Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

நண்பனை நடிக்க வைத்த ரஜினி (பாகம் 15)

''நாம் சம்பாதிக்கிற பணத்தை நாம் மட்டுமே உபயோகித்துக் கொண்டால் அதனால் எந்தவிதமான நிம்மதி, சந்தோஷமும் நமக்கு கிடைக்காது. அதையே ஒரு பத்து பேருக்குக் கொடுத்தால் சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்"

திரைப்படக் கல்லூரியில் இருந்து நடிப்புப் பயிற்சிக்கு விளம்பரம் வந்தவுடன், 'நான் வேண்டாம்..... வேண்டாம்' என்று சொல்லச் சொல்ல என்னை அவசர அவசரமாக மைசூர் ரோட்டில் இருக்கும் நட்ராஜ் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்தான் ராஜ்பகதூர். முதல் தடவையாக என் உருவத்தைப் பெரிய அளவிலான போட்டோவில் பார்த்தேன்.

மூன்று வித போஸ்களில் அவனே சொல்லி, புகைப்படம் வந்ததும் என்னைப் பாராட்டி, ''திரைப்படக் கல்லுரியில் நீ எப்படியாவது சேர்ந்துதான் அக வேண்டும்" என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தான்.

அதற்கு முன் "திரைப்படக் கல்லூரியில் படிக்கணும்னா பணம் வேணுமே என்ன செய்யறது....?" என்று கேட்டேன்.

"என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன். இப்படியே இருந்தால் டிரைவரா..... கண்டக்டராகத்தான் இருப்போம். வருஷத்துக்கு ஒரு தடவை இன்கிரிமெண்ட், டி.ஸி., செக்கிங் இன்ஸ்பெக்டர்.... அவ்வளவுதான். நமக்குள் யாராவது முன்னுக்கு வந்தால் நமக்குப் பெருமை..... நம்ம கூட இருந்தவன் இவ்வளவு நல்லா இருக்கான்னு சொல்லிக்கலாம். நீ திரைப்படக் கல்லூரியில் சேரணும்" என்று அவனுடைய மாத வருமானத்தில் 120 ரூபாயை எனக்கு அனுப்பிவிடுவான்.

திரைப்படக் கல்லூரியில் படிக்கப் போகும்போது கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த தங்கச் செயினைக் கழற்றி என் கழுத்தில் போட்டான்.

"இந்தச் செயினை நீ போட்டுக்கோ. உனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்."

"இது என்ன தாயத்தா? உபயோகம் ஆகும்னு சொல்ற" என்றேன்.

"செயின் போட்டா நல்லா இருக்கும்" என்று வற்புறுத்தி அதை அணியச் செய்துவிட்டான்.

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த பின் ராஜ்பகதூர் அனுப்பும் பணம், அவ்வப்போது அண்ணன் (சத்திய நாராயணராவ்) அனுப்பிய பணமெல்லாம் 20-ம் தேதிக்குள் தீர்ந்துவிடும். அதனால் ராஜ்பகதூர் கொடுத்த செயினை இருநூறு ரூபாய்க்கு மார்வாடிக் கடையில் அடகு வைப்பது.... பணம் வந்தவுடன் மீட்பது..... இப்படி ஒவ்வொரு மாதமும் அந்தச் செயின் அவன் சொன்ன மாதிரி உபயோகமாக இருந்தது.

'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு' படத்தில் நடிக்கும் போது அந்தச் செயினைப் போட்டுக் கொண்டு இருந்தேன். வேறு ஒரு படத்திற்காக சண்டைக் காட்சியில் நடிக்கும்போது அந்தச் செயின் காணாமல் போய்விட்டது.

'மூன்று முடிச்சு' படத்தைப் பெங்களூரில் பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினான் ராஜ்பகதூர். அவனே நடித்தது போல் அவன் முகத்தில், பேச்சில் அவ்வளவு மகிழ்ச்சி!

நாளடைவில் நான் பிஸியாகி விட்டேன். அவ்வப்போது பெங்களூருக்குப் போவேன். அவன் வீட்டுக்குப் போவேன். நான் கண்டக்டராக இருந்தபோது அவன் வீட்டில் அவனுக்கென்று ஒரு ரூம் இருக்கும். அந்த ரூமில் நான் தூங்குவேன்.

