Rajini Story
Rajini Story Titles
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 18A
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Part 53
Part 54
Part 55
Part 56
Part 57
Part 58

  Join UsSubscription

 Subscribe in a reader

Rajini Story - Part 19

கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

நான் ஆன்மிகவாதிதான். கடவுள் உண்டு. அவருக்கு உருவமோ, பெயரோ கிடையாது என்று நம்புபவன். எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு இல்லை. சிறு வயதிலிருந்தே அப்படி வளர்ந்துவிட்டேன்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பின் நான் வேறொர
ு வேலையாக ஏவிஎம் சென்றிருந்தேன். அங்கு ரஜினி டப்பிங் தியேட்டரில் இருப்பதாக அறிந்தேன்.

ரஜினியைப் போய்ப் பார்த்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. டப்பிங் தியேட்டருக்கு வெளியே இருந்தவர் என்னைத் தடுத்தார். ''ரஜினியைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்றேன். தியேட்டருக்குள் சென்று பின்புறமாக அமர்ந்தேன்.

டப்பிங் பேசிவிட்டு தற்செயலாக பின்புறமாகத் திரும்பிப் பார்த்த ரஜினி, "கோபாலி சார், நீங்களா? எப்ப வந்தீங்க?" என்று ஆவலோடு கேட்டவன், "சார் வந்தது பற்றி ஏன் என்னிடம் முன்னதாகச் சொல்லவில்லை?" என்று அங்கிருந்தவர்களைக் கடிந்து கொண்டான். என்னிடம் சுமார் முப்பது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான்.

பழைய நினைவுகளையெல்லாம் அசைப்போட்டு விட்டு திரும்பினேன். சூப்பர் ஸ்டார் ரஜினி என்று அழைக்கப்படுபவனை நான் ஒருமையில், மாணவனாக இருந்தபோது எப்படி அழைத்தேனோ, அப்படித்ததன் இப்போதும் அழைக்கிறேன் என்றார் கோபாலி.

சபரிமலை அனுபவம்

ஆறு ஆண்டுகளுக்கு முன் 1993 டிசம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் நடந்த ஐயப்ப மேளாவில் ரஜினியும் கலந்து கொண்டார். விழா இறுதியில் பேசுகையில் தான் சபரிமலை சென்ற அனுபவங்களையும் குறிப்பிட்டார்.

"நான் முதன் முதலாக 1978-ல் நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலைக்குச் சென்றேன். இதுவரை ஒன்பது முறை சென்றிருக்கிறேன்.

நான் ஆன்மிகவாதிதான். கடவுள் உண்டு. அவருக்கு உருவமோ, பெயரோ கிடையாது என்று நம்புபவன். எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு இல்லை. சிறு வயதிலிருந்தே அப்படி வளர்ந்துவிட்டேன். முதல் முறை மலைக்குச் செல்லும்போது நான் பக்தியால் செல்லவில்லை. அங்கு செல்லக் கடுமையான விரதம் இருக்க வேண்டும். மது, மாது, மாமிசம் ஆகியவற்றை விலக்கி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது. அப்படி இருந்ததால் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. 48 மைல் பெரிய பாதையில் நடந்து சென்று 'சாமியே சரணம்' என்று முழுங்கியதைக் கேட்டபோது என் உடம்பு சிலிர்த்துப் போனது" என்றார் ரஜினிகாந்த்.

நம்பியார்தான் குருசாமி

திரையுலகிலுள்ள பெரும்பாலான ஐயப்ப பக்தர்களுக்க
ு குருசாமியாக இருந்து வழிகாட்டுபவர் நம்பியார்தான். அப்படித்தான் 1978 ஜனவரி 2-ம் தேதி காலையில் 3 பஸ், ஒரு வேனில் 130 பக்தர்கள் கொண்ட குழு சபரிமலை நோக்கிப் பயணமானது. இதில் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், டைரக்டர் கே.சங்கர் இவர்களுடன் ரஜினிகாந்தும் முதல் முறையாகப் பயணமானார்.

