Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

நண்பனைப் பற்றி ரஜினி (பாகம் 14)

சிவாஜி ஸ்டைல், என்.டி.ராமராவ் ஸ்டைல் இரண்டையும் கலந்து, ஒத்திகையில் நடித்தேன். நான் செய்தது புதுமையாக இருந்தது. அங்கே இருந்தவர்கள் அதைப் பெரிதும் ரசித்தார்கள்.

அவர் பயணிகளைச் சோதனை செய்கையில் மூன்று பேர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்படாமல் இருந்தன.

"ஏண்டா.... இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸ¨ன்னு நினைச்சயா? ஏன் டிக்கெட் குடுக்கலை" என்று ஒரு மாதிரியாக அத்தனை பயணிகளின் முன்னிலையிலும் என்னிடம் கேட்டவுடன் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

".... சார். அப்பா அம்மா பத்தியெல்லாம் இங்கே பேசாதீங்க. மூணு பேருக்கு டிக்கெட் கொடுக்காமல் விட்டுட்டேன். அதுக்காக எனக்கு நோட்டீஸ் கொடுங்க. நான் அதுக்கு விளக்கம் சொல்றேன். நிர்வாகத்துலே என்ன தண்டனை வேண்டுமானாலும் தரட்டும். இங்கே அப்பா.... அம்மான்னு பேசாதீங்க."

"என்னடா...? என் கிட்டயே இப்படிப் பேசறே! நான் யார் தெரியுமா?" என்று தன் பெயரைச் சொன்னார். அதுவரையில் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, அவரை நேரில் பார்த்ததில்லை. அவரது பெயரைக் கேட்டவுடன் எனக்குள் இன்னும் சூடு அதிகமாகியது.

"நீங்க உங்க இஷ்டத்துக்கு எழுதுங்க. நான் பார்த்துக்கிறேன்" என்றேன்.

"நீ என்ன பெரிய ஹீரோங்கற நினைப்பா? உன்னை என்ன பண்றேன் பாரு" என்று சொல்லி திட்டிவிட்டுப் போய்விட்டார்.

இந்தச் சம்பவம் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. மாலையில் கொஞ்சம் மது அருந்தினேன். பஸ் நிலையத்தின் பக்கம் சென்றேன். அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தார். அவர் யூனிபார்மில் இல்லை. நான் யூனிபார்மில் இருந்தேன். ஆனால் டியூட்டி முடிந்துவிட்டது.

மேலே போட்டிருந்த என் கோட்டைக் கழற்றி பக்கத்திலிருந்த கல் பெஞ்சின் மீது வைத்தேன். அப்போது சுமார் 40,50 டிரைவர்கள் கண்டக்டர்கள் டியூட்டி முடிந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் செக்கிங் இன்ஸ்பெக்டரைப் புரட்டி புரட்டி அடித்துவிட்டுப் போனேன். அங்கிருந்த டிரைவர்கள், கண்டக்டர்களுக்கெல்லாம் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி.

அதன் பிறகு நிர்வாகத்திலிருந்து எனக்கு நோட்டீஸ் விட்டார்கள். ஆனால் சம்பவம் நடந்தபோது செக்கிங் இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் அணியாததாலும், அடிபட்டபோது டியூட்டியில் இல்லாததாலும் அந்தக் கேஸ் ஒன்றும் ஆகவில்லை.

இந்த நிகழ்ச்சி ராஜ்பகதூர் மனதையும் தொட்டது. ஆரம்பத்தில் ராஜ்பகதூர் என்னை "சார்.... சார்...." என்றே அழைப்பார். "நீங்க என்ன சார், யார் கூடவும் ஒட்டாம தனிச்சே இருக்கிறீங்களே? வித்தியாசமானவர் சார் நீங்க!" என்று சொல்வார்.

சார் என்று ஒருவரையொருவர் மரியாதையுடன் பழக ஆரம்பித்து ராஜ்பகதூரும், நானும் நாளடைவில் 'டா' போட்டு அழைக்குமளவில் நெருக்கமாகிவிட்டோம்.