அந்த ரூமில் உட்கார்ந்து பேசுவோம். என்னைப் பற்றி, என் உடம்பைப் பற்றி ராஜ்பகதூர் அதிகம் விசாரிப்பான்.

நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகப் பலவிதங்களில் உதவி செய்து ஊக்கமூட்டிய ராஜ்பகதூருக்கு உதவி செய்ய எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். அவனிடம் கேட்டபோதெல்லாம், "இல்லப்பா எனக்கு என்ன தேவையோ அதை ஆண்டவன் கொடுத்திருக்கார். அப்படித் தேவைப்படும்போது உன்னிடம் வருகிறேன். அப்போது செய்" என்று கூறிவிடுவான். கடந்த வருடங்களில் அவன் என்னிடம் ஒரு பைசா கூட உதவி கேட்டதில்லை.

ராஜ்பகதூருக்குத் திருமணம் நடந்தபின், நானே மிகவும் வற்புறுத்தி அவன் ஒரு வீடு வாங்க உதவினேன்.

உடம்பு

எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என்னைப் பார்க்க வந்திருந்தான். "உன் உடலை மூலதனமாக்கி இவ்வளவு பணம் சம்பாதிச்சு, அதுக்கப்பறம் வாழ்க்கையை அனுபவிக்க உடம்பு சௌகர்யமாக இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? வேலையுடன் உன் உடம்பையும் பார்த்துக்கோ" என்று சொன்னான்.

"எவ்வளவோ திறமை, படிப்பு, உடலில் வலிமை இருந்தும் நாட்டில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் நமக்கு இருபத்தி நாலு மணி நேரமும் உழைக்கும் அளவுக்கு வேலை செய்யும் அளவுக்கு ஆண்டவன் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறான் என்று பெருமைப்படுகிறேன். கட்டாயம் படங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்காக சம்பாதித்தது போதும். சமுதாயத்துக்கு நல்லது பண்ணணும். அதற்காக செலவு பண்ணணும் என்று நினைக்கிறேன். நாம் சம்பாதிக்கிற பணத்தை நாம் மட்டுமே உபயோகித்துக் கொண்டால் அதனால் எந்தவிதமான நிம்மதி, சந்தோஷமும் நமக்கு கிடைக்காது. அதையே ஒரு பத்து பேருக்குக் கொடுத்தால் சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்" என்றெல்லாம் அவனிடம் சொல்லி அவனது ஆதங்கத்தை சமாதானப்படுத்துவேன்.

ராஜ்பகதூரை ஒவ்வொரு தடவையும் சந்திக்கும்போது, "என்னடா இன்னும் அதே வேலைதான் பண்ணிகிட்டு இருக்கியா....?" என்றுதான் கேட்பேன்.

"நீ மேலே உசந்துட்டே. அங்கிருந்து பார்த்தா அப்படியே இருக்கிற மாதிரிதான் தோணும். நாங்க அப்படியே நிம்மதியா இருக்கோம்" என்று தமாஷாகச் சொல்வான்.

நான் ஒரு ஸ்டார், அவன் டிரைவர் என்கிற பாகுபாடு எங்களுக்குள் இன்னும் கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் இன்னும் என்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவன் அவன்தான்.

சினிமாவில் நடிப்பதனால் மக்களிடையே நமக்கு நல்ல அறிமுகம்... பாப்புலாரிட்டி.... வாழ்க்கையில் வசதி. ஆனால் கடவுள் அனுக்கிரகம் இருந்ததினால் இந்தத் துறையில் ஈடுபட்டு ஒரு நல்ல வாழ்க்கை, அந்தஸ்து, புகழ் ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் என்று அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.

அதனால் என்னைப் பொறுத்தவரையில் ராஜ்பகதூர் அன்றும் உயர்ந்து இருந்தான்; இன்றும் உயர்ந்துதான் இருக்கிறான்.