ரூ.500க்கு பதில் ரூ.1000

ரஜினி மலைக்குச் செல்வதற்காக மாலை போட்டுக் கொண்ட பின் அவரைப் பற்றி நம்பியாருக்கு ஒரு தகவல் போனது. 'ரஜினி சிகரெட் குடிக்கிறார்' என்று. ரஜினிக்கு விரத முறைகள் பற்றி முதலிலேயே தௌவாகச் சொல்லியும் சிகரெட் புகைக்கிறாரே என்று வருத்தப்பட்ட நம்பியார், உடனே ரஜினிக்குப் போன் செய்தார். அப்போது ரஜினி வீட்டில் இல்லை. அவரது செயலாளர் முரளி பேசினார். அவரிடம், "ரஜினி மாலை போட்ட பின்பும் சிகரெட் புகைக்கிறாராம். நீங்க பயணக் கட்டணமாக 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. அந்தப் பணத்தோடு மேலே நான் 500 ரூபாய் சேர்த்து 1000 ரூபாயா தந்துடறேன். தயவு செய்து ரஜினி எங்களோடு வர வேண்டாமுன்னு சொல்லிடுங்க. உடனே வந்து 1000 ரூபாய் வாங்கிப் போங்கள்" என்றார்.

மறுநாள் படப்பிடிப்பொன்றில் இருந்த நம்பியாரிடம் ரஜினி வந்தார். அவரைப் பார்த்ததும், "உங்க செயலாளரிடம் சொன்னதைக் கேள்விப்பட்டீங்களா? அது உண்மைதான். உங்களைச் சேர்த்தற்கு அபராதம் 500 ரூபாய். அதையும் சேர்த்து 1000 ரூபாய் தர்றேன்" என்று சொல்லியபடியே தனது உதவியாளரை அழைத்துப் பணத்தைக் கொண்டு வரும்படி சொன்னார். ரஜினி சங்கடத்துடன், "என்னை மன்னிச்சிருங்க, இனி சிகரெட் குடிக்கமாட்டேன்" என்று உறுதி கூறியதும் நம்பியார் அதை ஏற்றுக் கொண்டு பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டார்.

திறமையா? நல்ல நேரமா?

வழியில் பொழுது போக்காக ரஜினியோடு கன்னட டைரக்டர் ரவி பேசிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் ரவி, ரஜினியிடம், "உனக்கு நல்ல நேரம் இருந்ததால்தான் ஓஹோன்னு மார்க்கெட்" என்றார். அதை ரஜினி ஏற்கவில்லை.

"என் நேரத்தை விட என் திறமையினால்தான் ஓஹோன்னு இருக்கேன்" என்றார் ரஜினி. அது விவாதமாக முற்றியதும் அருகிலிருந்தவர்கள் குறுக்கே புகுந்து நிறுத்தினார்கள்.

பக்தர்கள் குழு எருமேலியை அடைந்து அங்கிருந்து பெரிய பாதையில் நடை போட ஆரம்பித்தார்கள். அவர்கள் பல குழுக்களாகச் சென்றார்கள். முதலில் சென்ற குழு ரஜினியுடையதுதான். அவரது இயல்பான வேகம் அங்கும் கை கொடுத்தது. அங்கும் சிலர் ரஜினியை அடையாளம் கண்டு கொண்டு அதை உணரத் தலைப்படுமுன்னே ரஜினி தொலைதூரத்தில் இருந்தார். இந்த வேகத்தினால் அவருக்கு அங்கு ரசிகர்கள் தொல்லை அதிகமில்லை.

பாவாத்மாக்கள் கிளப்

இந்த நடைப்பயணத்தில் ஸ்ரீகாந்த், பக்தி சுவையோடு நகைச்சுவை பொழியத் துவங்கிவிட்டார். 'பாவாத்மாக்கள் கிளப்' ஒன்று ஆரம்பித்தார். ரஜினியோ, ''என்ன இது சபரி மலைக்கு வந்து இப்படியொரு கிளப் ஆரம்பிக்கிறீங்க?" என்று கேட்டார். அதற்கு ஸ்ரீகாந்த் தரையில் கோடு போட்டு பீடிகையும் போட்டார். "நான் சொன்னதை நீங்க சொன்னால்தான் நான் போட்ட கோட்டைத் தாண்டி வரணும்" என்றார்.

"அது என்ன?" என்று ரஜினி ஆவலோடு கேட்டார். "நாம் பாவங்கள் செய்துதான் மலைக்கு வருகிறோம். மலைக்குப் போய் வந்த பின்னும் நாம் பாவங்கள்தான் பண்ணுவோம்" என்று கூறச் சொன்னார். அதைக் கேட்டு அருகிலிருந்த பக்தர் ஒருவர், "ஏன் நிரந்தரமாக பாவம் செய்யாமல் இருக்க முடியாதா?" என்று கேட்டார். ரஜினியோ 'முடியாது' என்று சொல்லி கோட்டைத் தாண்டி பாவாத்மா கிளப்பில் மெம்பரானார். அப்போது எழுந்த சிரிப்பொலி மலையெங்கும் எதிரொலித்தது.