ராஜ்பகதூரிடம் எனக்குப் பிடித்த குணம் அவன் மிகவும் யதார்த்தமான மனிதன். வாழ்க்கையில் பெரிய ஆசைகளோ, இதைச் சாதிக்க வேண்டும். அதைச் செய்ய வேண்டும் என்கிற விருப்பமோ இல்லாதவன்.

"வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஒழுங்காக உடை அணிய வேண்டும். ஒழுங்காக வாழ்க்கையை அனுசரிக்க வேண்டும்" இதுதான் ராஜ்பகதூரின் வாழ்க்கை லட்சியம். அப்போது எனக்கு சாராயம் பிடிக்கும். ஆனால் அவன் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளைத்தான் குடிப்பான்.

அன்று என்னுடைய கொள்கை 'இன்றைக்கு எல்லாமே சரியாக நடக்க வேண்டும்' என்பது. ஆனால் அவனோ நாற்பது வயதுக்கு மேல் வரப்போகும் நிலைமையைப் பற்றி யோசிப்பான்.

'இன்று செய்ய வேண்டியது என்ன?' என்று நான் பார்ப்பேன். ஆனால் அவனோ நாளை நடக்க வேண்டியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பான். நிகழ்காலமும், எதிர்காலமும் அங்கே போட்டிப் போட்டுக் கொண்டு நின்றன.

'நமக்குப் பிடித்ததைச் செய்வதில் கௌரவம் கிடையாது' என்பான். நான் சாப்பிட்டு விட்டு வரும் வரையில் சாராயக் கடை வாசலில் அவன் காத்துக் கொண்டிருப்பான்.

'சாராயக் கடைக்கு நீ வரவில்லை. அதனால் நான் பார் உள்ளே வரமாட்டேன்' என்று அவன் பாரில் இருந்து வெளியே வரும் வரை பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருப்பேன். அதன் பிறகு இருவரும் சேர்ந்து போவோம்.

சிவாஜி

இவ்வளவு வேறுபாடுகளிலும் எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்திய ஒருவர் உண்டு. அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நாங்கள் இருவருமே சிவாஜியின் ரசிகர்கள். எங்களுடைய நட்பு நெருக்கமாவதற்கு அதுவும் கூட ஒரு காரணம்.

இருவரும் சிவாஜி நடித்த படங்களுக்குச் செல்வோம். ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பாராட்டி மகிழ்வோம்.

ராஜ்பகதூருக்கு நடிப்பில் ஆர்வமிருந்தது. எனக்கு விருப்பமில்லை. நடிப்பார்வம் கொண்ட ராஜ்பகதூர் குரு«க்ஷத்திரம் நாடகத்தைப் போட்டான். அதில் அவனுக்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் வேடம். அழகு, உருவத்துக்கு பொருத்தமான வேடம். அப்போது குண்டாக இருந்த என்னை துரியோதனனாக நடிக்கச் சொன்னான். "இதோ பாரப்பா.... எனக்கு நடிப்பெல்லாம் வராது" என்றேன்.

"நல்ல உடம்பு இருக்கு. கவர்ச்சியான கண் இருக்கு. மீசை கிரீடம் வச்சு, சும்மா வந்து நீ நின்னா போதும். கை தட்டல் விழும். கவலைப்படாதே. ரிகர்சல் பண்ணித்தான் நடிக்கப் போறே" என்றான் ராஜ்பகதூர்.

"சரிப்பா உனக்காகப் பண்றேன். நல்லா வரலேன்னா என்னைத் திட்டக் கூடாது" என்றேன்.

நாடகமேடை

முதன் முறையாக என்னை நாடக மேடைக்கு அழைத்துச் சென்ற பெருமை ராஜ்பகதூரைச் சேரும்.

முதல் நாள் ஒத்திகைக்குப் போனேன். பாடிக் கொண்டே ஆட வேண்டிய நாடகம் அது. "எனக்குப் பாட வராது. மாஸ்டர் பாடட்டும். அதற்கு வாயசைச்சுடறேன்" என்று சொல்லி ராஜ்பகதூரிடமிருந்து வசனத்தை வாங்கினேன். நன்றாக மனப்பாடம் செய்தேன்.

