க" என்று மனமாரப் பாராட்டினார். அந்த பாராட்டானது ஒரு பலூன் மேலே உட்கார்ந்து ஆனந்தமாகப் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

ரஜினியை எப்போது சந்தித்தாலும் அவருடன் நீண்ட நேரம் பேச வேண்டுமென்று தோன்றும். ஆனால் அவரைப் பார்த்தாலே பேச நா எழாது. அப்போது நான் ஒரு ரசிகை ஆகிவிடும் நிலைதான்.

என் அக்கா அம்பிகா கூட அமெரிக்காவிலிருந்து டிரங்காலில் பேசுவாள். "என்ன உன் சூப்பர் ஸ்டார் எப்படிடீ இருக்காரு? அவருடன் நடிக்கும் போதாவது ரசிகைன்னு சொல்லிருக்கியா? உண்மையைத் தெரிவிக்கிறீயா?" என்று கேட்பாள். "அட சும்மா இருக்கா" என்று பதில் சொல்லிவிடுவேன். அவள் அப்படி கேட்டதிலும் ஒரு நியாயம் உண்டு. நாங்கள் இருவருமே பள்ளியில் படிக்கும் போது வகுப்பை 'கட்' அடித்துவிட்டு ரஜினி படத்தைப் போய்ப் பார்ப்போம்.

'பிக் பாக்கெட்' படப்பிடிப்பிற்காக மைசூருக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, ஒரு நாள் இரவு 7.00 மணியளவில் என் அக்கா அம்பிகாவிடமிருந்து (அமெரிக்கா) போன் வந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கையில், அம்பிகா வழக்கம் போல், "உங்க சூப்பர் ஸ்டார் எப்படியிருக்கார்?" என்று கேட்க "அக்கா! ரஜினி பக்கத்து ரூமில்தான் தங்கியிருக்காரு. 'ராஜாதி ராஜா' படப்பிடிப்புக்கு வந்திருக்கார். நான்தான் அதிகம் பேசுவதில்லை. உன்னைக் கேட்டு நலம் விசாரித்தார். நீயே டெலிபோனில் பேசு" என்று பக்கத்து ரூமில் இருந்த ரஜினியிடம், "அக்கா உங்களிடம் பேச விரும்புறாங்க" என்றதும் அவர் வர, டெலிபோன் ரிசீவரை அவர் கையில் கொடுத்தேன். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

"உங்க வீட்டுக்காரரைப் பார்க்க ஆசையாயிருக்கு" என்று ரஜினி கேட்க... அதற்கு அம்பிகா பதிலளிக்க, "ஓகோ, ஜூன் மாதம் வருவீங்களா, அப்போ உங்களை கண்டிப்பா பார்க்கிறேன்" என்று பேச்சை முடித்தார்.

"துருதுருவென்று யாரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் உங்க அக்கா அம்பிகா இப்போ சரியான நேரத்துலே கல்யாணம் முடிச்சுக்கிட்டு அமைதியாயிருக்கறாங்க. அதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு" என்றார் ரஜினி.

ரஜினியைக் கண்டால் எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் பிடிக்கும். எங்க அம்மாவிடம் ரஜினி அன்பாகப் பேசுவார். இதுபோல் குடும்பப் பாங்காகப் பழகுவதிலும், மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வதிலும் அவருக்கு நிகர் அவரே!

இன்னும் பல சுவாரசியமான தகவல்கள்

வரும் இதழில்.....

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View