இப்படி கேலியும், கிண்டலுமாகத் தொடர்ந்த பயணத்திற்கு ரஜினி சொன்ன விளக்கம், "மாலை போட்டுக் கொண்டு எதையும் ரசிக்கக் கூடாது என்றல்ல. மனது சுத்தமாக இருந்தால் போதும்."

ஞானப்பழம் கணக்கு

குழுவினர் பம்பை போய்ச் சேர்ந்ததும், குருசாமி நம்பியார், "கன்னி சாமிகள் அனைவரும் 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்து வரவேண்டும்" என்றார். ரஜினிக்கு அது முதல் ஆண்டு பயணம் என்பதால் அவரும் ஒரு கன்னி சாமியாகக் கருதப்பட்டார். 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்துவர வேண்டும் என்பது ஓர் ஐதீகம். ஆனால் ரஜினி அதை சீரியஸாக எண்ணாமல், விநாயகர் மூன்று முறை பரமசிவன் பார்வதியை நடந்து சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டது போல், தனக்கேயுரிய வேகத்தில் 10 அடுப்புகளில் மடமடவென்று சாம்பல் எடுத்து வந்துவிட்டு, "நான் எல்லா அடுப்புகளிலும் சாம்பல் எடுத்து வந்துவிட்டேன்" என்றார். ஸ்ரீகாந்த் அதை ஒப்புக் கொள்ளவில்லை. 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்தாக வேண்டும் என்று கூறி அவருக்குத் துணையாக அந்தப் பகுதியிலுள்ள அடுப்புகளுக்கெல்லாம் சுற்றிச் சுற்றி அழைத்துச் சென்று ரசிகர்கள் கூட்டத்தையும் சமாளித்து முடித்தார்.

நானும் உங்களைப் போல....

அப்படியும் மீறி தன்னோடு பேச விரும்பும் பக்தர்களிடம் ரஜினி, ''இங்க பார்க்க வந்தது ஐயப்பனை; எங்களையல்ல! நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தான்" என்று சொல்லியனுப்புவார். மேலே சந்நிதானம் சென்றபின் ரசிகர்கள் தொல்லை தாங்காமல், தாங்கள் குடியிருந்த தாவளத்தில், குருசாமியின் கட்டிலின் அடியில் போய்ப் படுத்துக் கொண்டார்.

ஐயப்ப தரிசனம், ஜோதி தரிசனம் முடிந்து அனைவரும் சென்னை திரும்பிய பின், ரஜினி நம்பியாருக்கு போன் செய்தார். "என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் என்னிடம் ரொம்ப மாற்றம் வந்திருக்குன்னு சொல்றாங்க" என்றார். நம்பியார் மகிழ்ந்து போனார்.

கோடி கொடுத்தாலும் வருமா?

நம்பியார் தலைமையில் ஆறாம் ஆண்டு 1984-ல் ரஜினிகாந்த் சபரிமலை சென்றபோது, அந்த முறை அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். "சபரி மலைக்குச் செல்லும் இந்தப் பயணத்தின்போது ஒன்பது நாட்களும் படப்பிடிப்பை மறந்து, நமது இன்பங்களை மறந்து பந்தா இன்றி, பக்தர்கள் அனைவரும் நன்றாக உண்டு, நன்றாக உறங்கி, நமது துணிகளை நாமே துவைத்து, ஐயப்ப சாமியைத் தரிசனம் செய்யும் அந்த அனுபவம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது" என்றார் ரஜினி.

ரஜினி, நம்பியார் தலைமையில் சபரி மலை புறப்பட்ட போது, வழியில் அவருக்கு சிறிய விபத்தொன்று நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோயில், திருக்கடையூர் அபிராமி அம்மன், திருநள்ளாறு சனீஸ்வரன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு இரவு திருநள்ளாறு கோயிலில் தங்கினார்கள்.

அதிகாலை குளித்து தரிசனம் செய்துவிட்டு புறப்படுவதாக இருந்தபோதுதான், ரஜினிகாந்த் கோயிலிருந்து அரை கி.மீ. தூரமுள்ள குளத்தில் குளிக்க அதிகாலை 4.00 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது அரையிருட்டில் எதிரே வந்த சைக்கிள் ரஜினி மீது மோதி, அவரது உதடு கிழிந்து இரத்தம் வந்துவிட்டது. ஆனால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் நம்பியார் சாமியிடம் தேங்காய் எண்ணெய் வாங்கி உதட்டில் தடவிச் சமாளித்தார்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்கள்

வரும் இதழில்....

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information