Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் பேச்சுவன்மை (பாகம் 53)

நான் வருஷத்திற்கு ஒரு படமோ, இரண்டு வருஷத்திற்கு ஒரு படமோ வேறு யாருக்கும் செய்தாலும், செய்யாவிட்டாலும் சரவணன் சாருக்காக செய்து கொண்டே இருப்பேன் என்றார் ரஜினி.

ஏவி.எம். சரவணன் தொடர்கிறார்:

''நீங்க பேசறீங்க. அதுக்கு நானாச்சு'' என்று அவருக்கு தைரியம் சொன்னேன் (ஏவி.எம். சரவணன்). பிறகு எஸ்.பி.முத்துராமனிடம் ரஜினி என்ன பேச வேண்டுமென்று எழுதித் தரச் செய்தேன். மேடையில் ஏறும் முன் ரஜினி, எழுதப் பட்டதை ஒன்றுக்குப் பலமுறை படித்துப் பார்த்துக் கொண்டார்.

மேடையில் பேச ஆரம்பித்தபோது முதலில் எழுதப்பட்ட தாளைப் பார்த்துப் பேசியவர், சற்று நேரத்தில் அதை மடித்த பைக்குள் போட்டுக் கொண்டு சரளமாகப் பேசி அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்தினார். நாளடைவில் குறிப்புகள் தயார் செய்யாமலேயே தேர்ந்த மேடைப் பேச்சாளர்போல் ஆகிவிட்டார்.

ரஜினியின் பேச்சுவன்மைக்கு 'மனிதன்' வெள்ளி விழாவில் பேசியதைக் குறிப்பிட வேண்டும்.

''இந்த விழாவில் சரவணன் சார் பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொன்னாங்க. ஆனா நல்லது சொல்லும்போது கெட்டதும் சொல்ல வேண்டும்.

நான் சரவணன் சார் பற்றி சில கெட்டது சொல்லப் போறேன். எனக்கு மேடையில் பேசறதுன்னா பயம். பேச வராத என்னை, 'ரஜினி நல்லா பேசறார். நல்லா பேசக் கத்துக்கிட்டார்' என்று சொல்லியே என்னைப் பேச வச்சிட்டார். 'அட நாமும் நல்லா பேசறோம் போலிருக்கு' என்று நானும் நெனைச்சுகிட்டேன்.

இது எப்படியிருக்குன்னா, ஒரு பெரிய அறிவாளி ஒரு மடையனைப் பார்த்து, ''நீ குதிக்கிறே, குதிக்கிறே'' என்று சொல்லியே எப்படி குதிக்க வைக்கிறாரோ அப்படி இருக்கு.

இப்படித்தான் 'ஊர்க்காவலன்' வெற்றி விழாவில் பேசினேன். ''அரசியல் என்பது தர்ம«க்ஷத்திரம். தர்ம போராட்டம்'' அப்படின்னு பகவான் கண்ணன் குரு«க்ஷத்திரத்தில் சொன்னார். 'அரசியல் என்பது ஒரு சதுரங்க விளையாட்டு' இது சாணக்கியன் சந்திரகுப்தர் காலத்தில் சொன்னது. 'அரசியல் ஒரு சாக்கடை' என்று அண்ணா சொன்னார். இந்தக் காலத்தில்..

இப்படி நான் பேசியதை வச்சு அரசியலில் இறங்கப்போறார் ரஜினின்னு முடிவு கட்டிட்டாங்க. அதனால என் ரசிகர்களுக்குள் சண்டை, குழப்பம். எனக்கோ வீட்டுக்கு போனுக்குமேல் போன்!

அப்ப சொன்னேன், 'நான் நிச்சயமா என் ரசிகர்களை அரசியலுக்கு இழுக்க மாட்டேன். நானும் இறங்க மாட்டேன். நான் என் ரசிகர்களை ஆன்மீகத்தில்தான் திருப்புவேன். என் ரசிகர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்காங்க. தி.மு.க.வில, அ.தி.மு.க.வில, ஜானகி அணியில, ஜெயலலிதா அணியில, காங்கிரசில, முஸ்லிம் லீக்கில, கம்யூனிஸ்ட் கட்சியில இப்படி எல்லாக் கட்சியிலும் இருக்காங்க. அவங்க விருப்பப்பட்டா எந்த கட்சியையும் ஆதரிக்கலாம். அந்த உரிமைக்கு நான் குறுக்கே போக மாட்டேன்' என்று.

என்னை மேடையில் பேச வச்ச சரவணன் சார் சினிமா உலகத்தில் ரொம்ப பேருக்கு நல்லது பண்ணியிருக்காரு. எனக்கு ஆரம்பத்திலிருந்தே நல்லது பண்ணிட்டிருக்கார். நான் கார் வாங்கினது முதல், வீடு வாங்கினதாகட்டும்.... மற்றபடி இன்கம் டாக்ஸ் பிரச்னையிலிருந்து என்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என் நலம் விரும்பியாக ஒவ்வொரு விஷயத்திலும் யோசனை சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஏன் சொல்றீங்கன்னு என்னை சரவணன் சார் கோபிப்பார். இந்த கெட்டதெல்லாம் சொல்லாம இருந்தா எப்படி?

நான் வருஷத்திற்கு ஒரு படமோ, இரண்டு வருஷத்திற்கு ஒரு படமோ வேறு யாருக்கும் செய்தாலும், செய்யாவிட்டாலும் சரவணன் சாருக்காக செய்து கொண்டே இருப்பேன்.''

இப்படி சுமார் அரை மணி நேரம் பேசியதில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டவையே அதிகம். என்னதான் வியாபார உலகில் இருந்தாலும் மனிதநேயம் என்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளக் கூடியதே. அதை ரஜினி மேடையில் வெளிப்படுத்தியபோது எனக்கு கூச்சமாகி விட்டது.

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தினை உருவாக்கும் முன் ரஜினி என்னை பலமுறை யோசனை கேட்டார். நான் சிறிய அளவில் உருவாக்கினால் போதும் என்று யோசனை கூறினேன். ஆனால் அவர் அதில் அடிக்கடி மாற்றங்களுடன் நிறைய செலவிட்டு தாராளமாக முதலீடு செய்து உருவாக்கி இருக்கிறார்.

அதிலுள்ள வெண்டிலேட்டர்கள் வேறு எந்த கல்யாண மண்டபத்திலும் இல்லாத அளவில் நிறைய செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கூட ரஜினியிடம், 'நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வருமா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வருமான வரி போக உங்களுக்கு வட்டிப்பணம் கூட மிஞ்சாதே' என்றேன். பரவாயில்லை என்று கூறிவிட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் ரஜினியை நேசிப்பது அவரது எதார்த்தமான குண இயல்புகளையும் பிறரை மதிக்கும் பண்பையும் தான் என்றார் ஏ.வி.எம்.சரவணன்.

ரஜினியுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை எஸ்.பி.முத்துராமன் வரிசைப்படுத்துகிறார்...

அடுத்த இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information