"நீ எனக்கு எவ்வளவோ உதவி பண்ணிட்டு, அதே வேலையிலேயே இருக்கிறதைப் பார்த்தா எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கு. நீ என் கூட இருந்தா எனக்கு ஒரு பரஸ்பர உதவியாக இருக்கும். எனக்கு தெரியாமலே தலைக்கனம் வந்துவிடுமோ என்று நினைப்பேன். உன்னை மாதிரி எனக்கு ஒரு நண்பன் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். என் நண்பனாக என் கூடவே இரு' என்று கேட்டேன்.

அப்போது அவனுக்கு கல்யாணமாகவில்லை. அப்போது அவன் என்னுடனேயே இருந்திருந்தால் எனக்கு மன அமைதி அதிகம் கிடைத்திருக்கும் என்று கேட்டேன்.

"நான் உனக்கு டிரைவராக வருகிறேன். பரவாயில்லையா...." என்றான்.

"டிரைவராக.... மேனேஜராக..... செக்ரட்டரியாக..... இல்லே எனக்கு முதலாளியாக உனக்கு என்ன விருப்பமோ அப்படியே வா...." என்று சொன்னேன்.

அவன், "டிரைவராக வருகிறேன். ஜாலியாக இருக்கலாம்" என்று சொன்னவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

பத்து நாள் கழித்து ராஜ்பகதூர் வந்தான். "இல்லேம்மா. எனக்கு டிரைவராக வர்றது பிடிக்கல" என்று சொன்னான். அவ்வளவுதான்.

நான் இப்போதும் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். காரணம் ஆத்மார்த்தமாக அவனுடன் என் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தைப் படிப்படியாக அனுபவித்து மகிழ்ந்து வருபவன் ராஜ்பகதுர். அவன் இன்றும் டிரைவராக வேலை பார்க்கிறான்.

"நீ எங்கிருந்தாலும் நன்றாக பேரும், புகழுடன் இருக்க வேண்டும். ஒரு நடிகனாக மட்டும் இருக்காமல் மனிதாபிமானமிக்க மனிதனாக எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக நான் சந்தோஷப்படுவேன். உடம்பைப் பார்த்துக் கொள். என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும். நான் அங்கே உன்னைப் பார்க்க வரும்போது நீ பிஸியாக இருப்பாய். உன்னை தொந்தரவு பண்ணுவது எனக்குப் பிடிக்காது. எனக்கென்று ஒரு வேலை இருக்கிறது. அதில் என் வாழ்க்கை சீராகப் போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் போன் பண்ணு..... உடனே வருகிறேன்" என்ற அந்த நண்பன் ராஜ்பகதூருக்காக நான் பெருமைப்படுகிறேன். அவனுக்காக எப்போதும் காத்திருக்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கிறார்.

வள்ளி

ரஜினி நடிகராவதற்கு எப்படி ராஜ்பகதூர் காரணமாக இருந்தாரோ, அது போல் ராஜ்பகதூரையும் ரஜினி ஒரு படத்தில் நடிக்கச் செய்துவிட்டார். அது 'வள்ளி' படத்தில். அதில் பால்காரியாக வரும் பல்லவி, 'என் கணவர் ராணுவத்தில் இருக்கிறார்' என்று சொல்லிச் சொல்லியே தன்னைச் சுற்றி வரும் ஆண்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வார். ஒரு நாள் அந்த ராணுவ வீரர் திடீரென்று தன் மனைவியை (பல்லவி) பார்க்க வருவார். ராணுவ வீரராக நடித்தவர் ராஜ்பகதூர்தான்.

ராஜ்பகதூர் நடித்த இன்னொரு படம் 'படையப்பா'. 'கிக்கு ஏறுதே' என்ற பாடல் காட்சி துவங்குவதற்கு முன் ரஜினியைக் காண வரும் அரசியல்வாதியாக நடித்திருப்பவர் ராஜ்பகதூர். அதற்காக 'படையப்பா' வெற்றி விழாவில் அவருக்கும் ஷீல்டு தரப்பட்டது.

ரஜினி பற்றி ராஜ்பகதூர் என்ன சொல்கிறார்...?

வரும் இதழில்....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information