சிவாஜி ஸ்டைல், என்.டி.ராமராவ் ஸ்டைல் இரண்டையும் கலந்து, ஒத்திகையில் நடித்தேன். நான் செய்தது புதுமையாக இருந்தது. அங்கே இருந்தவர்கள் அதைப் பெரிதும் ரசித்தார்கள். ஆனால் அங்கிருந்த நாடக மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பழைய காலத்து பாணியில் என்னால் நடிக்க முடியவில்லை. என் நடிப்புக்கு கட்டுப்பாடு விதிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. "பாருங்க சார். சிவாஜிராவ் செய்யறது இங்கு இருக்கிறவங்களுக்கு பிடிச்சிருக்கு. நாமென்ன நாடகப் போட்டிக்கா போகப் போகிறோம்? அவன் எப்படிச் செய்கிறானோ அப்படியே விட்டுடுங்க" என்று ராஜ்பகதூர் மாஸ்டரிடம் சொன்னான். அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒரு ஆச்சரியமான, அதிசயமான நிகழ்ச்சி நடந்தது. "இன்னிக்கு நான் உன்னோடு சாராயம் சாப்பிடறேன்" என்று சாராயம் குடித்தான் ராஜ்பகதூர், என்னோடு சேர்ந்து.

"டேய் நீ என்னமா நடிச்சே தெரியுமா? நீ நடிக்கறதை மாஸ்டர் ஏத்துக்கலைன்னா நான் அவரையே மாத்திடறேன். ஒத்திகையில் நீ என்ன ஸ்டைல்ல நடிச்சயோ, அதையேதான் மேடையிலேயும் நீ செய்யணும்."

"சாராயக் கடைக்கே வராதவன் உனக்காக உன் நடிப்புக்காக வந்திருக்கிறேன். ரொம்ப நல்லா இருந்தது. உள்ளே நுழைஞ்ச உடனேயே ஒரு சிரிப்பு சிரிச்சே பாரு, அருமை! இவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே. அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளையிலிருந்து நீ தொடர்ந்து ஒத்திகைக்கு வரணும்" என்று சொல்லி என் நடிப்பார்வத்தைச் சாராயக் கடையில் ஆரம்பித்து வைத்தவன் ராஜ்பகதூர்.

எப்போதுமே என்னுடைய நடிவடிக்கைகளை விமர்சிக்கும் ராஜ்பகதூர் அன்று என்னைப் பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாளும் என் நடிப்புத் திறமையை மற்றவர்களிடம் சொல்லிப் பாராட்டினான். என் உள்ளே இருந்த நடிப்புக் கலையை வெளியே எடுத்து விட்டவன் ராஜ்பகதூர்.

நாடகம் அரங்கேறியது. நாடகம் முடிந்தவுடன் துரியோதனனாக நடித்தவரைப் பார்க்க வேண்டும் என்று வெளியே சுமார் ஐம்பது பேர் காத்துக் கொண்டிருந்தனர். இதனால் ராஜ்பகதூருக்கு மிகவும் மகிழ்ச்சி.

"டேய். நான் நிச்சயமாக சொல்றேன். படத்துலே நடிக்க முயற்சி பண்ணு" என்று அன்று ஆரம்பித்தவன், நான் திரைப்படக் கல்லூரியில் சேரும் வரை நச்சரிப்பை, ஆர்வத்தை நிறுத்தவேயில்லை.

நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய ராஜ்பகதூர், என்னுள் இருந்த திறமையைக் கண்டு, "நீதான் நடிகனாக வேண்டும். நடிப்பில் நான் ஒண்ணுமே கிடையாது" என்று ஊக்கமூட்டி வந்த அவனுக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மை! என்னை நடிகனாகப் பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த முதல் மனிதன் ராஜ்பகதூர்.

தொடர்கிறது நட்பு....

விவரங்கள் வரும் இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information